அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு

author
1
0 minutes, 1 second Read
This entry is part 3 of 25 in the series 15 மார்ச் 2015

வைகை அனிஷ்

vetrilai கி.பி.1559-1564 ஆம் ஆண்டு தமிழகத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவர் மூலம் நாயக்கர் ஆட்சி உருவானது. அப்பொழுது 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பாளையங்களில் சந்தைய+ர் பாளையமும் ஒன்று. சந்தைய+ர் ஜமீனுக்கு உட்பட்டது வத்தலக்குண்டு. சந்தைய+ர் கொப்பை நாயக்கருக்கு பாதுகாவல் கிராமமாக அதாவது காவல் ப+மியாக மதுரை நாயக்க மன்னரால் வழங்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு பகுதியில் பன்னிரெண்டு கொத்தளங்களுடனும், ஐந்து வாயில்களுடனும் கோட்டை ஒன்று கட்டப்பட்டிருந்தது. கி.பி.1760 ஆம் ஆண்டு திண்டுக்கல்லிலிருந்து வந்த ஹைதர் அலியின் படைக்கும், மதுரையிலிருந்து வந்த முகமது யூசுப்கானின் கம்பெனிப்படைக்குமிடையே வத்தலக்குண்டில் போர் நடைபெற்றுள்ளது. இறுதியில் திண்டுக்கல் படையைப் புறமுதுகிட்டோடச் செய்து, வத்தலக்குண்டை முகமது ய+சுப்கான் வென்றுள்ளார். வத்தலக்குண்டு நகரின் மையத்தில் விசாலாட்சி அம்மன் கோயில் உள்ளது. அதில் 1898ல் ஆயிர வைசிய நகரத்தார் சில திருப்பணிகள் செய்து முன் மண்டபம் கட்டிய செய்தி கூறும் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் அவர்களது கோத்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன. மருத்துவ மகரிசி கோத்திரம், அத்ரிமகரிசி கோத்திரம், குபேர வம்சம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
நிலக்கோட்டை பாளையத்தில் உள்ள ஒன்பது கோட்டைகள் பிரித்தார் ஜமீன். அந்த ஒன்பது கோட்டைகள் 1.கல்கோட்டை, 2.வாலாங்கோட்டை 3. ராஜதானிக்கோட்டை(அம்மையநாயக்கனூர்), 4.ஜம்புதுரைக்கோட்டை. 5.சித்தையன்கோட்டை, 6.நிலக்கோட்டை, 7.சின்னமநாயக்கன்கோட்டை, 8.ராஜதானிக்கோட்டை(சந்தைய+ர்).9. நடகோட்டை ஆகியன. இதே போலஒன்பது ஊற்றுகள் இருந்துள்ளது. அவை 1.கூவனூத்து, 2.முசுவனூத்து, 3.நக்கலூத்து, 4.நரிய+த்து, 5.ஊத்துப்பட்டி, 6.சேம்படிய+த்து 7.மானூத்து, 8.ஊத்து, 9.ஊத்துப்பட்டி(சின்னமநாயக்கர் கோட்டை) இவ்வாறு மஞ்சள் ஆறு, வைகை ஆறு, 9 ஊற்றுகள் இருந்ததால் நீர்வளமும், நிலவளம் மிக்க இடமாக வத்தலக்குண்டு பகுதி இருந்திருக்கிறது.
சுதந்திரப்போராட்டம்-இலக்கியம்
இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு பங்கு கொண்டவர்களில் முக்கியமானவர் சுப்பிரமணிய சிவா. பாரத மாதாவிற்கு கோயில் கட்டியவர் இவரே. இவர் பிறந்த ஊர் வத்தலக்குண்டு. இவரைத்தவிர இலக்கியத்தில் தமிழகத்தில் இரண்டாவது முழு நீள நாவலான கமலாம்பாள் சரித்திரம் எழுதிய நாவலாசிரியர் ராஜம் அய்யர், மணிக்கொடி பத்திரிக்கையின் ஆசியராகவும், மணிக்கொடி சிறுகதைகள் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுப் பெற்ற எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான பி.எஸ்.இராமையா, எழுத்து என்ற பத்திரிக்கையை தொடங்கி புதுக்கவிதைக்கு வளம் சேர்த்தவரும், சுதந்திர தாகம் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சி.சு.செல்லப்பா ஆகியோர் பிறந்த ஊர் வத்தலக்குண்டு இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் வத்தலக்குண்டு வரலாற்றை.மங்கலத்தின் அடையாளப்பொருளான வெற்றிலை விவசாயத்தை இனி காண்போம்.
வெற்றிலை விவசாயமும்-வத்தலக்குண்டுவின் பங்களிப்பும்
திண்;டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் அடங்கியுள்ளது வத்தலக்குண்டு. 1885 ஆம் ஆண்டு ஊராட்சி அந்தஸ்தை பெற்றது. மஞ்சள் ஆறு மற்றும் வைகை ஆறு ஆகியவற்றின் பாசனத்தை நம்பி இப்பகுதியில் விவசாயம் செழித்தோங்கிவருகிறது. இப்பகுதியில் வெற்றிலை மிகுதியாக பயிரிடப்படுவதால் வெத்திலைக் குண்டென மருவி வத்தலக்குண்டாக அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் வெற்றிலைக்கு பீட்டெல் என்று அழைக்கப்படுகிறது. பீட்டெல் குண்டு என்பது பட்லகுண்டு, வத்லகுண்டு, வத்தலக்குண்டாகியுள்ளது. இந்தியாவிலேயே ~வ~ என்ற எழுத்து ~பி~என்ற எழுத்தாக உருமாறியது வத்தலக்குண்டுவும், வங்காளமும் தான். வெற்றிலைக்கொடிக்கால்கள் அதிகமாக இருந்ததால் வெற்றிலைக்குண்டு எனவும், இப்பகுதியில் வளரும் வெற்றிலைகள் குண்டாக இருந்ததாலும் வெற்றிலைக்குண்டு என்ற பெயர் வைத்து நாளடைவில் வத்தலக்குண்டாக மாறியது. ~குண்டு~ வெற்றிலை காலப்போக்கில் ~வத்தலாக~ சுருங்கிவருகிறது. வத்தலக்குண்டுவில் உள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்ட வெற்றிலையை மலைமலையாக குவித்து வைத்து வியாபாரம் செய்ததால் வெற்றிலை குன்;று போல் காட்சியளித்தாக கூறப்படுகிறது. இதனால் வெற்றிலைக்குன்று எனவும் சிலர் கூறுவர்.
வெற்றிலை காடு வெறிச்சோடி போச்சு, வெத்தல வெத்தல கொழுந்து வெத்தலையோ, கொட்டப்பாக்கும் கொழுந்து வெற்றிலையும் போட்டா வாய் சிவக்கும், வெத்தலையை போட்டேன்டி புத்திகொஞ்சம் மாறுதடி என சினிமா பாடல் வரிகள் மூலம் வெற்றிலையை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளக்கூடிய பாடல் வரிகள். மங்களமாக திகழ்ந்த வெற்றிலை விவசாயம் தற்பொழுது அமங்கலமாக மாறி அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வெற்றிலைக்கொடிக்கால் விவசாயம் நடைபெறுகிறது.திருமணம், சுபமுகூர்த்தம், மணப்பெண்கள் பொருத்தம், புதிய வீடு கட்ட, முகூர்த்த கால் நட என பலவகை சுபமுகூர்த்தங்களில் வெற்றிலையின் பங்கு இல்லாமல் நடைபெறாது. பீடா சாப், பான் சாப், வெற்றிலை பாக்கு கடை என அடையாளப்படுத்துவதில்; வெற்றிலைதான் முதன்மையாக உள்ளது. கணவன்-மனைவி பரஸ்பரத்திற்கும், திருமணம் ;நடைபெற்ற பின் நடைபெறும் சாந்தி முகூர்த்தங்களிலும் வெற்றிலையில்லாமல் இல்லை. இன்று நாகரீக உலகில் வடமாநிலங்களிலிருந்து சுவைப்பதற்கு வந்த பான்பராக், குட்கா, கணேஷ், ஹான்ஸ் போன்ற புகையிலைப்பொருட்களின் வருகையால்; வெற்றிலை விற்பனை சரிவைத் துவங்கியது எனலாம்.
வெற்றிலை விவசாயம் மற்ற விவசாயம் போல் இல்லாமல் மங்களகரமான விவசாயம் என விவசாயிகள் கூறுகிறார்கள். வெற்றிலைக்கொடிக்கால் விவசாயம் செய்பவர்கள் செருப்பு அணியாமல் தான் உள்ளே நுழைவார்கள். மாதவிலக்கு உள்ள பெண்கள் வெற்றிலைக்கொடிக்கால் பக்கம் செல்ல அனுமதியில்லை. அதே போல குழந்தை பிறந்து 40 நாட்கள் கழித்துத்தான் வெற்றிலைக்கொடிக்காலுக்கு செல்ல அனுமதியளிப்பார்கள். அந்தளவிற்கு கமகம மங்களரமாக வாசனையுடன் செய்யக்கூடிய விவசாயம் வெற்றிலை விவசாயம். வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். மலேசியாவை பிறப்பிடமாகக்கொண்டு தோன்றியது. அதிக தண்ணீர் வசதி உள்ள இடத்தில்தான் வெற்றிலை விவசாயம் செய்யப்படுகிறது. வெற்றிலை விவசாயம் அகத்தி மரங்களில் பரவவிட்டு வளர்க்கிறார்கள். தற்போது அகத்தி கீரைக்கும், வெற்றிலைக்கும் வரவேற்பு இல்லை. மேலும் கூலி ஆட்கள் பற்றாக்குறை, மின்சாரம் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை, உரங்கள் விலை உயர்வு, மாறிவரும் தட்பவெப்பம், சந்தைப்படுத்துதல் என பல காரணங்களால்; வெற்றிலை காடுகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் வெற்றிலையில் கருகல் நோய், வாடல்நோய், இலைகருகல் நோய், மாலுப்ப+ச்சி என்ற நோய்களின் ;தாக்கத்தால் வெற்றிலை விவசாயம் சுருண்டது. மேலும் வெற்றிலை சுவைப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. பீடா போடுவதற்கு இந்த வெற்றிலை உகந்தது அல்ல என்பதால் ஆந்திராவில் இருந்து வருகை புரியும் வெற்றிலைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் இவ்வெற்றிலை புறந்தள்ளப்பட்டது. இதனால்; கேரளா, ஆந்திராவில் இந்த வெற்றிலைக்கு வரவேற்பு இல்லை. மேலும் வெற்றிலையில் ஏதாவது நோய் ஏற்பட்டால் அதனை கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேளாண்மைத்துறை அதிகாரிகள் முன்வருவதில்லை. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் வெற்றிலை விவசாயத்திற்கு கடன் தரமுன்வருதில்லை. இது தவிர வாழை மரங்களின் ஆதிக்கத்தினால் வெற்றிலை கொடிக்கால்கள் அழிக்கப்பட்டு வாழை தோட்டங்களாக மாறிவருகிறது. எனவே வருங்காலங்களில் சினிமா டூயட் காட்சிகளிலும், திருமண காட்சிகளிலும் மட்டுமே செயற்கை வெற்றிலையை காணமுடியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு பகுதியில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை விவசாயம் நடைபெற்றது. தற்பொழுது 1 ஏக்கரில் கூட வெற்றிலை சாகுபடி செய்ய ஆளில்லாத நிலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்ட இடங்கள் எல்லாம் தற்பொழுது வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டது.
பழைய வத்தலக்குண்டுவில் ஆண்டு முழுவதும் 600 ஏக்கரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பம் குடும்பமாக செய்த வெற்றிலை விவசாயத்தை கைவிட்டுவிட்டு வாழை விவசாயத்திற்கு மாறிவிட்டனர்.
வத்தலக்குண்டு அருகாமையில் உள்ள தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி கூடலூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், பொத்தனூர், கரூர் மாவட்டத்தில் புகளுர், தஞ்சாவ+ர் மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, திருவையாறு போன்ற ஊர்களிலும் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என பரவலாக வெற்றிலை பயிரிடப்பட்டாலும் வத்தலக்குண்டு வெற்றிலைக்கு சந்தைகளில் தனி மவுசு உண்டு. நல்ல சுவை, காரம், மணமுடன் காணப்படும். இவ்வ+ர் விவசாயிகள் திண்டுக்கல், தேனி, விருதுநகர், எட்டயபுரம், சாத்தூர், கோவில்பட்டி, சென்னை போன்ற பகுதிகளுக்கும் அண்டை மாநிலமான கேரளா, பெங்களுர் மற்றும் வெளிநாடுகளான சிங்கப்ப+ர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட உலகம் எங்கும் தமிழர்கள் வசிக்கும் நாடுகளுக்கு வத்தலக்குண்டு வெற்றிலை ஏற்றுமதி ஆனது. அந்தளவுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெற்றிலை விவசாயத்தில் வத்தலக்குண்டு புகழ்பெற்றது.
வெற்றிலைப் பயிருக்கு விதை என்றும் எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியமுறையில் போட்டுத்தான் பயிர்செய்கிறார்கள். வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்று அழைக்கிறார்கள். வெற்றிலை பயிரிடுவற்கு மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் தான் பயிராகும். கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும் இளம்பச்சை நிறத்தில் காணப்படும் வெற்றிலைகளை பெண் வெற்றிலை என்றும் வகைப்படுத்துகின்றனர் விவசாயிகள்.
உழவு மற்றும் ஆரம்ப கட்ட வேலைகள்
முதலில் வெற்றலை விவசாயத்திற்கு தேவையான நிலத்தை உழுக வேண்டும். அதன் பின்னர் நிலத்தை சமப்படுத்தவேண்டும். அதன் பின்னர் பொங்கல் வைத்து உலைமூடி மூலம் பிரசாதத்தை தயார் செய்து அந்த பிரசாதத்தை நமக்கு தேவையான நிலத்தை சுற்றி மூன்று முறை சுற்றிவரவேண்டும். அதன் பின்னர் 1 அடி ஆழமும் 2 அடி மட்டம் அகலமும் கொண்ட குழி ஒன்றை வெட்டவேண்டும். அதன்பின்னர் ஆட்டு உரத்தை குழியில் இடவேண்டும். அதற்கு பின்னர் ஒரு ஜான் இடை வெளிவிட்டு அகத்தி விதைகளை தூவவேண்டும். அப்பொழுது அகத்திக்கீரை வளரஆரம்பிக்கும். ஒரு மாதம் கழித்து அடுத்த வெற்றிலைக்கொடிக்கால்களில் இருந்து கணுக்கால் வரை வெட்டி எடுத்து கவாத்து முறையில் நடவு செய்யவேண்டும். அதன் பின்னர் நிலத்தில் ஒரு ஆள் உயரத்திற்கு அகத்திக்கீரையை வளர்க்கவேண்டும். அகத்திக்கீரை வளர்த்து அதன்மீது வெற்றிலை கொடியை படரவிடவேண்டும். அதிக வெயில் தாக்காதவாறு வைக்கப்புல்லை பாத்திகளின் மீது போட்டு மூட்டம் போடவேண்டும். தண்ணீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேவையான அளவு பாய்ச்சவேண்டும். இவ்வாறு 90 நாள் கழித்து வெற்றிலை நன்றாக வளர்ந்துவிடும். அதனை கிள்ளி விற்பனைக்கு அனுப்பவேண்டும்.
இடம் பெயர்ந்த விவசாயிகள்
நீர் ஆதாரமில்லாத கண்மாய்கள், நோய் தாக்குதல், அழிந்து போன மண்வளம், கூலி ஆட்கள் தட்டுப்பாடு, போக்குவரத்து, உரங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் வெற்றிலை விவசாயத்தை கைவிட்ட வெற்றிலை விவசாயிகள் அன்றாட வாழ்க்கையை ஓட்ட வட்டி கட்டியே வீடு, நிலங்களை இழந்து தொழில்நகரங்களை நாடிச்சென்றுவிட்டனர்.
விலைஏற்றம் ஆன வரிச்சு குச்சிகள்
வெற்றிலைக்கொடிகள் படருவதற்குற்கும் வெற்றிலைக்கொடியை அகத்திக்கீரை மரங்களில் படருவதற்கும் நாணல்கள் பயன்படுத்தப்படும். இவ்வகையான நாணல்கள் ஆறு மற்றும் ஆற்றங்கரையில் இருக்கும். தற்பொழுது இந்த நாணல் தட்டைகள் ரூபாய் 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வெற்றிலைக்கு பயன்படுத்தப்படும் நாணல் தட்டைகள் கூட விலைக்கு விற்றதினால் மூலதனத்திற்கேற்ற வருமானம் இல்லை. வெற்றிலையில் நாட்டுகொடி, சக்கரை கொடி, சிருமணி, கற்ப+ரம் என பலவகை உண்டு. வெற்றிலைக்கு இயற்கை உரமான ஆட்டு எருவைத்தான் பயன்படுத்தமுடியும். மேலும் 1ஏக்கர் நடவு செய்யவேண்டும் என்றால் தற்பொழுது பத்து முதல் பதினைந்து பேர் கூட்டாக இருந்துதான் விவசாயம் செய்யமுடியும். வெற்றிலைக்கு தண்ணீர் மிக முக்கியம். மேலும் வெற்றிலை நட்டு அறுவடை செய்வதற்கு 10 மாதம் வரை ஆகும். அதுவரையில் இயற்கை சீற்றங்கள் வாடல்நோய், கருகல்நோய், வேர்தண்டு அழுகல் நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
வெற்றிலை ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்வதால் ஆண், பெண் பேதமில்லாமல் வெற்றிலை போடும் பழக்கம் கொண்டிருந்தனர். வெற்றிலை ஒருவருக்கு கொடுத்தால் அது மரியாதையாக பார்க்கப்பட்டதால் மங்களகரமாகவும், சுபிட்சத்தின் அடையாளமாகவும் வெற்றிலை கருதப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெற்றிலையில் சுருட்டை போண்டா நோய் தாக்கி வத்தலக்குண்டு மற்றும் அதனைச்சுற்றியுள்ள வெற்றிலைக்கொடிகளை நாசம் செய்தது. இதுதான் வெற்றிலை விவசாயம் சரிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுவே நெல்லுக்கோ, வாழைக்கோ நோய் வந்தால் மாற்று உரம், புதுமருந்தை கண்டுபிடிப்பார்கள். ஆனால் வெற்றிலையை காப்பாற்ற எந்த அரசும் முன்வரவில்லை. இதுவே வெற்றிலை அழிவுக்கு காரணமாகிவிட்டது.விவசாயிகள் எந்த மருந்தை அடிக்கலாம் எனத்தெரியாமல் கண்ட கண்ட மருந்துகளை அடித்ததால் பாரம்பரிய வெற்றிலை சாகுபடி மண் இப்போது இல்லை. வெற்றிலை சாகுபடி இந்த மண்ணுக்கு வரவே மாட்டேன் என்கிறது. அதனால் பாரம்பரியமிக்க நாட்டு வெற்றிலைக்கு பதிலாக சீருகாமணி என்ற வீரிய ரக வெற்றிலைக் கொடியை தற்பொழுது நடத்துவங்கிவிட்டோம் என்கிறார்கள் வெற்றிலை விவசாயிகள்;.
மேலும் விவசாயிகள் கூறுகையில், வெற்றிலையை கட்டு கட்டாக கட்டி விற்பனைக்கு அனுப்புகிறோம். ஒரு கட்டுக்கு 500 முதல் 600 வரை வெற்றிலைகள் இருக்கும். 12 கட்டுகள் ஒரு பண்டலாக அதாவது 12 கிலோ வரை இருக்கும். தற்பொழுது 1 கிலோ 30 ரூபாய்க்குத்தான் விற்பனை ஆகிறது. வெற்றிலைகளை கட்டுவதற்கு கூலியாக ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை கொடுக்கிறோம். மேலும் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அருமையான மருந்து. வயிற்றுவலி, சித்தமருந்திற்கு வெற்றிலை மிக முக்கியமானது என்றார். மேலும் நாட்டு வெற்றிலை 1 கிலோ 300 ரூபாய்க்கு விற்றால் வீரிய ரகத்தில் 30 ரூபாய்தான் கிடைக்கும். எடை அதிகமாக இருக்கும். லாபம் கிடைக்காது. இந்த வெற்றிலை ஒரு வாரம் வரை கெடாது. நாட்டு வெற்றிலை 4 நாட்களில் வாடிவிடும். ஆனால் நாட்டு வெற்றிலையைத் தான் விரும்பி வாங்குவார்கள். தனிப்பட்ட ஒரு மனிதரால் வெற்றிலை சாகுபடி செய்யமுடியாது. ஒரு ஏக்கரில் 10 நபர்கள் சேர்ந்துதான் செய்யவேண்டும். ரூ.10 ஆயிரம் மகச+ல் கிடைத்தால் 5 ஆயிரம் பராமரிப்புக்கு செலவிடவேண்டும். எங்கள் தலைமுறையோடுசரி. அடுத்த தலைமுறைக்கு இந்தத் தொழில் செய்ய ஆளில்லை.
ஜெயமங்கலத்தைச்சேர்ந்த விவசாயி கருப்பையா கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியகுளம் தாலுகாவில் 500 ஏக்கர் வரை வெற்றிலை விவசாயம் நடைபெற்றது. தொடர்ந்து நோய் தாக்குதல், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பின்மை, வறட்சி இந்தக்காரணங்களால் தற்பொழுது 50 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இந்த விவசாயம் நடைபெறுகிறது. இதன் சம்பந்தமாக நாங்கள் பலமுறை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளோம். மேலும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் எப்பொழுதும் இருப்பதில்லை இதனால் வெற்றிலை விவசாயம் நலிவடைந்து வருகிறது என்றார்.
அதிகாரி விளக்கம்
இதன் சம்பந்தமாக பெரியகுளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்(அக்ரி) திரு.குமாரவடிவேலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, வெற்றிலை விவசாயத்திற்கு அரசு சார்பில் எந்த வித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதே வேளையில் விவசாயிகள் பாரம்பரியமாக எந்த தவற்றை செய்கிறார்களோ அதே தவற்றைத்தான் செய்கிறார்கள். தற்பொழுது சொட்டுநீர்பாசனம் முறை வந்துவிட்டது. இந்த முறையில் வெற்றிலையை பயிரிட்டால் எந்த வித நோய் தாக்குதலுக்கும் ஏற்படுவதில்லை. மேலும் நாட்டுவெற்றிலை, சீருகமணி வெற்றிலை அதிகம் பயிரிடுகின்கின்றனர். இந்த வெற்றிலையில் அதிக அளவு நீர் தேங்கியிருப்பதாலும் கோடை காலங்களிலும் பலவித நோய்கள் மற்றும் ப+ச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிறது.எனவே அளவான தண்ணீரை பயன்படுத்தினால் அதாவது சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்தால் நோய்களிலிருந்து காப்பாற்றலாம் என விளக்கம் அளித்தார்.
மறைந்து வரும் வெற்றிலை இடிப்பான்கள்
ஒவ்வொரு வீட்டிலும் இப்பகுதியில் வயதான முதியவர்கள் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் வெற்றிலை மற்றும் பாக்குகளை இடிக்கப்பயன்படுத்தக்கூடிய வெற்றிலை இடிப்பான், எச்சிலை துப்புவதற்கு கொழாம்பி போன்றவை பித்தளை மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்களை வைத்திருந்தார்கள். தற்பொழுது முதியவர்களும் அதிக அளவில் இல்லை. வெற்றிலை சுவைப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதனால் வெற்றிலையை இடிக்கப்பயன்படும் அப்பாத்திரங்கள் பழைய இரும்புக்கடைகளுக்கு எடைக்கும் போடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
வெற்றிலையில் உள்ள சத்துக்கள்
வெற்றிலையில் 84.4 சதவீதம் நீர்ச்சத்தும், 3.1. சதவீதம் புரதச் சத்தும், 0.8 சதவீதம் கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம் கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. வெற்றிலையின் கலோரி அளவு 44. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இதுதவிர வீரியமிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவப்பயன்கள்
அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், ஜன்னிக்கு வெற்றிலைச்சாற்றில் கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேனுடன் கலந்து கொடுத்தால் குணமாகும். வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணெயில் தேய்த்து ஆசனவாயிலில் செலுத்தினால் உடனடியாக மலம் வெளியேறும்.
வெற்றிலையை அரைத்து கீழ்வாத வலிகளுக்கும்;, விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்து கட்ட நல்ல பலன் தரும்.வெற்றிலையில் சிறிது ஆமணக்கு, எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும்.சுக்கு, மிளகு, திப்பிலி சமஅளவு கலந்து திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச்சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
சமூகத்தில் வெற்றிலை
மேற்குமலைத்தொடர்ச்சியில் வாழும் பளியர் இன மக்கள் திருமணத்தின்போது மணமக்கள் மாலையில் மேளம் முழக்கிச் குழல் ஊதியவாறு புதிய ஆடைகளுடன் ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு இருவரும் புத்தாடைகளை உடுத்திக்கொண்டு மாப்பிள்ளையும் பெண்ணும் சேர்த்து நான்கு வெற்றிலைகளை நீரில் விடுவார்கள். ஆற்று நீரில் வெற்றிலைகள் இணைந்து சென்றால் இருவரும் பிரியாது வாழ்வார்கள் என்றும், பிரிந்து சென்றால் வாழ்க்கையிலும் பிரிந்து செல்வார்கள் என்றும் நம்புகின்றனர்.
புலையர்கள்
மேற்குமலைத்தொடர்ச்சியில் உள்ள புலையர்களிடம் ஒரு விநோத பழக்கம் உள்ளது. புலையர்களுக்கிடையே காதல் செய்து ஓடிப்போய் விட்டு அதன் பின்னர் ஊர் திரும்பிய பின்னர் ஊரில் கூட்டம் போட்டு அவர்களில் ஆண், பெண் விருப்பம் கேட்டு ஊரில் தங்க வைப்பார்கள். அதன் பின்னர் ஊர்ப் பெரியவர்கள் பேசி பெண்ணுக்கோ மாப்பிள்ளைக்கோ பிடித்த ஆள் மேல் வெற்றிலை போட்டு எச்சிலைத் துப்பிவிட்டால் மணம் செய்து கொள்ளலாம். முறையாக திருமணம் செய்பவர்கள் மாப்பிள்ளை-பெண் வீட்டார் பெண் வீட்டுக்குச் சென்ற பெண் கேட்ட பின்பு, மந்தையில் சாக்கு விரித்து தட்டில் வெற்றிலை, பொட்டு சந்தனம் வைத்து மந்தைக்கு கூட்டி வருவார்கள். மாப்பிள்ளையையும் மந்தைக்கு அழைத்து வருவர். பெண்ணுக்கு சாந்து பொட்டு கொடுப்பார்கள். வீட்டுக்கு வீடு வெற்றிலை பாக்கு வைப்பார்கள். அதன் பின்னர் திருமணம் நடக்கும்.
சாதிவிலக்கம்
பண்டைய காலத்தில் பஞ்சாயத்து நடைபெறும் இடங்களில் கம்பளி, பிடிசெம்பு, பிரம்பு, பாதகட்டை, காளாஞ்சி செம்பு போன்றவை ராஜசின்னங்களாக அறிவிக்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பஞ்சாயத்து தலைவர் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொழுது ராஜகம்பளத்தினை விரித்தே அதன் மீது அமர்வார். ராஜாகொடுத்த பாதகட்டையை அணிந்து கொண்டும், பொற்பிரம்பினை கையில் பிடித்துக் கொண்டும்தான் கூட்டங்களை நடத்துவார்கள். அப்படி நடத்தும் போது சாதிவிலக்கம் பற்றி விபரம் பேசப்படும். ஒருவரை சாதியிலிருந்து நீக்கிவிட்டேன் எனக்கூறி வலப்புறமும், இடப்புறமும் திரும்பி மூன்று முறை தனது வெற்றிலை போட்ட எச்சிலை துப்புவார். அன்றிலிருந்து அவர்கள் சாதியிலிருந்து விலக்கி கொண்டவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள்.
மணவிலக்கு
மணவிலக்கை தீர்த்து விடுதல் என்று அழைக்கப்படுகிறது. கணவன், மனைவிகளுக்கிடையே பிரச்சினை ஏற்பட்ட பின்பு ஊர்ப் பெரியவர்களும், பஞ்சாயத்தாரும் ஊர்ப் பொது இடத்தில் ஒன்று கூடி பேசி பிரச்சினைகளை சுமூகமாக முடிப்பார்கள். இருவீட்டாரும் அதனை ஏற்றுக்கொண்டபிறகு கணவனது தந்தை அல்லது சகோதரன் மூன்று வெற்றிலையை சுண்ணாம்பு தடவாமல் பின்புறமாக திருப்பி அதன் மீது பாக்கு வைத்து மனைவியுடைய தந்தையிடம் அல்லது சகோதரனிடம் கொடுப்பார். பின்பு பஞ்சாயத்தாரில் உள்ள ஒரு முக்கியஸ்தர் வீட்டுக் கூரையில் உள்ள கோரைப்புல்லையோ அல்லது வைக்கோல் புல்லையோ எடுத்து அதனை இரண்டாகக் கிள்ளி அதன் ஒரு பகுதியை மனைவியின் தந்தை அல்லது சகோதரனிடமும் கொடுத்து விடுவர். இதனை துரும்பு கொடுத்தல் என்கிறார்கள். அத்துடன் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று கருதுகின்றனர்.
ஐதீகத்தில் வெற்றிலை
திருமணம் ஆனவர்கள் மற்றும் குழந்தை பிறந்தவர்கள் வெளியே சென்று வீட்டிற்கு வரும்பொழுது வெற்றிலை, சுண்ணாம்பு, கரிக்கொட்டை ஆகியவற்றை ஒன்றாக்கி தலையை சுற்றி அதில் காசுகளைப்போட்டு முச்சந்தியில் போடுவது இன்றுவரை கடைப்பிடிக்கிறார்கள். கண்திருஷ்டி போன்ற பணிகளுக்கு வெற்றிலையுடன் முச்சந்தியில் மண் எடுத்து தலையை சுற்றிப்போடுவது தமிழகத்தில் உள்ள கிராமங்களில் வழக்கமாக உள்ளது. மங்களகரமான நிகழ்வுகளுக்கு வெற்றிலையை 3, 5, 7 என்று ஒற்றைப்படையிலும் அமங்கலகரமான நிகழ்வுகளுக்கு 2,4 வெற்றிலையை சுண்ணாம்பு தடவாமல் பயன்படுத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் பொருள்கள் காணாமல் போனால் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மையை தடவி காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க பயன்படுத்துவதும் உண்டு. வெற்றிலையை வைத்து ஜோசியம் பார்ப்பது வழக்கமாக வைத்துள்ளனர்.
வெற்றிலைப்பேட்டை
கொடிக்கால் பிள்ளைமார் மதுரை மாவட்டத்தில் சிவன் கோயில்களில் கொடி ஏற்ற கம்பம் கொண்டுவரும் கௌரவம் பெற்றிருந்தார்கள். இவர்கள் தங்களின் கொடிக்கால்களில் பயிரான வெற்றிலைகளைக் கொண்டு வந்து சந்தைப்படுத்திய இடம் மதுரை கீழவெளிவீதியில் வெற்றிலைப்பேட்டை என்ற பெயரில் இன்றும் உள்ளதைக்காணலாம்.
இவ்வாறு பாரம்பரியம், மங்களகரமானத்தொழில் தற்பொழுது அமங்கலமாக மாறிக்கொண்டு வருகிறது. எதிர்வரும் சந்ததியினர் இந்த விவசாயத்தை தொடரவேண்டும் எனில் அரசு சார்பில் வெற்றிலை விவசாயிகளை ஊக்கப்படுத்த மானியத்துடன் கூடிய கடன் வழங்கியும், அரசு கூட்டுறவுத்துறை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இல்லையெனில் அருமருந்தான வெற்றிலையை வரலாற்றுப்பாடப்புத்தகங்களில் மட்டுமே படிக்க முடியும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
செல்:9715795795

Series Navigationஉறையூர் என்னும் திருக்கோழிசெத்தும் கொடுத்தான்
author

Similar Posts

Comments

  1. Avatar
    ramu says:

    ஆத்தோரம் கொடிக்காலாம் அரும்பரும்பா வெத்திலையாம் போட்ட செவக்குதில்லெ பொன் மயிலே உன் மயக்கம் இது தென் தமிழ் நாட்டின் நாடோடி பாடல் சினிமாவில் கடைபொன்னு நுனிநாக்கு வெத்தலையாலே சிவந்திருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *