” நட்பே நலமா: “ கடித நூல் வெளியீடு

This entry is part 14 of 23 in the series 18 ஜனவரி 2015

நட்பே நலமா: நூல் வெளியீடு திருப்பூரில் அரோமா ஓட்டலில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. சிலரின் உரைகள்:

சுப்ரபாரதிமணியன் ( எழுத்தாளர் ) :

பாட்டாளிகள் படைப்பாளிகளாக, எழுத்தாளர்களாக மாறிய மறுமலர்ச்சி காலம் இது. ஒரு காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும், மெத்த படித்தவர்களும் ., புலவர்களுமே எழுதும் சூழல் இருந்தது. விளிம்பு நிலை மக்களைப் பற்றியும் அவர்களே எழுதினர். ஆனால் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களிலிருந்தே, சாதாரண மக்களிலிருந்தே தலித்கள், பெண்கள், நெசவார்கள், பனியன் தொழிலாளர்கள், ஓரின புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் என்று அவரவர் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்தும், வாழ்வியல் குறித்தும் எழுதுகிறார்கள். சாதாரண மக்களே அவர்களின் வாழ்க்கையை எழுத்தாளர்களாக நின்று எழுதும் இன்றைய கால கட்டம் பட்டாளிகளே படைப்பாளிகளாக தங்களை வெளிப்படுத்தும் எழுச்சி மிக்க காலம்… இது இலக்கியத்தின் ஆரோக்கியமான சூழலைக் காட்டுவதாகும்.

தலைமை : ” ஈஸ்வரன் ( த.மு.எ.க.ச ):

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கெதிரனான மதவாதிகளின் செயல்பாட்டை எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இது எழுத்துலம் மீதான வன்முறை..கடிதம் எழுதுங்கள். மற்றவர்களுடன் மனதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நெகிழ்வான, மகிழ்ச்சியான கணங்களை கடிதங்கள் உருவாக்கும்.

பாரதி சுப்பராயன் ( முகநூல் எழுத்தாளர்) :

தனக்கு ஏதாவது லாபம் இடைக்குமா என்று திட்டமிட்டு யோசித்து இந்தத் தலைமுறையினர் மற்றவர்களுடன் பழகுகின்றனர். இது தவறான அணுகுமுறை.. அன்பு, மனிதாபிமானம் சார்ந்த விசயங்களை வலியுறுத்தி படைப்புகளை எழுதி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ளது..

சிவகாமி ( ஆசிரியை): சமூகம் சார்ந்த அனுபவங்களை எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் பெண்களின் பங்காய் அவர்களின் அனுபவங்களை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக எழுதித் தீர வேண்டியது அவசியம்.

கவிஞர் கனல்: பழைய நினைவுகளையும் கலாச்சார மரபுகளையும் மீட்டெடுப்பதும், பதிவு செய்வது இன்றைய தலைமுறைக்கு தேவையானதாக உள்ளது.

பாரதிவாசன்( பதியம் ): இயங்கிக் கொண்டே இருத்தல் மனித இயல்பு. எழுத்தின் மூலம் சமூகப்பிரச்சினைகளை வெளிக்கொணர்வதும் அதன் மூலமான விழிப்புணர்வும், போராட்ட உணர்வும் கொண்டு வர புத்தகங்கள் உதவுகின்றன.

இளஞாயிறு ( நொய்யல் இலக்கிய மையம்): புதிய பாதைகளை போடுபவர்களாக, புதிய நியதிகளை உருவாக்குபவர்களாக மாற புதிய தலைமுறைக்கு பொறுப்புணர்வு உண்டு. தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்களை விட புத்தக வடிவில் படிப்பதில் நிறைய சவுகரியங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து பேண வேண்டும்.

( 40 எழுத்தாளர்களின் கடிதங்களின் தொகுப்பு நட்பே நலமா: நூல் தொகுப்பு இளஞாயிறு, மோகன் ராசு, பல்லடம் ராசு..

வெளியீடு : மகேசுவரி புத்தக் நிலையம் , திருப்பூர் விலை : ரூ 60 )

Series Navigationபஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழாதென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *