என்.செல்வராஜ்
சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன்,
வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு பற்றியும் , ஜெயமோகன் பரிந்துரை பட்டியலையும், சாகித்ய அக்காடமி வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளையும் , என் பி டி வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளையும்
கீரனூர் ஜாகிர் ராஜாவின் பரிந்துரைகளையும் பார்த்தோம். காவ்யா பதிப்பகம் பல தமிழ் சிறுகதைகளின் தொகுப்புக்களை சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.
இந்த கட்டுரையில் மிக முக்கிய தொகுப்பான கதைக்கோவை -1 முதல் 4 தொகுதிகளையும் , இ எஸ் டி தொகுத்த தலை வாழை, ஒரு நந்தவனத் தென்றல் , காவ்யா வெளியிட்டுள்ள நெல்லைச்சிறுகதைகள், தஞ்சைச்சிறுகதைகள்,
கொங்குச்சிறுகதைகள், சென்னைச்சிறுகதைகள், தில்லிச்சிறுகதைகள், பெங்களுர் சிறுகதைகள், எஸ் ஷங்கரநாராயணன் தொகுத்த ஆகாயப்பந்தல், பரிவாரம், இந்த நூற்றாண்டு சிறுகதைகள் பாகம்-1, பாகம் 2, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, மணிக்கதைகள் 1-6, சிவசங்கரி தொகுத்த நெஞ்சில் நிற்பவை 1,2,
கி ராஜநாராயணன் தொகுத்த கரிசல் கதைகள், அன்பாதவன் தொகுத்த மும்பை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளில் உள்ள கதைகளைக் காணலாம்.
நெல்லைச் சிறுகதைகள் என்ற தொகுப்பைசு சண்முகசுந்தரம் தொகுத்து காவ்யா பதிப்பகம்வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 50 எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை தொகுத்துள்ளார். இந்த தொகுப்புமே 2000 ல் வெளிவந்து 2011 ல் இரண்டாம் பதிப்பு வெளியானது. இந்ததொகுப்பில் உள்ள கதைகள்
- பாரதியார் – காக்காய் பார்லிமெண்ட் 2. அ.மாதவய்யா- ஏணியேற்ற
நிலையம்
- புதுமைப்பித்தன் – கயிற்றரவு 4. கு அழகிரிசாமி – சுயரூபம்
- தொ மு சி ரகுநாதன் – ஆனைத்தீ 6. வல்லிக்கண்ணன் – தீ வேலி
- கி ராஜநாராயணன் — கன்னிமை 8. பா செயப்பிரகாசம் – அம்பலகாரர் வீடு
- பூமணி- முழுக்கு 10. எஸ்தர் – வண்ணநிலவன்
- வண்ணதாசன் – தனுமை 12. டி செல்வராஜ் – உண்ணாம திண்ணாம
- சு சமுத்திரம் – மானுடத்தின் நாணயங்கள் 14. மாலன் – 23
- வீரவேலுச்சாமி- பங்கீடுகள் 16. காஸ்யபன் – ஜகதா
- போப்பு- இடைவெளி 18.தனுஷ்கோடி ராமசாமி – ஆயிரங்கண்ணுடையாள்
- செ. ஞானன் — நிதர்சனங்கள் 20. கொ மா கோதண்டம் – பசித்தீ
- கோணங்கி – மதினிமார்கள் கதை 22. எஸ் ராமகிருஷ்ணன் –
தாவரங்களின் உரையாடல் 23. உமா கல்யாணி – முள்ளுக்கு முள்
- மேலாண்மைபொன்னுச்சாமி – அரும்பு 25. ச தமிழ்ச்செல்வன் –
வெயிலோடு போய் 26. ஸில்வியா – கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள்
- அ.முத்தானந்தம் – மண்நேசம் 28. ஏ.ஏ.ஹெச்.கே.கோரி –தீர்த்த யாத்திரை
- விக்ரமாதித்யன் – காலம் 30. வித்யா ஷங்கர் – ராசகிளிகள்
- பாமா – அண்ணாச்சி 32. தமயந்தி – அனல்மின் மனங்கள்
- சோ தருமன் – நசுக்கம் 34. கௌரிசங்கர்- தாக்கம்
- உதயசங்கர்- டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல்
- மாதவராஜ்- மண்குடம் 37.வெ. சுப்பிரமணிய பாரதி – சிறகுகளும்
சிறைகளும்
- சுந்தரபாண்டியன் – கல்லத்திமரம் 39. அபிமானி- பாறைகள் சிதறிப்போகும்
- நெல்லை சு முத்து – லைக்கா 41. ஸ்ரீதர கணேசன் – ரசிகனைத் தேடி
- பூமா ஈஸ்வரமூர்த்தி – சரி 43. பா அமிழ்தன் – சந்தர்ப்பம்
- அ பிரேமா – சிறை 45. கழனியூரன் – ஒரு கதை சொல்லியின் குரல்
- தாமரை செந்தூர் பாண்டி -அப்பொழுதுதான் அஞ்சலை சிரித்தாள்
- அழ கிருஷ்ணமூர்த்தி – வறுமைச் சக்கரம் 48. களந்தை பீர் முகம்மது –
தயவு செய்து 49. டி குலசேகர் – மனதில் ஒரு பிரார்த்தனை
- தளவாய் சுந்தரம் – சாவை அழைத்துக் கொண்டு வருபவள்
கொங்குச் சிறுகதைகள் என்ற தொகுப்பின் தொகுப்பாசிரியர் பெருமாள் முருகன். காவ்யா இந்த தொகுப்பை மே 2001 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பு கொங்கு பகுதி எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை கொண்டிருக்கிறது. இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள் .
- தறிக்காரன்- ஆர் சண்முகசுந்தரம் 2. சர்ஜன்வாசுக்குட்டி – ராஜாஜி
- கூலிக்கார வீரப்பன் – பெ தூரன் 4. கடவுளும் கறுப்பனும் – கு சின்னப்ப பாரதி
- சின்னம்மிணி – திருப்பூர் கிருஷ்ணன் 6. சிலிர்ப்புகள் – சி ஆர் ரவீந்திரன்
- தூண்டில் – சூர்யகாந்தன் 8. பந்து பொறுக்கி – விட்டல் ராவ்
- ஒவ்வொறு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
- கிறிஸ்துமஸிற்கு முந்தின தினங்கள்- கார்த்திகாராஜ்குமார்
- தங்கப்பன் ஆசாரியின் கிளி – சுகுமாரன் 12. இரண்டு பேர் – ஆர் சிவகுமார்
- அடிவாழை – ப கிருஷ்ணசாமி 14. மூங்கில் குருத்து — திலீப்குமார்
- வதம் – திலகவதி 16. சொக்காச்சுமை – க வை பழனிசாமி
- அழிவு -தேவி பாரதி 18. அழகு – இரவீந்திர பாரதி
- காசி – பாதசாரி 20. அப்புச்சியும் பேரனும் – கோவிந்தராஜ்
- கோடித்துணி – பெருமாள் முருகன் 22. மல்லி – சூத்ரதாரி
- பூக்கள் பூக்கும் ஓசை – ஷாராஜ் 24. ராக்கம்மா – நஞ்சுண்டன்
- விடத்தலாமரம் – சுதேசமித்திரன்
- குற்றமும் தண்டணையும் – ஜெ ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
- காளீ – அனுராதா 28. அக்கழுதை – கா சு வேலாயுதன்
- அன்னய்யா – ஆதவன் தீட்சண்யா 30. முடிவு – இந்திரா
- சண்முகசித்தாறு – க சீ சிவகுமார் 32. உருவாரம் – என் ஸ்ரீராம்
- மண்பூதம் – வா மு கோமு
தஞ்சை சிறுகதைகள் என்ற தொகுப்பை சோலை சுந்தரபெருமாள் தொகுத்து காவ்யா வெளியிட்டுள்ளது. டிசம்பர் 1999 ல் முதல் பதிப்பு வெளியானது. இதில் உள்ள சிறுகதைகள்
- காசி வேங்கடரமணி – பட்டுவின் கல்யாணம் 2. கல்கி – ஜீவரசம்
- வ.ரா – வண்ணார வீரம்மாள் 4. தி ஜ ரங்கநாதன் – பெட்டிவண்டி
- ந பிச்சமூர்த்தி – மாயமான் 6. கு ப ராஜகோபாலன் – விடியுமா
- மௌனி – குடும்பத்தேர் 8. க நா சுப்ரமணியம் — ஆடரங்கு
- ஆர் வெங்கட் ராமன் – தவிப்பு 10. தி ஜானகிராமன் – கோபுர விளக்கு
- ஆனை ஸு குஞ்சிதபாதம் – தேவகியின் திருமணம்
- ஜெகசிற்பியன் – நரிக்குறத்தி 13. சுப்ரமணிய ராஜு – இருட்டில் நின்ற …
- கரிச்சான் குஞ்சு – ரத்த சுவை 15. எம்.வி.வெங்கட் ராம் – பூமத்தியரேகை
- மு கருணாநிதி – வாழமுடியாதவர்கள் 17. எழில் முதல்வன் –
அவள் நெஞ்சம் 18. பூவை எஸ் ஆறுமுகம் – மஞ்சிவிரட்டுப் பூரணி
- தி ச ராஜு – பட்டாளக்காரன் 20. ந முத்துசாமி – யார் துணை
- சா கந்தசாமி – ஆறுமுக சாமியின் ஆடுகள்
22 . பாலகுமாரன் – நெருடலை மீறி நின்று 23. இந்திரா பார்த்தசாரதி –
நாசகாரக்கும்பல்
24.கனிவண்ணன் – பேயாண்டித்தேவரும் ஒரு கோப்பை தேநீரும்
- ம ராஜேந்திரன் – நிஜங்கள்
- தஞ்சை ப்ரகாஷ் – பற்றி எரிந்து விழுந்த தென்னை மரம்
- சோலை சுந்தரபெருமாள்- வைக்கப்போரும் கடாவடிக்கு வாக்கப்பட்டவளும் ..
- சி எம் முத்து – நாடக வாத்தியார் தங்கசாமி
- சாருநிவேதிதா – சைக்கிள் 30. உத்தமசோழன் -முதல்கல்
31.ந விச்வநாதன் – குளம் 32. உஞ்சை ராஜன் -ஆத்திரம்
- யூமா வாஸுகி – விபத்து
சென்னைச் சிறுகதைகள் என்ற தொகுப்பை காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்து காவ்யா வெளியிட்டுள்ளது. முதல் தொகுப்பு மே 2002 ல் வெளியானது. இதில் உள்ள சிறுகதைகள்.
- மகாமசானம் – புதுமைப்பித்தன் 2. ஜம்பரும் வேஷ்டியும் – ந பிச்சமூர்த்தி
- ஆற்றாமை – கு ப ராஜகோபாலன் 4. தாம்பத்யம் – ஜெயகாந்தன்
- காற்று – கு அழகிரிசாமி 6. மாடசாமியின் ஊர்வலம் – சு சமுத்திரம்
- அண்ணாசாலை 2094 -சுஜாதா 8. பிற்பகல் – சா கந்தசாமி
- தமிழ்ப்பித்தன் நகர் – காசியபன் 10. தீர்வு – திலீப்குமார்
- 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் 12. அசரீரி – அஜித் ராம் பிரேமிள்
- புயல் – கோபி கிருஷ்ணன் 14. மலைகள் – எஸ் வைத்தீஸ்வரன்
- கடற்கரை விளையாட்டு – ஆர் ராஜகோபாலன்
- பேராசிரியர் தக்கியின் ஆடு – விட்டல் ராவ் 17. நிலம் நீர் ஆகாயம் –
ஐராவதம் 18. மீதி – மா அரங்கநாதன்
19.மூன்று அங்குல பிரவாகம் -க்ருஷாங்கினி 20.இரவுக்காவலன்-
பா செயப்பிரகாசம் 21. இருளின் உயிர்கள் – கி அ சச்சிதானந்தம்
- அம்மாவுக்காக ஒரு நாள்- அசோகமித்திரன் 23. உயிர்நிலை – பூங்காற்று
தனசேகர் 24. இன்பக் கேணி – பிரபஞ்சன்
- கற்பெனப்படுவது – ஆண்டாள் ப்ரியதர்ஷினி 26. தேடல் – இந்துமதி
- குணச்சித்திர நடிகர் – வண்ணநிலவன் 28. கதை – செழியன்
- தார் குளிர்ந்த நதிக்கரையில் – அறிவுமதி 30. சென்ட்ரல் – சுந்தர பாண்டியன்
தில்லிச் சிறுகதைகள் என்ற தலைப்பில் முனைவர் ச சீனுவாசன் தொகுத்து காவ்யா 2014 ல் ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளது.
இந்த தொகுப்பில் 26 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.இந்த தொகுப்பில் உள்ள கதைகள்.
- அகஸ்தியன்- சில தபால்களும் பல தொல்லைகளும்
- அசோகமித்திரன் – ஆச்சரியங்களுக்கு குறைவில்லை
- அம்பை – மிலேச்சன் 4. ஆதவன் – அப்பர் பெர்த்
- ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி – இந்தியா கேட்
- இந்திரா பார்த்தசாரதி – மனிதாபிமானம் 7. கலாஸ்ரீ – கோட்டு
- கஜமுகன் – சேலத்து சீமான்
- காவேரி- அப்பா உங்களுடன் ஒரு வார்த்தை
- சு சமுத்திரம் – ஏவாத கணைகள்
- சாமிமுத்து – எத்தனாவது சம்பவாமி யுகே யுகே
- சாருநிவேதிதா – பிளாக் நம்பர் 27, திர்லோக்புரி
- சுந்தா – மேரியும் மகாத்மாவும்
- வ சுப்ரமணியன் – ஒரு மயக்கத்தின் சிதைவுகள்
- சுஜாதா – பெண்கள் வருஷம் 16. பாலகி – டாலி தூங்க இவர் பார்க்க
- பூதுகன் – ரயிலில் வந்து விமானத்தில் திரும்பியவன்
- பூர்ணம் விஸ்வநாதன் – அம்மா! ….அம்மா! 19.பொன்ராஜா – லீடர்
- அ. மாரியப்பன் — திருட்டு 21. ரமாமணி சுந்தர் – பார்வையை மீட்க
- ராகவன் தம்பி – முறையீடு 23. லட்சுமி ரமணன் – அவள் ஒரு மாதிரி
- ஷாஜகான்- ஸ்போக்கன் இங்கிலீஷ் 25 தி ஜானகிராமன் – பாட்டியா
வீட்டில் குழந்தை காட்சி 26. ஜோதிபெருமாள் – லவ் பேர்ட்ஸ்
பெங்களூர் சிறுகதைகள் என்ற தொகுப்பை காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்து காவ்யா 2006 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்.
- சுஜாதா – பார்வை 2. பாவண்ணன் – ஆறு
- சுந்தர பாண்டியன் – சேவை
- ப கிருஷ்ணசாமி – வாசுதேவ் மிஸ்ராவின் மனைவி
- சு சமுத்திரம் – பெங்களூர் தெரஸா 6. அமுதவன் – கரடிப்பொம்மை
- அ.சங்கரி – முடிவில்லாத கதை 8. உமா ஜானகிராமன் – பரசு
- ஸிந்துஜா – ராணி பிரியதர்சினி 10. தமிழவன் – சிதறியபடி ரூபங்கள்
- இரவிச்சந்திரன் – சுயம்வரம் 12. நஞ்சுண்டன் – ராக்கம்மா
கதைக்கோவை 1 என்னும் தொகுப்பு நூலை அல்லயன்ஸ் பதிப்பகம் 1942 ல் வெளியிட்டுள்ளது. இதன் நான்காம் பதிப்பு 2013 ல் வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் 40 எழுத்தாளர்களின் 40 சிறந்த சிறுகதைகள் உள்ளன. அந்த கதைகள்
1.உ.வே சாமிநாத ஐயர் – தருமம் தலை காக்கும் 2. ராஜாஜி – தேவானை
- எஸ் வி வி – விவேகம் 4. க சந்தானம் – சோதனை
- கி சாவித்திரி அம்மாள் – பழைய ஞாபகங்கள்
6.சங்கரராம் – கடைசி வேட்டை 7. ந பிச்சமூர்த்தி – விஜயதசமி
- ரா ஸ்ரீ தேசிகன் – மழை இருட்டு 9. தி ஜ ர – ஒரு ஜோடிக்காளை
- கு ப ராஜகோபாலன் – விடியுமா? 11. தி நா சுப்ரமணியன் – தீராத ஏக்கம்
- சங்கு சுப்ரமணியம் – செம்படவச் சிறுமி
- பி எஸ் ராமையா – நட்சத்திரக் குழந்தைகள்
- தி ப பத்மநாபன் -இழந்த மணி 15. கி வா ஜகந்நாதன் – கலைஞன் தியாகம்
- த ந குமாரசாமி – குகைச்சித்திரம் 17. சேது அம்மாள் – குலவதி
- சு குருசாமி – குழந்தை உள்ளம் 19.சி வைத்திலிங்கம் (கொழும்பு) –
மூன்றாம் பிறை 20. ந சிதம்பர சுப்ரமணியன் – கொல்லைப்புறக் கோழி
- பி.எம் கண்ணன் – மறு ஜன்மம் 22. கொத்தமங்கலம் சுப்பிரமணியம் –
மஞ்சள் விரட்டு 23. கி ரா – சொத்துக்கு உடையவன்
- க நா சுப்ரமண்யம் – சாவித்திரி 25. சி சு செல்லப்பா –
நொண்டிக்குழந்தை 26. ஜே தங்கவேல் – என் மனைவி
- புரசு பாலகிருஷ்ணன் – பெற்றோர்கள் 28 .ஏ முகம்மது ரஷீத் –
ஏழையின் குழந்தை 29. த நா சேனாபதி – சண்டையும் சமாதானமும்
- சம்பந்தன் (யாழ்ப்பாணம்)– விதி 31. அ கி ஜெயராமன்-வாழ்க்கையின் கனவு
- ஆர் நாராயண ஐயங்கார் – வாயாடி ராமு 33. மௌனி – அழியாச்சுடர்
- ஆர் சண்முகசுந்தரம் – கல்லினுள் தேரை 35.பி வி சுப்ரமணியம் –
ஏழைக்குடும்பம் 36. குகப்ரியை – தேவகி
- இலங்கையர்கோன் (யாழ்ப்பாணம்) -தந்தை மணம்
- றாலி- கெட்டிக்காரி கல்யாணி
- சு சேதுராமன் – டாக்டரின் மனைவி 40. ஆர் திருஞான சம்பந்தன் –
ஜனகாவின் குதூகலம்
கதைக்கோவை 2 என்னும் தொகுப்பு நூலை அல்லயன்ஸ் பதிப்பகம் 1942 ல் வெளியிட்டுள்ளது. இதன் மூன்றாம் பதிப்பு 2013 ல் வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் 50 எழுத்தாளர்களின் 50 சிறந்த சிறுகதைகள் உள்ளன. அந்த கதைகள்
- ஆண்டாள் – தாயில்லாக் குழந்தை 2. ஆர்.ஆத்மநாதன் – அமரவாழ்வு
- ரா ஆறுமுகம் – களத்து வாசலில் 4. ராவ்பகதூர் ஸி எம் இராமச்சந்திரஞ்
செட்டியார்- அநுபவ அறிவு 5. இளங்கோவன் – முதல் தாமரை
- கே பி கணபதி – திருட்டு விளையாடல் 7. கதிர் – விளம்பர மோட்டார்
- கமலா பத்மநாபன் – சியாமளா 9. கே ஜி கமலாம்பாள் – சிற்றன்னை
- கல்கி – அநுபவ நாடகம் 11. ஆர். கிருஷ்ணசுவாமி – தர்மராஜன்
எச்சரிக்கை 12. ஆர். கிருஷ்ணமூர்த்தி – மூன்று படங்கள்
- பி எஸ் கிருஷ்ணமூர்த்தி – நஷ்ட ஈடு 14. வி எஸ் கிருஷ்ணமூர்த்தி –
ரம்பாவின் பாக்யம் 15. எஸ் குஞ்சிதபாதம் – மகாலக்ஷ்மியின் டயரி
- குமுதினி – சுதந்திரப் போர் 17 ப கோதண்டராமன் -ஞானோதயம்
- வை.மு.கோதைநாயகி அம்மாள் – காலச்சக்கரம் 19. அ கோபாலரத்னம் –
ஒரு முத்தம் 20. கௌரி – எதிர்பாராதது 21. கி சங்கரநாராயணன் –
பத்திரிக்கைக்குப் புத்துயிர் 22. கி சந்திரசேகரன் – குழந்தையின் கேள்வி
23.கி சரஸ்வதி அம்மாள் – சரிகைச்சேலை 24. ஸி ஆர் சரோஜா – ஸைனிகா
- சோ சிவபாத சுந்தரம் – (யாழ்ப்பாணம்) காஞ்சனை 26. அ நா சிவராமன் –
நாலு அவுன்ஸ் பிராந்தி 27. சுகி – நல்ல பாம்பு 28. சுந்தரி- ஸஹதர்மினி
- சுந்தா- அபலை மீராள் 30. என் ஆர் சுப்பிரமணிய ஐயர் – ஸிம்ஹக்கோட்டை
- துமிலன் – நவீனதீபாவளி 32. தேவன் – ரோஜாப்பூ மாலை
- நவாலியூர் சோ நடராஜன் (கொழும்பு) -கற்சிலை 34. நல்லா முகம்மது –
ஏமாற்றம் 35. நாரண துரைக்கண்ணன் – திம்மப்பர்
- என் நாராயணன் – கண்டதும் கேட்டதும் 37. மதுரம்- பாலகிருஷ்ணன் படம்
- வி ஆர் எம் செட்டியார் – வானவில் 39. கே எம் ரங்கசாமி – பல்லவ
தரிசனம் 40. வ ரா – கோட்டை வீடு 41. து ராமமூர்த்தி – துர்க்கையின்
சாபம் 42. ந ராமரத்னம் – சின்னம்மாள் 43. நா ராமரத்னம் –
வித்தியாப்பியாசம் 44. கா சி வேங்கடரமணி – பட்டுவின் கல்யாணம்
- கே வேங்கடாசலம் – நாவல்மரம் 46. ஆர் வேங்கடாசலம் -தீத்துப்பணம்
47.லக்ஷ்மி – பைத்தியம் 48. ஜயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் -சுந்தரி எழுதிய கட்டுரை
- பி ஸ்ரீ – ராஜமல்லிகை 50. ரா ஸ்ரீ ஸ்ரீகண்டன் – கமலத்தின் வெற்றி
கதைக்கோவை 3 என்னும் தொகுப்பு நூலை அல்லயன்ஸ் பதிப்பகம் 1943 ல் வெளியிட்டுள்ளது. இதன் ஐந்தாம் பதிப்பு 2012 ல் வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் 60 எழுத்தாளர்களின் 60 சிறந்த சிறுகதைகள் உள்ளன. அந்த கதைகள்
- அகிலன் – காசுமரம் 2. அ செ மு (யாழ்ப்பாணம்) – மனித மாடு
- பெ நா அப்புஸ்வாமி – தீபாவளி பட்சணம் 4. அம்மணி – வேகவாகினி
- ஈசுவரன் (மஞ்சேரி) தொட்டில் 6. கணபதி ஐயர் – ச கு – நரசிம்மாவதாரம்
- மு கதிரேச செட்டியார் – போலி பக்தர் 8. எஸ் கந்தசாமி – தகர்ந்த கோட்டை
- எம் எஸ் கமலா – கார்த்திகைச்சீர் 10. எஸ் கமலாம்பாள் – ஊமைச்ச்சியின்
கல்யாணம் 11. கா ஸ்ரீ ஸ்ரீ – அமிர்தம் 12. ஏ டி கிருஷ்ணமாசாரி –
சர்க்கரைப்பொங்கல் 13. வ வேஸு கிருஷ்ணமூர்த்தி – கடந்து போன நாட்கள்
- எஸ் கிருஷ்ணன் – பிள்ளையார் கோயில் மணி 15. கொனஷ்டை-
இல்வாழ்க்கை 16. கோமதி சுப்பிரமணியம் – மனக் கண்ணாடி
- சசி – அதிருஷ்ட சுந்தரி 18. கோ த சண்முகசுந்தரம் – பிரார்த்தனை
- ஜி சதாசிவம் – காதலுக்குப் பலி 20. எம் எல் சபரிராஜன்- ஏழைக்கு நியாயம்
- சீதாதேவி – அடி கள்ளி 22. அ சீநிவாஸராகவன் – பிரிவு
- சுத்தானந்த பாரதியார் -உமா கௌரி 24. கே சுந்தரம்மாள் – பாமினியின்
தியாகம் 25. சுந்தராராமன் (பூவாளூர்) – குறை நோன்பு
- ஆர் சுந்தரி – மாற்றாந்தாய் 27 வெ ப . சுப்பிரமணி முதலியார் –
பருவயிர மணிமாலை 28. ஆ சுப்பையா – செங்கமலம்
- வி எஸ் சுப்பையா – எட்டாத மலர் 30. பி ஆர் ஆர் சூடாமணி – அத்தை
- மோ ஸ்ரீ செல்லம் – எல் டி கிரேட் 32. தங்கம்மாள் பாரதி – கவிதை
- தஞ்சம் – மன்னிப்பு 34. பெ தூரன் – ஓவியர் மணி
- நாடோடி – கடற்கரைமோகினி 36. ப நீலகண்டன் – ஸ்வீகாரம்
- ஆர் கே பார்த்தசாரதி – இசைக்காதல் 38. கு மா பாலசுப்ரமணியம் –
வாழாவெட்டி 39. புதுமைப்பித்தன் – செவ்வாய் தோஷம்
- ஸி ஆர் மயிலேறு – மாட்டுத் திருடன் 41. மாயாவி – இறுதிக்கடிதம்
- மாரார் – வதந்தி 43. மாஜினி – குல தெய்வம்
- டாக்டர் வே ராகவன் – ஜாடி 45. மே சு ராமசுவாமி – கடைக்கண் பணி
- ப ராமஸ்வாமி – கொலைஞன் 47. லா சா ராமாமிர்தம் – கந்தர்வன்
- வல்லிக்கண்ணன் – முத்து 49. வாசிமலை – குலம் கோத்திரம்
- கே விஜயராகவன் – எதிரொலி 51. தே வீரராகவன் -தரித்திர நாராயணன்
- ரா வேங்கடராமன் – பட்டுவின் பிரயாணம் 53. வேங்கடலக்ஷ்மி –
அந்தகன் குழலோசை 54.எஸ் வையாபுரிப்பிள்ளை – ராமுவின் சுயசரிதம்
- ஜானம்மாள்- நாடகம் பலித்ததா? 56.வ ச ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் –
பங்காளிக் காய்ச்சல் 57. ஆர் ஸரஸ்வதி – மதுமதியின் ஸ்தூபி
- ஸரோஜினி ராமஸ்வாமி – ராஜநந்தினி 59. ஸையத் முகம்மத் – வள்ளி
- ஸோமாஸ் –அதிருஷ்டசாலி
கதைக்கோவை 4 என்னும் தொகுப்பு நூலை அல்லயன்ஸ் பதிப்பகம் 1945 ல் வெளியிட்டுள்ளது. இதன் மூன்றாம் பதிப்பு 2013 ல் வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் 75 எழுத்தாளர்களின் 75 சிறந்த சிறுகதைகள் உள்ளன. அந்த கதைகள்
- ர அய்யாசாமி – இன்ப வேட்கை 2. ஜே.அனந்த விஜயம் – குலத்தொழில்
- கரிச்சான் குஞ்சு – சஞ்சீவினி 4. ம சீ கல்யாண சுந்தரம் – குடும்ப தர்மம்
- சூ பா கல்யாணராமன் – அறுந்த காற்றாடி 6. கஜமுகன் – மறுமலர்ச்சி
- அ வே ரா கிருஷ்ணஸ்வாமி – தீர்ப்பு 8. ஸ்ரீதரம் குருஸ்வாமி – மன்னி
- என் ஆர் கேதாரிராவ் – வீர வெங்கிட்டு 10. வி சி கோபாலரத்தினம் –
பட்-பட்-பட் 11. கி ரா கோபாலன் – சாந்தி எங்கே?12. கோபு – தீபாவளி
எப்படி ? 13. சகுந்தலா ராஜன் – பச்சைச்சேலை 14.வெ சந்தானம் –
மைதிலியின் கலக்கம் 15. ஆர் கே சாமி – இரு ஜீவன்கள்
- சாவி – நினைத்ததும் நடந்ததும் 17. அ சிதம்பரநாத செட்டியார் –
பரவாயில்லை 18. தொ மு சி ரகுநாதன் – புத்துயிர்
- வி எஸ் சுந்தரராஜன் – சிற்பியின் மனம் 20. எம் எஸ் சுப்ரமணிய ஐயர் –
வேங்கை வீரன் 21. பாலபாரதி சுப்பிரமணிய யோகி – குளத்தங்கரைக் குயில்கள்
- சௌந்தரம்-தனக்கு வந்தால் தெரியும் 23.கே ஞானாம்பாள் – பயன் என்ன?
- திருலோக சீதாராம் – மனமகிழ்ச்சி 25. என் நாகராஜன் – உமார்
- தா நாகலிங்கம் – கம்பி மத்தாப்பு 27. க நாராயணன் – எதிர்பாராதது
- வே நாராயணன் – அவளும் அவனும் 29. கே எஸ் நாராயணஸ்வாமி-
சோதனை 30. பகீரதன் – மருதநாயகத்தின் மனோரதம்
- ஏ எஸ் பஞ்சாபகேச ஐயர் – முடிவு 32. பட்டு – சரோஜாவின் கிளி
- கு பாலசுப்ரமணியன் – உத்தியோகசித்தி 34. கி வ பாலசுப்ரமணியன்
– பாசம் 35. எம் என் எம் பாவலர் – நச்சுப்பல் 36. பூச்சி –
மறுமலர்ச்சி 37. பெருசு – உனக்காக உயிர் வாழ்வேன்
- ய மகாலிங்க சாஸ்திரி – சீதாவின் சுயம்வரம்
- எஸ் மாரிச்செட்டி – வாழ்வு மலர் 40. கி முத்துஸ்வாமி – குல தெய்வம்
- பி கே முத்துஸ்வாமி – வெள்ளமும் உள்ளமும்
- வே ரங்கராஜன் – கலையும் காதலும் 43. ரஸிகன் – பலாச்சுளை
- வி ராதாமணி – குழந்தையின் கவலை 45. எஸ் எஸ் ராமசாமி – நாடக
வாழ்க்கை 46.. வெ ராமராவ் – அன்பின் அழைப்பு
47.கே எஸ் ராமஸ்வாமி சாஸ்திரி – போனதுபோல் வந்தான்
- எஸ் ஏ ராமநாதன் – என் கிளி 49. எஸ் ராமாநுஜன்- வாழ்க்கையில் குறை
- எஸ் என் ராமு – ரகுபதியின் சகோதரன் 51. ராஜ்யஸ்ரீ – இருண்ட பாதை
- ஆர் எஸ் ருக்மிணி–பெண்ஜன்மம் 53. பி என் லக்ஷ்மி – அன்பா?இரக்கமா ?
- ஏ எஸ் லக்ஷ்மி – மன்னிப்பு 55.வி லோகநாதன் – நழுவி விழுவானேன் ?
- வஸந்தன் – தூங்கா விளக்கு 57. எஸ் விசாலாக்ஷி – வருஷப் பிறப்பு
- ல ரா விசுவநாத சர்மா – மின்னல்கொடி 59. விந்தன் – கண்ணம்மா
- எஸ் வேங்கடசுப்ரமணியன் – இருவேறுலகம் 61. எம் வி வேங்கடராமன் –
இந்திராணி 62. ஏ ஜி வேங்கடாசாரி – ரங்கூன் கமலம்
- சி ஸ்ரீ வேங்கடேசன் – வாழ்க்கை ஒரு கனவா ? 64. வ வேணுகோபாலன் –
சிற்பியின் தியாகம் 65. கே வைத்தியநாதன் – சோப்புக்காரி
- ஆர் ஜகந்நாதன் – பாணிக்கிரகணம் 67. டி எம் ஜம்புநாதன் – சாந்தி
- கே எஸ் ஜம்புநாதன் – நப்பாசை 69. ஆ வெ ஜெயராமன் – பெரிய இடத்து
சமாச்சாரம் 70. தி ஜானகிராமன் – கமலியின் குழந்தை
- கே ஸ்ரீநிவாஸ் – என் தோட்டம் 72. ரா ஸ்ரீநிவாஸன் – அவியாச்சுடர்
- கா மு ஷெரிஃப் – கடமை 74. ஸத்யதாமா – குழந்தையின் பிரார்த்தனை
- ஹரினி – தெய்வப்பெண்
அல்லயன்ஸ் கம்பெனி தொகுத்த கதைக்கோவை 4 தொகுதிகளுக்குப் பிறகு வெளிவந்த தலை வாழை என்ற தொகுப்பு 37 மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகளைக்கொண்டது. இந்த தொகுப்பு நூல் 19994 ம் ஆண்டு அன்னம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தொகுப்பு ஆசிரியர் இ எஸ் தேவசிகாமணி.
கோவை லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை நிறுவனர். இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.
- அசோகமித்திரன் – அப்பாவின் சிநேகிதர் 2. கே சி எஸ் அருணாசலம் –
பவளக்கால் நூலான் 2. அன்னம்- கோடு தாண்டிய கோதை
- இந்திரா பார்த்தசாரதி – பதி, பசி, பாசம் 5. உமாசந்திரன் – ஈர்ப்பு
- எஸ் வி எஸ் – என்றும் யுவதி 7. எம் கே சங்கரன் – சம்மத்தித்தால் தப்பா
- சார்வாகன் – ரப்பர் மாமா 9. சிட்டி- வழியிலே வந்தவள்
- தி க சிவசங்கரன் – ஏழணா 11. சி சு செல்லப்பா – கவுரவிப்பு
- சோலை இருசன் – தேதி 24 13. மீ ப சோமு – பித்தம் தெளிந்தது
- டாக்டர் தயா – பூங்குன்றத்து முனிவர் 15. துறைவன் – அக்கினிக்குஞ்சு
- இ எஸ் டி – எதிர்பாராத விருந்தாளிகள் 17. ர சு நல்லபெருமாள் –
யாருக்கு யார் துணை 18. நாரண துரைக்கண்ணன் – வேனில் வந்தது
- மகரம் – உதிர்ந்த ரோஜா 20. ஆ மாதவன் – மீன் முட்டி வளாகம்
- மாறன் – திருநெல்வேலி மைனர் 22. மாயாவி – புற்றும் பாம்பும்
- தொ மு சி ரகுநாதன் – ஆனைத்தீ 24. ம ந ராமசாமி – பூணல்
- லா சா ராமாமிர்தம் – அவள் 26. ராஜம் கிருஷ்ணன் – விழிப்புணர்வு
- கி ராஜநாராயணன் – திரிபு 28. வல்லிக்கண்ணன் – இயற்கையின் சிரிப்பு
- வாசவன் – மலரத்தெரிந்த அரும்புகள் 30. விக்கிரமன்- வளர்த்த மான்
- எம் வி வெங்கட் ராம் – ஊஞ்சல் 32. த ஜெயகாந்தன் – யுகசந்தி
- ஆர் எஸ் ஜேக்கப் – சர்வர் அப்பாதுரை 34. ப ஸ்ரீனிவாசன் – வல்லநாட்டுக்
கள்ளன் 35. செ கணேசலிங்கன் (இலங்கை) – ஆண்மை இல்லாதவன்
- டி வி ராகவன் பிள்ளை (மலேசியா)-மதுவும் மதுவும்
- மா ராமையா -(மலேசியா) – கலையாத கருமேகங்கள்
ஐம்பத்து நான்கு பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை தொகுத்து “ஒரு நந்தவனத் தென்றல் ” என்ற தொகுப்பு நூலை இ எஸ் தேவசிகாமணி தொகுத்து விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பு 1993 ல் வெளியானது. இதில் உள்ள கதைகள்.
- பித்துக்கொள்ளி – அநுத்தமா 2. சுக்காள் – அனுராதா
- காலச்சுமைதாங்கி – அனுராதா ரமணன் 4. நீடித்த உறவு – அம்பை லீலி
- மாமியார் – அரசு மணிமேகலை 6. அசோகவனம் -ஆண்டாள் பிரியதர்சினி
- தண்டனை – இந்துமதி 8. மனிதர்கள் – இந்து வரதன்
- புரிந்து கொண்டாள் சரசு – ஈஸ்வரி தெய்வ நாயகம்
- வல்லமை- உமா கல்யாணி 11. கோதை – கண்ணம்மாள் பகவதி
- தர்மத்திற்கு ஒரு தர்மம் – கமலா சடகோபன்
- நெற்றிக்கண் திறந்த போது – கலா பாலசுப்ரமணியன் 14. இளமை மணம் –
காஞ்சனா ஜெயதிலகா 15. முனியக்கா – காவேரி 16. தாயென்றும் மகனென்றும் – கோதா பார்த்தசாரதி
- இந்த யுகம்பூத்துக் குலுங்குமடி – கோமகள் 18. கதாநாயகி – கோமளா வரதன்
- கோடாரிக் காம்புகள்-சரளா ராஜகோபாலன் 20. விதியின் பிழை – சரோஜினி
ஸ்ரீராம் 21. மூன்றே இலையுடன் ஒரு போதிமரம் – சந்திரா ராஜசேகர்
- எல்லைகள்- சாந்தா தத் 23. ஆயா – சிவசங்கரி 24. கூர்முனையில் ஒரு வளைவு – சரயு ( சுப்புலட்சுமி) 25. வேள்வி – சுமங்கலி 26. தேவகியைத் தேடி – சூடாமணி 27. தாயிற் சிறந்த – தமயந்தி 28. மீண்டும் ஒரு பயணம் -பராசக்தி( மலேசியா)
- கோவிலாகிப் போன வீடு – பரிமளமுத்து 30. சிறை – அ.பிரேமா
- நாளைக்கு சுபத்திரா கல்யாணம் சொல்லவேண்டும் – பிரேமா நந்தகுமார்
- அஞ்சலை ஆத்தா – வி பூரணி ( செல்வி லீமா ரோஸ்) 33. சில நியாயங்கள்
சிலருக்கு மட்டும் – மங்களம் ராஜம் 34. சந்தர்ப்பவாதிகள் – மதனகல்யாணி 35. மூடு அவுட் – மாலதி ஹரீந்தரன் 36. ஒரு தாய் காத்திருக்கிறாள் –
ராஜலட்சுமி சுப்பிரமணியம் 37.இரு கால்களையும் ஊன்றி நடக்க – ருக்மணி
பார்த்தசாரதி 38.ஒரு மரணத்தின் விலை – லட்சுமி ரமணன்
- என் பூரணிக்காக – லட்சுமி ராஜரத்னம் 40. ஆரம்பத்தில் ஒரு அஸ்தமனம் –
லீலா கிருஷ்ணன் 41. வடிகால் – வாஸந்தி 42. பெற்ற மனசு – விமலா ரமணி 43. பண்டிகை – விஜயம் சரஸ்வதி 44. இடிதாங்கி இடிவதில்லை – வேதா கோபாலன்
- சீர்வரிசையில் ஒரு ஸ்கூட்டர்- ஷைலஜா46. பாதிப்பு யாருக்கு- கே ஜெயலட்சுமி
- அடைக்கலம் – ஜோதிர்லதா கிரிஜ 48. ஆடும் நாற்காலி – ஹம்சா தனகோபால்
- முகங்கள் – எஸ் லீலா 50. மிதியடிகள் – உஷா சுப்ரமணியன்
- காளி – திலகவதி 52. அழுதபிள்ளை – சிவகாமி
- லக்ஷ்மி என் மகள் – வசுமதி ராமசுவாமி 54. காக்கைகளும் கழுகுகளும் –
பாரதி
எஸ் ஷங்கரநாராயணன்தொகுத்த ஆகாயப்பந்தல் என்னும் நூல் 1991ல் வெளியானது. அதன் மறுபதிப்பு 2001 ல் வெளியானது. உதயகண்ணன் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 30 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுப்பில் உள்ள கதைகள்.
- கண்ணன் மகேஷ் – பொழுது விடியட்டும் 2. மு கி சந்தானம் – பாதிப்பு
- கோபுல்ஸ்ரீ – உஞ்ச விருத்தி 4.அறிவழகன் – வேகம்
- விழி பா இதயவேந்தன் – பிரியம் 6. இரவிச்சந்திரன் – கோதை பிறந்த ஊர்
- ஜெயமோகன் – ஹம்பி 8. தமிழ் மகன் – கற்றதனால்….
- மோகனன் – ஒளியற்ற பிரதேசத்தில் 10. கௌதம சித்தார்த்தன் – தம்பி
- பரணி – பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப்பொழுது
12.பிருமீள் – காடன் கண்டது 13. அ எக்பர்ட் சச்சிதானந்தன் – மத்தேயு
- கார்த்திகா ராஜ்குமார் – நனையத் தோன்றுகிறவர்கள் 15. கர்ணன் – ரசிகர்
- அனாமிகா- அணிற்பாலம் 17. டி எம் நந்தலாலா – டெல்ஸ்கோப் ஆகாயம்
- எல் ரகோத்தமன் – சிதறல்கள் 19. ம வே சிவக்குமார் – இறங்கப்போறீங்களா?
- ஞானசூரியன் – ஒட்டடைத் தாத்தா 21. ரோகாந்த் – தேவை ஒரு மனிதன்
- சுப்ரபாரதி மணியன் – கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்
- பாவண்ணன் – பேசுதல் 24. ஜெயடேவி – எறும்புகள்
- முருகு – வீடு … ஆனது26. ஜோசப் லூயிஸ் -அம்மா சொல்லிர்க்கக் கூடிய
கதை 27. எஸ் ஷங்கரநாராயணன் – லாரி 28. ராமேந்திரா – இன்று
- ஸில்வியா – ஸ்வப்ன ஸ்னேகிதர் 30. கோபிகிருஷ்ணன் – விழிப்புணர்வு
எஸ் ஷங்கரநாராயணன் தொகுத்த பரிவாரம் என்னும் நூல் 1994ல் வெளியானது. உதயகண்ணன் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 16 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் உள்ள கதைகள்.
- கூந்தல் – செ யோகநாதன் 2. உறவு – மா அரங்கநாதன்
- முருங்கைக்காய் – செ சங்கர்பாபு 4. ஊதுபத்தி – நாஞ்சில் நாடன்
- இறந்த காலம் – பவா சமத்துவன் 6. அந்நியம் – ம காமுத்துரை
- அமலி – லா ச ரா 8. தன்வினை – என் ஸி அனந்தாச்சாரி
- ஆமை சமூகமும் ஊமை முயல்களும் – இந்துமதி
- கீழ்மை – தீஸ்மாஸ்டிசெல்வா 11. வெறுப்பைத் தந்த விநாடி – வத்ஸலா
- யுகங்கள் – சாந்தன் 13. இருட்டு – தேனி சீருடையான்
- புழு – ம ந ராமசாமி 15. வான்கோழிகளின் ஆகாயம் – எஸ் ஷங்கர
நாராயணன் 16. நடேசக்கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும் –
வண்ணதாசன்
இந்த நூற்றாண்டு சிறுகதைகள் பாகம்-1 ஐ விட்டல் ராவ் தொகுத்து கலைஞன் பதிப்பகம் 1993 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 31 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள்
- பிரம்ம ராக்ஷஸ் – புதுமைப்பித்தன் 2. பரிவு – சங்கரராம்
- சந்துப் பூனைகள் – மஞ்சேரி ஈஸ்வரன் 4. அதிர்ச்சி – த நா குமாரஸ்வாமி
- வௌவால் – ஆனை ஸு குஞ்சிதபாதம் 6. புது மாதிரி கதை – கொனஷ்டை
- பணம் பிழைத்தது – பி எஸ் ராமையா 8. தான் – கி ராஜநாராயணன்
- பாயசம் – தி ஜானகிராமன் 10. பயணம் -இந்திரா பார்த்தசாரதி
- தியாகம் – கு அழகிரிசாமி 12. தமிழ்பித்தன் நகர் – காசியபன்
- புவனாவும் வியாழக் கிரகமும் – ஆர் சூடாமணி
- புற்றில் உறையும் பாம்புகள் – ஆர் இராஜேந்திர சோழன்
- சிலிர்ப்புகள் – சி ஆர் ரவீந்திரன் 16. நேரம் – பூமணி
- குடும்பச்சித்திரம் – வண்னநிலவன் 18. விடாய் – ஜோதிர்லதா கிரிஜா
- பிள்ளையார் கோவிலில் ஒரு பிணம் – கி அ சச்சிதானந்தம்
- காகம் – ம ந ராமசாமி 21. ஒரு செருசலேம் – பா செயப்பிரகாசம்
- பறிமுதல் – ஆ மாதவன் 23. மீன் – பிரபஞ்சன்
- இளிந்த சாதி – ஜி நாகராஜன்
- ஒரு பூனையும் லெதர்பை வைத்திருப்பவர்களும் – தமிழவன்
- இருட்டில் நின்ற – சுப்ரமண்ய ராஜு 27. சங்கை – இரா முருகன்
- கட்டில் – கௌதம சித்தார்த்தன் 29. மாயை – தேவபாரதி
- அப்பாவின் பள்ளிக்கூடம் – ந முத்துசாமி
- மரத்தடிக் கடவுள் – தி ஜ ரங்கநாதன்
இந்த நூற்றாண்டு சிறுகதைகள் பாகம்-2 ஐ விட்டல் ராவ் தொகுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 35 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள்
- காற்று – சுப்ரமண்ய பாரதியார் 2. பிரபஞ்ச கானம் – மௌனி
- யோகம் – லா ஸ ராமாமிர்தம் 4.வயது வந்து விட்டது – கு ப ராஜகோபாலன்
- ஸரசாவின் பொம்மை – சி சு செல்லப்பா 6. மாங்காய்த்தலை – ந பிச்சமூர்த்தி
- அயோத்தி – நகுலன் 8. ஜின்னின் மணம் – நீல பத்மநாபன்
- பல்லக்குத் தூக்கிகள் – சுந்தர ராமசாமி 10. கங்கவரம்- பி சா குப்புசாமி
- முடியாத வேலை -அம்ஷன்குமார் 12. திரிசங்கு – அம்பை
- வெளியே ஒருவன் – நாரனோ ஜெயராமன் 14. நூறுகள் – கரிச்சான் குஞ்சு
- பேய் – கோபிகிருஷ்ணன் 16. மீன் குஞ்சுகள் – ஆர் ராஜகோபாலன்
- மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி
- கூரை மேலேறி கோனச்சுரைக்காயை அறுக்கத் தெரியாத குருக்களார் –
சிவசங்கரா 19.ஒரு பயணத்தின் முடிவு – ஸ்ரீ வேணுகோபாலன்
- எலி வளைக்குள்ளே வெள்ளம் ஏறிய போது – பொன்னீலன்
- தீ வேலி – வல்லிக்கண்ணன் 22. சூழல் – ஜெ கிளாரிந்தா
- அது – ஸ்டெல்லா புரூஸ் 24. சரோஜாவின் சவுரி – க ந சுப்ரமணியம்
- கண்ணீர்ப்புகை – ஞானக்கூத்தன் 26. அந்தத் தெருவின் முடிவில் ஒரு
சுடுகாடு – ஜெயபாரதி 27.துணி – இந்துமதி
- ஒட்டுப்புல் – நா கிருஷ்ணமூர்த்தி 29. இடர் – அழகிய சிங்கர்
- வெள்ளைக் காக்கைகள் -எஸ் சங்கரநாராயணன்
31.வெடிக்காரன் – செ யோகநாதன் 32. துரோகம் – பாவண்ணன்
- என் வீடு – மாலன் 34. திருமணம் – ப ஸ்ரீனிவாசன்
- நியாயங்கள்-வாஸந்தி
இந்த நூற்றாண்டு சிறுகதைகள் பாகம்-4 ஐ விட்டல் ராவ் மற்றும் அழகிய சிங்கர் தொகுத்து கலைஞன் பதிப்பகம் 2001 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 34 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.
- வ வே சு ஐயர் – கமல விஜயம் 2. ராஜாஜி – சபேசன் காப்பி
- மகாலிங்க சாஸ்திரி – சீதாவின் சுயம்வரம்
- தஞ்சை பிரகாஷ் -அஞ்சுமாடி 5. ஞாநி – தண்ணீர்
- விக்ரமாதித்யன் – எலிஸபெத் ராணி 7. சி மோகன் – அம்மாவின் மரணம்
- தமிழ்ச்செல்வன் – அரக்கு முத்திரை
9.ப கிருஷ்ணசாமி – வாசுதேவ் மிஸ்ராவின் மனைவி 10. ர சு நல்லபெருமாள் –
சங்கராபரணம் 11. தமயந்தி – தொடர்வது
- அறிவுமதி – அடமானம் 13. இரா நடராஜன் – தாத்தாவின் காஞ்சனபுரி
- காஞ்சனா தாமோதரன் – திவ்ய தரிசனம் 15. மீ விஸ்வநாதன் – மிருதங்கம்
16.சிவதாணு –கள்ளியங்காட்டு 17. பா ராகவன் – மாயக்கயிறு
- மு சிவலிங்கம்- ஒரு விதை நெல் 19. ஸ்ரீதர் சாமா – தொட்டில் பழக்கம்
மரப்பெட்டி மட்டும் 20 . இரா கதைப்பித்தன் – தகனம்
- பீ மரியதாஸ் – முரண்பாடு 22. சங்கர ராமசுப்ரமணியன் – பச்சை அறை 23. கமலாலயன் – ஓய்ந்தவர்கள் 24. விழி பா இதயவேந்தன் – விழுது 25. புகழ் – நாய்ப் பொழப்பு 26. ப்ரதிபா ஜெயச்சந்திரன் – ஒரு நாள் 27. லட்சுமி மணிவண்ணன் – 36 ஏ பள்ளம் 28. ஜி காசிராஜன் – தேனீக்கள் 29. சூர்யராஜன் – தக்கை 30. விஷ்ணு நாகராஜன் – தேவமலர் 31. ஷங்கர் ராமன் – அவரவர் ஏமாற்றம் 32. பாதசாரி – இலைகள் சிரித்தன 33. கோகுல கண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
- ஏ ஏ ஹெச்கேகோரி – இவன் அவள் அரேபியா
இந்த நூற்றாண்டு சிறுகதைகள்பாகம்-5 ஐ விட்டல் ராவ் மற்றும் அழகிய சிங்கர் தொகுத்து கலைஞன்பதிப்பகம் 2002 ல்வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 35 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில்உள்ள சிறுகதைகள்.
- பலாச்சுளை – ரசிகன் 2. தயாசமுத்திரம் – எஸ் வி வி
- கங்கா – ஆர் வி 4. வேதப்பயிர் – மகரிஷி
- குலச்சுவடுகள்- இனியவன் 6.காலில்லாததேவதைகள்- திருப்பூர் கிருஷ்ணன்
- ஆயுள் தண்டனை – நரசய்யா 8. எதிர்கொள்ளல் :சில குறிப்புகள் –
கார்த்திகா ராஜ்குமார் 9. மருந்து – சோ தர்மன்
- செங்கல் – அ முத்துலிங்கம் 11. சிதைவு – ஆர் வெங்கடேஷ்
- உள்ளும் புறமும் – தங்கர் பச்சான் 13. டீ – சாருநிவேதிதா
- உயிர்ப்பிரிகை – மாலதி 15. சர்ப்பக் காவடி சாமியண்ணன் – ராஜன் பாபு
- நீச்சல் குளம் – எம் ஜி சுரேஷ் 17. அளவு கோல் – தேவதச்சன்
- தேய்பிறைகள் – எஸ் ஜோதி விநாயகம்
- புறாக்கள் பறக்கத் துவங்கி விட்டன – ஜோசப் டி சாமி
- புரியுமா ? – ஜ சாமிநாதன் 21. கடற்கரை – நாராயணன்
- காலத்திற்கு அப்பால் – ஸுப்ரபூ சங்கர் 23. அக்கினிக் குஞ்சுகள் — மலரன்பன்
- நீலம் – ஸங்க்ராந்த் 25. அன்று – ட்டி எம் நந்தலாலா
- பார்வை – ராஜசுந்தரராஜன் 27. கூட்ஸ் வண்டியின் கடைசிப்பெட்டி –
அஜயன் பாலா 28. விரல் – பிரியதர்ஷன்
- பீதி – தளவாய் சுந்தரம் 30. மேரி – ஜோர்ஜ் சந்திரசேகர்
- உயிர் பித்து – பெருந்தேவி 33. சுழல் நாண்யம் – யுவன் சந்திரசேகர்
- நீலம் – பிரமிள் 35. இழப்பு – நா சேதுராமன்
இந்த நூற்றாண்டு சிறுகதைகள் பாகம்-6 ஐ விட்டல் ராவ் மற்றும் அழகிய சிங்கர் தொகுத்து கலைஞன் பதிப்பகம் 2002 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 32 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.
- அவன் மனைவி – சிட்டி 2. கோவிந்தனும் வீரப்பனும் – கல்கி
- ஊமைச்சி காதல் – நாலி 4. தொண்டு – ரஸவாதி
- ராஜதந்திரிகள் – நா பார்த்தசாரதி 6. சிபார்சு – கிருஷ்ணன்
- உல்கா – எஸ் விஜயராகவன் 8. புன்சிரிப்பு – கி ரா
- பழிக்குப் பழி – த ந சேனாதிபதி
- வேலையும் விவாகமும் – ந சிதம்பர சுப்ரமணியன்
- ஓர் இரவு – வையாபுரிப் பிள்ளை 12. தாளமுடியாத மன்னிப்பு – மேலாண்மை
பொன்னுச்சாமி 13. இசை நாற்காலி – வையவன்
- மத்துக் கயிறு – கண்ணன் மகேஷ் 15. கர்மவியாதி – பராங்குசம்
- எனது மொழியில் உனக்கு ஒரு காதல் கதை – ரமேஷ் ப்ரேம்
- பறவைகளும் ரேஷன் கார்டும் – செண்பகம் ராமசுவாமி
- சிறகுப்பருவம்- செந்தூரம் ஜெகதீஷ் 19.ஆஸ்தி – து ராமமூர்த்தி
- சில பார்வைகளும் ஒரு நோக்கும் – தயானந்தன் ஃப்ரான்சிஸ்
- கடைசிக் காடு – சிவகாமி 22. வாளை – ஜே எம் சாலி
- பட்டா – மா ராஜேந்திரன் 24. ஏழாமிடத்தில் சில கிரகங்கள் – கோபுல் ஸ்ரீ
- உயிர்த்தளம் – ராஜன் அரவிந்தன் 26. ஒற்றைச்சிறகு – சூத்ரதாரி
- யாதும் ஊரே – டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராஜ்
- கன்றுக்குட்டி மேய்ந்த புத்தகம் – இதயன் 29. மாயக்கிளிகள் – ஜீ முருகன்
- களவு – யூமா வாசுகி 31. சைட் ரீல் – லாவண்யா
- வாடகைக்கு அறை – வே சபாநாயகம்
மதுரை மீனாட்சி புத்தக நிலையம் கதை அரங்கம் மணிக்கதைகள் என்ற தொகுப்பு வெளியிட்டுள்ளது.இதுவரை 6 தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
மணிக்கதைகள் 1 . இந்த தொகுப்பு 1961ல் வெளியானது. இதில் 10 கதைகள்
உள்ளன. இதில் உள்ள கதைகள்.
- அகிலன் – நினைப்பு 2. கு அழகிரிசாமி – காற்று
- ந சிதம்பர சுப்ரமணியம் – பூஜையும் போதையும்
- சுந்தர ராமசாமி – வாழ்வும் வசந்தமும் 5. நா பார்த்தசாரதி – நெருப்புக்கோழி
- ரகுநாதன் – பிரிவு உபசாரம் 7. ராஜம் கிருஷ்ணன் – ஏக்கம்
- தி ஜானகிராமன் – முள் முடி 9. ஜெகசிற்பியன் – நித்திய ஓய்வு
- ஜெயகாந்தன் – நான் இருக்கிறேன்
மணிக்கதைகள் 2 . இந்த தொகுப்பு 1987ல் வெளியானது. இதில் 14 கதைகள்
உள்ளன. இதில் உள்ள கதைகள்.
- ஆதவன் – சிரிப்பு 2. சு சமுத்திரம் -எக்குடி தோற்பினும்
- சுப்ரமண்ய ராஜு – நாக்கு 4. ஆர் சூடாமணி – ரோஜாப்பதியன்
- நாஞ்சில் நாடன் – சுரப்பு 6. நீல பத்மநாபன் — மூவந்தி
- பாலகுமாரன் – எதிர் எதிர் உலகங்கள் 8. பிரபஞ்சன் – அப்பாவின் வேஷ்டி
- ஆ மாதவன் – விருந்து 10. பூமணி – கிழிசல்
- கி ராஜநாராயணன் – தாவைப்பார்த்து 12. வண்ணதாசன் –
போய்க்கொண்டிருப்பவன் 13. வண்ணநிலவன் – மழை
- ஜெயந்தன் – குணாலட்சுமி
மணிக்கதைகள் 3 . இந்த தொகுப்பு 1989ல் வெளியானது. இதில் 12 கதைகள்
உள்ளன. இதில் உள்ள கதைகள்.
- இந்துமதி – தேடல் 2. இராகுலதாசன் – வாசலில் சில பூக்கோலங்கள்
- சா கந்தசாமி – குறுக்கீடு 4. கார்த்திகா ராஜ்குமார் – சிறகற்ற பறவைகள்
- எஸ் சங்கரநாராயணன் – வாழ்வின் மிச்சம் 6. சுப்ரபாரதி மணியன் – இடம்
- தனுஷ்கோடி ராமசாமி – ஆயிரங்கண்ணுடையாள் 8. என் ஆர் தாசன் –
காற்றூதிய பலூன்கள் 9. திலீப்குமார் – நிகழ மறுத்த அற்புதம்
- பாவண்ணன் – ராதை 11. மேலாண்மை பொன்னுச்சாமி – ஈரம்
- மாலன் – அலங்காரம்
மணிக்கதைகள் 4 . இந்த தொகுப்பு 1990ல் வெளியானது. இதில் 11
கதைகள் உள்ளன. இதில் உள்ள கதைகள்.
1.அய்க்கண் – வைஷ்ணவ ஜனதோ 2. மா அரங்கநாதன் – மீதி
- உதயஷங்கர் – மார்ட்டின் ஹைடேக்கரும் மத்தியானச்சோரும்
- கோபிகிருஷ்ணன் – கலக்க மறுத்த கண்கள்
- ம வே சிவகுமார் – கிலி கிலி கிலி
- எம் ஏ சுசீலா – புதிய பிரவேசங்கள் 7. சூர்யகாந்தன் – விடுதலை
- பிரதிபா ராஜகோபாலன் – வலி 9. சி ஆர் ரவீந்திரன் – பிட்சாடனர்
- வாஸந்தி – வழக்கு
- விமலாதித்த மாமல்லன் – தாசில்தாரின் நாற்காலி
மணிக்கதைகள் 5. இந்த தொகுப்பு 1997ல் வெளியானது. இதில் 9 கதைகள்
உள்ளன. இதில் உள்ள கதைகள்.
- வல்லிக்கண்ணன் – அலைகள் 2. அசோகமித்திரன் – தொப்பி
- ஜோதிர்லதா கிரிஜா – போராட்டம் 4. அம்பை – வெளிப்பாடு
- தோப்பில் முகம்மது மீரான் – ஓமவல்லி
- கந்தர்வன் – மங்கலநாதர்
- திருப்பூர் கிருஷ்ணன் – காலில்லாத தேவதைகள்
- இரா முருகன் – இடைவரிகள்
- ஜெயமோகன் – ஆயிரம்கால் மண்டபம்
மணிக்கதைகள் 6. இந்த தொகுப்பு 2004ல் வெளியானது. இதில் 10 கதைகள்
உள்ளன. இதில் உள்ள கதைகள்.
- சோ தர்மன் – வனகுமாரன் 2. தமயந்தி – காற்றின் உள்ளொலிகள்
- உஷாதீபன் – மனு 4.நரசய்யா – நீதியும் நியாயமும்
- சு வேணுகோபால் – அவதாரம்
- இந்திரா சௌந்திரராஜன் – வானம் நமக்கொரு போதிமரம்
- பாமா – வெறுங்கூடு 8. பாரதிபாலன் – சொல்ல முடியாதது
- இரா நடராஜன் – பிலிசிங்கு எனும் சிக்குலிங்கத்தின் வாக்குமூலம்
10.. படுதலம் சுகுமாரன் – புருஷன் கட்டின வீடு
சிவசங்கரியின் மணிவிழாவையொட்டி வானதி பதிப்பகம் சிவசங்கரி தொகுத்த
” நெஞ்சில் நிற்பவை ” என்ற தொகுப்பில் 60 எழுத்தாளர்களின் 60 சிறுகதைகளை
வெளியிட்டுள்ளது. 2002 ல் இது வெளியானது
நெஞ்சில் நிற்பவை – முதல் பாகம், இதில் உள்ள 30 கதைகள்.
- அம்பை – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியார்
- அநுத்தமா – காற்றுவாக்கில் 3. அனுராத ரமணன் – சுவாமியின் சிநேகிதி
- அசோகமித்திரன் – பங்கு
- இந்திரா பார்த்தசாரதி – குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
- இந்துமதி – குருத்து 7. இமையம் – மாடுகள்
- உஷா சுப்ரமணியன் – த்ரில் 9. கந்தர்வன் – காளிப்புள்ளெ
10.மு கருணாநிதி – அணில் குஞ்சு 11. கார்த்திகா ராஜ்குமார் – ஆக்டோபஸ்
12.காஞ்சனா தாமோதரன் – இனி 13. கீதா பென்னட் – வித்தியாசம்
- சு சமுத்திரம் – திரிசங்கு நரகம் 15. சிவசங்கரி – செப்டிக்
- சிவகாமி – காகிதக் கதவு 17. ம வே சிவக்குமார் – ஹனுமார்
- கு சின்னப்ப பாரதி – மனித யந்திரம் 19. சீதா ரவி – கமலாம்பா
- சுப்ரபாரதி மணியன் – வாக்கு 21. சுந்தர ராமசாமி – எங்கள் டீச்சர்
- சுஜாதா – நிஜத்தைத்தேடி 23. ஆர் சூடாமணி – நடன விநாயகர்
- பா செயப்பிரகாசம் – காற்றில்லாக் கூடுகள்
- டி செல்வராஜ் – சாது மிரண்டால்
- சோ தர்மன் – (அ) ஹிம்சை
- திருப்பூர் கிருஷ்ணன் – ராமசாமி துரத்துகிறான்
- திலகவதி – யக்கா 29. திலீப்குமார் – அக்ரகாரத்தில் பூனை
- தோப்பில் முகம்மது மீரான் – வட்டக்கண்ணாடி
நெஞ்சில் நிற்பவை பாகம் இரண்டு. இதில் உள்ள 30 கதைகள்.
- நரசய்யா – நனைந்த உடல்கள் உலர்ந்த இதயங்கள்
- நாஞ்சில் நாடன் – ஊதுபத்தி 3. நீல பத்மநாபன் – குழந்தையும் தெய்வமும்
- பாமா – ஒரு தாத்தாவும் எருமையும் 5. பாலகுமாரன் – கடற்பாலம்
- பாவண்ணன் – போர்க்களம் 7. பிரபஞ்சன் – கருணையினால்தான்
- பூமணி – கரு 9. பொன்னீலன் – ஈரம்
- மாலன் – அறம் 11. அ முத்துலிங்கம் – கறுப்பு அணில்
- இரா முருகன் – விற்பனையாளர்கள் கவனிக்கவும்
- மேலாண்மை பொன்னுச்சாமி – பூமிக்குப் பொறுக்காது
- ரா கி ரங்கராஜன் – வாசலில் குளம், கொல்லையில் காவேரி
- ராஜம் கிருஷ்ணன் – உயிர்கள் 16. இராஜகுமாரன் – அக்கரைப் பச்சைகள்
- கி ராஜநாராயணன் – நிலை நிறுத்தல்
- லா சா ராமாமிர்தம் – ஈ ஜகமுலோ திக்கெவரம்மா
- வல்லிக்கண்ணன் – வேங்கைப்புலி 20. வண்ணநிலவன் – உள்ளும் புறமும்
- வாஸந்தி – தேடல் 22. விட்டல் ராவ் – பேராசிரியர் தக்கியின் ஆடு
- வையவன் – டிராக்டர் 24. ஸ்ரீவேணுகோபாலன் – அம்மா
- ஜெயகாந்தன் – நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
- ஜெயமோகன் – திசைகளின் நடுவே 27. ஜெயந்தன் – மொட்டை
- ஜோதிர்லதா கிரிஜா – மாப்பிள்ளை ஊரில் இல்லை
- எஸ் ஷங்கரநாராயணன் – அதோ பூமி
- ஸ்டெல்லா புரூஸ் -கடற்கரையை நோக்கி என்னுடைய நாட்கள்
கரிசல் கதைகள் என்ற தொகுப்பை கி ராஜநாராயணன் தொகுத்து அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு 1984 ல் வெளியானது. இத் தொகுப்பில் 21 கதைகள் உள்ளன.
- ச தமிழ்ச்செல்வன் – வெயிலோடு போய் 2. அ முத்தானந்தம் – மாடுகள்
- சோ தர்மன் – சருகுகள் 4. கோணங்கி – பாழ்
- திடவை பொன்னுச்சாமி – மிச்சம் 6. சுயம்புலிங்கம் – மூளி மாடுகள்
- வே சதாசிவன் – மண் வெறி 8. அழ கிருஷ்ணமூர்த்தி – பாஅ…வம்
- பொ அழகுகிருஷ்ணன் – ஒத்தை வீட்டுக்காரர்
- ஜி காசிராஜன் – மழைக்கஞ்சி 11.கே ராமசாமி – நெல்லுச்சோறு
- மேலாண்மை பொன்னுச்சாமி – உயிரைவிட
- பொன்ராஜா – வருகை 14. தனுஷ்கோடி ராமசாமி – சரஸ்வதி பூஜை
- ரா அழகர்சாமி – கொம்பூதிக்கிழவி 16. கௌரிசங்கர் – கிரௌஞ்சவதம்
- வீரவேலுச்சாமி – பங்கீடுகள் 18. பூமணி – ரீதி
- பா செயப்பிரகாசம் – தாலியில் பூச்சூடியவர்கள்
- கி ராஜநாராயணன் – நிலை நிறுத்தல் 21. கு அழகிரிசாமி – அழகம்மாள்
மும்பய் சிறுகதைகள் என்ற தொகுப்பை அன்பாதவன், மதியழகன் சுப்பையா இருவரும் தொகுத்து ராஜம் வெளியீடாக 2009 ல் வெளிவந்துள்ளது. இதில் மும்பையை மையமாகக் கொண்ட கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள கதைகள்.
- அம்பை – பயணம் 6 2. நாஞ்சில் நாடன் – மொகித்தே
- இந்திரன் – ஒன்றும் ஒன்றும் பூஜ்ஜியம்
- புதிய மாதவி – திறந்திருக்கும் முதுகுகள் 5. புதிய மாதவி – காத்திருப்பு
- பாலபாரதி – பொம்மை 7. பாலபாரதி – 1993
- கல்லை அன்சாரி – உடுக்கை 9. மும்பை கிங்பெல் – உறவுகள்
- மதியழகன் சுப்பையா – வெள்ளை நிறக்கைக்குட்டை
- சோலை சீனிவாசன் – திருட்டு மொபைல்
- சோலை சீனிவாசன் – மும்பை டு குஜராத்
- சங்கொலி பாலகிருஷ்ணன் – தீ 14. கே ஆர் ஸ்ரீனிவாசன்- பூமியெங்கும்
மனிதம் 15. அன்பாதவன் – கூடு
இன்னும் நிறைய தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சில தொகுப்புக்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல தொகுப்புக்களை மார்ச் 2015 இறுதியில் தான் என்னால் வாங்க முடிந்தது. முக்கியமாக கதைக்கோவை பலராலும் குறிப்பிடப்பட்ட தொகுப்பு.
அது போல தலை வாழை, நந்தவனத்தெரு , காவ்யாவின் பல தொகுப்புக்கள் ஆகியவற்றை மார்ச் இறுதியில் வாங்கினேன். அது போல இந்த நூற்றாண்டு சிறுகதைகள் பாகம் இரண்டு மார்ச் இறுதியில் தான் கிடைத்தது. மூன்றாம் பாகம்
இன்னும் கிடைக்கவில்லை. இந்த கட்டுரையில் 875 சிறுகதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன
( தொடரும் )
Email :- enselvaraju@gmail.com
- மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
- ஜெயகாந்தன்
- செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு
- பொழுது விடிந்தது
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
- நதிக்கு அணையின் மீது கோபம்..
- நானும் நீயும் பொய் சொன்னோம்..
- முதல் பயணி
- அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)
- சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை
- கடைசிக் கனவு
- விதிவிலக்கு
- பயணங்கள் முடிவதில்லை
- அப்பா எங்க மாமா
- மூன்றாவது விழி
- தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
- பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்
- செங்கண் விழியாவோ
- மரம் வளர்த்தது
- கூட்டல் கழித்தல்
- நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2
- வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
- ஒரு பழங்கதை
- ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
- ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
- சிறுகதை உழவன்
- மிதிலாவிலாஸ்-9