” ரா.ஸ்ரீனிவாசன் கவிதைகள் ” என்ற இத்தொகுப்பிற்கு ஆர். ராஜகோபாலன் அணிந்துரை தந்துள்ளார். இதில் 50 கவிதைகள் உள்ளன. ” இயந்திர உலகைப் புறந்
தள்ளி இயற்கைக்குத் திரும்புதல் ” என்பது ஸ்ரீனிவாசனின் குரல் என்கிறார். ராஜகோபாலன்.
இவரது கவிதைகள் உரைநடை இயல்பு கொண்டவை. மொழி நயங்களைப் புறந்தள்ளிவிட்டு நகர்கின்றன. ” வெயில் ” கவிதை ஏழ்மையைச் சொல்கிறது.
கீற்றின் கீழமர்ந்து
பானையின் மேலும்
படுத்திருக்கும் குழந்தையின்
மேலும்
காரை பெயர்ந்த தரையிலும்
கூரையைப் பிய்த்துக்கொண்டுடோ
ழு
கு
ம்
தங்க வட்டங்களைப்
பார்த்தவுடன்
நினைத்துக்கொண்டான்:
மழைக்காலம்
வருவதற்குள் ஓட்டைகளை
அடைக்க
வேண்டும்
” ஓட்டைகளை அடைக்க வேண்டும் ” என்பதில் ஓர் உட்பொருள் இருக்கிறது. கீற்று மாற்ற இயலாத வறுமை உணர்த்தப்படுகிறது. ஓட்டைகளை அடைப்பதற்கு ஆகும்
செலவு குறைவு.
” பதனெட்டு ” என்ற கவிதை பதின் பருவத் தனிமையைக் கருவாகக் கொண்டது.
முந்தைய நாளின்
எண்ணங்களை
இன்றரவு நானே கனவாக்கிக் காண்கிறேன்
எனக்குள் நானே பேசிக்கொள்கிறேன்
என்று கவிதை தொடங்குகிறது.. கவிமொழி அமையாதது குறைபாடாகத்தான் தெரிகிறது. இன்னும் புதுக்கவிதையை ஏற்காதவர்கள் குறை சொல்ல இப்போக்கு
வசதியாகிவிடும் என்றே எண்ணத்தோன்றுகிறது.
என்னுள் நானே என் மனைவியுமாகிப்
பேசிக்கொள்கிறேன்
பிணைந்து புணர்ந்து கொள்கிறேன்
என் எதிரியாக நானே
என்னுள் சண்டையிட்டுக் கொள்கிறேன்
தனிமையின் துயரம் அவசியமான சொற்களால் எளிமைத் தளத்தில் கட்டப்பட்டுள்ளது. சுயம் அல்லல் படுகிறது.
” வழிகளின் வழியில் ” ஒரு தத்துவப் பூச்சு கொண்ட கவிதை. நல்ல தொடக்கம் ; இயல்பாக அமைந்துள்ளது ஒரு படிமம்.
வரிகளாகவும் கிளைகளாகவும்
வழிகள் தெரிகின்றன
வந்தவரெல்லாம்
கிளைகளில் பிரிந்து
தத்தம் வழியில்
விரைந்து செல்கிறார்கள்
அந்த வழி எப்படிப் பட்டது. ? அடுத்து வரும் வரிகள் அதை விளக்குகின்றன.
மாறுதலொன்றுமில்லை
நிச்சயம்
வேறு வேறு வழிகளானாலும்
வழிகளெல்லாம்
ஒன்றுபோல் தோன்றுகின்றன
இக்கவிதையில் காணப்படும் எளிமையில் ஓர் அரிய போக்கு காணப்படுகிறது.
பாதி வழியில் மடிந்தவர் பலர்
தளர்ந்தவர் பலர்
தொடர்பவரும் உண்டு
நானும் என் வழியில்
நிலத்தில் சாய்ந்தேன்
ஆகாய இருட்டில்
விண் மீங்கள் சிமிட்ட
அதற்கொரு
வழியும் இல்லாது போகக் கண்டேன்
நானும் என் வழியில் / நிலத்தில் சாய்ந்தேன் ” என்பதில் இறந்த காலம் சுட்டப்படுகிறது. ” சாய்வேன் ” என எதில்காலம்தான் சுட்டப்பட வேண்டும் இந்தக் காலபேதம்
வாழ்க்கைப் போக்கை நங்குணர்ந்த தெளிவைக் காட்டுகிறது. கவிநீதி என்ற இயல்பு செயல்பட்டுள்ளது.
” யாருமற்ற கடற்கரையில் ” என்றொரு கவிதை. தொனிப் பொருள் கொண்டது. குறியீடுகள் கவிதையைக் கட்டமைக்கின்றன.
யாருமற்ற கடற்கரையில்
கட்டு மரங்கள் பல காலமாகக் காத்துக்
கிடக்கின்றன மிகத் தனிமையில்
அலை வந்து போகிறது.
ஓயாது அவைகளைத் தீண்ட முயன்று
இச் சிறு கவிதையில் கடற்கரை , கட்டுமரங்கள் , அலை மூன்றுமே குறியீடுகள். வாழ்க்கை உரிய திசையில் பயணப்படவில்லை என்ற கருத்தை இக்கவிதை மறைமுக
மாகச் சொல்கிறது. : சரியான வழியில் போ என்பதை அறிவுரைபோல் இல்லாமல் கலை நேர்த்தியோடு சொல்கிறது.
” கூற முடியாத அது ” கவிதையின் கருப்பொருள் வாசகர் யூகத்திற்கே விடப்பட்டுள்ளது. யூகம் என்றாலே பல முடிவுகள் வரும். இக்கவிதையும் அப்படித்தான்.
முடியாது முடியவே முடியாது
இப்படியோ
அப்படியோ
வேறெப்படியோ
அதைக் கூற
கூறப்பட்டதிற் கூறப்படாதது
இன்னும் கொஞ்சம்
அப்படியோ
இப்படியோ
என்று கவிதை தொடங்குகிறது கவிதையைப் படித்தவுடன் சினிமா இயக்குநர் விசு ஞாபகம் வருகிறது.
கூறிவிட
முடியாது அதனை
எப்படியும்
என்று முடியும் இக்கவிதை 21 வரிகளைக் கொண்டது. என்னதான் சொல்ல வருகிறார் ரா. ஸ்ரீனிவாசன் ?
” நடை பாதை ” 106 வரிகள் கொண்ட நீள் கவிதை. நடை பாதையில் செல்லும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது.
எழுகிறது ஆரஞ்சு நிலவு
கருஞ்சாம்பல் வண்ணக் கடலில்
பரந்து கிடக்கிறது. மணற்கரை
விண் மீன்கள் பார்த்தன வேடிக்கை
என்பது கவிதையின் தொடக்கம். இளைஞர்கள் சிலர் நடந்து செல்கிறார்கள். எப்படி ?
உதறும் உடல்களாக அசைந்துகொண்டு
இளைஞர் சிலபேர் நடை பாதையில் செல்ல
சாலையில் செல்லும் மனிதர்களுள் சிலர் கவலையில் இருக்கலாம்.
எங்கோ வைத்துவிட்ட முட்துரும்பு — ஒன்றல்ல பல
அவர்களின் சுருங்கிய முகங்களில் வெளிப்பட்டது
இது ஒரு யதார்த்தக் கவிதை !
” தியானம் ” –அனுபவம் கவிதையாக்கப் பட்டுள்ளது.
இமைகளுக்குள் இமை மூடுகிறது
அதற்குள் மற்றொரு இமையென
முடுகின்றன
ஒரு கோடி இமைகள்
ஒன்றினுள் ஒன்றாக
அதற்குள் மற்றொன்றாக
மற்றொன்றில் இன்னொன்றாக
என்ற வரிகளில் அசாதாரண படிமம் அமைந்துள்ளது. சிந்தனை ஆழத்திலிருந்து சொற்கள் மலர்ந்து நிற்கின்றன. எனவே கட்டமைப்பில் சொற்கள் இறுகக் கட்டப்பட்டுள்ளன.
1 9 8 9 இல் வெளியான ரா.ஸ்ரீனிவாசனின் இக் கவிதைகள் வாழ்க்கையை வித்தியாசமான எளிமையுடன் பேசுகின்றன. அதிராத தன்மைகொண்ட மொழியில் ஓர் அமைதி உருவாகிறது.
- மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.
- சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
- ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை
- சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?
- இரு குறுங்கதைகள்
- அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
- இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்
- புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்
- தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு
- மிதிலாவிலாஸ்-10
- தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்
- வைரமணிக் கதைகள் – 12 கறவை
- மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
- ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !
- வீடு பெற நில்!
- சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி
- ஜெமியின் காதலன்