சே.சிவச்சந்திரன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
தமிழ்ப் பல்லைக் கழகம்
தஞ்சாவு+ர்.
திராவிட மொழியாம் தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலும் மூத்த இலக்கண நூலுமான தொல்காப்பியம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதேபோல் சமற்கிருத மொழியின் முதல் இலக்கண நூலும் மூத்த இலக்கண நூலுமான அஷ்டாத்தியாயி கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது. இந்நூல்கள் இரண்டின் தோற்றக் காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் அறிஞர்களிடையே நிலவுகின்றன. ஆயினும் இவ்விரு நூல்களின் இலக்கணக் கூறுகள் என்ற அடிப்படையில் வேற்றுமை தொடர்பாக நோக்குகின்ற பொழுது ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. அவற்றை இனங்காணுவதாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியம்
தொல்காப்பியத்தில் எட்டு வேற்றுமைகள் காணப்படுகின்றன.
வேற்றுமை தாமே ஏழென மொழிப
(தொல்.சொல்.வேற்.1)
விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே
(தொல்.சொல்.வேற்.2)
அவைதாம்
பெயர் ஐ ஒடு கு
இன் அது கண் விளி என்னு மீற்ற
(தொல்.சொல்.வேற்.3)
என்று தொல்காப்பியர் அவ்வேற்றுமைகளைக் கூறியுள்ளார்.
அஷ்டாத்தியாயி
அஷ்டாத்தியாயியில் எட்டு வேற்றுமைகள் காணப்படுகின்றன.
ஸ்வௌ ஜஸமௌட்ச2ஷ் டாப்4யாம்
பி4ஸ் ஙேப்4யாம் ப்4யஸ்ஙஸிப்4யாம்
ப்4யஸ் ஙஸோ ஸாம் ங்யோஸ் ஸுப்
(அஷ்.அத். 4.1.2)
இந்நூற்பா சமற்கிருத வேற்றுமையின் அடிப்படை உருபுகளைச் சுட்டுகிறது.
ங்யாப் ப்ராதிபதி3காத்
(அஷ்.அத். 4.1.1)
இந்நூற்பா ஆகாரவீறு, ஈகாரவீறு, மெய்யீறு கொண்ட சொற்களுடன் வேற்றுமையுருபுகள் எவ்வாறு இணைகின்றன என்று சுட்டும். அவற்றுள் ஆகார ஈற்றுச் சொற்களின் எடுத்துக்காட்டுகள் மட்டும் இக்கட்டுரையில் கட்டுரையின் நீளம் கருதிக் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுநிலையில் தொல்காப்பியத்தில் ஒருமை பன்மை என்ற இரண்டு நிலை இருப்பினும் வேற்றுமை இலக்கணத்தில் ஒருமையைக் குறிக்க என்ன உருபு குறிக்குமோ அதே உருபே பன்மையையுங் குறிக்கும். ஆயின் அஷ்டாத்தியாயியில் வேற்றுமை இலக்கணத்தில் ஒவ்வொரு வேற்றுமைக்கும் ஒருமைக்கு ஓருருபும் இருமைக்கு வேறோர் உருபும் பன்மைக்கு மற்றோர் உருபும் என்று மூன்று வகையான உருபுகள் காணப்படுகின்றன.
முதல் வேற்றுமை
தமிழ்
கண்ணன் வந்தான் (ஒருமை)
அவர்கள் வந்தார்கள் (பன்மை)
இங்குக் கண்ணன் என்னும் பெயரும் அவர்கள் என்னும் பதிலிடு பெயரும் எழுவாயாக நின்று முதல் வேற்றுமையை உணர்த்தின.
சமற்கிருதம்
க2ட்வா + ஸு = க2ட்வா (ஒருமை)
க2ட்வா + ஸு = க2ட்வே (இருமை)
க2ட்வா + ஜஸ் = க2ட்வா (பன்மை)
இங்கு ஸு, ஸு, ஜஸ் என்னும் உருபுகள் முதல் வேற்றுமையை உணர்த்தின.
இரண்டாம் வேற்றுமை
தமிழ்
கண்ணனைக் கண்டேன் (ஒருமை)
அவர்களைக் கண்டேன் (பன்மை)
இங்கு ஐ உருடு இரண்டாம் வேற்றுமையை உணர்த்திற்று.
சமற்கிருதம்
க2ட்வா + அம் = க2ட்வாம் (ஒருமை)
க2ட்வா + ஔட் = கட்வே (இருமை)
க2ட்வா + ஙஸ் = க2ட்வா (பன்மை)
இங்கு அம், ஔட், ஙஸ் உருபுகள் இரண்டாம் வேற்றுமையை உணர்த்தின.
மூன்றாம் வேற்றுமை
தமிழ்
கண்ணனோடு வந்தான் (ஒருமை)
அவர்களோடு வந்தான் (பன்மை)
இங்கு ஓடு உருடு மூன்றாம் வேற்றுமையை உணர்த்திற்று.
சமற்கிருதம்
க2ட்வா + டா = க2ட்வயா (ஒருமை)
க2ட்வா + ப்யாம் = க2ட்வாப்4யாம் (இருமை)
க2ட்வா + பி4ஸ் = க2ட்வாபி4 (பன்மை)
இங்கு டா, ப்யாம், பி4ஸ் ஆகிய உருபுகள் மூன்றாம் வேற்றுமையை உணர்த்தின.
நான்காம் வேற்றுமை
தமிழ்
கண்ணனுக்குக் கொடுத்தான் (ஒருமை)
அவர்களுக்குக் கொடுத்தான் (பன்மை)
இங்குக் கு உருபு நான்காம் வேற்றுமையை உணர்த்திற்று.
சமற்கிருதம்
க2ட்வா + ஙே = க2ட்வாயை (ஒருமை)
க2ட்வா + ப்4யாம் = க2ட்வாப்4யாம் (இருமை)
க2ட்வா + ப்4யஸ் = க2ட்வாப்4ய (பன்மை)
இங்கு ஙே, ப்4யாம், ப்4யஸ் ஆகிய உருபுகள் நான்காம் வேற்றுமையை உணர்த்தின.
ஐந்தாம் வேற்றுமை
தமிழ்
கண்ணனின் வீடு (ஒருமை)
அவர்களின் வீடு (பன்மை)
இங்கு இன் உருபு ஐந்தாம் வேற்றுமையை உணர்த்திற்று.
சமற்கிருதம்
க2ட்வா + ஙஸி = க2ட்வாயா (ஒருமை)
க2ட்வா + ப்4யாம் = க2ட்வாப்4யாம் (இருமை)
க2ட்வா + ப்4ய = க2ட்வாப்4ய (பன்மை)
இங்கு ஙஸி, ப்4யாம், ப்4ய உருபுகள் ஐந்தாம் வேற்றுமையை உணர்த்தின.
ஆறாம் வேற்றுமை
தமிழ்
கண்ணனது கண் (ஒருமை)
அவர்களது வீடு (பன்மை)
இங்கு அது உருபு ஆறாம் வேற்றுமையை உணர்த்திற்று.
சமற்கிருதம்
க2ட்வா + ஙஸ் = க2ட்வாயா (ஒருமை)
க2ட்வா + ஓஸ் = க2ட்வயோ (இருமை)
க2ட்வா + ஆம் = க2ட்வாநாம் (பன்மை)
இங்கு ஙஸ், ஓஸ், ஆம் உருபுகள் ஆறாம் வேற்றுமையை உணர்த்தின.
ஏழாம் வேற்றுமை
தமிழ்
கண்ணனின்கண் கண் (ஒருமை)
அவர்களின்கண் கண்கள் (பன்மை)
இங்குக் கண் உருபு ஏழாம் வேற்றுமையை உணர்த்திற்று.
சமற்கிருதம்
க2ட்வா + ஙி = க2ட்வாயாம் (ஒருமை)
க2ட்வா + ஓஸ் = க2ட்வயோ (இருமை)
க2ட்வா + ஸுப் = க2ட்வாஸு (பன்மை)
இங்கு ஙி, ஓஸ், ஸுப் உருபுகள் ஏழாம் வேற்றுமையை உணர்த்தின.
எட்டாம் வேற்றுமை
தமிழ்
கண்ணா வா (ஒருமை)
மன்னர்களே வாருங்கள் (பன்மை)
இங்கு எழுவாய் ஈறு நீண்டு எட்டாம் வேற்றுமையை உணர்த்திற்று.
சமற்கிருதம்
க2ட்வா + ஸு = ஹே க2ட்வே (ஒருமை)
க2ட்வா + ஔ = ஹே, க2ட்வே (இருமை)
க2ட்வா + ஜஸ் = க2ட்வா (பன்மை)
இங்கு ஸு, ஔ, ஜஸ் ஆகிய உருபுகள் ஹே என்னும் ஒலிகள் நீட்டி எட்டாம் வேற்றுமையை உணர்த்தின.
தொல்காப்பியத்திலும் அஷ்டாத்தியாயியிலும் எட்டு வேற்றுமைகள் காணப்படினும் வேற்றுமை உருபுகள் என்ற அடிப்படையில் வேறுபடுகின்றன. அஷ்டாத்தியாயியில் ஆகாரவீற்றுச் சொற்களுடனும் ஈகாரவீற்றுச் சொற்களுடனும் மெய்யீற்றுச் சொற்களுடனும் வேற்றுமையுருபுகள் இணைந்து சமற்கிருத வேற்றுமை இலக்கணத்தை விரிவுபடுத்துகின்றன.
- கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்
- மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்
- என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?
- திரையுலகின் அபூர்வராகம்
- ஒரு காமிரா லென்ஸின் வழியே…..
- மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!
- கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்
- புத்தாண்டு வரவு
- நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்
- ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்
- பாலச்சந்தர் ஒரு சகாப்தம் – Adayar Kalai Ilakkiya Sangam
- தொடுவானம் 48 . புதிய பயணம்
- ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- ஆனந்த பவன் நாடகம் காட்சி -19
- தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்
- தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்
- சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்
- 19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி
- இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..
- இலக்கிய வட்ட உரைகள்: 7 – மதிப்புரைகளும் கு.ப.ரா குறித்த மதிப்புரைகளும்
- சாவடி 19-20-21 காட்சிகள்