பெஷாவர்
(1)
எங்கிருந்தாலும்
குழந்தைகள்
உயிர் நிலவுகள்.
நிலவுகளை
நெற்றிப் பொட்டில் சுட்டார்கள்.
நெஞ்சில்
இருள்.
(2)
குழந்தைகளுக்கு என்ன தெரியும்?
பட்டாம் பூச்சிகள்
தெரியும்.
ஓடியாடி
விளையாடத் தெரியும்.
பயங்கரவாதிகளையும் மனிதர்கள் என்று தான் தெரியும்.
எப்படி மனம் வந்தது
சுட?
(3)
வகுப்பறைகளில்
வார்த்தை கற்கும் குழந்தைகள்
சுடப்பட்டார்கள்.
யார்
சுட முடியும்
வார்த்தையை?
(4)
குழந்தைகளிடம் பேசுவது
எளிது.
இன் சொற்கள்
போதும்.
குழந்தைகள்
பதில் பேச முடியாமல்
ஏன்
வெடி குண்டுகளைச் சொற்களாய்ச் சொன்னார்கள்?
(5)
காற்றை நம்பும்
மலர்கள்.
உன்னையும் என்னையும் நம்பும்
குழந்தைகள்.
நம் மேலான குழந்தைகளின் நம்பிக்கை கடவுளின் மேலான
நம் நம்பிக்கையை விட உண்மையானது.
சித்தாந்தம் புயற்
காற்று.
சீறியடிக்கும்.
மலர்கள்
உதிரம் சிந்திக் கிடக்கும் மண்ணில்.
(6)
ஒரு
குழந்தையைக்
காய்ச்சலில் இழந்தாலும்
துரத்தும்
வலி.
ஒரு
குழந்தை கொல்லப்பட்டால்…..?
துரத்தும்
வலிக்கும் மேல் துரத்த ஒன்றிருக்கும்.
கொஞ்சம் கூட வலியுணராமல்
நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்று விட்டார்கள்.
(7)
அவர்களின்
குறி
குழந்தைகளை
விட
குழந்தைகளின்
விலை மதிக்க முடியாத முத்தங்கள்.
(8)
அன்று
குஞ்சுகள்
வீடு திரும்பவில்லை.
இறக்கைகளைப்
பிய்த்தெறிந்து விட்டார்கள்.
வெளியெங்கும்
துப்பாக்கிகள் வெடித்து புகை மூட்டம்.
சூரியன்
சீக்கிரம் இருண்டான்.
(9)
உயிர் பிழைத்த குழந்தைகள்
பள்ளிக்குத்
திரும்பச் செல்லுமா?
குண்டுகள் துளைத்த தம் சகாக்களின்
கனவுகளைத்
தேடுமா?
சகாக்களில்லாத காலி பெஞ்சுகளில்
சாவு உட்கார்ந்திருப்பதைக்
காணுமா?
(10)
இனி
உயிர் பிழைத்த குழந்தைகள்
ஒரு
மனிதன் போல் தோற்றத்துடன்
மிக மோசமான மிருகமென்று ஒரு படம் வரையலாம்.
காலி
வகுப்பறையில் மாட்ட வேண்டும் அதை.
கு.அழகர்சாமி
- தலைப்பு இடாத ஒரு ஓவியம்..
- சாவடி – காட்சிகள் 16-18
- அந்த நீண்ட “அண்ணாசாலை”…
- தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்
- மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்
- தொடுவானம் 47. நாத்திகமா? ஆன்மீகமா ?
- சுசீலாம்மாவின் யாதுமாகி
- மறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வு
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 6 “ஹாங்காங் என்னைச் செதுக்கியது”
- இனி
- ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014 மாத இதழ்
- ஆத்ம கீதங்கள் – 10 நேசித்தேன் ஒருமுறை .. !
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)
- தினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3
- கிளி ஜோசியம்
- இது பொறுப்பதில்லை
- பெஷாவர்
- மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்
- வரிசை
- ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-18
- திருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி – தமிழாய்வுத்துறை 2015 பிப்.5,6 நாள்களில் நிகழ்த்தும் துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம்
- வையவன் 75 ஆவது வயது நிறைவு வாழ்த்து விழா
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்