ஆத்ம கீதங்கள் –18 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! மறுபடி நீ மணமகன் ஆயின் ..!

This entry is part 7 of 15 in the series 1 மார்ச் 2015

 

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

எனக்குச் சொந்தமான கண்களே

என்ன செய்கிறீர் ?

நம்பிக்கைத் துரோகம்,

நய வஞ்சகம்

புகழப் படும் ஒழுக்கத் தவறு !

ஒரு கண்ணீர்த் துளியின் உதிர்ப்பே

உன் காட்சியாய் இருந்தால்

செத்திட வரும் துணிச்சல்

குளிர்ந் தடங்கும் உணர்ச்சி !

தகுதி பெறா கண்ணீர்த் துளிகள்

வெகுமதி இழந்தால்

ஒளி வீசிய எனது விழிகள்

வெளிப்படா இனிமேல் !

 

காதலன் எதிர்கால நல் வாழ்வை

எதிர்பார்த் திருப்பேன் !

ஆசிகள் அளிப்பேன் அவன் புகழோங்க !

மறுபடிக் காதலன்

ஒரு மணமகன் ஆகி,

ஒளி மிகும் என் விழியை விட

அவனது விழிகள்

நளினம் பெற்றால்,

பரிதிக் கதிர்பொன் முலாம் பூசும் !

தேவதைகள் பாதுகாக்கும் !

உலகினர் ஒத்த எவரது விழிகளும்

ஒளிமயம் பெறும் !

  

பாதிரியார் வழிபடக் காத்துள்ளார்

பாடகக் குழுவினர் மண்டி யிட்டுள்ளார்;

ஆத்மா நீங்க வேண்டும்,

அச்ச மௌனத்தில் வேதனை யோடு,

பெருந்துயர் உற்றேன்,

களைப் படைந்து நானும் !

காத்ரீனா வுக்கு வாழ்வினி முடிவே !

ஒளிவீசும் விழிகள்

வெளிப்படா இனிமேல் !

  

[முற்றும்]

 

++++++++++++++++++++++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/
Series Navigationதொலைக்கானல்வார்த்தெடுத்த வண்ணக் கலவை – திலகன் எழுதிய “புலனுதிர் காலம்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    இலக்கியா தேன்மொழி says:

    உங்கள் அறிவியல் தொடர்பான ஆக்கங்களை தொடர்ந்து வாசித்திருக்கிறேன்.. தோழர்.. இப்போது கவிதைகள்… நல்ல முயற்சி… வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *