நான் யாழினி ஐ.ஏ.எஸ்
[நாவல்]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி
அத்தியாயம் -1
மென் சாமரம் வீசும் தென்றல் காற்றின் கைங்கரியத்தால் அசைந்த சேலையை இறுகப் பற்றிய படிநடந்தாள் யாழினி. யாழினி அழகானவள். சராசரிக்கும் சற்றே உயரம் குறைவு. நீண்ட கருங்கூந்தல். பேசும் விழிகள். மௌனத்தை அடையாள
மாக்கிய அதரங்கள். சேலைக் கட்டில் ஒரு தனித்துவ நேர்த்தி!
மழை வரக்கூடும் என்று அறிவித்தது கருமேகம் சூழ்ந்த வானம்! சில்லென்று தழுவி காற்று சற்றே பாதத்தை எட்டி வைத்து நடையைத் துரிதப்படுத்தினாள்.
சட் சட் சட் டென்று தரை விழுந்த மழைத்துளிகள் கொஞ்சம் நனைந்துக்கொள் என்று அழைப்பு விடுத்தது.
ஈரச் சேலையின் வரி ஓவியத்திற்கு பயந்தவளாய் நிழற்குடையினுள் ஒதுங்கி நின்றாள்.
சாரல் தெரிந்த நிலையைக் கண்ட நிழற்குடையினுள் நின்றிருந்தவன் கொஞ்சம் உள்ள தான் வந்து நில்லுங்களேன் என்றான்.
யாழினிக்கு ஆண்கள் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்தது. தந்தை தன் தாயாரின் மீது வைத்திருந்த கரிசனையும் அன்பும், வறுமையிலும் யாழினியை படிக்க வைக்க
அயராது உழைத்த அவரின் மனப்பாங்கும், ஆண்களில் அத்தகையவர்கள் அநேகர் என்ற தைரியத்தைக்கொடுத்திருந்தது.
மெல்ல ஒரு புன்முறுவல் பூத்தவளாய் உள் தள்ளி நின்றாள்.
மழை சட் சட் டென்று பெருங் கூச்சலோடு வலுத்தது. மின்சாரம் துண்டித்து இருண்டது அப்பிரதேசம் முழுவதும் கருமை போர்த்திய இராட்சத உருவம் தாங்கி நின்றது.
கீழ் நேர்கோடாய் வெட்டிய மின்னல் கீற்று வெளிச்சத்தில் வெள்ளி நீர்க் குமிழ்கள் உருண்டு ஓடின.
செல்போனில் இருந்த டார்ச் விளக்கை ஒளிர வைத்தான் அவன்.
எங்கங்க போகனும்
ரெட்டியாப்பாளையம்ங்க
சி 7 பஸ் வர நேரங்க என்றான்
இந்த மழைல எங்கேங்க போறது அடுத்து இராமஜெயம் தான்
“இந்த குடை நீங்க வேணா எடுத்துட்டு போங்களேன்”
குடையை திரும்ப எப்படி கொடுக்கறதாம் ?”
நானே வந்து வாங்கிக்கறேங்க!”
எங்க
ரெட்டியாப்பாளைத்துல தான்
ம்க்கூம் இது வேறயாக்கும் எங்க ஊர் பக்கம் அந்நிய ஜனம் வந்தா வகுந்துருவாங்க
அய்யோ பயந்துட்டேனுங்க என்றான் பயந்தது போல் ஒடுங்கி
குடை என்ன விலைங்க ?
ஏன் 200 ரூபாய்
?
மணி பர்சில் இருந்து
இரண்டு
நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவன் கையில் திணித்தாள்.
அருகில் இருந்த குடையை எடுத்து விரித்துக்கொண்டவள் குடையை திரும்பக் கொடுத்து காசு வாங்கிக்கறேன்; இல்லேன்னா நீங்க புதுக்குடை வாங்கிக்கங்க என்றபடி அவன் பதிலை எதிர்பார்க்காமல் சாலையில் இறங்கி பேருந்தை நோக்கி நடந்தாள்.
இருளில் தெரிந்த அவளின் உருவ நேர்த்தியை எண்ணி வியந்தான் ராஜீவ். ராஜீவ் ஒரு ஓவியன். பார்க்கும் காட்சியை அப்படியே வரையும் ஆற்றல் பெற்றிருந்தான்.
அவள் சாலையில் நடந்த விதம், ஏறி இறங்கி நடம் புரிந்த அரைக்குடங்கள்.
லேசாய் வீசிய காற்றில் அசைந்த அவளின் சேலை. ஒற்றைக் கை உயரப்பிடித்த குடை.
முதுகில் நெளிந்த கூந்தல் என மின்னல் வெட்டில் விட்டு விட்டு காட்சி
யாகியது.
“ஏங்க ஏங்க !”என்று விளித்தான் ராஜீவ்.
“என்னங்க?”
“நான் எங்க வீட்ல தலைச்சன் பிள்ளைங்க! தனியா விட்டுட்டு போறீங்க” என்றபடி குடையில் வந்து இணைந்தான்.
ராஜீவ் போட்டிருந்த செண்ட்டின் மணம் மூக்கைச்சுளிக்க வைத்தது.
“என்ன கண்ராவி வாசனையோ செத்த பிணத்திற்கு அடிப்பதைப் போல!” என்றெண்ணியவள் சட்டென்று சிந்தனையை மாற்றினாள்.
குடை கொடுத்து உதவியவனாயிற்றே! அவன் கை அவளின் தோளோடு உரசியது.
முன் பின் தெரியாதவனோடு மழைக்குப் பயந்து இப்படி ஒரே குடையில் போவதுசரியா என்ற எண்ணம் உதிக்க, சன் நீயுசில் பார்த்த காட்சியும் நினைவிற்கு வர தன்னை மறந்து களுக் கென்று சிரித்தாள்.
“எதுக்கு சிரிச்சீங்க?
“இல்லைங்க டீவியில ஒரு சீன் பார்த்தேன். அந்த ஞாபகம் சிரிப்பு வந்துடுச்சு!” என்றாள்
“ஈவ் டீசிங் பண்ண பசங்கள ரெண்டு பொண்ணுங்க பெல்ட்லயே வச்சு வாங்குனாங்களே அந்த சீன் தான?” என்றான்
“எப்படிங்க அவ்ளோ கரெக்டா சொல்றீங்க ?”
“ம்ம்ம்…” என்று இழுத்தவன் “வேணுங்க வேணும்.. உங்களுக்கு குடையும் கொடுத்து பெல்டால அடியும் வாங்கணும்ன்னு என் தலை எழுத்து.”
அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க என்று பதறினாள் யாழினி.
ஏனோ அவன் வருந்தியது அவளையும் வருந்தச் செய்தது.
சி 7 பஸ் ஸ்டேண்டை விட்டு வெளியேற குடையை விட்டு விலகி ஓடி பேருந்தை நிறுத்தினான் ராஜீவ்.
பேருந்தில் ஏறிய யாழினி குடையை அவன் கைகளில் திணித்து தேங்க்ஸ்ங்க என்றாள்.
அவன் அவசர அவசரமாக 2 நூறுகளை எடுக்க விழைய பேருந்து வேகம் கூடி மழையின் சீற்றத்தில் ராஜீவின் கண்களில் இருந்து மறைந்தது.
“ச்சே !பேரைக் கேக்கலியே என்று சலித்துக்கொண்டான் ராஜீவ். எதிரில் கண்ணாடி! சொட்டு சொட்டாய் முடிகளில் இருந்து விழுந்து கொண்டிருந்த நீர்த் திவலைகள்.
“டேய் ராஜீவ் தலையை துவட்டேன்டா!” என்றாள் அக்கா
ராஜீவிற்கு அம்மா இல்லை அப்பாதான். மொடா குடியர். அக்கா அவனின் தாயாக இருந்தாள். குழந்தை இல்லாத அக்காவின் தாய் பாசத்திற்கு ராஜீவ்
வடிகால் .
இன்னும் பல்முளைக்காத குழந்தடி அவன் என்று சளித்தார் ராஜீவின் மாமா
“டேய் ராஜீவ்!” என்று அதட்டினாள் ராஜீவின் அக்கா
“சொல்லுக்கா”
“என்னடா இது கோலம், தலையை துவட்டு!”
“அட போக்கா, நானே பீலிங்ல இருக்கேன்!”
என்ன பீலிங்க் ?”
தார் ரோடு , குறுக்கும் நெடுக்குமா போகுற வண்டிங்க இருட்டு இல்லாம பகலும் இல்லாம ஒரு நடுவாந்திர வெளிச்சம் லேசானா காற்று ஒரு கைல சேலையை தூக்கிபிடிச்சுட்டு, இன்னொரு கைல பர்சை பிடிச்சுட்டே தலையை ஒதுக்கிட்டு ஒரு பொண்ணு நடந்து வரா, நான் அவ அழகுல மயங்கி அப்படியே பார்த்துட்டு இருக்கும் போதே சட சடன்னு கொட்டுற
மழை! மழைக்கு பயந்து ஓடி வந்து நான் நின்னுட்டு இருந்த நிழற்குடையில ஒதுங்கறா
“எல்லாம் படத்துல வர சீன்டா!”
“அய்யோ அக்கா இது படத்துல இல்ல நேரா நிஜத்துல நடந்தது!”
“போடா நீயும் உன் அவளும்!” என்று துண்டால் அவன் முதுகில் ஒரு தட்டு தட்டி விலகினாள் அக்கா
இரவு முழுவதும் யாழினியின் நினைவிலேயே உறக்கமும் விழிப்புமாக
தவியாய்த்
தவித்தான் ராஜீவ்.
[தொடரும்]
- மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
- ஜெயகாந்தன்
- செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு
- பொழுது விடிந்தது
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
- நதிக்கு அணையின் மீது கோபம்..
- நானும் நீயும் பொய் சொன்னோம்..
- முதல் பயணி
- அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)
- சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை
- கடைசிக் கனவு
- விதிவிலக்கு
- பயணங்கள் முடிவதில்லை
- அப்பா எங்க மாமா
- மூன்றாவது விழி
- தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
- பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்
- செங்கண் விழியாவோ
- மரம் வளர்த்தது
- கூட்டல் கழித்தல்
- நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2
- வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
- ஒரு பழங்கதை
- ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
- ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
- சிறுகதை உழவன்
- மிதிலாவிலாஸ்-9