ஆத்ம கீதங்கள் – 26 காதலிக்க மறுப்பு .. !

This entry is part 4 of 26 in the series 26 ஏப்ரல் 2015

[தொடர்ச்சி]

[A Love Denial]

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இறைவன் பார்க்கிறான் இப்போ தென்னை;

மூழ்க்குவான் என் நெஞ்சை

கொந்தளிக்கும்

வாழ்க்கை தன்னில் இறைவன் !

உமது உலகத்தொடு எனக்கு

ஈடுபா டில்லை;

ஓர் எளிய பாடல்

ஒப்பாரி போல், கவிழ்த்திடும் !

நேசச் சீரிசைவு முறைவிலே

பந்த மற்ற

புனிதர்கள் எட்டி நடந்து

புறக்கணிப்ப தில்லையா என்னை ?

நானொரு மனைவியாய்த் தேர்வு பெறத்

தகுதி உடையவளா ?

கூர்ந்தென் முகத்துள் பார் !

தகுதி யற்ற ஏதோ ஒரு மாதைக்

கனவு காணும் சாதா மனிதனை

நினைத்துப் பார்த்தால்,

வெள்ளி நதியாய், இனிய தொனி

எழும் ஆத்மாவின் ஊற்றை

உறுதிப் படுத்தும்.

இளையவள், சுதந்திரச் சிந்தனை யாளி

என்னை விட நளினமும்,

வெளுப்பும் உள்ள மாதிருக்க

நிச்சயம்

நீ என்னை மறக்க வேண்டும் !

ஈரமிலா தொளிரும் உன் விழிகளால்

கூர்ந்தென் முகத்துள் பார் !

போ விடைபெறு நீ ! எனை நெருங்க

உனைத் தாமதமாய் அறிந்தேன்.

களிப்புறு மாந்தர் உன்னைப் போற்று கையில்

சிறப்பாய் ஒருத்தி எண்ணிட

நானப்படி நினையேன்;

குழப்பமே எனக்கு !

மாறி விட்டேன் நானும்;

தேறிச் சிந்திக்க வேண்டும் நான்;

துணிவு இல்லை எவர்க்கும்,

மாற்றம் கேடு தரும்

கூர்ந்தென் முகத்துள் பார் !

அதுவரை என் ஆசீகள் உனக்கு !

இவ்விதக் குழப்புச் சிந்தனைகள் ஊடே

என் ஆசிகள் உனக்கு !

எண்ணை ஊற்ற

என் ஆசி பெறட்டும் உன் விளக்கு 1

ஒயின் நிரம்பிட

என் ஆசி பெறட்டும் உன் கிண்ணம் !

உன் அடுப்படி மகிழ்ச்சி,

உன் கரத்துக் கேற்ற கைகலப்பு

உறுதி, உடன்பாடு !

என்னைப் பொருத்த வரை

உன்னை நேசிக்க வில்லை ! நான்

உன்னை நேசிக்க வில்லை !

விரைந்து போ !

என் ஆத்மாவில் ஆற்றல் இல்லை

இன்னும் அழுத்திச் சொல்ல,

“கூர்ந்து முகத்துள் பாரென்று .”

[முற்றும்]

Series Navigationஅபிநயம்தாய்மொழி வழிக்கல்வி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *