தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 23 in the series 21 டிசம்பர் 2014

வைகை அனிஷ்

emden_003

முதல் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்த நேரம், ஜெர்மானிய போர் கப்பலான எம்டன் பல சாகசங்களை செய்து எதிரிகளை அச்சுறுத்தியது. எம்டன் கப்பலினால் பல கப்பல்கள் கைப்பற்றப்பட்டும், பல கப்பல்கள் அழிக்கப்பட்டது. இதற்கு காரணம் கேப்டன் வான்முல்லரின் திறமை எனக்கூறப்பட்டது. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்டன் கப்பல் இந்திய கடற்படை பகுதிக்குள் நுழைந்தது. அப்பொழுது கலங்கரை விளக்குகள் மண்ணெண்ணெயால் பயன்படுத்தப்பட்ட நேரம். அதனால் வெளிச்சத்தை நோக்கி வந்த எம்டன் கப்பல் சென்னை துறைமுகத்தையொட்டி நின்ற அனைத்து கப்பல்களுக்கும் தெரியாமல் வந்து குண்டு வீசியது. குண்டுவீசிய வேகத்தில் திரும்பியது. அந்த குண்டுவீச்சு தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தின் வளாக சுவரின் ஒருபகுதியை தரைமட்டமாக்கியது. அந்த இடத்தில் ஒரு கல்வெட்டு நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டுடன் எம்டன் சென்னையில் குண்டு வீசிய நிகழ்வு 100வது ஆண்டை நிறைவு செய்தது. அக்கப்பலை செலுத்தியவர் செண்பகராமன் என்ற தமிழன் என்பது அதன் பின்னர் தெரியவந்தது. தற்பொழுது அந்தக்கல்வெட்டு பாதுகாக்கப்படாமல் சாலையோரம் வருவோரையும், போவோரையும் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.
மரக்காயர்களின் பிறநாட்டுத் தொடர்புகள்
தமிழகத்திலிருந்து மலேசியா நாட்டிற்கு வியாபாரத்திற்கு சென்றவர்களை கிளிங் என அழைத்தனர். கி.பி.1516 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் தங்களது வணிக நடவடிக்கைகளை விரிவு படுத்திக்கொண்டு மலேசிய தீபகற்ப துறைமுகங்களான பெராக், ஜோகூர், மலாக்கா போன்ற பன்னாட்டு வணிகத்துறைமுகங்களுடன் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தினார்கள். அப்போது அந்நாடுகளை சுல்தான்கள் ஆண்டு கொண்டிருந்தனர். தமிழ்நாட்டைச்சேர்ந்த நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூரைச்சேர்ந்த நகுதா என்பவர் ஒரு கப்பலில் வணிகர்கள் பலர் தங்களது வணிகப்பொருட்களுடன் ஆகஸ்டு-செப்டம்பர் மாதத்தில் புறப்பட்டு கெதா போன்ற துறைமுகங்களில் தங்கி, சோழ மண்டலத்தில் விற்பதற்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து பிப்ரவரி-மார்ச் மாத்தில் திரும்பினார்கள். தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் சென்ற தமிழக முஸ்லிம்கள் அந்நாடுகளில் சோழியர் அல்லது ச+ளியர் என அழைக்கப்பட்டனர். ஐரோப்பியர்களின் வணிகப் பதிவேடுகளில் இவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது.  பதினெட்டாம் நூற்றாண்டில் சுமார் 1700 ஆம் ஆண்டு வாக்கில் கெதாவின் மக்கள் தொகையில் சோழியர் கணிசமாக இருந்தனர். இந்நாட்டு கடல் வணிகம் இவர்கள் கையில் இருந்தது. கெதா நதிக்கரையிலிருந்த லிம்புங், அனக்புகிட் போன்ற பகுதிகளில் சோழியர்கள் குடியிருப்புகள் நிறைந்திருந்த செய்திகள் அதிகம் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழிய முஸ்லிம்கள் பினாங்கின் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் பிடித்தனர். இவர்களது குடியிருப்பு பகுதி மலபார் தெரு என அழைக்கப்பட்டது. 1788 ஆம் ஆண்டு மலபார் தெருவின் பெயர் ச+லியா தெரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
உலகம் சுற்றிய முதல் கப்பல்
உலகத்தை முதன்முதலில் சுற்றிய கப்பல் மெகல்லன் தலைமையில் உள்ள குழுதான். வாஸ்கோடகாமா 1498 ஆம்ஆண்டு இந்தியாவுக்குள் கடல்வழி கண்டறிந்தவுடன் நறுமணப் பொரடு;கள் விற்பனையை போர்த்துகீசியர்கள் கட்டுப்பட ஆரம்பித்தனர். கொலம்பசைப்போலவே போர்த்துக்கீசிய சாகசப் பயணி பெர்டினாண்ட் மெகல்லனும், கடலில் ஐரோப்பாவுக்கு மேற்கே பயணித்தால் நறுமணப்பொருட்கள் இருக்கும் தீவை அடையலாம் என நம்பினார். அப்பொழுது ஸ்பானியர்கள் தங்களிடமிருந்த ஐந்து புதிய கப்பல்களை தந்து போர்த்துக்கீசியர்கள் பயன்படுத்தாத புதிய வழியை கண்டறிந்து தருமாறு கேட்டனர். அவர்கள் வேண்டுகோளுக்கினங்க மகெல்லன் குழுவினர் தான் முதலில் வலம் வந்த கப்பல் குழுவின் தலைவனாக மாறினார்.
ஐந்து கப்பல் 260 பேருடன் மகெல்லன் பயணம் புறப்பட்டார். அவருடைய முதன்மைக்கப்பல் டிரினிடாட். அந்த மரக்கலம் வெறும் 30 மீட்டர் நீளமே இருந்தது. இதில் கடற்கொள்ளையர்கள் மற்றும் எதிரிகளைத் தாக்கும் வண்ணம் பீரங்கியுடன் வலம் வந்தது. இப்பயணத்தின் மூலம் பசிபிக் பெருங்கடலை கடந்து ஆசியாவுக்கு வரமுடியும் என்பதை முதலில் கண்டறிந்தவர் மெகல்லன். இதனைத்தொடர்ந்து ப+மியை முதன் முதலில் சுற்றியவர் என்ற பெருமை கொண்டவர்.கடல் பயணங்களில் காலந்தோறும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் வரலாறு குறித்த அதிகமான ஆய்வுகள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவை ஆளத்தொடங்கிய ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பெருகி வரும் மக்கள் தொகைக்கும் இத்தகைய வணிகமே ஏற்றதாக அமையும் எனக் கருதினர். 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரிட்டீஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இந்தியத் துறைமுகங்களுக்கு நீராவிக் கப்பல்களைச் செலுத்தியது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 160 கப்பல்களை கடலில் இயக்கியது. இதன் மூலம் இந்தியா சீனா, ஜப்பான், கீழ்த்திசை நாடுகள் போன்ற நாடுகளுடன் வணிகம் புரிய ஏதுவாக அமைந்தது.
20 ஆம் நூற்றாண்டில் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்கு ரப்பர் தோட்ட வேலைகளுக்கும், தேயிலை தோட்ட வேலைகளுக்கும் கூலி ஆட்கள் தேவைப்பட்டனர். இதனால் சென்னையிலிருந்து பர்மா மற்றும் மலேசியாவிற்கு பிரிட்டீஷ் இந்தயி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி குறைந்த கட்டணத்தில் கப்பல்களை இயக்கியது.
இருபதாம் நூற்றாண்டில் சென்னையிலிருந்து சிங்கப்ப+ருக்கு இயக்கப்பட்ட நீராவிக்கப்பல் ரஜூலா என்று அழைக்கப்பட்டது. இக்கப்பல் 1926 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கட்டப்பட்டது. இக்கப்பலின் நீளம் 477 அடி, அகலம் 681 அடி, எடை 8478 டன். இதில் பயணிகளின் பொருளாதார வசதிக்கேற்ப முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, திறந்த வெளி பயணியர் செய்யும் வகுப்பு எனப்பிரிக்கப்பட்டது. இங்கிலாந்தில் கட்டப்பட்டாலும் இந்தியாவில் உள்ள குஜராத்தின் சின்னஞ்சிறிய கிராமம் தான் ரஜூலா ஆகும்.
1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாக பினாங்கு மற்றும் சிங்கப்ப+ருக்கு பயணத்தை மாதத்தில் இரண்டு தடவை இந்த தடத்தில் பயணித்தது. இவ்வழித்தடத்தில் 5000 பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச்சென்று வந்தது.
இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து அரசு தங்களது கடற்படைக்கு உதவியாக இக்கப்பலை வாடகைக்கு அமர்த்திக்கொண்டது.  அதன்பின்னர் மீண்டும் 1946 ஆம் ஆண்டு தனது தாயகத்திற்கு மீண்டும் பயணித்தது.
1947 ஆம் ஆண்டு சென்னை-பினாங்கு மலேசியாவிற்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பலாக மீண்டும் இயங்கத்துவங்கியது. இவ்வாறு தொடர்ந்து இயங்கி வந்ததால் கப்பல் தன்னுடைய திறனை இழந்தது. அதன் பின்னர் 1962 ஆம் ஆண்டு ஜப்பானில் பழுதுபார்க்கப்பட்டு இயந்திரத்தின் திறன் கூட்டப்பட்டது.
3.11.1966 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து நாகப்பட்டினத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது கடும் புயல் வீசிக்கொண்டிருந்தது. இதனால் ரஜூலா கப்பல் நாகப்பட்டினத்தில் நிற்காமல் சென்னை நோக்கி சென்றது. இருப்பினும் சென்னை அருகே உள்ள கோவளம் அருகாமையில் புயல் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் நடுக்கடலில் தத்தளித்தது. அதன் பின்னர் புயல் வேகம் தனிந்த பின்னர் சென்னை துறைமுகத்தை நோக்கி சென்றது.
அதன் பின்னர் 1973 ஆம் ஆண்டு இந்தியக் கப்பல் கழகத்திற்கு ரஜூலா விற்கப்பட்டது. இந்தியக் கப்பல் கழகம் ரங்கத் என்று பெயரிட்டது. 30.8.1974 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து மும்பை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 1974 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா கப்பல் உடைக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு உடைக்கப்பட்டது. 48 வருடம் ஓடி ஓடி தேய்ந்த அக்கப்பல் தன்னுடைய வாழ்வை முடித்துக்கொண்டது. இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டில் கப்பல்துறை வரலாற்றில் எந்தவித விபத்தையோ, தரைதட்டாமலோ சென்றதோடு அல்லாமல் பர்மா, மலேசியா, ஜப்பான், சிங்கப்ப+ர் போன்ற நாடுகளுக்கு அடிமைகளையும், வியாபாரிகளையும், ரப்பர் தோட்டத்தொழிலாளர்களையும் ஏற்றிச்சென்ற பெருமையும், இந்தியாவை பிறநாடுகளோடு வணிகத்தொடர்பு ஏற்படுத்திய ரஜூலா கப்பல் வரலாற்றில் மைல் கல் என்றே கூறலாம்.
வைகை அனிஷ்
Series Navigationஅந்த நீண்ட “அண்ணாசாலை”…மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்
author

Similar Posts

Comments

  1. Avatar
    paandiyan says:

    செண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார்.
    AND TITLE SAYS;
    தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்
    tamilan, or malayali or dhravidan?? which one is appropriate here?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *