எம்.பி. பி.எஸ். வகுப்பின் முதல் நாள் மறக்க முடியாததாகவே இருந்தது. வகுப்பு மாணவ மாணவிகளை ஒருவாறு அறிந்து கொள்ள முடிந்தது. அது மகிழ்ச்சியாகவே இருந்தது.
ஆனால் அன்று மாலை விடுதி திரும்பியதும் அந்த மகிழ்ச்சி அனைத்தும் மறைந்து போனது. காரணம் அங்கு காத்திருந்த சீனியர் மாணவர்கள்தான். இன்று இரண்டாம் நாள் ரேகிங்! நாளை இறுதி நாள். இந்த இரண்டு இரவுகளைக் கடந்துவிட்டால் நாங்கள் சுதந்திரப் பறவைகளாகிவிடுவோம். அதன்பிறகு யாரும் எங்களைக் கண்காணிக்க மாட்டார்கள்!
அன்றும் கடுமையான ” இராணுவ டிரில் ” தான்! அதே இராணுவ உடையில், இடுப்பில் நீண்ட வாளுடன் அந்த இருவரும் காத்திருந்தனர். நேற்றை விட கடுமையான பயிற்சி! உடல் முழுதும் வலித்தது! அதை வெளியில் சொல்ல முடியாத நிலை. பயிற்சியை செய்ய முடியாதவர்கள் மீது வாளியில் வைத்திருந்த தண்ணீரை ஊற்றி மகிழ்ந்தனர்.
இருட்டிய பிறகுதான் அறைக்கு அனுப்பினர். குளித்துவிட்டு மீண்டும் உணவுக் கூடம் வரச் சொன்னார்கள். இரவு உணவு உண்டபின் நள்ளிரவு வரை எங்கள் ஒவ்வொருவரையும் சுற்றி கூட்டம் கூட்டமாக சீனியர் மாணவர்கள் சூழ்ந்துகொண்டு பல்வேறு கட்டளைகள் இட்டனர். எனக்கு பாடத் தெரியுமா என்று கேட்டனர். ஓரளவு தெரியும் என்றேன். அப்போ பாடு என்றனர். அப்போது ஜெமினி கணேசன் வைஜயந்திமாலா நடித்துள்ள ஸ்ரீதரின் ” தென் நிலவு ” திரைப்படம் வெளிவந்திருந்தது. அதில் ஏ. எம். ராஜா சுசிலா பாடியுள்ள ” ஓகோ எந்தன் பேபி ” என்ற பாடல் பிரசித்தி பெற்றிருந்தது. நான் அதைப் பாடினேன். அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து ஆடச் சொன்னார்கள். முடிந்தவரை ஆடினேன். என்ன பொழுதுபோக்கு என்று கேட்டனர். கதை எழுதுவேன் என்றேன். ஒரு கதை சொல்லச் சொன்னார்கள். ஒரு சிறுகதை கூறினேன். எந்த ஊர் என்றனர். சிங்கப்பூர் என்றேன். அப்போதிலிருந்து என்னை ” சிங்கப்பூர் மச்சான் ” என்று அழைத்தனர். ( அதன்பின் நான் தி. மு. க. அபிமானி என்று தெரிந்ததும் என்னுடைய புனைப்பெயர் டி.எம்.கே என்று மாறிவிட்டது. )
அன்று நள்ளிரவுக்குப் பின்புதான் மீண்டும் அறைக்குச் சென்றோம்.
இரண்டாம் நாள் காலையில் வகுப்புகள் இல்லை. கல்லூரி பேருந்தில் எங்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சி. எம். சி. மருத்துவமனை வேலூர் நகரத்தில் உள்ளது. நகரின் மத்தியில் பிரம்மாண்டமான கட்டிடங்களுடன் அது காட்சி தந்தது. அந்தப் பகுதி வீதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் காணப்பட்டன. வெளியூர், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் அங்கு தங்குவார்கள். மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டது. பல்வேறு பிரிவுகளுடன், நவீன மருத்துவ வசதிகளுடன் புகழ் மிக்க மருத்துவமனையாக விளங்கியது வேலூர் சி. எம். சி. மருத்துவமனை. இந்தியாவில் வேறு இடங்களில் கைவிடப்பட்ட நோயாளிகள் கடைசியாக வந்து செல்லும் மருத்துவமனை என்ற பெயர் பெற்றிருந்தது.
நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் என்று எங்கும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. தாதியர்கள் பலர் கூட்டங்கூட்டமாக பணிகளுக்கு சென்றுகொண்டிருந்தனர். மருத்துவமனை வளாகத்தினுள்ளேயே தாதியர் பயிற்சிக் கல்லூரியும் இருந்ததால், நிறைய மாணவிகளும் சீருடையில் சென்று கொண்டிருந்தனர். எங்கள் விடுதி சீனியர் மாணவர்கள் கழுத்தில் ” ஸ்டெத்தெஸ்கோப் ” மாட்டிக்கொண்டு பரபரப்புடன் சென்றுகொண்டிருந்தனர். மருத்துவப் படிப்பில் மூன்றாம் ஆண்டிலிருந்து வகுப்புகள் மருத்துவமனையில் வார்டுகளிலும் வகுப்புகளிலும் நடைபெறும். விடுதியிலிருந்து காலையிலேயே கல்லூரி பேருந்துகளில் வந்துவிடுவார்கள், மாலையில்தான் விடுதி திரும்புவார்கள். மாணவர்களுக்கு ஓய்வுக் கூடம் உள்ளது. மதிய உணவு விடுதியிலிருந்து அங்கு வந்துவிடும்.
- ஏன் எப்போதுமே இந்துக்களே தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்?
- கைவிடப்படுதல்
- ஏமாற்றம்
- நிழல் 38 குறும்பட பயிற்சி பட்டறை
- வெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியின் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறது
- தமிழிசை அறிமுகம்
- கலை காட்சியாகும் போது
- யாமினி கிருஷ்ணமூர்த்தி (8)
- பயணம்
- ஒரு மொக்கையான கடத்தல் கதை
- நல்ல காலம்
- பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்
- Release of two more books in English for teenagers
- விவேக் ஷங்கரின் ஐ டி ( நாடகம் )
- எட்டுத்தொகை இலக்கியங்களில் வியாபாரம் (வீதி நடை பெண் வியாபாரிகள்)
- போன்சாய்
- மஞ்சுளா கவிதைகள் – ஒரு பார்வை ” மொழியின் கதவு ” தொகுப்பு வழியாக …..
- இந்த கிளிக்கு கூண்டில்லை
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4
- வைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்
- நாடக விமர்சனம் வாட்ஸ் அப் வாசு
- தொடுவானம் 66. இனி சுதந்திரப் பறவைதான்
- மிதிலாவிலாஸ்-12
- பிரியாணி
- நற்றமிழ்ச்சுளைகள் – [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]