ஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்

This entry is part 3 of 22 in the series 8 மார்ச் 2015

மற்றும் சிலர்:

* என் முதல் நாவல்.திமுக ஆட்சிக்கு வந்த பின் வேலை இழந்த இந்தி ஆசிரியர் ஹைதராபாத்திற்கு பிழைக்க வந்த கதை. நர்மதா..மருதம் இரு பதிப்பகங்கள் 3 பதிப்புகள் வெளியிட்டுள்ளன.

அதன் ஆதரசம் போஜராஜன் என்பவர்

அவரை 23 ஆண்டுகளுக்குப்பின் ஹைதராபாத்தில் சந்தித்தேன்

* பிரகாஷ் நிறை இலக்கிய வட்டம் கூட்டம் நடத்த இடம் தருகிறார் உபசரிக்கிற தாய் உள்ளம்.நன்கு கதை சொல்கிறார்.

0 ஹைதராபாத் சாந்தாதத்தின் முதல் மொழிபெயர்ப்பு நூல் தெலுங்கானா போராட்ட பெண்கள் கதைகள்.சென்றாண்டு வந்த அவரின் சாகிதய அகாதமி வெளியீடு தெலுங்கு இலக்கிய பெண் எழுத்தாளார்கள்.நல்ல நூல்.12 மொழிபெயர்ப்பு நூல்கள் அவருடையது.மொழிபெயர்ப்பு செய்ததில் படைப்பிலக்கியத்திற்கு ஒதுக்கீடு தந்துவிட்டார்

0ஹனுமந்த ராவ் அபூர்வ மனிதர்

தெலுங்கு தமிழ் இரண்டிலும் சம ஆர்வம்.

நிறை கூட்டத்திற்கு என் முதல் தொகுப்பு அப்பா வுடன் வந்திருந்தார்.அதிலிருந்த சுஜாதா முன்னுரை ,.நட்பு பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது..

நிறை அமைப்பின் இரு முக்கியத் தூண்கள் இளையவன். பிரகாஷ்.

0 சாலார்ஜங் மியுசியம் போல் பார்க்க பல உள்ளன.

கார் மியுசியம் ஜோர் .ஷூ, வீடு. கத்திரிக்காய் டாய்லட் வடிவத்திலும் கார் வடிவமைத்து சாலையில் சுதாகர் ஓட விடுகிறார்.அவரின் லட்சியம் ஒரு லட்ச ரூபாய்க்குள் கார்.

0சமீப ஆண்டுகளில் 5 மெகா பூங்காக்கள்.

திருப்பூர் 18000 ஆயிரம் கோடிரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம். ஒரு புது பூங்கா கூட இல்லை.புதுஎன்டிஆர் பூங்கா.,லும்பினி பூங்காக்கள் வெகு அழகு.

0 கத்தர் : என்ன ஆனார்.தெலுங்கானாவிற்காகப் போராடினார்.அவர் கேட்ட தெலுங்கானா இதுவல்ல. கத்திப்பாடி பாடி குரல்வளையில் பிரச்சினை.கிழட்டுச் சிங்கமாகி விட்டார் என்கிறார்கள்.மக்கள் யுத்த குழுவும் பலவீனமாகிவிட்டது

0 ஹைதராபாத் ஹிசேன் சாகர் ஏரி மீதிருந்த சிலைகளில் ஆந்திர பகுதி சான்றோர்கள் சிலைகள் உடைக்கப்பட்டதில் பல இன்னும் நிறுவப்படவேயில்லை.புத்தர் சிலை முன் நடந்த கோரக்காட்சிகள் அவை.ஜெய் தெலுங்கானா

0 மதியம் பிரியாணியும் ரொமாலி ரொட்டியும் சாப்பிட்ட சிட்டி காலேஜ் பகுதி உணவு விடுதியில் சுமன் ராய், கிஷோர் குமார் என நால்வர் படங்கள்.

அதில் ஒன்று சத்யஜித் ராய்என் மகிழ்ச்சியைச் சொன்னேன்.

அவர் நான் கல்கத்தாகாரன் என்றார் பெருமிதத்துடன் ஓட்டல் உரிமையாளர்.

0 ஹைதராபாத் மூசி நதி பல இடங்களில் நம்மூர் நொய்யல் போல் சீரழிந்துள்ளது. அதன் சீற்றம் என்

நகரம் 90 நாவலில் முதல் அத்தியாயத்தில்.

0 அசோகமித்திரனுடன் ஒரு நடை

அ.மி மற்றும் அவரின் உறவினர்கள் வசித்த பகுதிகளுக்கு அ.மி.யுடன் முன்னர் நடந்திருக்கிறேன்.

இன்று செகந்திராபாத் கன்டோன்மன்ட். செகன்ட் பஜார்ம் மனோகர் தியேட்டர் என்று அவரது கதைகளுடனும் அசோகமித்திரனுடனும் நடை சென்றேன்.

0 ஹைதராபாத் சிறுகதைப் பட்டறை: நிறை அமைப்பு

தமிழ் சிறுகதை நூற்றாண்டு அனுபவம் நவீன கதைகள். என்று பேசினேன்.12 பேர் சிறுகதை வாசித்தனர்.அதில் 3 கதை சொல்லல் எனறு அமர்க்களமாய் இருந்தது.சாந்தா தத் .மைதிலி சம்பத்.முரளி.முஸ்தாபா எனறு பலரின் நல்ல கதைகள்.நல்ல ஜிகல் பந்தி போலிருந்தது.

0 பன்றி காய்ச்சல் காரணமாக முகமூடிகள் மாட்டிக் கொண்டு நிறையப் பேர் தென்படுகிறார்கள். இளம் பெண்கள் முகத்தை மூடி கட்டிக் கொள்வது சாதாரணம். விற்பனையில் முகமூடி ரூ 5. தடுப்பூசி ரூ450

0 சாலார்ஜங் மியுசியம்.மணியடிக்கும் பொம்மைகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை எப்போதும்.

0 சுகந்தி சுப்ரமணியனின முதல் கவிதைத் தொகுப்பு

புதையண்ட வாழ்க்கை செகந்திராபாத் கிளாக்டவர் பார்கில் வெளிடப்பட்டது .அவர் புதையுண்டு போனது பிபரவரி மாதத்தில்தான். தெலுங்குக்கவிஞர்கள் ‘ திகம்பரக் கவிஞர்கள் ‘ தெருக்களில், பிச்சைக்காரர்களால், விபச்சாரிகளால் அவர்களின் தொகுப்புகலை வெளியீடு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 4 பேரூம் 15 கதைகளும்

என் திருமணம் சுகந்தியுடன் நடந்த போது தயாரான நூல்.மீரா இலக்கியா நடராஐன் கார்த்திகா ராஐகுமாரின் அக்கறையில் அழகான நல்ல கதைகள். குறிப்பிட சிறுகதைத் தொகுதியாக அது அமைந்தது.

0 ஹைதராபாத் புத்தகக் கண்காட்சி. சில குறிப்புகள்: காசி ஆனந்தன் பேச்சு:தமிழ்ச் சமூகம் இனவுணர்வு அற்றது.இல்லாவிட்டால் இவ்வளவு குறைவாக இங்கு வந்திருக்க மாட்டார்கள்

0 ஹைதராபாத் புத்தகக் கண்காட்சி

அசோகமித்ரன்.:

பரிசுப் பொருள் வேண்டாம்.மோண்டா மார்க்கட்டல ஒரு பை காய்கறி போதும்

சுஜாதா:சன்மானம் வேண்டா.சாதா ரூமே போதும்

அனுராதா ரமணன் :.ஏசி ரூம் போடலியா

0..சுஜாதா

என் முதல் சிறுகதைத் தொகுப்பு அப்பா.

முன்னுரை சுஜாதா.20 பக்கங்கள்.ஒரு பக்கத்திற்கு ஒரு பவுன் சன்மானம் அப்போது அவருக்கு பத்திரிக்கைகள் தந்த காலம்.

இன்று அவரின் நினைவு நாள் அஞ்சலி.முதல் தமிழ் புத்தகக் கண்காட்சியில் வெளிவந்தது அப்பா

0 பிராமண கலாச்சார நடவடிக்கைகளே தமிழனின் அடையாளமாக இருந்தபோது கனவு இதழும் நவீன இலக்கிய கூட்டங்களும் தமிழ்ப்புத்தகக் கண்காட்சிகளும் புது முகம் தந்தன

0 1.ஹைதராபாத் எழுத்தாளர்கள் சிறுகதைகள்

2.ஹைதராபாத்..400

இரு தொகுப்புகள் வெளியிட்டேன்.

அது போல் இப்போது வெளியிடலாமே.

0 ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்கு..

இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா விருது ..தமிழில் எனக்கும் ஜெயமோகனுக்கும் ..1992.டெல்லிக்குச் சென்றேன்.

0 ஹைதராபாத் மைய நாவல்கள்

.அசோகமித்ரனின் 18வது அட்சக்கோடு

.சுப்ரபாரதிமணியனின

மற்றும் சிலர்

சுடுமணல் , நகரம்90

0 எட்டு ஆண்டுகள் அங்கிருந்தேன்

அங்கு தமிழர்களுக்கு பத்திரிக்கை எதுவுமில்லை. கனவு .இலக்கிய இதழ் ஆரம்பித்தேன்.

28ம் ஆண்டு இது. திருப்பூரில் தொடர்கிறது.

0 கநாசு.சுரா.நகுலன்.கோபிகிருஷ்ணன்.ஜெயமோகன்.எஸ்ரா.நாஞ்சில்நாடன்.சுஜாதா.பிரம்மராஜன்.தேவதேவன்.அ.மார்கஸ் உட்பட பலர் எழுதியிருக்கிறார்கள்.

ஜெயமோகன் 5 இதழ்களை தயாரித்திருக்கிறார். கனவு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு காவ்ய பதிப்பக வெளியீடாக 500 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது.

Series Navigationகவிதைகள்நப்பின்னை நங்காய்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *