ஆத்ம கீதங்கள் –20
ஒரு மங்கையின் குறைபாடுகள்
[A Woman’s Shortcomings]
(தொடர்ச்சி)
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உன் பாடல் முடிந்த தென்று
உனக்கு
நினைவின்றிப் போனால்,
ஒத்திசைவின் மென்மை போகும் !
உன்னை விட்டொருவன் நீங்கினா னென்று
உனக்கு
உணர்வில்லை என்றால்,
மற்றவரும் அவனைத் தொடர்வா ரென
அறிவாய் !
உன்னை அவன் விடும்
மூச்சிலும் மதிக்கா திருப்பது
உனக்குத்
தெரிய வில்லை யென்றால்,
புரிந்து கொள், உனது
வனப்பு நிரூபண மாக வில்லை !
வாழ்வதா, மரிப்பதா என்றுன் நிலைமை
தாழ்ந்து போய் விட்டால்,
அந்தோ !
அது காதல் இல்லை யென்று
ஒதுங்கி விடு !
சந்தடிக் கூட்டத்தில் நாள் முழுதும்
உந்தன் நெஞ்சில் நிற்கும்
நீங்கா முகத்தை,
நினைக்க முடியா விட்டால்;
சொர்க்கம் கடந்த தேவதை ஈந்ததை
நேசிக்க இயலா விட்டால்;
தக்கார், தகவிலர் தம்மை அறிந்தவன்
மன உறுதி அழுத்த மெனக்
கனவில் நீ காணா விட்டால்;
கனவுகள் முறிந்ததும்
உன்னால்
சாக முடியா விட்டால்
காதலெனக் கூறாதே அதனை
ஒரு போதும் !
[முற்றும்]
++++++++++++++++++++++++++++++++++++
மூல நூல் :
From Poems of 1844
Elizabeth Barrett Browning Selected Poems
Gramercy Books, New York 1995
1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
3. http://www.online-literature.com/elizabeth-browning/
- துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.
- உறையூர் என்னும் திருக்கோழி
- அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு
- செத்தும் கொடுத்தான்
- ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்
- வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்
- மட்டில்டா ஒரு அனுபவம்
- திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு
- தொடுவானம் 59. அன்பைத் தேடி
- நிழல் தரும் மலர்ச்செடி
- வரலாறு புரண்டு படுக்கும்
- போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்
- நாதாங்கி
- “மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”
- தொட்டில்
- மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்
- அம்மா
- தினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. !
- ஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா
- புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி
- எழுத்தாள இரட்டையர்கள்
- வேடந்தாங்கல்
- வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 6
- மிதிலாவிலாஸ்-6