பண்டைய காலத்தில் மக்கள் சமூகம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தணர், அரசர், வைசியர், ச+த்திரர் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர். அந்தணர் என்பவர்கள் யாகங்களையும் சடங்குகளையும் அரசனின் நன்மைக்காகச் செய்து பல அன்பளிப்புகளை பெற்றனர். அரசர் அதாவது சத்திரியர் என்பவர் உடல் வலிமையால் மற்றவர்களை அடக்கியாண்டு சமூகத்தின் தலைமையைப் பெற்றிருந்தனர். வைசியர் என்பவர் உழவுத்தொழிலும், கால்நடை வளர்ப்பும், வணிகம் செய்வதுமான தொழில்களைக் கொண்டிருந்தனர். நான்காவது வர்ணத்தவரான ச+த்திரர் என்பார் உடைமை எதுவம் இல்லாத உடல் உழைப்பாளிகள். மற்ற மூன்று வர்ணத்தவர்களுடம் இரு பிறப்பாளர்கள். அவர்கள் வேதம் கற்கலாம்,ஓதலாம், ப+ நூல் அணியலாம். நான்காம் வகுப்பினருக்கு அவை மறுக்கப்பட்ன. அவர்கள் மூன்று வகுப்பினர்களும் அடிமை வேலை செய்யும் வேலை செய்ய படைக்கப்பட்டவர்கள் என்ற நிலை இருந்தது.
யாகங்களில் பல கால்நடைகள் பலியிடப்பட்டன. பெரும் விருந்துகளிலும் அவை கொல்லப்பட்;டன. இதனால் வேளாண்மை பணிகளுக்காக கால்நடைகள் குறைந்தன. ஒரு யாகத்தைச் செய்து முடிக்கும் ஓர் அந்தணப் புரோகிதனுக்கு 2,40,000 பசுக்கள் தட்சிணையாக கொடுக்கப்பட்டன. இதனால் செல்வம் குறிப்பிட்ட சமூகத்தைச்சேர்ந்தவர்களிடம் சென்றடைந்தது. சமண சமயத்தின் நிறுவனராக மகாவீரர் கருதப்படுகிறார். இவருடைய தந்தை சித்தார்த்தர் என்றும் தாய் பிரியகாருணி ஆவார்கள். மகாவீரர் கி.மு.540ல் பிறந்து கி.மு.467 இல் நிர்வாணம் அடைந்தார்.22வது தீர்த்தங்கரராகக் கருதப்படும் நேமிநாதர், 23வது தீர்த்தங்கரரையும், 24 வது தீர்த்தங்கரையுமே வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். மகாவீரர் 42 ஆவது வயதில் நிர்வாணம் அடைந்தார். அவர் மகாவீரர் அல்லது ஜினர் என்று அழைக்கப்பட்டார். அவரின் சீடர்கள் ஜினர், ஜைனர் எனவும் அவர்கள் துறவிகள் என்றும் ஸ்ரமணர் எனவும் வடமொழியில் அழைக்கப்பட்டனர். இவர்களே தமிழில் சமணர் அல்லது அமணர் எனப்பட்டனர்.
சமணமும் தென்னகமும்
சமணம் தென்னகம் கி.பி.600 ஆவது ஆண்டில் சிரவணபெளிகுளித்தில் காணப்படுகின்றன. இந்தக் குடியேற்றத்திற்கு பிறகு விசாகாச்சாரியார் என்னும் சமணத்துறவிகள் தலைமையில் ஒரு குழுவினர் கொங்கு நாடு வழியாக தமிழகத்திற்கு பல பகுதிகளுக்கு வந்து தங்கினார்கள். இவர்கள் தங்கிப் பணியாற்றுவதற்கும், மக்களிடமிருந்து ஒதுங்கி வாழ்வதற்கு ஏற்ற இடமாக தமிழகம் இருந்துள்ளது. மதுரை மாவட்டம், தேனி, சிவகெங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தங்கி தங்களது சமயப்பணிகளை மேற்கொண்டனர். கி.மு.300 ஆம் ஆண்டு அளவில் இத்தகைய குடியேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. மதுரைப்பகுதியிலுள்ள பல குகைகளும், தமிழ்பிராமி கல்வெட்டுக்களும் பல குகைகளும், தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்களும் ஆதாரமாக உள்ளன.
அதன் பின்னர் களப்பிரர்கள் மற்றும் திருஞான சம்பந்தர் காலத்தில் சமணர்கள் துன்புறுத்தப்பட்டனர். அதில் எட்டாயிரம் பேர் கழுவில் ஏற்றிக்கொன்றதாகவும் கருத்துக்கள் உண்டு. அப்படி மரணத்தை தவிர்க்க பலர் மதம் மாறியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அரிகேசரி நெடுமாறன் காலத்தில் கி.பி.650-700 ஆவது ஆண்டில் சமண சைவ ப+சல்கள் ஒன்றிரண்டு ஏற்பட்டன. அதன் விளைவாகச் சமண சமயம் சிறிய பின்னடைவையும் சந்தித்தன. ஆனால் அடுத்த அரை நூற்றாண்டு காலத்தில் சமணம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று தனது பழைய நிலைகளில் செல்வாக்கு பெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம், குறண்டி, திருக்காட்டுப்பள்ளி, பழனி ஐவர் மலை போன்ற புதிய மலைப்பள்ளிகளும் பிற்காலத்தில் 8-10 ஆம் நூற்றாண்டில் உருவாகியது.
மேலும் பாண்டி நாட்டில் சுமார் 10.கி.மீ. தொலைவில் ஒரு சமணச் சின்னம் இருக்கிறது. இத்தகைய எழுச்சிக்கு காரணமாக இருந்தவர் அச்சணந்தி ஆவார். கி.பி.9 ஆம் நூற்றாண்டில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து சமணத்தலங்களிலும் அவர் வைத்த திருஉருவங்கள் உள்ளன. அச்சணந்தி என்பவரே ஜீவகசிந்தாமணியின் நாயகன். ஜீவகனின் ஆசிரியராக திருத்தக்கத் தேவரால் அறிமுகம் செய்யப்படுகிறார்.
இந்நிலையில் கி.பி.6 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமணம், பௌத்தம் தாழ்ந்து சைவம் தழைத்தோங்கத் தொடங்கிய காலம் ஆகும். அனல்வாதம், புனல் வாதம் நிகழ்த்தி சமணரும், பௌத்தர்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர்;. இங்கு சமணர்கள், பௌத்தர்கள் வணிகர்கள் என்பதையும் சைவம் வேளாண்மையை அடியொற்றி எழுந்த சமயம் என்பதையும் நினைவிற்கொள்ளவேண்டும். சைவ வளர்ச்சி பிராமண வளர்ச்சியின் வீழ்ச்சி என்பதை மறுப்பதற்கில்லையென்றாலும் இந்து மரப்புப்படி பிராமணர்களுக்கு தரவேண்டிய சிறப்புத்தகுதி வேறு எவருக்கும் இல்லை என்பதால் அவர்களே இந்து மதத்தின் முக்கிய மதச்சடங்குகள் மற்றும் வழிபாட்டு பழக்க வழக்கங்களில் இருந்து வந்ததால் சைவர்களும், பிராமணர்களும் தங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு ஞானசம்பந்தரின் பங்கு அதிகம் இருந்தது. மடங்கள் கோயிலுக்குச் சொந்தமாக நில பரிபாலன நிறுவனமாக மாறியது. கோயில் நிலங்கள் மடங்களோடு இணைக்கப்பட்டு நில வருவாய் மடங்கள் வழியே பெறப்பட்டு கோயில்களுக்கு வழங்கப்பட்டன. பிராமணர்களுக்கும் சைவ வேளாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்தச் சுமுக உறவை கே.கே.பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி போன்றோர் சுட்டிக் காட்டியுள்ளனர். பிற்காலச் சோழர் ஆட்சியில் பிராமணர்களுக்கும், சைவ வேளார்களுக்கும் தனிச்சலுகையும் தண்டனைக்குறைவு அல்லது தண்டனையின்மையும் சோழப் பேரரசுகள் வழங்கியுள்ளமையைப் பல கல்வெட்டுக்களில் காணமுடிகிறது.
தாக்குண்ட சமணர்கள் ஒரு சிலர் சைவ மதத்தை ஏற்று சற்று மாறுபாட்டுடன் வாழத்துவங்கினார்கள். அவர்களின் நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பழைய ப+ம்புகார் என்னும் காவிரிப்ப+ம்பட்டினத்தில் வாழ்ந்த இவர்கள் பெரும் செல்வந்தர்கள், அரசர்களோடு சம ஆசனத்தில் அமரும் தகுதி பெற்றவர்கள். கோவலனின் தந்தை மாசாத்துவானும், கண்ணகியின் தந்தையும் ஏராளமான நிதிகளைச் சோழ அரசனுக்கு தந்து கடல் வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டியவர்கள். பாண்டிமமா அரசி கோப்பெருந்தேவி காற்சிலம்பு மாணிக்கப்பரல் இட்டு நிரப்பிய செல்வச் செழிப்புடைய குடும்பமாகும். கோவலன்-கண்ணகி திருமண விழாவே ஒரு அரசவிழாப்போல் நிகழ்வதைச் சுட்டிக்காட்டி காட்டியுள்ளார்கள் சிலப்பதிகாரம் அறிஞர் தொ.பொ.மீ.
குறண்டி
தமிழகத்தில் உள்ள சமணத்தலங்களுள் ஒன்று குறண்டி. இவ்வ+ர் கல்வெட்டுக்களில் ஸ்ரீ குறண்டி என்றும் குறண்டி அல்லது ஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி அல்லது ஸ்ரீ;வெண்பி நாட்டுக் குறண்டி என்றும் காணப்படுகின்றன. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் ஒரு பகுதி பண்டைய காலத்தில் வெண்புநாடு என்று அழைக்கப்பட்டது. வெண்பு நாட்டைச் சார்ந்த குறண்டி, நால்கூர், பேரெயிற்குடி, நீலன், குரக்கு, திருச்ச+ழி முதலிய சமணத்தலங்களுக்கும் கழுகுமலைக்கும் தொடர்பு இருந்துள்ளது. இங்குத் திருக்காட்டம்பள்ளி என்ற சமணப்பள்ளி இருந்து அழிந்துள்ளது. அழிந்துபோன இச் சமணப் பள்ளியின் கற்கள், சிவன் கோவில் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கழுகுமலையில் காணப்படும் கல்வெட்டுக்களில் சில இக்குறண்டி என்னும் இடத்தைக் குறிப்பிடுகின்றன.
1.ஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி இயக்கங்காடி செய்வித்த திருமேனி
2.ஸ்ரீ வெண்பிநாட்டுக் குறண்டி சாத்தன் சாத்திய செயல்
3.ஸ்ரீ வெண்பி நாட்டுக் குறண்டி நாகங்காலன் செய்தவித்த திருமேனி
எனக்குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீகுறண்டி
குப்பல்நத்தம் கண்ணியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுறண்டி பண்டைய காலத்தில் சமணத்தலமாக விளங்கியுள்ளது. இங்குள்ள பல சமணப் பெரியோர்களும் அவர்களது மாணவர்களும் கழுகுமலைக்குச் சென்று சிற்பங்கள் செய்வித்துள்ளதைக் கழுகுமலைக் கல்வெட்டின் ;வாயிலாக அறியமுடிகிறது.
1.ஸ்ரீகுறண்டி தீர்த்தப்படாரர் மாணாக்கர் கனகநந்தி பெரியார் ;செய்வித்த திருமேனி
2.ஸ்ரீ குறண்டி..தோரி படாரர் மாணாக்கர் சிறு படாரர் செய்வித்த திருமேனி
3.ஸ்ரீ குறண்டி காவிதி காவிதி செய்வித்த திருமேணி
4.ஸ்ரீ குறண்டி கனகநந்தி படாரர் மாணாக்கர் ப+ர்ண சந்திரன் செய்வித்த திருமேனி
மதிபாலன்பட்டி
சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள மரிபாலன்பட்டியில் கி.பி.300 முதல் 900 வரை சமணர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் மகிபாலன்பட்டி, அனுமந்தக்குடி, குன்றக்குடி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவ்வ+ர் நெற்குப்பைச் சாலை அருகே குடவரைக் கோவில் உள்ளது. மேலும் இங்கு சில கல்வெட்டுக்களும் சமணர்கள் வழிபட்ட விக்ரகங்களும் இங்கு காணப்படுகிறது.
அய்யனார்குளம் குன்றுப்பள்ளி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அய்யனார்குளம் என்ற ஊர் உள்ளது. இவ்வ+ரில் பொதியமலை என்ற மலை உள்ளது. பொதிய மலையின் பழம்பெருமையை உணர்த்தும் முறையில் அய்யனார் குளத்திற்கு அருகில் அமைந்த சிறிய குன்றில் இரண்டு தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளது. அய்யனார் குளத்தின் அருகில் இராஜாப்பாறை என்று அழைக்கப்படும் இயற்கையான குகைத்தளத்துடன்கூடிய குன்று ஒன்று உள்ளது. இதன் அருகிலேயே நிலப்பாறை என்றழைக்கப்;படும் வட்டப்பாறை உள்ளது. இவ்விரு இடங்களிலும் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இராஜாப்பாறை குகைப்பள்ளி
இராஜாப்பாறையில் உள்ள குகைத்தளத்தில் மழைகாலத்தில் சமணமுனிவர்கள் தங்கும் வகையில் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. இக்குகைத்தளம் வடமேற்கு நோக்கி உள்ளது. இப்பாறையின் மேலே இருந்து மழைநீர் குகைத்தளத்திற்குள்ளே நுழையாதவாறு குகைத்தளத்தின் முகப்பில் நீண்டபுருவம் அதாவது காடி வெட்டப்பட்டுள்ளது.
இக்குகைத்தினை முனிவர்கள் உறையும்; முறையில் பள்ளியாக உருவாக்கிக் கொடுத்தவரின் பெயர் இங்கு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி.முதல் நூற்றாண்டு எழுத்தமைதியில் மூன்று வரிகளில் தமிழ்பிராமி எழுத்துக்களில் இக்குகைத்தளத்து விதானத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு:
1.பள்ளி செய்வித்தான்
2.கடிகை (கோ) வின் மகன்
3.பெருங்கூற்றன்
கடிகைகோவிலின் மகனான பெருங்கூற்றன் என்பவன் பள்ளியைத் தோற்றுவித்தான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டில் வரும் கடிகை என்ற சொல்லைத் தமிழ்ச் சொல்லாக கருதவேண்டும். கடிகா என்ற வடசொல்லோடு தொடர்புபடுத்தி கூறுவது பொருத்தமற்றதாகும்.
நிலாப்பாறைப்பள்ளி
இராஜாப்பாறையின் எதிர்புறம் சற்று வட்டமான பீடம் போன்று உயர்ந்த பாறை ஒன்று உள்ளது. இதன் மேல்புறத்தில் கற்படுக்கை ஒன்று செய்விக்கப்பட்டு அதில் கி.பி. முதல் நூற்றாண்டு எழுத்தமைதியில் கி.பி. முதல் நூற்றாண்டு எழுத்தமைதியில் தமிழ்பிராமிக்கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இப்பாறையை முனிவர்கள் உறைவதற்கு ஏற்றமுறையில் பள்ளியாக உருவாக்கிக் கொடுத்தவரின் பெயர் பின்வருமாறு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு:
1.குணாவின் இளங்கோ
2.செய்பித பளி
குணாவின் இளங்கோவாக விளங்கியவன் செய்த பள்ளி என்பது இதற்குப் பொருளாகும்.
இதே போல நீதியர்மங்கலத்து அருட்துணைப் பெரும்பள்ளி, உக்கிரன்கோட்டை(களக்குடி) சமணப்பள்ளி,தீர்த்தங்கரர் சிற்பம், கழுகுமலைக்கல்வெட்டு என பல சமணத்தளங்கள் உள்ளது.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டி, அழகர்மலை கிடாரிப்பட்டி, யானைமலை, கீழவளவு, கருங்காலக்குடி, திருவாதவ+ர், மாங்குளம், வரிச்சிய+ர், திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி, முதலைக்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி, கீழக்கோயில்குடி, கொங்கர் புளியங்குளம், குப்பல்நத்தம், காரைக்கேணி, மலைப்பட்டி புத்தூர்மலை ஆகிய இடங்களில் உள்ளது.
கீழவளவு
மதுரை மாவட்டத்தில் உள்ள கீழவளவில் உள்ள சமணதளத்தை 1903 ஆம் ஆண்டு வெங்கோபராவ் என்பவரால் இங்குள்ள கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன.
இங்குள்ள கல்வெட்டுக்கள் சுமார் 2300 வருடங்களுக்கு முந்தைய தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்தக்களின் கல்வெட்டு இம்மலையின் தனிச்சிறப்பு. மேலும் சமண மதத்தைத் தோற்றுவித்த மகாவீரரின் புடைப்புச் சிற்பங்களும், கற்படுக்கைகளையும் பஞ்சபாண்டவர் மலை தன்னகத்தே கொண்டுள்ளது.
சுமார் 100 துறவிகள் தங்கும் வகையில் இங்கு படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டுக்களில் உப(ச) அன் தொண்டி(ல) வோன் கொடு பளிஇ
என்ற வரிச்செய்தி இடமிருந்து வலமாக வெட்டப்பட்டுள்ளது. உபாசன் தொண்டி இலவோன் கொடுத்த பள்ளி என்பது இக்கல்வெட்டின் பொருள். உபசன் என்ற சொல் உபஜ்ஜயா என்னும் பாலி மொழிச் சொல்லின் திரிபு. உபாசன் என்றால் உபாசிப்பவன் அல்லது உபவாசம், விரதம், நோன்பு இருத்தலைக்குறிக்கிறது. தொண்டி இலவோன் என்றால் பாண்டிய நாட்டின் கீழக்கடற்கரையில் அமைந்துள்ள தொண்டி என்ற நகரைச்சேர்ந்த இலவோன் என்ற கொடையாளி இதைச் செய்து கொடுத்திருக்கிறார் என்ற செய்தியாக உள்ளது. இதே போல மற்றொரு கல்வெட்டில்
சங்கரன் ஸ்ரீ வல்லன்
சங்கரன்ஸ்ரீ வல்லன் என்ற கொடையாளி 50 ஆடுகளைக்கொடுத்து, அதன் மூலமாக வரக்கூடிய நெய்யை வைத்துத் அணையாவிளக்கு எரிப்பதற்காக உதவி செய்துள்ளான். மேலும் முந்நாழி அரிசியால் தினந்தோறும் திருவமுது படைக்கச் செய்த ஏற்பாட்டையும் இக்கல்வெட்டு கூறுகிறது. கி.பி.910 ஆம் நூற்றாண்டில் இவ்விடம் வணங்குவதற்கும், அன்னதானம் நடைபெறும் இடமாகவும் அமைந்துள்ளது.
கருங்காலக்குடி
கருங்காலக்குடியில் பஞ்சபாண்டவர்குகைளில் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு 1912 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
இங்குள்ள கல்வெட்டில்
ஏழைய் ஊர் அரிதின் பளி
என்பது கல்வெட்டு கூறும் செய்தி. ஏழைய+ரைச்சேர்ந்த அரிதின் என்பவர் செய்த அறப்பள்ளி என்பது இதன் பொருள். இங்கு வாழ்ந்து வந்துள்ள சமணத் துறவிகளுக்காக இக்கற்படுக்கைகள் வெட்டப்பட்டன.
இதே போல மற்றொரு கல்வெட்டில்
ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேணி
என்று வெட்டப்பட்டுள்ளது. கி.பி.910 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டும் வெட்டப்பட்டுள்ளது.
குப்பல்நத்தம்
குப்பல்நத்தம் கிராமத்தின் பொய்;கை மலையில் ஒன்பது தீர்த்தங்கரர் திருவுருவங்கள் செதுக்கப்பட்;டுள்ளன. அதன் கீழ் கி.பி.910 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது.
..ஞ்ஸவ ஸிஸ்ரீகுறண்டி அட்தேவர்க்கு அடிகள் அம்ஞ்சி பேரால் செய்வித்த திருமேனி இஞ்வர்மாணாக் கிசுஞ்க்கள்ஞ்வித்த திருமேனிஞ்.ல்லி செவித்த திருமேனிஞ். கள் கிழவனைச் சாத்தி பன்னி பேரால் செவித்த திருமேனிஞ் கொற்றி(த்த) தேவர் பெயரால் செவித்த திருமேனிஞ்.
என்று வெட்டப்பட்டள்ளது. ஐந்து திருமேனிகளை ஒரு பெண் அடியார் உட்பட ஐவர் செய்து கொடுத்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது.
திருவாதவ+ர்
திருவாதவ+ர் பகுதியில் அமைந்துள்ள ஓவாமலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களும் சுமார் 10 பேர் தங்கும் அளவிலான குகையும், கற்படுக்கைகளும் அமைந்துள்ளன. குகையின் புருவத்தில் நீர்வடி விளிம்பின் மேல் பகுதியில் முதல் கல்வெட்டு உள்ளது.
பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்
என வெட்டப்பட்டுள்ளது. பாங்காடு என்ற ஊரைச்சேர்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள்.
இதே போல இரண்டாவது கல்வெட்டு
உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்
பரசு என்ற உபாசகரால் இந்த உறைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. உபசன் என்ற சொல்லுக்கு உபாத்யாயன், சமய ஆசிரியர் என்ற பொருள் உண்டு.
மேட்டுப்பட்டி
நிலக்கோட்டை அருகே அமைந்துள்ளது மேட்டுப்பட்டி. மேட்டுப்பட்டி சித்தர்மலையில் மதுரை என்ற பெயருள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டு உள்ளது. மேலும் சித்தர்மலையில் உள்ள கல்வெட்டுக்கள்
அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ
அந்தை அரிய்தி
அந்தை இராவதன்
மதிர அந்தை விஸ_வன்
அந்தை சேந்தன் அதன்
சந்தந்தை சந்தன்
பதின் ஊர் அதை
குவிர அந்தை சேய் அதன்
குவிரந்தை வேள் அதன்
திடி இல் அதன்
இந்த குகைத்தளத்தில் 11 கல்வெட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு படுக்கையிலும் தலையணை போன்ற பகுதியில் தமிழ்பிராமிக் கல்வெட்டு உள்ளது. இப்பெயர்கள்; அனைத்தும் இதை செதுக்கித் தந்தவர்களின் பெயராகவோ அல்லது இப்படுக்கைகள் இப்பெயர்;களுக்கு உரியது என்றோ இருக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம்-ஐவர் மலை
ஐவர்மலையில் பஞ்சபாண்டவர் வனவாசத்தின்போது தங்கியதாக கூறுகின்றனர். பஞ்சவரான பஞ்சபாண்டவர்கள் ஐவர் தங்கிய மலை என்று கருதி இதனை ஐவர்மலை என அழைக்கின்றனர். இங்குள்ள குகைத்தளத்தை பஞ்சபாண்டவர் குகை என்று கூறுகின்றனர். ஆனால் இக்குகைத்தளம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகச் சமண முனிவர்களின் உறைவிடமாகவும் வழிபாட்டு தலமாகவும் திகழ்ந்துள்ளது. குகைத்தளத்தின் முகப்புப் பாறையில் புடைப்புச்சிற்பம் காணப்படுகிறது. சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்களும் அவற்றின் அருகில் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.9-10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களும் இதனை உறுதிப்படுத்தகின்றன.
கி.பி. 8,9,10 ஆம் நூற்றாண்டுகளில் அயிரைமலை சமணமுனிவர்களும் அவர்களது மாணவர்களும் நிறைந்த சமணப்பள்ளியாக இருந்துள்ளது. இப்பள்ளியில் சமணத்தீரத்தங்கரர் உருவங்களும் அவர்களைக் காக்கும் இயக்கி இயக்கன் உருவங்களும் குகைத்தளத்தின் முகப்பிலுள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செய்து வழிபட்டனர். இம்மலையில் இருந்த தீர்த்தங்கரர் அயிரைமலைத்தேவர் என்று அழைக்கப்பட்டார். பார்சுவநாதர் என்று அழைக்கப்பட்ட இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரர் உருவங்கள் இங்கு சிறப்புடன் வழிபாடு செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டில் திருவயிரைப் பார்சுவப்படாரர் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். இவரது இயக்கியம்மன் அவ்வை என்ற சொல்லைத் தமிழ்நிகண்டுகள் எடுத்துக் கூறுகின்றன. காலப்போக்கில் சமணம் அயிரைமலையிலிருந்து மறைந்தது. தற்பொழுது திரௌபதியம்மன் என்னும் கிராம தெய்வம் இங்குள்ள குகைத்தளங்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றது.
ஐவர்மலையில் கிழக்கு நோக்கிய குகைத்தளத்தின் முகப்பில் தெற்கிருந்து வடக்காக வரிசையாகப் பதினாறு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகப் பாறையில் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சிற்பம் மட்டும் கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஏனைய பெரும்பாலான சிற்பங்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். சில சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டில் செய்விக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பார்சுவநாதர் தீர்த்தங்கரர் ஐந்தலைகளையுடைய பாம்புக் குடையின் கீழே நின்றநிலையில் காட்சியளிக்கின்றனார். எஞ்சிய பெரும்பாலான சமணத் தீர்த்தங்கரர்கள் தாமரை மலர் மீது முக்குடையின் கீழே அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.
வீரசங்கம் என்று அழைக்கப்பட்ட சமணசங்கத்தினைச்சார்ந்த மல்லிசேனப் பெரியார் இத்தலத்திற்கு வந்து தீர்த்தங்கரர் திருமேனி ஒன்றைச் செய்வித்திருக்கின்றார் பெரும்பத்தியைச் சார்ந்த பட்டினிக் குரத்தியார் என்ற சமணப் பெண் துறவியின் மாணாக்கி அவ்வணந்திக் குரத்தியார் என்ற சமணப் பெண் துறவியார் தீர்த்தங்கரர் திருமேனி ஒன்றை செய்வித்துள்ளார். இங்கு தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றைச் செய்வித்த அச்சணந்தி என்ற சமண முனிவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஒன்பது,பத்தாம் நூற்றாண்டுகளில் சமணத்தினை வளர்த்த பெரியார் ஆவார்.
சித்தனவாசல், குடுமியான்மலை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தனவாசல், குடுமியான்மலையிலும் சமணர் கற்சிலைகளும், கல்பதுக்கைகள், சமணத்தீர்த்தங்கள், சமணர் படுக்கைகள் ஏராளமாக விரவிக்கிடக்கின்றன.
உத்தமபாளையம் சமணர் கோவில்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது சமணர்கோயில். இம்மாவட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட சமணர்கள் இல்லை. அதே வேளையில் 6 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் பல சீர்திருத்தங்களைச்செய்துள்ளனர். அவற்றிற்கு சான்றாக பல கல்வெட்டுக்கள் சாட்சியம் கூறுகின்றன. கால ஓட்டத்தால் கரைந்து போன வரலாற்று எச்சங்களில் சமணர்களும் ஒன்று. கி.பி.2 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் சமண மதம் வேகமாக துவங்கியது. அப்போது சிறுதக்கவள்ளி, பத்திரபாகு என்ற சமண போதகர்கள் தலைமையில் கர்நாடாகாவில் சிரவெண பெல கோலா பகுதிக்கு ஏராளமான துறவிகள் வந்தனர். அடுத்துப் பல சமணர்துறவிகள் விகாச்சாரியா என்பவர் தலைமையில் தமிழகத்திற்குள் நுழைந்து மதுரை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, கழுகுமலை, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் தங்கினார்கள்.உத்தமபாளையம் பகுதியில் கருப்பணசாமி கோயில் பகுதி. இக்கோயில் பகுதியில் சமணத்துறவிகள் அச்சநந்தி என்ற துறவி தலைமையில் ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர். அப்போது உத்தமபாளையத்திற்கு சமணத்துறவிகள் இட்டபெயர் திருப்புனகிரி. இந்தப்பகுதியில் குடியேறிய சமணத்துறவிகள் இப்பகுதியை சமணப்பள்ளியாகவே மாற்றினார்கள். இ;ப்பகுதியில் உள்ள மலையை குடைந்து சுத்தநீருக்கு சுணைகளை உருவாக்கி இங்கேயே குடிஅமர்ந்தனர்.
இங்கு பள்ளிகளை அமைத்து பகல் வேளையில் கல்வி போதித்துள்ளனர். மூலிகை மருத்துவம் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளித்துள்ளனர். இங்கு சமண சமய தீர்க்க தரிசிகளான 23ஆம் தீர்த்தங்கரர் எனப்படும் பசுவநாதர், 24ம் தீர்த்தரங்கரர் எனப்படும் மகாவீரர் ஆகிய இருவரது திருவுருவங்கள் உள்ளது. முதல் வரிசையில் ஆறு சிற்பங்களும், இரண்டாம் வரிசையில் எட்டுச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் நீளம் இருபது அடி. உயரம் பத்து அடியாகும்.
சிற்பங்களின் மீது ச+ரிய ஒளிபடாமல் இருக்க சுஜாரூப்(சமஸ்கிருத சொல்) எனப்படும் மறைப்புகள் இருந்துள்ளன. அவை அருகிலேயே கல் மண்டபமும் உண்டு. இதில் பசுவநாதர், மாகவீரர் சிற்பங்கள் உள்ளன. மேலே மூன்று தலைகள் கொண்ட நாகம் உள்ளது. பக்கவாட்டில் வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்களும் உண்டு. இந்த சிற்பங்களுக்கு அருகில் பழங்கால தமிழ் வடிவங்களான வட்டெழுத்துக்களால் ஆன சில வாசகங்கள் உள்ள. அதில் அரட்டணமி, பெரியார், அஜநந்தி ஆகிய சமண முனிவர்கள் பெயர்கள் உள்ளன. இதில் அஜநந்தா என்பவர் பெயர் அப்போதைய பாண்டிய நாட்டில் இருந்த சமணக்கோயில்கள் அனைத்திலும் இருந்துள்ளது. மேலும் 9-ம் ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பாண்டிய மன்னன் சடையன்மாறன் பெயரும் தனியாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஆகாரதானம்(உணவு), அவுசத்தானம்(மருத்துவம்), அட்சரதானம்(கல்வி), அவையதானம்(அடைக்கலம் தருதல்;) ஆகியற்றை போதித்தனர். இங்குள்ள பாறை சிற்பங்களில் கனகநந்தி, அரிட்டனேமி என்ற பெயரும் 23ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24ம் தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
உத்தமபாளையம் கருப்பணசாமி கோயிலுக்கு செல்பவர்கள் இங்குள்ள சமணர்களையும் வணங்கி வருகிறார்கள். சமணர்கள் இப்பகுதியில் ஒருவர் கூட இல்லையென்றாலும், மதங்களை கடந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் இப்பகுதிக்கு சென்று வருகின்றனர். இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சுற்றுலா செல்பவர்கள் இக்கோயிலை பார்வையிட உலகெங்கிலும் இருந்தும் வருகை புரிகின்றனர்.
இந்தியாவில் பிறந்த இச்சமயம் தென்னகத்தில் தற்பொழுது இச்சமயத்தை பின்பற்றுபவர்கள் இல்லாததும், சமணர்கள் கலை, பண்பாடு, இலக்கியம், சமூகம் பற்றிய வரலாறுகளை கல்வெட்டுக்களை இன்றும் தொல்லியல் துறை பாதுகாத்து வருகின்றது. அதே வேளையில் சமணர்கள் தொன்மைப்பற்றியோ அல்லது சமணர்கள் வரலாற்றைப்பற்றிய தெரிந்து கொள்ள சமணப்படுகைகள் அமைந்த ஊர்களில் மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. எனினும் தென்னகத்தில் ஏராளமான சமணர்கள் கோயில்கள் இருப்பது ஒரு வரப்பிரசாதகமாவே வெளிநாட்டினர் கருதி தினந்தோறும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்திய பராம்பரியத்தை புகைப்படம் எடுத்துச்செல்வது நமக்கு ஆறுதலாய் உள்ளது.
கட்டுரையாளர்
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602.
தேனி மாவட்டம்
தொலைபேசி:9715-795795
- படிக்கலாம் வாங்க…. தாய்மொழி வழிக்கல்வி
- திரு கே.எஸ்.சுதாகர் ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ நூல்விமர்சனம்
- நாவல் – விருதுகளும் பரிசுகளும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் தோற்றக் கருத்தில் ஒரு மாறுபட்ட கோட்பாடு
- பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்
- இலக்கிய வட்ட உரைகள்: 10 வோர்ட்ஸ்வர்த்தைப் புரிந்து கொள்வது
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2015 மாத இதழ்
- பெருந்திணை- இலக்கண வளர்ச்சி
- கல்பனா என்கின்ற காமதேனு…!
- தொடுவானம் 51. கிராமத்து பைங்கிளி
- சீஅன் நகரம் – வாங்க.. சாப்பிடலாம் வாங்க
- சங்க இலக்கியத்தில் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு
- பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழா
- ” நட்பே நலமா: “ கடித நூல் வெளியீடு
- தென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள்
- ஷங்கரின் ‘ஐ’ – திரைப்பட விமர்சனம்
- டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்
- மெல்பனில் தமிழ் மொழி உரைநடை தொடர்பான கலந்துரையாடல்
- ஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22
- கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழ் ஸ்டுடியோவின் கையெழுத்து இயக்கம்…
- பேசாமொழி பதிப்பகத்தின் புதிய புத்தகம் – ஒளி எனும் மொழி (ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்)
- பாக்தாத் நகரத்தில் நடந்த சில சுவையான அனுபவங்கள்