கனவு திறவோன்
எழுத நிறைய இருக்கிறது
மனம்தான் மறுக்கிறது
ஊழல், தண்டனை,
ஆட்சி மாற்றம், ஏமாற்றம்,
சுத்த தினம், கோஷம்,
விபத்து, விந்தை என்று
ஏதேனும் நிகழ்ந்து
எழுதத் தூண்டுகிறது…
மனம்தான் நொண்டுகிறது!
வாசலைத் தாண்டி விட்டேன்
நீ அழகென்பதால்
கோலமும் ஈர்க்கிறது…
மனம்தான் பம்முகிறது!
உன் அப்பாவின் பென்சனும்
அம்மாவின் ரேசனும்
கரும் புள்ளிகளாய்
உன் சின்ன புன்னகையின் விசாலத்தில்
மறைகிறது…
இருந்தாலும் மனமோ கரைகிறது!
சூரியன் கவிழ்ந்தபின்
நிழல் நிமிருமோ?
நீ ஜன்னலை
சாத்திய போதும்
உன் நிழல் இங்கே
விழுகிறது…
ஆனாலும் மனமோ பேதலிக்கிறது!
எழுத நிறைய இருக்கிறது
கல்லூரி மாணவனின்
அரியர்ஸ் போல…
உன் கேள்விகளுக்கானப் பதிலைத் தவிர…
என்னை மட்டும் தானே பிடிக்கும்?
ஏமாற்ற மாட்டியே?
கல்யாணம் கட்டிப்பியா?
ஓடிப் போயிடலாமா?
என்று கேட்க நிறைய உண்டு
ஆனால் நீ கேட்டாய்
பிரிந்து விடுவோமா?
-கனவு திறவோன்
- புறநானூற்றில் மனிதவள மேம்பாடு
- மிருக நீதி
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
- நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்
- மிதிலாவிலாஸ்-20
- தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்
- பரிசுத்தம் போற்றப்படும்
- “என்னால் முடியாது”
- அந்தப் புள்ளி
- ஒலி வடிவமில்லாக் கேள்விகள்
- எழுத நிறைய இருக்கிறது
- ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்
- வடு
- தங்கராசும் தமிழ்சினிமாவும்
- திருக்குறள் உணர்த்தும் பொருளியல்ச் சிந்தனைகள்
- சும்மா ஊதுங்க பாஸ் – 3
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7
- விளம்பரமும் வில்லங்கமும்
- பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்