மணி கிருஷ்ணமூர்த்தி
1. கோவிலுக்கு மட்டும் என்றால், ஒரு காவி வேஷ்டியும் ஒரு கிழியாத சட்டையும் போதுமானது, இல்லையென்றால் நிறைய சில்லரை காசு வைத்துக்கொள்ளவும். தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஆளைக்கண்டு ஏய்க்குமாம் ஆல மரத்துப் பிசாசு என்பது போல் அவர்களும் எங்களை chase செய்தார்கள். எல்லோருக்கும் மறைந்த “காதல் தண்டபாணி” போல் முகமும் குரலும் இருந்தால், இந்த மாதிரி இடங்களில் ரொம்ப சவுகர்யமாயிருக்கும்.
2. குழந்தைகளுடன் செல்லும்போது 3 நாட்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது. என் 8 வயது மகளுக்கு சாமியின் மீதும் இட்லி தோசையின் மீதும் வெறுப்பு வந்துவிட்டது.
3. டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குப் பிறகு என்றால், உங்கள் கோஷ்டிக்கு ( தனி ஆளாக இருந்தாலும் ) கண்டிப்பாக பொறுமை அவசியம். ஐயப்ப கோஷ்டியும், ஆதி பராசக்தி பக்தர்களும் எல்லா கோவில்களிலும் கூட்டம் கூட்டமாய் ஆஜர் ஆகிறார்கள். முன்னவர்களில் ஒரு சிலர் மன முதிர்ச்சி அடையாமலே ஆட்டு மந்தை போல் எல்லா இடத்திற்கும் ஓடுகிறார்கள். ஒரு கட்டுப்பாடு கிடையாது. சாமியை பார்க்க Q -வில் நிற்கும் போது சினிமா வசனம் பேசுகிறார்கள், பெண்களை கண்களால் மேய்ந்து விடுகிறார்கள். பின்னவர்கள் கூடியமட்டும் குடும்பமாய் வருவதால் தொந்தரவு குறைவு. கூட்ட அலர்ஜி உள்ளவர்கள் இந்த சமயத்தில் எங்காவது பணக்கார resort சென்று விடுவது உத்தமம்.
4.ஒரு நாளைக்கு 4 அல்லது 5 கோவிலுக்கு போகவேண்டுமென்றால் ( இது கும்பகோணம் பகுதியில் சாத்தியம் ), காலை 6 மணிக்கு உங்கள் வண்டி கிளம்பிவிடவேண்டும். எல்லா கோவிலும் 12pm to 4pm மூடியிருக்கும்.
5. பெரிய கோவில்களில் (தஞ்சை, ஸ்ரீரங்கம், மதுரை) அர்ச்சனை வேண்டாம். கூட்டம் அதிகமென்பதால் எல்லாம் இயந்திர கதியில் நடக்கும், அது மனதிற்கு நிம்மதி தராது. அங்கு மூலவரை தரிசிப்பதே புண்ணிய காரியம். ஒரு முறை மதுரையில் வயதான ஒரு அம்மாள் தேங்காயின் உடைந்த இரு மூடிகளும் வேண்டும் என்று கேட்டதற்கு அங்கிருந்த குருக்கள் மரியாதையில்லாமல் திட்டினார், காரணம் கூட்டமிகுதி, அதைப் பார்த்த எனக்கு நிம்மதியே போனது. ஏதாவது கொடுத்தே ஆக வேண்டும் என்றால் உதிரிப்பூக்க்ள் கொண்டு செல்லவும்.
6. மக்களின் அவசரத்தை அற நிலையத்துறை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறது. ரூ.20, 50, 100 என்று உடல் உபாதைகளுக்கு தகுந்த மாதிரி. எனக்கு விலையில்லா/தர்ம தரிசனமே நிம்மதியை கொடுக்கிறது.
7. தங்குவதற்கு அந்தந்த ஊருக்கு சென்றபிறகு book செய்வதாக இருந்தால் மாலை 6 மணியிலிருந்தே தேடவும்.
குறிப்பு: இப்போதெல்லாம் கூட்டம் வரும் கோவிலுக்கருகே கட்டண கழிப்பிடம் கூடிய மட்டும் நன்றாகவே வைத்துள்ளனர். சொம்பையோ (அ) பாட்டிலையோ தூக்கிக் கொண்டு ஒட வேண்டியதில்லை.
This is scribbled after a journey ( 23dec2014 to 28dec2014 ) covering Chidambaram, Kumbakonam and Navagraha temples. Tanjavur, Srirangam, Tiruchi and Madurai.
- கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.
- தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.
- அம்பு பட்ட மான்
- கலவரக் கறைகள்
- பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
- வேழம்
- நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்
- சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்
- துணிந்து தோற்கலாம் வா
- எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா
- ‘அந்த இரு கண்கள்’
- ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20
- சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு
- கண்ணாடியில் தெரிவது யார் முகம்?
- ஜல்லிக்கட்டின் சோக வரலாறு
- பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று
- ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- காலச்சுவடு வெளியீடுகள்
- இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி
- நூலறுந்த சுதந்திரம்
- சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது
- பீகே – திரைப்பட விமர்சனம்
- Muylla Nasrudin Episodes by jothirlatha Girija
- மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு
- பாண்டித்துரை கவிதைகள்
- தொடு நல் வாடை
- “2015” வெறும் நம்பர் அல்ல.
- ரவா தோசா கதா
- தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !
- இளஞ்சிவப்பின் விளைவுகள்
- கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.
- மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_
- சாவடி காட்சி 22 -23-24-25