ஒரு காமிரா லென்ஸின் வழியே…..

This entry is part 5 of 22 in the series 28 டிசம்பர் 2014

kamal-haasan-rajinikanth-balachander_640x480_81419407113

ஒற்றை வரியை
சுருட்டி மடக்கி நீட்டி நெளித்து
பஞ்ச் டைலாக்கில்
பல சேட்டைகளுடன்
திரையை ரொப்பி
பெட்டியை ரொப்புவதே
சினிமானின் பாணி.
ஆனால்
நறுக்கென்று
சுறுக்கென்று
உள்ளம் தைத்து
காமிராவில் எழுதிய‌
பாலச்சந்தரின் இந்த குறும்பாக்களை
மாலை தொடுத்தாலே
கிடைப்பது
ஒரு திரைப்படக்கல்லூரி.
பாலசந்தர் குறும்பாக்கள்
==================================================
1
காப்பியாற்றிய சர்க்கஸில்
ஒரு காதல் காப்பியம்
சர்வர் சுந்தரம்.
2
ஆரஞ்சு பழத்தோல் கூடு
சுளைகள் களவு போனது.
நீர்க்குமிழி.
3
கடிகார வினாடி முள் முனையில்
திக் திக் திக்..கத்திகள்.
நாணல்.
4
அந்த “ரூம்” இன்னமும்
“லொக் லொக்”கில் தான்.
எதிர்நீச்சல்.
5
அண்ணா சாலையில் நெல்லு
நெல்லு காயப்போட்டால்…!!???
அனுபவி ராஜா அனுபவி.
6
அன்றைய “புன்னகை” இன்னும்
“நோட்டில்”  செய்கிறது கேலி!
புன்னகை.
7
தூர்தர்ஷனின் “ஷெனாய்” மீட்டியது
மம்முட்டி பானுப்பிரியா நரம்புகளை.
அழகன்.
8
ராமன் தோளில் ஒரு ராவணன்.
வென்றது சீதையின் சாணக்கியம்.
மூன்று முடிச்சு.
9
மனைவியின் மீது தினமும்
கத்திவீசும் கயவக்கணவன்.
அவர்கள்.
10
வயதுகள் தள்ளிநின்று
வேடிக்கை பார்த்த காதல் தினவுகள்
அபூர்வ ராகங்கள்.
11
கம்பியில் குத்தி குத்தி சேகரித்த‌
கடிதங்களில் “காதலுக்கு”வடைமாலை.
வெள்ளிவிழா.
12
நீதியின் நிழல் துரத்தும் ஒளியே
இங்கு என்றும் உருகாத மெழுகுவர்த்தி.
ஞான ஒளி.
13
கண்கள் இல்லை..இருப்பினும் அந்த‌
மிடுக்கும் கணக்கும் குறி தப்பவில்லை.
மேஜர் சந்திர காந்த்.
14
தூக்கமாத்திரைகளில் இன்னும்
விழித்துக்கொண்டிருக்கிறது..அந்தக்காதல்!
தாமரை நெஞ்சம்.
15
தன் குழந்தையைக் காக்க அந்த தாய்க்கு
வந்தது தொப்பூள்கொடியோடு ஒரு துப்பாக்கி.
காவியத்தலைவி.
16
ராகங்கள் கலந்து கொண்டபோது
காதலின் முகவரி தொலைந்து போனது
சிந்து பைரவி.
17
பாட்டில் இப்படி
யாருமே தோலுரிக்க முடியாது.
பட்டினப் பிரவேசம்.
18
செலவு ஆயிரம் கோடியல்ல.
ஒரு டம்ளர் தண்ணீர் தான்.
தண்ணீர் தண்ணீர்.
19
குற்றாலத்தின் வெள்ளியருவியில் ஒரு
சிவப்புக்கண்ணீர்.
அச்சமில்லை அச்சமில்லை.
20
ரஜனிக்குள் இப்படியொரு லொள்ளா?
வயிறு புடைக்கும் சிரிப்பு விருந்து.
தில்லு முல்லு.
21
தாலிக் கயிற்றில் ஒரு
“கயிற்று இழுப்பு” போட்டி.
இரு கோடுகள்.
22
இன்று வரை இன்னமும் புதிர் தான்.
காதலும் “ராமானுஜமும்”
நூற்றுக்கு நூறு.
23
பின்னே வரவேண்டிய நிழல்
முன்னே வந்து மிரட்டுகின்றது.
ஞானஒளி
24
“கல்யாண மாலை”பாட்டுக்குள்
ஏழு சமுத்திரங்களும் தோற்றுப்போயின.
புதுப்புது அர்த்தங்கள்.
25
வரவு எட்டணா செலவு பத்தணா!
பாலையா துந்தணாவில் இந்திய பட்ஜெட்.
பாமாவிஜயம்.
26
அண்ணனுக்குள் தம்பி.தம்பிக்குள் அண்ணன்.
கதிரி கோபால் நாத் உருக்கி விட்டார்.
டூயட்.
27
மனிதனுக்குள் எட்டுகோணல் என்று
காட்டினார் ஒரு “அஷ்ட வக்கிரக கீதை”.
நவகிரகம்.
29
இப்படியே விட்டிருந்தால்
இந்த நாட்டில் நரகாசுரனே சூபர்ஸ்டார்.
தப்புத்தாளங்கள்.
30
சாக்கடையில் ஆப்பிள்.
சாக்கடையே இங்கு கருப்புப்பணம்!
வறுமையின் நிறம் சிவப்பு.
31
அந்த காமிராவைத் திறந்து பாருங்கள்
இன்னும் அதில் மிச்சம் இருக்கும் ..
பாலச்சந்தரின் ஆத்மா!
Series Navigationதிரையுலகின் அபூர்வராகம்மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்
author

ருத்ரா

Similar Posts

2 Comments

  1. Avatar
    ருத்ரா இ.பரமசிவன் says:

    அன்பு நண்பர்களே

    குறும்பா 18 ம் 19 ம் கீழ்க்கண்டவாறு வாசிக்கப்படவேண்டும்.இந்த சொற்கள் விடுபட்டுப் போயின.தவறுகளுக்கு வருந்துகிறேன்.

    அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்

    17
    “நிலா”வை பாட்டில் இப்படி
    யாருமே தோலுரிக்க முடியாது.
    பட்டினப் பிரவேசம்.

    18
    தேர்தல் செலவு ஆயிரம் கோடியல்ல.
    ஒரு டம்ளர் தண்ணீர் தான்.
    தண்ணீர் தண்ணீர்.

  2. Avatar
    paandiyan says:

    //கம்பியில் குத்தி குத்தி சேகரித்த‌

    கடிதங்களில் “காதலுக்கு”வடைமாலை.

    வெள்ளிவிழா.//

    appadiya?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *