முனைவர் பா.சங்கரேஸ்வரி
உதவிப்பேராசியர்,
தமிழ்த்துறை,
மதுரை காமராசர் பல்கலைகழகம்
மதுரை -21
ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் தாக்கமோ, ஆதிக்கமோ மிகச்
சாதாரணமாக நிகழ்ந்துவிட இயலாது. ஒரு மொழியின் சமூக, அரசியல்;, பாண்பாடு, கல்வி
ஆகிய தளங்களில் மற்றொரு மொழிபெறும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டே
தாக்கமும் ஆதிக்கமும் நிகழும் ஆங்கிலேயரின் ஆட்சி அகன்றாலும் ஆங்கில மொழியின்
தாக்கத்திலிருந்து தமிழகம் இன்னும் விடுபடவில்லை. தற்பொழுதுள்ள காலகட்டத்தில்
உலகத்தில் நிகழும் தொழில்கள், விஞ்ஞானச் செயல்கள் பற்றிய தகவல்களை
ஆங்கிலத்தின் மூலம்தான் பெறவேண்டியுள்ளது. தாய்மொழி பற்றிய தாழ்வு மனப்பான்மையும்,
ஆங்கில மொழிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்ற எண்ணமும் ஆங்கிலச் சொற்களை
அதிகம் கையாளச் செய்கிறது.
மொழியியல் அறிஞர்கள் தமிழ்மொழியை பேச்சுத்தமிழ் என்றும், எழுத்துத் தமிழ் என்றும் இருவகையாகப் பிரிப்பர். தொடக்க நிலையில் எழுத்துத்தமிழ் கலப்பு இல்லாமல் தூய செந்தமிழாக்கதான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் எழுத்துத்தமிழிலும் தென்றலாகவீச ஆரம்பித்தது. உலகின் ஒரு பகுதியில் நிகழும் புதுமை நிகழ்ச்சியை உலகின் பிறபகுதிகளுக்கு எடுத்துச் செல்லும்போது அந்தப் புதுமை நிகழ்ச்சியின் செல்வாக்கு பிற மொழியில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. இந்தச் செல்வாக்கு பேச்சுமொழி, இலக்கிய மொழி இரண்டிலுமே ஊடுருவ ஆரம்பிக்கின்றன. தாய் மொழியில் தேர்ச்சி உடையவர்களாலும், இருமொழிஅல்லது பல ;மொழி அறிஞர்களாலும் மட்டுமே பேச்சுத்தமிழில் கலந்து வரும் பிறமொழிச் சொற்களைக் கண்காணிக்க முடிகிறது. பிறருக்கு எது தாய்மொழி எது வேற்றுமொழி என்னும ;மொழிபற்றியதான அறிவு இல்லாததால் பிறமொழிச் சொற்களைத் தங்களின் வசதிக்கேற்ப சில உருபன்களைச் சேர்;த்துப் பேசத்தொடங்குகின்றனர்.
தமிழ் மொழியில் புகும் ஆங்கிலச் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. இல்லாச் சொற்களுக்கு இணைச்சொற்களாகப் புகும் ஆங்கிலச் சொற்கள்.
2. இருக்கும் சொற்களை அப்படியே பயன்படுத்துவது.
இல்லாச் சொற்களை பிறமொழிக் கூறின் ஒலிபெயர்ப்பாகவோ அல்லது மொழிபெயர்ப்பாகவோ
நாம் படுத்துகின்றோம்.
கிராம் Gram
எக்ஸ்ரே X-ray
கேமரா Camera
பிஸ்கட்டு Biscuit
சாக்கலேட் Chocolate
டயர் Tyre
கலர் Colour
சோடா Soda
சுவிட்சு Switch
வாசர் Washer
ஆங்கில மொழியில் வழங்கும் சில சொற்களுக்கு நிகரான தமிழ்
சொற்கள் இருந்தாலும் அதை நாம் பயண்படுத்துவதில்லை. மேலும் ஒரு சொல் படித்தவர்கள்
மத்தியில் ஒருபொருள் நிலையிலும், படிக்காதவர்கள் மத்தியில் வேறு பொருள் நிலையிலும்
பயன்படுத்தப்படுகிறது.சுமை தூக்குபவரை டழயன அயn என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். இதில்
டழயன என்பது படிக்காதவர்கள் மத்தியில் (கரட டழயன ல் இருக்கிறான்) என்று கூறும் பொருள்
மாற்றம் நிகழ்கிறது. மேலும் சிலசொற்களைத் தமிழ் சொற்கள் என்றே பேசுகின்றனர்.
பஸ் – Bus
பஸ்ஸ்டேண்டு – Bus Stand
லெதர் – Leather
பேக் – Bag
காபி – Coffee
டீ – Tea
ஸ்ஷாப் – Shop
ஷாம்பூ – Shampoo
சோப் – Soap
பேஸ்ட் – Paste
ப்ரஸ் – Press
கப் – Cup
சினிமா – Cinema
கம்ப்யூட்டர் – Computer
ட்யூப்லைட் – Tubelight
புக் – Book
இருமொழிகளுக்கும் சேர்ந்த மொழிக்கூறு:
தமிழ் மொழிக்கூறுகள் சேர்ந்த கடன் கூட்டுச் சொற்கள், பயன்படுத்த
நினைக்கும் போது ஒரு பகுதி தமிழாகவும் மறுபகுதி ஆங்கிலமாகவும் பயன்படுத்துகின்றனர்.
மைனர் சங்கிலி – அiழெச உhயin
மருந்து ஸ்டோரு – அநனiஉயட ளாழி
பிளாஸ்டிக் குடம் – pடயளவiஉ pழவ
ஹோல்சேல் கடை – றாழடந ளயடந ளாழி
தந்தி மனியார்டர் – வநடநபசயிhiஉ அழநெல ழசனநச
நடு சென்டர் – உநவெசந
கேட்டு வாசல் – பயவந
பேஸ்மட்டம் – டியளள அநவெ
ட்யூப் மாத்திரை –உயிளரடந
போலீஸ்காரர் – pழடiஉநஅயn
இரண்டு சொற்களில் முதல் சொல் ஆங்கிலமாகவும், இரண்டாவது சொல் தமிழாகவும் மாறி
மாறி பயண்படுத்துவதை மேலே கூறிய எடுத்துக்காடடு;:கள் மூலம் அறியமுடிகிறது.
ஆங்கிலச் சொற்களைத் தமிழ்மொழி பேசுபவர்கள் மனமறிந்தும், சிலர்
மனமறியாமலும் கலந்து பேசுகின்றனர். மட்டன் சிக்கன் என்பதை தமிழ்ச்சொல் என்று
நினைத்துப் பேசுகின்றனர். இது போன்று ஆங்கிலச் சொற்களுக்கு தமிழாக்கம ;தான் இது
எனப் பிரித்து வெளிப்படையாகச் சொல்லத் தெரியவில்லை. மேலும் பல சொற்களுக்கு
ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரே பொருளுடையவைகளை ஒரு சிறப்பிடத்தில் ஒரு மொழிச்
சொல்லையும், பிறிதொரு இடத்தில் வேறுமொழிச் சொல்லையும் மாறாமல்
பயன் படுத்துவதைக் காணமுடிகிறது. (எ-கா) ‘பெட்’ என்னும் ஆங்கிலச் சொல் லாட்ஜிலும்
மருத்துவமனையிலும் பயன்படுத்துகிறார்கள். அதே பொருளை வீட்டில் குறிப்பிடும்போது
மெத்தை என்னும் தமிழ்ச் சொல்லும் பயன்படுத்துகிறார்கள். இதுபோல இன்னும் சில எடுத்துக்
காட்டுகளைக் காணலாம்.
கீ (முநல) – கடிகாரம், பேருந்திற்குப் பயன்படும் விசைத்ததிறப்பான்
சாவி (முநல) – வீட்டு பூட்டிற்குரிய விசைத்திறப்பான்
பார்சல் ( Pயசஉநட) – உணவு விடுதியில் உணவைக்கட்டுதல்
தாள் ( Pயிநச) – பொட்டலம் மடித்தல்
லேடிஸ் (டுயனநைள) – பெண்கள் : படிப்பில் முன்னேரியவர்களைக் குறிப்பது.
பொம்பள (டுயனநைள) – பெண்கள் : வீடுகளிலும், கிராமங்கிலும் இருப்பவர்களைக் குறிப்பது.
இறுதியாக, இனி வரும் காலங்களில் ஆங்கிலச் சொல்லே தமிழ்ச் சொல்லாக
மாறிவிடும் நிலை வந்தாலும் வரும். பேச்சுத்தமிழில் அளவுக்கதிகமாக ஆங்கில மொழியின்
தாக்கம் சென்றால் தமிழ் மொழியின் நிலை என்ன? என்பதைச் சிந்தித் தோமேயானால், அதுவே நாம் தமிழ் மொழிவளர்ச்சிக்குச் செய்கின்றத் தொண்டாகும் என்பதில் ஐயமில்லை
———
- இலக்கிய வட்ட உரைகள்: 11 வண்ணநிலவனின் தெரு மு இராமனாதன்
- பில்லியன் ஆண்டுக்குப் பிறகு பூமியின் காந்த உட்கரு எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி எறிகல் [Meteorites] மறை குறிப்பு
- மருத்துவக் கட்டுரை – குடல் புண் அழற்சி
- சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:
- சீரங்க நாயகியார் ஊசல்
- கவலை தரும் தென்னை விவசாயம்
- “ஏக்கம் நுாறு” “கனிவிருத்தம்” கவிதை நுால்களை கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்
- விசும்பின் துளி
- ஆத்ம கீதங்கள் –13 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !
- மீகாமனில்லா நாவாய்!
- பேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம்
- கிளி
- தொந்தரவு
- தாய்த்தமிழ்ப் பள்ளி
- தொடுவானம் 52. குளத்தங்கரையில் கோகிலம்
- நாடற்றவளின் நாட்குறிப்புகள்
- குப்பண்ணா உணவகம் (மெஸ்)
- “ எதுவும் மாறலாம் “ குறும்படம்
- ஆனந்த பவன் -காட்சி-23 இறுதிக் காட்சி