முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்தியமொழிகள் மற்றும்
ஓப்பிலக்கியப்பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-10
தெலுங்குமொழி பழமையான மொழியாக இருந்தாலும் அம்மொழியை அடையாளப்படுத்துவதற்கான எழுத்துச்சான்றுகள் கி.பி 6 நூற்றாண்டிற்குரியவையாகத்தான் அமைந்துள்ளன. அதன்பிறகு அம்மொழிக்குரிய எழுத்துச்சான்றுக்கான முதல் இலக்கியம் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மகாபாரதம் அமைகிறது. இதனை இயற்றியவர் நன்னையா ஆவார். இவரின் வருகைக்குப் பிறகே தெலுங்கு மொழிக்கான அடையாளம் கிடைத்தது என்றால் மிகையாகாது.
தெலுங்கு மொழியமைப்பை விளக்குவதற்காகச் சமற்கிருத மரபிற்குரிய கோட்பாடுகளைத் தெலுங்கர்களுக்காகச் சமற்கிருதத்தில் இலக்கணம் எழுதினார். இந்நூல் சமற்கிருதம் நன்கு தெரிந்த தெலுங்கு மொழியைக் கற்க விரும்பும் சமற்கிருதவானர் எடுத்துக்கொண்டால் பெயர் வினைகளைப் பற்றித் தவறாமல் பேசியிருக்கிறது. தெலுங்கு வினைக்கென ஓர் இயலை அமைத்துச் (கிரியா பரிச்சேதம்) சமற்கிருத வேர்ச்சொற்களைத் தற்சம வினைகளாக மாறும் படிநிலைகளையும் வினையியலின் போக்குகளையும் இனம்காணும் வகையில் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.
முதல் தெலுங்கு இலக்கண நூலான ஆந்திர சப்த சிந்தாமணி கி;.பி 11-ஆம் நூற்றாண்டில் நன்னையா அவர்களால் இயற்றப்பட்டது. ஆந்திர சப்த சிந்தாமணிக்கு நன்னய பட்டீயம்;இ வாகம சாஸநீயம்;இ; சப்தானு சாஸனம்;;இ பிரகிரியா கௌமதி;;இ ஆந்திர கௌமதி;;இ ஆந்திர வியாகரணம்; என்ற பெயர்களும் உண்டு. இது நன்னையாவால் இயற்றப்பட்டதென்பது பழங்கால இலக்கணிகளின் நம்பிக்கை. தெலுங்கு இலக்கியத்தில் ஆதிகவி யார் என்ற விவாதத்தைப் போலவே முதல் இலக்கணி யார் என்பதும் இன்றுவரை உறுதிபடுத்தாத நிலை உள்ளது. ஆதிகவியான நன்னையா முதல் இலக்கணி என்பது பல புலவர்களின் கருத்தாகும.;
வினையின் வகைகள்
ஆந்திர சப்த சிந்தாமணி வினை என்ற சொல்லுக்குப் பொருள் விளக்கம் கூறாமல் நேரடியாக வினையை வகைப்படுத்தியுள்ளது.
“உபக்ருதி பரிணதி ஸம்வ்ருதிபேதா த்த்ரிவிதா க்ரியா”
(ஆ.சி. நூ.1)
உபகி;ருதி, பரிணதி, சம்விருதி என வினையை மூன்றாக வகைப்படுத்தியுள்ளது.
உபகிருதி வினை என்பது புஷ, புஷ்டௌ, ணு, ஸ்துதௌ என்ற உருபுகளை முதலாகக் கொண்டதாகும்.
“புஷண்வாதிருபக்ருதி”
(ஆ.சி. நூ.2)
என்பவை நூற்பா தரும் விளக்கம் ஆகும்.
சான்று
புஷ்-போஷிஞ்சு—காப்பாற்று
பரிணதி வினை என்பது பூ-ஸத்தாயாம் ஜி-ஜயெ என்பதனை முதலாகக் கொண்டது.
“அத பூ ஜ்யாதி;;;;பரிணதி
(ஆ.சி. நூ.3)
சான்று
ஜி-ஜயிஞ்சு—வெற்றிகொள்.
சம்விருதி வினை என்பது ரஞ்ஐ-ராகே வஸ–நிவாஸே என்பதனை முதலாகக் கொண்டது ஆகும்.
“அன்யாது ரஞ்ஜி வஸ்யாதி”
(ஆ.சி. நூ.4)
சான்று
ரஞ்ஜ்-ரஞ்ஜிஞ்சு—காதல்கொள்
தெலுங்கு இலக்கணங்களில் பொதுவாக வினையை வகைப்படுத்தும் பொழுது அவ்வினை ஏற்கும் உருபுகளைக் கொண்டு வகைப்படுத்தியதாக எண்ணலாம்.
வினை ஏற்கும் அடிச்சொற்கள்
மேற்கூறப்பட்ட வினையின் வகைகள் அடிச்சொற்களை ஏற்று மொழி அமைப்பிற்கு ஏற்பச் சொற்களை அமைத்துகொள்கின்றன.
உபகிருதி வினை—க், ஞ், க்திஞ் போன்ற உருபுகள் சொற்களை ஏற்கும் பொழுது வேர்ச்சொல்லாக நிற்கும்.
பரிணதி வினை—அய், அவ், அர் என்ற உருபுகளை ஏற்று இயற்கையாக வரும்.
சம்விருதி வினை—க2 ச க3ர்வ க3ண தண்ட3 ப3ஜ என்ற உருபுகளை ஏற்று
இயற்கையாக வரும்.
காலத்தின் வகைகள்
ஆந்திர சப்த சிந்தாமணி காலத்தை வகைப்படுத்தும் பொழுது மற்ற மொழியில் இல்லாத புதிய முறையைக் கையாண்டுள்ளது. தமிழ் மொழி இலக்கணங்கள் காலத்தை மூன்றாக வகைப்படுத்தியுள்ளன.
“காலம் தாமே மூன்றென மொழிப”
(தொல்.சொல்.நூ.196)
“இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக்காலமும் குறிப்பொடுங் கொள்ளும்
மெய்ந்நிலையுடைய தோன்ற லாறே”
(தொல்.சொல்.நூ.197)
வினை ஏற்கும் காலத்தை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றாக வகைப்படுத்தியுள்ளனர். ஆனால் தெலுங்கு இலக்கணங்களில் வினையேற்கும் காலத்தை நான்காக வகைப்படுத்தியுள்ளனர்.
“தத்தர்ம வர்தமானதீதாகாம்யர்தகர்க்ரியா ஜ்ஞேயா”
(ஆ.சி.நூ.9)
வினையின் வகைகளை வர்தமானார்தகம் (நிகழ்காலம்), பூதார்தகம் (இறந்தகாலம்), பவிஷ்யத்யர்தகம் (எதிர்காலம்), தத்தர்மார்தம் (இறப்பல்லாக்காலம்) என வகைப்படுத்தியுள்ளனர்.
காலம் ஏற்கும் அடிச்சொல்
வினைச்சொல்லுக்கு எங்கு நிகழ்காலப் பொருள் கூறப்படுகிறதோ அங்கு வஸ அடிச்சொல் பொருளான உந்ந என்ற சொல் இடைச்சாரியையாக வந்து சேரும்.
சான்று
போஷிஞ்சுசுந்நாடு—காத்து வருகிறான்
ம்ரொக்குசுந்நாடு—வருகின்றான்
வினை எங்கு எதிர்காலப்பொருளைச் சார்ந்துள்ளதோ அங்கு அஸ அடிச்சொல்லின் பொருளான கல என்ற சொல் இடைச்சாரியையாக முன்னால் வருகிறது.
சான்று
போஷிம்பகலடு—காக்கப்படுவான்
ம்ரொக்ககலடு—வணங்கப்படுவான்
க்த்வா உருபுப்பொருளிளும் இறந்தகாலப் பொருளிளும் வினை இறுதி எழுத்து இகரமாகத் திரியும் க்த்வா என்பது உருபு. இஃது இறந்த காலத்தை உணர்த்தும் முற்றுப் பெறா வினை.
சான்று
வண்டு-இ–வண்டி (சமைத்து)
இங்குச் சமைத்து, சாப்பிட்டு என்ற இரு வினைச்சொல்லில் வினைமுற்றுப் பெறாமல் இருப்பதைக் காண முடிகிறது.
வினை ஏற்கும் எண் மற்றும் இடங்கள்
வினைச்சொல்லானது காலத்தை ஏற்று வரும் பொழுது எண் (ஒருமை, பன்மை) இடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை) போன்றவற்றை ஏற்று வினையின் தன்மையோடும் காலத்தோடும் பொருந்தி வருகிறது.
இறந்தகால தத்தர்மப் பொருளில் வரும் விலங்கினங்கள், பறவைகள், மரங்கள், அசைவற்றவை எழுவாயாகும் பொழுது பன்மை ஒருமையாகவே இருக்கும். விலங்கினம், பறவையினம் எழுவாயாக அமையும் பொழுது எதிர்காலப்பொருளில் பன்மைக்கு வு உருபும் நிகழ்காலப் பொருளில் பன்மைக்கு வி உருபும் வரும்.
சான்று
சிலுகலு ரஞ்ஜில்லவு—கிளிகள் மயங்கா (எதிர்காலப் பன்மை)
சிலுகலு ரஞ்ஜில்லு சுந்தவி—கிளிகள் மயங்கிக்கொண்டிருக்கின்றன (நிகழ்காலப் பன்மை)
மேலும் விலங்கினங்களும் பறவையினங்களும் எழுவாயாக இருக்கும் பொழுது பெண்பாலுக்குரியது போலவே எதிர்மறை எதிர்காலப்பொருளில் முன்னிலை ஒருமைக்குத் து உருபும் நிகழ்கால முன்னிலை ஒருமைக்கு நி உருபும் வரும்.
சான்று
கிளி மயங்காது (எதிர்கால ஒருமை)
கிளி மயங்குகின்றது (நிகழ்கால ஒருமை)
அனைத்து வினைகளிலும் அனைத்துப் பொருள்களிலும் முன்னிலை ஒருமைக்கு வு உருபும் படர்க்கை ஒருமைக்கு நு உருபும் வரும்.
சான்று
நீவு போஷிஞ்சுசுந்நாவு—நீ பேணிக்கொண்டிருக்கிறாய்
நீவு போஷிந்துவு—நீ பேணுவாய்
நேநு போஷிந்துநு—நான் பேணுவேன்
முன்னிலை தவிர்த்து அனைத்து வினைச்சொற்களின் பன்மைக்கும் ரு உருபு வரும்.
சான்று
மீரு போஷிஞ்சு சுந்நாரு—நீர் காப்பாற்றுகிறீர்
மீரு போஷிப்ப க3லரு—நீர் காப்பாற்ற இயலும்
வாரு போஷிப்பரு—அவர் காப்பாற்ற மாட்டார் என வரும்.
நன்னயா மூவகை வினைகளைக் கூறி அவை கால அடிப்படையில் நான்கு வகையாக வரும் என்பதை மற்ற இலக்கணங்களைக் காட்டிலும் மாறுபட்ட சிந்தனையில் படைத்துள்ளமையை அறிய முடிகிறது. மேலும் எதிர்மறைவினைகள் மூவிடங்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை வினைகள், அஃறிணைப் பெயர்கள் எழுவாயாக இருக்கும் பொழுது பன்மையாக இருப்பதும் ஒருமையில் முடியும் வினைகளையும் எதிர்மறையில் ஒருமை, பன்மையில் வரும் உருபுகள் தற்சம, தற்பவ வினைகள் போன்றவற்றையும் வகைப்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. தெலுங்கு இலக்கணங்கள் பெரும்பாலும் சமற்கிருதச் சொற்களை ஏற்றுத் தமது இலக்கணங்களைப் படைத்துள்ளதை இதன்வழி அறிய முடிகிறது.
துணைநின்றவை
சி.சாவித்ரி, ஆந்திர சப்த சிந்தாமணி
தொல்காப்பியம், சொல்., கழக வெளியீடு
டி.எஸ்.கிரிபிரகாஷ், தெலுங்கு இலக்கிய வரலாறு
- அஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா? – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )
- ”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”
- ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்
- சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று
- நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்
- உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்
- மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை
- ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்
- அழகான சின்ன தேவதை
- டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை
- கணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன?
- பொங்கலும்- பொறியாளர்களும்
- பாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது?
- பத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.
- நாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது
- தொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்
- பாயும் புதுப்புனல்!
- மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….
- இலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்?
- “பேனாவைக்கொல்ல முடியாது”
- வாழ்த்துகள் ஜெயமோகன்
- தமிழுக்கு விடுதலை தா
- கைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்
- சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்
- நாவல் – விருதுகளும் பரிசுகளும்
- பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்
- கலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..
- பேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…
- நாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்
- ஆனந்த பவன் -21 நாடகம்
- பிரசவ வெளி