பராமரிப்பின்றி காணப்படும் மன்னர் கால தேர்கள்-அழியும் தமிழனின் சிற்பக்கலை

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 23 in the series 15 பெப்ருவரி 2015
tirunelveli_thaerவைகை அனிஷ்
தமிழகத்தில் தேர் இழுத்தல் என்பது பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.தேர் என்பது கோயில்களில் கடவுளரை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பயன்படும் ஊர்தியாகும். திருவிழாக்காலங்களில் பக்தர்கள் தேரை வடம்பிடித்துச் இழுத்துச்செல்வர். முக்கியமான கலைப்வேலைப்பாடுகளுடன் பாரம்பரிய மிக்க கலைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றை சிற்பங்களாக வடிவமைத்து தேர் செய்து வைத்திருப்பார்கள். இந்து சமயத்தில் மட்டும் அல்லாமல் கிறிஸ்தவ, பவுத்தம், முஸ்லிம்களால் சந்தனக்கூடு போன்றவை தேரின் அமைப்பில் இருக்கும். புத்தமதத்தில் அருகனுக்கு தேர் இருந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் உள்ளது. மரங்களை வைத்து தேர் செய்யும் முறை தமிழகத்தில் பண்டைய காலத்தில் இருந்து வருகிறது. இவை தவிர கல்களிலும் கல்தேர்கள், ஒற்றைத்தேர் ரதங்கள் ஆகியவை பல்லவ மன்னர்கள் காலத்தில் செய்யப்பட்டவை. இன்றும் காஞ்சிபுரத்தில் கம்பீரமுடன் காட்சியளிக்கிறது. சங்க இலக்கியத்திலும் மணிமேகலையிலும் பலவகையான தேர்கள் இருந்துள்ளது. அவைகள் நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்று பெயரில் இருந்துள்ளது. பல கோயில்களில் உள்ள தேர்கள் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டவை. தமிழகத்தில் தற்பொழுது 866 தேர்கள் இருப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது.
படைப்பிரிவுகள்
பண்டைய மன்னர்கள் காலத்தில் தேர்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என நான்கு படைகள் இருந்துள்ளது. இவற்றில் முதன்மையாக தேர்படை அங்கம் வகித்துள்ளது.
அமைப்புகள்
தேர்கள் பொதுவாக நான்கு சக்கரங்களினால் ஆனது. இவை தவிர 6 மற்றும் 8 சக்கரங்களைக்கொண்ட தேர்களும் இருந்துள்ளது. இத்தேரில் மூன்று புறம் இறையுருவங்களும், புராணக்கதைகளும், மிருகங்கள், பறவைகள் ஆங்காங்கே பொறிக்கப்பட்டிருக்கும். தேர்களானது கோயில் விமானத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும். தேர்கள் சதுரம், அறுகோணம், எண்கோணம், நீள்வட்டம், வட்டம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் அமைந்திருக்கும்.
இவை தவிர தமிழரின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக தேர்அமைந்துள்ளது.
குடுமியான்மலை தேர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள குடுமியான் மலையில் பண்டைய காலத்தில் அரசர்கள் காலத்தில் செய்யப்பட்ட தேர் ஒன்று குப்பை கூளமாகவும், தேர்கால்கள் மற்றும் தேர்சக்கரங்கள் மாட்டுச்சாணி சேர்த்து வைக்கப்படும் இடத்தில் பராமரிப்பின்றி போடப்பட்டுள்ளது. பண்டைய காலத்தின் அரசன் மற்றும் அரசியர் ஆகியவர்கள் பலவித உன்னத வேலைப்பாடுகள் அமைந்த தேர் பராமரிப்பின்றி நொறுங்கிய நிலையில் இருப்பதை காணும்போது தேர் மட்டும் அல்ல பல ஆயிரக்கணக்கான தமிழ்சிற்பிகளின் கலைவண்ணமும்  மண்ணோடு மண்ணாக மட்கிப்போகிறது. இத்தேர் செய்வதற்காக விரதம் இருந்து தங்கள் உயிரை தியாகம் செய்த அந்த உழைப்பாளிகளை எண்ணி இருக்கின்ற தேர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
————————————–
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி
தேனிமாவட்டம்
Series Navigationபண்பாட்டு நோக்கில் பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய சிற்றிலக்கியங்களின் வளர்ச்சிபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முதன்முறை மூன்று சூரியன்கள் தோன்றும் அற்புதக் காட்சிப் படமெடுப்பு
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    கலை வடிவம் நிறைந்தும், சமய பின்னணி, சரித்திரம் கூறும் சாத்தியம் இருந்தும், இன்றைய சந்ததியால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ள தேர்களின் நிலை பரிதாபத்துக்குரியதே. அவற்றை பழந்தமிழர் வாழ்வு கூறும் அரும்பெரும் செல்வங்களாகவும் சின்னங்களாகவும் கருதி கூடுமானவரை பாதுகாக்கப்படவேண்டும். ( விளம்பரம் செய்தால் அவற்றை வாங்க மேல்நாட்டவர் போட்டி போட்டுக்கொண்டு கூட வரலாம்! ) இதுபோன்று நம்மால் மறக்கப்படும் பழந்தமிழ் வாழ்க்கை முறையை வெளிக்கொணரும் வகை அனிஸ் அவர்களுக்கு பாராட்டுகள். ….டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    paandiyan says:

    all your articles are meaning less. TN Govt has allocating some budget if temple committee approach them with details and estimation remaining they have to collect it from public. I know some of them reconstructed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *