அறுபது ஆண்டு நாயகன்

This entry is part 1 of 14 in the series 9 நவம்பர் 2014

kamal-hassan_13600437935

(உலக நாயகன் கமல் அவர்களின்
பிறந்ததின வாழ்த்துக்கவிதை)
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
என்று
வெள்ளை மனத்துடன்
ஒரு பாற்கடலே
அறுபதுகளில் அலையடித்து வந்து
அறுபது ஆண்டுகள் காணாமல் போயின.
எத்தனை பாத்திரங்கள்?
நடிப்பை நிரப்பி
தளும்ப தளும்ப தந்தார்.
குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதிலும்
குன்றில் இட்ட விளக்காக சுடர்ந்தவர்.
அபிராமியை
நாடி நரம்புகளுக்குள் ஊற்றிக்கொண்டு
குளித்தவர்.
அறுத்து ஒட்டிய
முகநரம்புகளின்
அஷ்டகோணல்களில்
ஆயுதம் தாங்க வேண்டிய போரைக்கூட‌
“அன்பே சிவம்” ஆக்கியவர்.
பம்பாயின்
தூசி துரும்பு கூட‌
தும்மல் போட்டால்
ரத்தம் தான் சிதறும்.
அதன் இதய நாளத்தை
வீணை மீட்டிய நாயகன் அவர்.
சலங்கை ஒலிப்பிசிறுகளில்
அஞ்சு பூதமும்
அவர் அற்புத தாண்டவத்தில்
கை கட்டி நின்றது கண்டு
வாய் பொத்தி நின்றோம்.
வீச்சரிவாள் நாற்றத்தில்
மானிட இழையோடும் ஒரு
நாகரிகத்தின் நாற்றங்கால் அமைத்து
தேவர் மகனாய் வலம் வந்த போது
பழி வாங்குதலில்
தமிழன் ரத்தம் பூராவும்
வடிந்து போவதா என்ற‌
வினாவை வியர்க்க வியர்க்க‌
எழுப்ப வைத்தவர்.
ரங்கனோடு
சங்கிலி பிணைத்து
“கடலுள் மாய்ந்த திட வழுதியாய்”
கண்கள் விறைத்த‌
அந்த தசாவதாரபிழம்பின்
ஆழ்மனத்தை காட்சியில் தந்தவர்.
அந்த ஊட்டி ஸ்டேஷனில்
அலுமினிய குண்டாவை தலையில் ஏந்தி
குரங்காட்டம் போட்டு
ஊமைக்காதலை ரத்தம் வடியச்செய்த
மூன்றாம் பிறையில்
அவர் நடிப்பின் பிரகாசம்
மூவாயிரம் நிலவுகள்.
சொல்ல சொல்ல
எழுத்துக்கும் வலிக்கும்
சொல்லுக்கும் சுளுக்கும்
எதையும் விட முடிவதில்லை.
அவர் நடிப்பின் மூலம்
தமிழ்மக்களின்
அடி மனத்துக்கு மருத்துவம் பார்த்தவர்.
ஏன் இந்த தெனாலியில்
அந்த “பயத்தையும்”
சிரிப்பாக்கி
இலங்கைத்தமிழனை
பெயர்த்துத் தந்த சாதனை மன்னன்.
யாரோ இதை
சஷ்டியப்த பூர்த்தி
என்று ஏதோ கோடிட்ட இடத்தை
“பூர்த்தி” செய்வது போல்
வாழ்த்தினார்கள்.
பூர்த்தி அடைந்தது அறுபது தான்.
பூகம்ப வரிபிளப்புகள் போல்
சிலிர்க்கும்
அவர் நடிப்புக்கலைக்கு
இன்ஃபினிடி கூட‌
இற்றுவிழும்
எண்ணிக்கை காட்ட முடியாமல்.
உலகநாயகரே
நீடுழி நீடுழி நீவிர் வாழ்க.
============================================================ருத்ரா
Series Navigationகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015வாழ்க்கை ஒரு வானவில் – 28எல்லா நதியிலும் பூக்கள்தூய்மையான பாரதம்ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. ! [கவிதை -2]” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *