இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?

author
76
0 minutes, 1 second Read
This entry is part 1 of 23 in the series 14 ஜூன் 2015

மெஹ்தி ஹசன்

Martersteig's depiction of Martin Luther burning the papal bull with 41 theses issued against him.சமீப காலங்களில், 1400 வருடங்கள் பழைய மதமான இஸ்லாமில் சீர்திருத்தம் (reformation) வேண்டும் என்று பல தேய்ந்த ரிக்கார்ட் போல குரல்கள் எழும்பியிருக்கின்றன. “நமக்கு முஸ்லீம் சீர்திருத்தம் வேண்டும்” என்று நியூஸ்வீக் அறிவிக்கிறது. “ஹப்பிங்க்டன் போஸ்ட் “இஸ்லாமின் உள்ளேயே சீர்திருத்தம் நடைபெற வேண்டும்” என்று கூறுகிறது. பாரிஸில் ஜனவரில் நடந்த படுகொலைக்கு பின்னர், எகிப்திய ஜனாதிபதியான அப்துல் ஃபடா அல் சிசி, “முஸ்லீம் சமுதாயத்தின் மார்ட்டின் லூதராக” வரலாம் என்று பைனான்ஸியல் டைம்ஸ் எழுதியது. (மனித உரிமை கழகத்தின் அறிக்கைகளின்படி, ஆயுதம் தாங்காமல் ஊர்வலம் சென்ற போராட்டக்காரர்கள் மீது திட்டமிட்டு படுகொலை நடத்தியதாக கூறப்படும் சிசி அவர்களை வைத்துகொண்டு என்ன சீர்திருத்தம் செய்யமுடியும் என்று பைனாஸியல் டைம்ஸ் விளக்கலாம்)

hirsialiஅதற்கப்புறம் அயான் ஹிர்ஸி அலி. சோமாலியாவில் பிறந்த, நாத்திகவாதியான இந்த முன்னாள் முஸ்லீம் புதிய புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “ஏன் இஸ்லாமில் இப்போது சீர்திருத்தம் வேண்டும்” என்ற தலைப்பில். இவர் அவ்வப்போது டிவி ஸ்டூடியோக்களில் தோன்றியும், பத்திரிக்கைகளில் கட்டுரைகளாகவும், தாராளவாத முஸ்லீம்களும், பாரம்பரிய முஸ்லீம்களும் இஸ்லாமின் அடிப்படையான மத நம்பிக்கைகளை துரந்து ஒரு புதிய முஸ்லீம் மார்டின் லூதரின் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்று கூறுகிறார். பெஞ்சமின் நெட்டன்யாஹூவுக்கு நோபல் அமைதி பரிசு வழங்கவேண்டும் என்று கூறும் இவர், இஸ்லாமை “அழிவுப்பாதை, சாவுக்கு இட்டுசெல்லும் வழி” என்று கூறும் இவர் விடுக்கும் அழைப்புக்கு முஸ்லீம்கள் செவிசாய்ப்பார்களா என்பது வேறொரு விஷயம்.

இந்த கருத்துக்கள் புதியவை அல்ல. 2002இலேயே நியூயார்க் டைம்ஸின் பிரபல எழுத்தாளர் தாமஸ் ப்ரீட்மென் இஸ்லாமிய சீர்திருத்தத்தை வேண்டி கட்டுரை எழுதியிருக்கிறார். சார்ல்ஸ் குர்ஜெர் , மிஷல் ப்ரோவர்ஸ் ஆகியோர் இந்த “சீர்திருத்த உவமையை” 20ஆம் நூற்றாண்டு ஆரம்பித்தலிருந்தே வந்திருப்பதை கண்டு சொல்கிறார்கள். “இஸ்லாமிய பழமையை விரும்புபவர்களிலிருந்து தாராளவாத முஸ்லீம்கள் வரைக்கும் எல்லோருமே இந்த முஸ்லீம் லூதர்களை தேடி வந்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

பொத்தாம்பொதுவாக பார்த்தால், வன்முறை தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதையும், இஸ்லாமின் ஆன்மாவை காப்பாற்றுவதையும், கூடவே மத்திய கிழக்கு நாடுகளை காப்பாற்ற விரும்புபவர்கள் இந்த “சீர்திருத்தத்தை” ஆதரிக்க வேண்டுமாம். கிறிஸ்துவ மதத்தில் சீர்திருத்தம் வந்தது, பிறகு மறுமலர்ச்சி வந்தது பிறகு மதசார்பின்மை வந்தது பிறகு தாராளவாதம் வந்தது அதன் பின்னால் நவீன ஐரோப்பிய ஜனநாயகம் தோன்றியது. ஆகவே ஏன் இஸ்லாமுக்கு இதே போல வர விரும்பக்கூடாது? மேற்கு இதற்கு உதவக்கூடாதா? — இப்படித்தான் இந்த வாதம் போகிறது.

கிறிஸ்துவ ஸ்டைல் சீர்திருத்தம் இஸ்லாமுக்கு வராமலிருப்பதே நல்லது என்பதுதான் உண்மை. இந்த ”முஸ்லீம் மார்ட்டின் லூதர்” கருத்தை எடுத்துகொள்வோம். லூதர் வெறுமனே, தனது 95 கொள்கைகளை விட்டன்பர்க் கோட்டை சர்ச்சில் 1517இல், பாதிரிமார்களின் தவறான நடத்தைகளை எதிர்த்து மட்டுமே அறையவில்லை. கூடவே, ஜெர்மன் நிலப்பிரபுகளுக்கு எதிராக போராடிய ஜெர்மன் விவசாயிகளை “வெட்டி வீழ்த்த”வேண்டும் என்றும் கோரினார், அவர்களை “பைத்தியம் பிடித்த நாய்கள்” என்றும் எழுதினார். 1543இல் “யூதர்களும் அவர்களது பொய்களும்” என்ற புத்தகத்தை எழுதினார். அதில் யூதர்களை “சாத்தானின் மக்கள்” என்றும், அவர்களது வீடுகளையும் அவர்களது கோவில்களையும் அழிக்கவேண்டும் என்றும் கோரினார். அமெரிக்க சமூகவியலாளரும் ஹோலோகாஸ்ட் என்னும் யூத இன அழிப்பு ஆய்வாளருமான ரோனால்ட் பெர்கர் கூற்றின்படி, யூத எதிர்ப்பை ஜெர்மன் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகவும், தேசிய அடையாளமாகவும் மார்ட்டின் லூதர் அமைத்தார். 2015இல் சீர்திருத்தத்துக்கும் நவீனத்துவத்துக்கும் முஸ்லீமகளின் லட்சிய புருஷனாக இவர் அமைய முடியுமா?

கண்ட பரப்பளவில், முன்னெப்போதையும் விட அதிகமாக ரத்தம் பெருக்கெடுத்து ஓடுவற்கான கதவுகளை இந்த புரோட்டஸ்டண்ட் சீர்திருத்தம் திறந்து வைத்தது. பிரஞ்சு மதப்போர்களை மறக்கமுடியுமா? அல்லது ஆங்கில உள்நாட்டு போர்களை மறக்கமுடியுமா? பல கோடிக்கணக்கான அப்பாவிகள் ஐரோப்பாவில் இறந்தார்கள். சுமார் 40 சதவீத ஜெர்மன் மக்கள் தொகை முப்பதாண்டு போரில் மரித்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் இப்போது வகுப்புவாத போர்களும், அன்னிய நாட்டு ஆக்கிரமிப்புகளும், காலனியாதிக்கத்தின் தீய விளைவுகளும் கசப்பினை உருவாக்கி கொண்டிருக்கும்போது, இது போன்றதொரு சீர்திருத்தத்தையா எதிர்பார்க்கமுடியும்? அதுவும் முன்னேற்றம், தாராளவாதம் சீர்திருத்தம் என்ற பெயரில்?

இஸ்லாம் கிறிஸ்துவ மதம் அல்ல. இந்த இரண்டு மதங்களும் ஒப்பிடத்தகுந்தவை அல்ல. ஆசியாவிலிருந்து ஆபிரிக்காவரைக்கும் இருக்கும் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளின் மீது ஐரோப்பிய மையவாத வரலாற்று பார்வையை திணிப்பதும், இந்த இரண்டு மதங்களையும் ஒரே மாதிரி பார்ப்பதும் மிகுந்த அறியாமையால் விளைவதுதான். ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பாரம்பரியமும், புத்தகங்களும் உள்ளன. ஒவ்வொரு மதத்தை நம்புபவர்களும் புவியரசியலாலும், சமூக பொருளாதார இயக்கங்களாலும், பல்வேறு வகையான வழிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய ஆன்மீகவியலும், கிறிஸ்துவத்தின் ஆன்மீகவியலும், மிகவும் வேறானவை. உதாரணமாக, இஸ்லாமில் எப்போதுமே ஒரு கத்தோலிக்க ஸ்டைல் பாதிரியார்களோ, கடவுளால் நியமிக்கப்பட்ட போப்புகளுக்கு அடங்கியவர்களான பூசாரிகளோ இருந்ததில்லை. அப்படியென்றால், இந்த “இஸ்லாமிய சீர்திருத்தம்” யாருக்கு எதிராக நடைபெறும்? யாருடைய கதவில் “95 பத்வாக்களை” அறைவது?

உண்மை என்னவென்றால், இஸ்லாமில் ஏற்கெனவே அதன் “சீர்திருத்தம்” நடந்துவிட்டது. அதாவது, பிராந்திய கலாச்சாரங்கள் துடைத்தெறியப்பட்டு தூய இஸ்லாம் உருவாக்கும் வழிமுறை தோன்றிவிட்டது. அது சகிப்புத்தன்மை மிகுந்த, பன்மைத்தன்மை மிகுந்த, பல சமயங்கள் இணைந்து வாழும் ஒரு பொன்னுலகை படைக்கவில்லை. மாறாக, அது உருவாக்கியது சவுதி அரேபிய மன்னராட்சி.

சவுதி அரச குடும்பத்துடன் ஒப்பந்தம் கொண்ட முகம்மது இப்னு அப்துல் வஹாப், ஹிஜாஜின் மக்களிடம் அளித்தது இந்த சீர்திருத்தம்தானே? இஸ்லாத்தில் பின்னர் தோன்றிய புதுமைகளை களைந்து, பல நூற்றாண்டுகளாக அறிஞர்களும், விளக்க உரையாளர்களும் உருவாக்கிய அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, பாரம்பரிய உலேமாக்களையும், பாரம்பரிய மத தலைவர்களையும் உதறிவிட்டு உருவாக்கிய தூய இஸ்லாத்தைத்தானே அவர் மக்களுக்கு அளித்தார்?

யாரையேனும் முஸ்லீம் மார்ட்டின் லூதர் என்று அழைக்கமுடியுமென்றால், அது இப்னு அப்துல் வஹாப் அவர்களைத்தான் அழைக்கமுடியுமென்று சிலர் வாதிக்கலாம். அவரை விமர்சிப்பவர்கள் பார்வையில், மார்ட்டின் லூதரின் அடிப்படைவாதமும், அந்த ஜெர்மன் துறவியின் யூத வெறுப்பும் ஒருங்கே இணைந்திருக்கும் உருவமே இப்னு அப்துல் வஹாப். முஸ்லீம் ஆன்மீகவியலை விமர்சித்ததால், அவரது காலத்தில் இருந்த இஸ்லாமை அவர் கடுமையாக விமர்சித்ததால், அவரது குடும்பத்தாலும் காபிர் என்று விலக்கி வைக்கப்பட்டார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மைக்கல் கிராபோர்ட் கூறுகிறார்.

என்னை தவறாக எடுத்துகொள்ளாதீர்கள். முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் சீர்திருத்தங்கள் தேவை. அரசியல், சமூக பொருளாதார, மத சீர்திருத்தங்கள் தேவை. முஸ்லீம்கள் தங்கள் தங்கள் நாட்டு இஸ்லாமின் பாரம்பரியத்தையும் பன்மைத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும், பரஸ்பர மரியாதையும் மீட்டெடுக்கவேண்டும். செயிண்ட் காத்ரீன் கிறிஸ்துவ துறவிகளுக்கு நபிகள் முகம்மது எழுதிய கடித்த்திலும், அல்லது “convivencia” என்று மத்தியகால முஸ்லீம் ஸ்பெயின் அரசில் அழைக்கப்பட்ட சேர்ந்து வாழ்தலிலும் அவர்கள் கண்டெடுக்கவேண்டும்.

முஸ்லீமல்லாதவர்களிடமிருந்தும், முன்னாள் முஸ்லீம்களிடமிருந்தும் இஸ்லாமில் சீர்திருத்தத்துக்கான சோம்பேறித்தனமான குரல்கள்தான் அவர்களுக்கு வேண்டாம். இவை அனைத்துமே மேம்போக்கானவை, மிகவும் எளிமைப்படுத்தப்பட்டவை, வரலாற்று பார்வை அற்றவை. வெறும் வெற்று கோஷங்களிலும், ஒரு சில சொற்கோர்வைகளிலும் இவற்றை கூறுவது எளிது. வரலாற்று ரீதியான பார்வையும், மூல காரணங்களை ஆராய்வதுமே தேவையானது. முஸ்லீம் படிப்பாளிகளின் மற்றும் ஆய்வாளர்களின் குரல்களை ஒதுக்கிவிட்டு தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் குரல்களை மையப்படுத்துவதுதான் இப்போது நடக்கிறது.

உதாரணமாக, ஹிர்ஸி அலி, அமெரிக்க மீடியா பேட்டிகளிலும், நியூயார்க் டைம்ஸ்லிருந்து பாக்ஸ் நியூஸ் வரைக்கும், எளிய கேள்விகளால் பாராட்டப்படுகிறார். ஜான் ஸ்டூவர்ட் என்ற நகைச்சுவையாளர் மட்டுமே, தனது டெய்லி ஷோவில், தூய கிறிஸ்துவத்துக்கான சீர்திருத்தம் நூற்றாண்டுகால வன்முறையையும் படுகொலைகளையுமேதானே உருவாக்கியது என்ற முக்கியமான கேள்வியை கேட்டார்.

இஸ்லாமிய மதத்துக்கு லூதர் செய்தது போல, இன்று யாரேனும் செய்யமுடியுமென்றால், அது ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதிதான். இவர்தான் தூய இஸ்லாத்தின் பெயரால், கற்பழிப்புகளையும் கொள்ளைகளையும் செய்துகொண்டிருக்கிறார். இன்னும் லூதரை போலவே, யூதர்களின் நண்பராகவும் இல்லை. மிகவும் எளிமையாக இஸ்லாமின் சீர்திருத்தத்தை கோருபவர்கள் அவர்கள் எதற்கு விரும்புகிறார்கள் என்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

*மெஹ்தி ஹசன் அல்-ஜஜீரா ஆங்கில தொலைக்காட்சியில் பணிபுரிகிறார்.

மூலம்

மொபெ. ஆர்.கோபால்

Series Navigationதொடுவானம் 72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்
author

Similar Posts

76 Comments

 1. Avatar
  ஷாலி says:

  // இஸ்லாமிய மதத்துக்கு லூதர் செய்தது போல, இன்று யாரேனும் செய்யமுடியுமென்றால், அது ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதிதான். இவர்தான் தூய இஸ்லாத்தின் பெயரால், கற்பழிப்புகளையும் கொள்ளைகளையும் செய்துகொண்டிருக்கிறார்.//

  இஸ்லாத்தின் பெயரில் உலவும் பயங்கரவாதிகளான அபு பக்ர் அல் பாக்தாதி,அல் ஜவாஹிரி,ஓமர் முல்லா, பின் லேடன் போன்றவர்கள் வெளியே வர யார் காரணம்? அரச பயங்கர வாதியான அமெரிக்காதானே!

  சர்வாதிகாரி சதாம் உசேன் ஆட்சியில் ஒருசில மக்கள் மட்டுமே துன்பம் அடைந்தனர்.அதிபயங்கர பேரழிவு ஆயுதங்கள் உள்ளது என்ற பொய்யை விதைத்து,ஒட்டுமொத்த இராக்கில் மரண அறுவடை நடத்திய அமெரிக்கா;இஸ்லாமிய பெயர் தாங்கிய பயங்கரவாதிகளை உருவாக்கி உலவ விட்டுள்ளது.ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் உருவாக காரணம் இராக்கில் அல் மாலிக்கி பொம்மை அரசை ஆட்சியில் அமர்த்தி பெரும்பான்மை சுன்னிகளை பயங்கரவாதிகளாக மாற்றி நாடு நரவேட்டைக்களமாக ஆனதற்கு முழு முதல் பொறுப்பு அமெரிக்க அரசு பயங்கரவாதமே!

  ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளை வளர்த்தெடுத்து வாழவைத்ததும் அமெரிக்க அரசு பயங்கரவாதிகளே!
  அமெரிக்க அரசு பயங்கரவாத உள்ளடி வேலையால் ஏராளமான மக்கள் அரசுகள் மண்ணைக் கவ்வி அமெரிக்க ஆயுதக்குழுக்களால் இன்று ஆளப்பட்டு வருவதை ஆப்ரிக்கா,ஆசியா,தென் அமெரிக்க கண்டங்களில் இன்றும் காணலாம்.

  கார்பொரேட் யூதர்களின் ஆயுத நிறுவனங்களால் வழி நடத்தப்படும் அமெரிக்க அரசு,உலகெங்கும் போர்களை உருவாக்கும் மரண வியாபாரத்தில் மாண்பை தேடுகிறது.இன்றைய பயங்கரவாதிகள்,அமெரிக்க வல்லூறு இட்ட முட்டையில் வெளிவந்த குஞ்சுகளே!

 2. Avatar
  paandiyan says:

  //இஸ்லாமிய மதத்துக்கு லூதர் செய்தது போல, இன்று யாரேனும் செய்யமுடியுமென்றால், அது ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதிதான். இவர்தான் தூய இஸ்லாத்தின் பெயரால், கற்பழிப்புகளையும் கொள்ளைகளையும் செய்துகொண்டிருக்கிறார்//

  he he . from where he got this training? from USA??

 3. Avatar
  ஷாலி says:

  //he he . from where he got this training? from USA??//

  நம்ம பாண்டியனுக்கு தமிழும் வரும்…….ஆனா…….வராது……?

  நீங்கள் எழுதிய வாக்கியத்தின் இறுதியில் உள்ள US ஐயை எடுத்து விட்டு CI எழுத்தைப்போட்டால் பதில் கிடைத்துவிடும்.கைப்புள்ளேக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது.

  1. Avatar
   paandiyan says:

   he he . so no comment on this????
   //இவர்தான் தூய இஸ்லாத்தின் பெயரால், கற்பழிப்புகளையும் கொள்ளைகளையும் செய்துகொண்டிருக்கிறார்//

   he he

  2. Avatar
   paandiyan says:

   ISIS, CIAவின் கைகூலியம் . சுபி கோவம் வரவில்லையா?? ஐயோகோ ? சப்போர்ட் பண்ணுபவர்கள் பாவம் பண்ணுகிறார்கல். என்ன கொடுமை

 4. Avatar
  தங்கமணி says:

  ஷாலியும், சுபியும் ஒரு மாதிரி மக்கள். தூங்குவது போல நடிப்பவர்கள்.
  இஸ்லாம் மதம் உலகத்திலேயே மிக அதிகமாக வளர்கிறது என்பார்கள்.
  ஆனால், தவ்ஹீத் ஜமாத் தவிர வேறு யாருமே முஸ்லீம்கள் இல்லை என்பார்கள்.
  உலகத்தில் எல்லா கண்டுபிடிப்புகளும் முஸ்லீம்கள் செய்ததே என்பார்கள்.
  ஆனால், மத்திய கால அரபியாவிலும் பெர்ஷியாவிலும் அப்படி கண்டுபிடித்தவர்களை முஸ்லீம்கள் கொன்றதை பற்றியே பேசமாட்டார்கள்.

  இஸ்லாம் வந்ததும் எல்லா தீமைகளும் அரபியாவில் ஒழிந்துவிட்டன என்பார்கள். அரபியாவில் 1962இல்தான் அடிமை முறை ஒழிக்கப்பட்டது, இன்னமும் கருப்பின அரபு குடிமக்களுக்கும், ஷிஆ அரபுகளுக்கும் அடிப்படை உரிமைகள் கூட கிடையாது என்பதை கண்டுகொள்ளமாட்டார்கள். அல் அக்தம் என்ற தாழ்த்தப்பட்டவர்கள் அர்பியாவிலேயே இருக்கிறார்களே என்றால், உங்கள் நாட்டில் (!) இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களை முதலில் பாருங்கல் என்பார்கள்.
  ஆனால், இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடக்கும் கொடுமைகளை எல்லாம் எழுதி, இஸ்லாத்துக்கு வாருங்கள்(!) என்று அழைப்புவிடுவார்கள்.

  உலகத்திலேயே இஸ்லாமியர்கள்தான் best of the people என்பார்கள். ஆனால், எல்லா பயங்க்ரவாத இயக்கங்களில் இருக்கும் இஸ்லாமியர்கள் எல்லாரும் சிஐஏ உருவாக்கம், இஸ்லாமியர்கள் எல்லாம் ஏமாளிகள் என்று எழுதுவார்கள்.

  ஆனால், அப்படி ஒரு தீவிரவாத இயக்கம் சென்னையில் அராஜகம் செய்தால் ஆதரிக்கவும் செய்வார்கள்!

  1. Avatar
   BS says:

   What are your comments on the translated article? Do you agree with all that is in this article?

   I have read the original. Now instead of writing about things not said in the article concentrate on it and post your comments.

   – Bala Sundara Vinayagam

 5. Avatar
  BS says:

  //மொபெ. ஆர்.கோபால்//

  மொழிபெயர்ப்பாளர் ஆர் கோபால். கடைசியாக ஒருவர் தன் பெயரை எழதி விட்டார்.

  கோபால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்;

  எப்போது மொழி பெயர்ப்புக்கட்டுரை போட்டாலும் அதன் ஒரிஜனலுக்கு இணைப்பு கொடுங்கள். மொழி பெயர்ப்பு பல இடங்களில் என்னைக் குழப்புகிறது. ஒரிஜனல் இணைப்புக் கொடுத்தால், இங்கு புரியவில்லையென்றால் அங்கு போய் வாசிக்க முடியும்.

  மெஹ்தி ஹசன் என்று கூகுலில் போட்டால் ஒரு இசையமப்பாளர் வருகிறார். என்னால் கட்டுரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. Give the link to the English article – a courtesy you can show to your readers..

 6. Avatar
  தங்கமணி says:

  ம்ம்ம்.. கட்டுரை வெளிவந்த நேரத்திலிருந்தே :மூலம்: என்ற இணைப்பு இருக்கிறதே.
  மொபெ பெயருக்கு சற்று மேலேயே சிவப்பு கலரில் அது இருக்கிறதே.

 7. Avatar
  Dr.G.Johnson says:

  ” இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை.ஏன் ? ” என்ற தலைப்பில் மெஹ்தி ஹசன் அவர்கள் எழுதியுள்ள இக் கட்டுரையில் அதிகமாக, தேவையில்லாமல் மார்ட்டின் லூதரை இழிவு படுத்தும் நோக்கில்தான் எழுதியுள்ளார். ஏன் இஸ்லாம் மதத்தில் இதுவரை லூதரைப் போன்று யாரும் சீர்திருத்தம் செய்யவே வரவில்லையா? அவர்களின் குரல்கள் கேட்கப்படவில்லையா? அல்லது அவர்கள் தடை செய்யப்பட்டார்களா? இன்று இஸ்லாம் பல பிரிவுகளாக இருப்பதற்கு நிச்சயம் அதுபோன்று யாராவது காரணமாக இருந்திருப்பார்களே? அவர்களைப் பற்றி எழுதினால் அது பற்றி தெரியாதவர்களுக்கு பயன்மிக்கதாக இருக்கும். உதாரணமாக இந்த ஷியா பிரிவும் சுனி பிரிவும் எவ்வாறு யாரால் தோன்றியது என்பது பற்றிக் கூறினால் நல்லது. இந்த இரண்டு பிரிவினர்தானே இப்போது பல நாடுகளில் அடித்துக்கொண்டு சாகிறார்கள்.அதன் விளைவுதானே இந்தத் தீவிரவாதம் எல்லாம்? இவர்களையுமா அமெரிக்கா வழி நடத்துகிறது? அப்படியானால் அவர்களின் மத நம்பிக்கையையும் சுய புத்தியையும் அமெரிக்கர்களிடம் அடகு வைத்துவிட்டார்களா?
  இந்த இஸ்லாம் சர்ச்சையில் மார்ட்டின் லூதரை அனாவசியமாக இழுப்பது தேவையற்றது. லூதர் சீர்திருத்தக் குரல் எழுப்பியபோது கத்தோலிக்கத் திருச்சபை அகில ஐரோப்பாவில் சர்வவல்லமையும் மிக்க பலத்துடன் போப்பாண்டவரின் பரிபூரண ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. போப்பாண்டவரையும் திருச்சபையையும் எதிர்ப்பவர்கள் அப்போது தெய்வ நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட காலம் அது. அத்தகைய சூழலில் உயிரைத் துச்சமாக எண்ணி சீர்திருத்தக் குரல் தந்தவர் மார்ட்டின் லூதர் எனும் சீர்திருத்தச் செம்மல்.
  அப்போது ஜெர்மனியிலும் இதர ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் யூதர்களின் கைகளில் முடங்கியிருந்ததால் அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு பரவலாகத் தோன்றிவிட்ட காலம் அது. அதற்கும் கிறிஸ்த்துவ மத சீர்திருத்தத்திற்கும் தொடர்பு இல்லை.அது அன்றைய சமூக பொருளாதாரப் பிரச்னை.
  அதுபோன்றே ஜெர்மன் நாட்டின் அன்றைய விவசாயிகளின் போராட்டமும்கூட.அது அன்றைய அரசியல் பிரச்னை.
  மார்ட்டின் லூதர் போன்று இஸ்லாம் மத சீர்திருத்தத்திற்கு இன்று யாரும் தேவையில்லை.காரணம் அவர் போராடி உடைத்தது ஒரேயொரு கத்தோலிக்க திருச்சபயைத்தான்.அதுபோன்று இஸ்லாம் இன்று ஒரே சபையாகவோ அல்லது உலக அளவில் ஒரு கட்டுப்பாட்டுடனோ இல்லை. எந்தப் பிரிவை எதிர்த்து யாரால் சீர்திருத்தம் செய்ய முடியும்? அதை பிளவு படுத்த இனி தேவை இல்லை. அது இன்று நாட்டுக்கு நாடு பிளவுபட்டு கிடக்கிறது. அதனால் இனிமேல் சீர்திருத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 8. Avatar
  ஷாலி says:

  நண்பர் Dr.ஜான்சன் கூறுவதுபோல் ஒரே தலைமையான ரோமன் திருச்சபையை எதிர்த்து சீர்திருத்தம் செய்வதற்காக மார்ட்டின் லூதர் புராட்டஸ்டண்ட் லூத்தரனை தோற்றுவித்தார்.ஆனால் சீர்திருத்த சபைகள் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருப்பது ஏன்?உதாரணமாக,
  Protestents-Lutherans-Babtist-Methododists-Episcopartians-Presbyterians-Pentacostals and Evangelicals என்று விரிந்து கொண்ட செல்கிறது.இன்னும் ஏராளமான உட்பிரிவு திருச்சபைகள் புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.இதற்க்கு என்ன காரணம்?இயேசு கிறிஸ்துவின் எளிய போதனைகள் இன்று பலராலும் சீர்திருத்தம் என்ற பெயரில் மார்கெட்டிங் செய்யப்பட்டு வர்த்தக நிறுவனம் போல் மாறி விட்டது.ஒவ்வொருவரும் தங்கள் சபை பிராண்டை முன்னிறுத்த பாடுபடுகிறார்கள்.

  இதே நிலைதான் இஸ்லாமிய பிரிவினை அமைப்புகளும், சீர்திருத்தம் என்ற பெயரிலும் தவ்ஹீத் என்ற பெயரிலும் அமைப்புகளை ஆரம்பித்து அரசியல் செய்கிறார்கள்.அன்று 360 சிலைகளை மக்காவில் வணங்கிக்கொண்டிருந்த நிலையை மாற்றி ஒரு இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதே இஸ்லாமிய கொள்கையாக நிலை நாட்டப்பட்டது.ஆக தவ்ஹீத் என்றாலே இஸ்லாம் என்றுதான் பொருள்.இன்று புதிதாக தவ்ஹீத் லேபிளில் பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.தமிழ் பேசும் தீர்க்கதரிசி…? பின்னால் ஒரு முஸ்லிம் கூட்டம் ஓடுகிறது.

  முகமது நபிகள் கூறிய ஒரு தீர்க்கதரிசனச் செய்தி, “கிருஸ்தவர்கள் 72 கூட்டங்களாக பிரிவார்கள்.ஒரு கூட்டம் மட்டும் சுவனம் செல்லும்;71 கூட்டம் நரகம் செல்லும்.இதுபோல் முஸ்லிம்கள் 73 கூட்டமாக பிரிவார்கள்;இதில் ஒரு கூட்டமே சொர்க்கம் செல்லும்,மீதி 72 கூட்ட முஸ்லிம்கள் நரகம் செல்லுவார்கள்.”

  1. Avatar
   சவரப்பிரியன் says:

   இதில என்ன தீர்க்கதரிசனம் இருக்குன்னு தெரியலையே? ஆக முஸ்லீமா ஆனாலும் நரகம்தான். முஸ்லீமா ஆனா மட்டும் போதாது, எது சரியான முஸ்லீம் பிரிவுன்னும் தெரியணும். அந்த முஸ்லீம் பிரிவையும் சொல்லித்தொலைச்சிருக்கலாமே?
   இப்ப உலகத்தில 73 பிரிவா இருக்கு? 7000 பிரிவு இருக்கேன்னு கேட்டா? அதெல்லாம் இல்லை 73 பிரிவுதான் இருக்கு, இந்த நூறு பிரிவும் இந்த ஒரே பிரிவுக்குள்ள வரும்னு அடிச்சி விடுவீங்க. உங்களை பொறுத்தமட்டில் இரண்டே இரண்டு பிரிவுதானே இருக்கு? ஒன்னு வஹாபிசம். மத்தொன்னு முஸ்லிம் பெயர்தாங்கி காபிர். இதில என்ன 73 பிரிவு? சுபிகிட்ட கேட்டா அண்ணன் பிஜெ நடத்தும் தவ்ஹீத் ஜமாத்துதான் ஒரே சரியான பிரிவு. அதுதான் சொர்க்கத்துக்கு போகும்னு சொல்வாரு. (எந்த முஸ்லீம் பிரிவை கேட்டாலும் தன்னோட பிரிவுதான் சரியான பிரிவுன்னு சொல்வாரு) இதுதான் இந்த தீர்க்கதரிசனத்தோட விளைவு! அடிச்சிகிட்டு சாவுங்கடே என்று முகம்மது அளித்த அருட்கொடை! ஏன்னா, கெட்ட முஸ்லீமை கொல்றது ரொம்ப முக்கியம், கெட்ட முஸ்லீமை கொன்னா நேரா சொர்க்கம்னு வேற சாமியாடியிருக்காரே!
   Bukhari V1:B11:N626: “The Prophet said, “burn all those who had not left their houses for the prayer, burning them alive inside their homes”

   9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் – ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

   9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.

   9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.

   9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.

   கவனிக்க வேண்டியது 9:111 இல் கெட்ட முஸ்லீம்களை கொன்று அவர்களது பள்ளிவாசலை இடித்து அவர்களை உயிரோடு கொளுத்தினால் சுவனம் நிச்சயம் என்ற அல்லாஹ்வின் உறுதிமொழி.

 9. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பு நண்பர் சகலகலாவல்ல ஷாலி அவர்களே, உங்களுடைய பதில் கண்டு மகிழ்ந்தேன். நன்றி. அதற்கு நான் சிறு விளக்கம் கூற .கடமைப்பட்டுள்ளேன்.இந்த கட்டுரையில் மார்டீன் லூதரை இழிவு படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டுள்ளதால் அது பற்றி கூற விரும்பினேன். காரணம் நான் ஒரு லூத்தரன் கிறிஸ்த்துவன்.சர்வ வல்லமையும் படைத்த போப்பாண்டவரின் ஒரே கத்தோலிக்க திருச்சபை ஐரோப்பா முழுதும் பரவியிருந்தது. கத்தோலிக்க சன்னியாசியாக இருந்த மார்டின் லூதர் சிலை வழிபாட்டை எதிர்த்தார். அது முதலாம் கட்டளைக்கு எதிரானது என்றார். பரிசுத்த வேத நூலை கட்டாயமாக இலத்தீன் மொழியில்தான் படிக்க வேண்டும் என்பதை எதிர்த்து அதை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து சாதாரண பாமர மக்களும் படித்து புரிந்து கொள்ள வகை செய்தார்.பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். கன்னிகாஸ்திரிகள் வேண்டாம் என்றார்.பாவங்களை கடவுளைத் தவிர வேறு யாராலும் மன்னிக்க முடியாது என்றார். இத்தகைய புரட்சிகரமான கருத்துகளைக் கூறியதால் கத்தோலிக்க திருச்சபை அவரை சபையிலிருந்து விலக்கியது. அவர் உருவாக்கியதே சீர்திருத்தச் திருச்சபை. அப்போது இரண்டு திருச்சபைகள்தான் இருந்தது. இந்த இரண்டில் தனிமனித சிந்தனைக்கு சீர்த்திருத்தச் திருச்சபை தடை விதிக்கவில்லை. அதனால் வேத வசனங்கள் அடிப்படையில் பல புதிய சபைகளும் உருவாயின.அவற்றில் மேதொடிஸ்ட், பிரஸ்பிட்டே ரியன், மார்த்தோமா போன்றவை முக்கியமானவை.அதன்பின் தனித்தனியான சிறு சிறு சபைகளும் உருவானது உண்மையே.இவை அனைத்துமே சீர்திருத்த சபைக்குள் அடங்கும்.முக்கியமாக இவற்றில் சிலை வழிபாடு கிடையாது. இதனால் பழம்பெரும் பலம்மிக்க கத்தோலிக்க திருச்சபையில் துணிவுடன் புரட்சி செய்து சீர்திருத்தம் செய்த பெருமைக்குரியவர் மார்டின் லூதர் ….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 10. Avatar
  BS says:

  பத்திரிக்கையாளர் இசுலாமில் சீர்திருத்தம் தேவையில்லை என்று சொல்லவே இல்லை.

  அவர் சொல்லும் கருத்துக்கள் இவை:

  இன்றைய காலகட்டத்தில் இசுலாமில் சீர்திருத்தங்கள் தேவைதான். ஆனால், அப்படி கோரிக்கை எழுப்புவோர் இசுலாமியரல்லாதோராக இருக்கக்கூடா. அவர்கள் ஒரு உள்ளோக்கத்துடன் செயல்படுகிறார்கள். மேலும், அவர்களுள் அலியைப்போன்ற சிலர், தங்களை நாத்திர்கள் என்று அறிவித்துக்கொண்டு, இசுலாம் என்ற மதமே இருக்கக்கூடாதென்று கங்கணம் கட்டிக்கொண்டு மேடைகளில் பேசிக்கொண்டிருப்போர் எப்படி இசுலாமின் மேல அக்கறை கொண்டு இவ்வாதத்தை வைக்கமுடியும்? (ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதைப்போல. அலி — இசுலாமத்தாக்கிச் சொன்ன சொற்களையும் இங்கு எடுத்துப்போடுகிறார்). அலி, லூதரைப்போல ஒருவர் இசுலாமின் சீர்திருத்தத்தைத் தொடங்க வேண்டுமென்கிறார்.

  (இங்கேதான் Dr ஜாண்சனின் கோபம் எழுகிறது. He is from Lutheran Church as he wrote in his autobiography)

  லூதர் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்களான போப்பும் அவரகளால் நியமிக்கப்பட்ட குருமார்களும் மதத்தின் பெயரால் மக்களையும் நாடுகளையும் சுரண்டியது தாங்கமுடியா அளவுக்குப்போனதால் (breaking point) போப்பும் அவர் ஆட்களும் வேண்டாம் என்ற கோரிக்கையை அடிப்படையாக வைத்தே தன் போராட்டத்தைத் தொடங்கினார். Our religion doesn’t need these heartless and crual mercenaries. எக்கருத்துக்களும் கொள்கையும் மக்களைச்சுரண்டி இவர்கள் கொழுக்க உதவியதோ அவை வேண்டாம். He didn’t want to throw the baby with the bathwater. He wanted to thorow only the dirty water, but retain the baby i.e. The basic theology and tenets for which the Roman Church stood for.

  ஆக, லூதர், உரோம திருச்சபையின் கருத்துக்கள் அனைத்தையும் அவர் நிராகரிக்கவில்லை. Here, the article points many such principals and tenets of Roman Church with which Luther had no disagreement are themselves cruel and bad. அக்கருத்துக்கள் பலபல கொடுமையானவை. எ.கா. விவிலியத்தின் சொல்லப்பட்ட மனிதன் உலகம் தோற்றக்கருத்துக்களை எதிர்த்தால் அவர்கள் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். லூதரின் ஒரே நோக்கம்: போப்பும் அவரின் ஆட்களும் ஒழியவேண்டும். பின்னர் லூதரின் போராட்டம் வலுப்பெற்று அப்படி நாம் பிரிந்தால் என்னனென்ன மாற்றங்கள் (காஸ்மடிக் சேஞ்சஸ்) பண்ணவேண்டுமென்று பிறந்ததுதான் புரொட்டஸ்டிசம்) As his movement grew from strength to strength spreading far and wide across the Europe, it started gathering accretions of new shapes and differences were brought in ONLY to make its separation as DISTINCT as possible. It means Luther didn’t advance the differences, but they came as accretions along the way. Perhaps, more than Luther, his others with him felt them needed and made him agree. அரசியல் கட்சிகள் வளர்ச்சியிலும் நாம் இதைப்பார்க்கலாம். முதலில் வைத்த கொள்கை அல்லது கொளகைகளில் மேல் பலபல கொள்கைகள் வைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். எனவே பத்திரிக்கையாளர் லூதர் ஒரு சிறந்த சீர்திருத்த வாதி மாடலாக கருதவில்லை.

  ஆனால் அலி, லூதரை ஒரு சிறந்த சீர்திருத்தவாதி என்று வரலாற்றை அறியாமல் சொல்கிறார். லூதரைப்போல ஒருவர் இசுலாமியச்சீர்திருத்தத்துக்குத் தலைமைதாங்கினால், ஐ எஸ் எஸ் ஐ செய்யும் தகா செயல்களே இசுலாமாகும். எனவே இப்படிப்பட்ட சீர்திருத்தவாதி வேண்டாம். The author rejects all violent sects in the name of Islam. He agrees that Islam can have a leader to call for reforms. The title of his article is mock-heroic.

  In the whole article, Luther should be taken as a symbol of who should not be the model for undertaking the task of bringing reforms in Islam. It means the journalist is not against any such task; rather he is against the models or methods and the men and women like Ali only.

 11. Avatar
  ஷாலி says:

  // லூதரின் ஒரே நோக்கம்: போப்பும் அவரின் ஆட்களும் ஒழியவேண்டும். பின்னர் லூதரின் போராட்டம் வலுப்பெற்று அப்படி நாம் பிரிந்தால் என்னனென்ன மாற்றங்கள் (காஸ்மடிக் சேஞ்சஸ்) பண்ணவேண்டுமென்று பிறந்ததுதான் புரொட்டஸ்டிசம்)…//

  திரு.BS ஸார்! நீங்கள் சொன்னது போல் லூதர் போப்பின் ஆதிக்கத்தை ஒழித்தார்.பல மாற்றங்களை கொண்டுவந்தார். பைபிள் வேதாகமத்தில் பல வசனங்களை தூக்கி எறிந்தார்.லூதரின் புராட்டஸ்டண்டுகள் 7 சுவிஷேச ஆகமங்களை தூக்கி எறிந்தார்கள்.அதிலுள்ள 4652 வசனங்கள் தங்களது கொள்கைக்கு முரணானது என்று கழித்துக்கட்டினர்.

  கத்தோலிக்க கிருஸ்துவர்கள் 1600 ஆண்டுகளாக 46 சுவிஷேச ஆகமங்களை பின்பற்றி வந்தனர்.மேலும்.வேத புஸ்தகத்தில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்ற தடையும் உள்ளது.

  “ நாங்கள் உங்களுக்கு கற்பிக்கின்ற வசனத்தோட நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம்,குறைக்கவும் வேண்டாம்”-உபாகமம்.4:2

  “ஒருவன் இந்த தீர்க்கதரிசன வசனங்களிலிருந்து எதையாயிலும் எடுத்துப்போட்டால் ஜீவ புஸ்தகத்திலிருந்தும் பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிளிருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.”-வெளிப்படுத்தின சுவிசேஷம்.22:19.

  ஏழு ஆகமங்களையும் ஆயிரக்கணக்கான வசனங்களையும் கிருஸ்துவத்திலிருந்து தூக்கி எறியும் அதிகாரம் லூதருக்கு யார் கொடுத்தது? பரிசுத்த ஆவி வந்து சொன்னதா?தனது மனோ விருப்பத்திற்கு தகுந்தாற்போல் கடவுளின் வேதத்தில் கைவரிசை காட்டி, பைபிளில் எடிட் வேலைகளை செய்த லூதரை ஒரு நல்ல சீர்திருத்தவாதி எனச் சொல்ல முடியுமா?

  “ அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர் உன்னைக் கடிந்து கொள்வார்;நீ பொய்யனாவாய்.”-நீதி மொழிகள்.30;6.

  லூதர், பைபிள் வசனங்களை வெட்டி எறிவதற்கு சில காரணங்கள் உள்ளன.உதாரணமாக,1.இயேசு சிலுவையில் பலியாகி மரித்து மீண்டும் உயிர்த்தெழுதல் என்பது அனைத்து கிறிஸ்துவர்களின் அடிப்படை நம்பிக்கை.எந்த ஆகமங்களை புரோட்டஸ்டண்டுகள் நீக்கி விட்டார்களோ அந்த ஆகமங்களில் இக்கொள்கைக்கு மரண அடி கொடுக்கப்படுகிறது.

  “ சாவுக்குப்பின் திரும்ப வருதல் இல்லை.முடிவு முத்திரையிடப்படுகிறது.எவனும் திரும்ப வருதல் இல்லை.’-ஞான ஆகமம்.2:5.

  2.ஆதாம் முதல் மனிதரின் பாவத்தின் காரணமாக பிறக்கும் மனிதர்கள் பாவத்தில் பிறக்கிறார்கள்.இயேசு சிலுவையில் தன்னை ஒப்புக்கொடுத்து மனுமகன் பாவத்திற்காக தன்னை பலியாக்கிகொண்டார்.என்பது கிறிஸ்துவர்களின் மற்றொரு நம்பிக்கை.புராட்டஸ்டண்டுகள் நீக்கிய ஞான ஆகமமும்,சீராக் ஆகமமும் இந்தக்கொள்கையை மறுக்கின்றது.

  “ முதல் மனிதன் தனியாக உண்டாக்கப்பட்டிருந்தான்; ஞானமே அவனைக்காத்து வந்தது;அவனை பாவத்தினின்று விடுவித்தது”
  -ஞான ஆகமம்.10:1.
  “(கடவுள்) எழுந்து அவனவனுக்கு அவனவன் செய்ததற்கு தக்கபடி தீர்ப்பிடுவார்.’-சீராக் ஆகமம்.17:20.

  இன்றைய கிருஸ்துவர்கள் பின்பற்றுவது இயேசு கிருஸ்து அவர்களின் உண்மையான போதனையை அல்ல.சவுல் என்னும் பவுல் அடிகள் கொள்கையையே பின்பற்றுகின்றனர்.சீர்திருத்தம் செய்ய வந்த லூதர் பைபிள் வசனங்களை தன் கொள்கைக்காக குறைத்து ரோமாபுரி போப்புகளுக்கு போட்டியாளர்களை, புதிய போப்புகளை தன் சபையில் உருவாக்கினார்.இதுதான் நடந்தது.

  1. Avatar
   அருமைராசன் says:

   இதே மாதிரி, 1200 ஆண்டுகளுக்கு முன்னால் ஆவணப்படுத்தப்பட்ட ஏராளமான சஹி ஹதீஸ்களை குரானுக்கு மாறுபடுகிறது என்று இவர்களாக கண்டுபிடித்துகொண்டும், யூதர்கள் திணித்துவிட்டார்கள் என்று கற்பனை செய்துகொண்டும் வஹாபிஸ்டுகள் நீக்குகிறார்கள் போலிருக்கிறதே.
   அதுவும் இதேமாதிரிதானா?

   நீங்கள் அதற்கு சப்பை கட்டு கட்டும்போது, அதே சப்பைக்கட்டை லூதர் செய்ததற்கும் சப்பைக்கட்டாக வைத்துகொள்ளுங்கள்.

 12. Avatar
  suvanappiriyan says:

  இஸ்லாத்தில் சீர்திருத்தம் தேவையில்லை: ஆனால் முஸ்லிம்களிடம் சீர் திருத்தம் தேவைப்படுகிறது.

  தர்ஹா வணக்கம், நாகூர் ஹந்தூரி விழா, வரதட்சணை கொடுமை, ஜோசியம் பார்த்தல், தட்டு தாயத்து மந்திரித்து கட்டுதல், முஹர்ரம் 10 அன்று மார்பில் ரத்தம் வர அடித்தக் கொள்ளுதல், இஸ்லாமியரில் சிலரே வட்டி வாங்குதல், விபசாரம் செய்தல், கொலை செய்தல் போன்ற மேற் சொன்ன பழக்கங்கள் எதனையுமே குர்ஆன் சொல்லவில்லை. நபிகள் நாயகமும் சொல்லவில்லை.

  இந்து மதத்திலிருந்து முஸ்லிம்களாக மாறியவர்கள்தான் இந்திய முஸ்லிம்கள். எனவே பழைய வழக்கத்தையும் மதம் மாறியும் தொடர்கின்றனர். அதனை சீர்திருத்தம் செய்ய வெண்டியது காலத்தின் கட்டாயம். அதனைத்தான் தவ்ஹீத் ஜமாத் செய்து வருகிறது. இதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது.

  1. Avatar
   paandiyan says:

   வெடிகுண்டு , கற்பழிப்பு , தீபட்டிக்கு பெண்களை விற்பது , பெண்களை கடத்தி கூட்டு கற்பழிப்பு – இது எல்லாம் எந்த மதத்தில் இருந்து மாறியவர்கள் ?

  2. Avatar
   BS says:

   கட்டுரையாளருக்குத் தமிழ்நாடும் தமிழ்முசுலீம்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அப்படியிருக்க தமிழ்நாட்டை சென்ட்ரிக்கா வைத்து பேசமுடியாது.

   இசுலாமில் சீர்திருத்தம் தேவையில்லை என்பதை அவர் சொல்லவில்லை. சீர்திருத்தம் வேண்டுமென்கிறார். ஆனால் அது எப்படிப்பட்ட சீர்திருத்தம், அதை யாரார் செய்யவேண்டுமென்பதையும் சொல்கிறார்.

   அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

 13. Avatar
  தங்கமணி says:

  பல போப்பாண்டவர்கள் கிறிஸ்துவத்தில் இல்லாத, புத்தகங்களில் இல்லாத பல விஷயங்களை செய்தார்கள். லூதர் கிறிஸ்துவத்தை கிறிஸ்துவத்தின் அடிப்படைவாதத்தோடு அணுகினார்.
  அதனால், கிறிஸ்துவத்தின் அடிப்படைவாத யூத வெறுப்பு, அடிமை முறை ஆகியவற்றை போப்புகளை விட தீவிரமாக எடுத்துச்சென்றார் லூதர்.
  இதனை பாரம்பரிய இஸ்லாமுடனும், நவீன இஸ்லாமுடனும் கட்டுரையாளர் ஒப்பிடுகிறார்.
  பாரம்பரிய இஸ்லாம், அங்கங்கு போப்பாண்டவர்களை போல இஸ்லாமில் இல்லாத விஷயங்களை செய்தாலும், அது சமூக நல்லிணக்கத்தை பேணுகிறது.
  வஹாபிஸ இஸ்லாம், கிறிஸ்துவ அடிப்படைவாத கிறிஸ்துவத்தை தூக்கிபிடித்த லூதரை போல, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தூக்கி பிடித்து, மீண்டும் அடிமைமுறை, யூத வெறுப்பு, வன்முறை, காபிர்களை கொல்லுவது ஆகியவற்றை செய்கிறது.
  இதுதான் கட்டுரையாளர் சொல்லுவது.

  1. Avatar
   BS says:

   முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கிருத்துவமதம் என்ற ஒன்றை உரோமன் கத்தோலிக்க பீடம் எங்கிருந்தோ பெறவில்லை. ஏனெனில். இயேசு ஒரு மதத்தை உருவாக்க மக்களுக்குக் கொடுத்துவிட்டுச்செல்லவில்லை. அவருக்குபபிந்தான் மதம் உருவாக்கப்பட்டது. புனித பவுலால் விவிலியத்தில் சொல்லப்பட்ட இயேசுவின் வாழ்க்கைக்கு உருவகங்களும் உவமானங்களும் கொடுக்கப்பட்டு ஒரு மதம் தோற்றுவிக்கப்பட்டது. உரோம கத்தோலிக்க பீடமே இயேசுவின் சீடர்களுள் ஒருவரான பீட்டரால தொடங்கப்பட்டு, அவர் தனக்குத் தோன்றியவாறு, பவுலையும் ஏற்று, தானும் உருவாக்கிக்கொண்டதே கத்தோலிக்கமதம். லூதருக்கு முன் அது மட்டுமே மதம் என்பதால் அதுவே ஒரே கிருத்துவ மதம்.

   ஆக, உரோம திருச்சபை ஒரு ஆதிமதத்தை மாற்றியது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுவே மதத்தை உருவாக்கிக்கொண்டபோது எங்கிருந்து வரும் ஒரு ஒரிஜனல் மதம் அதற்கு? இரண்டாவது, அப்படி உருவாக்கும்காலை அது செய்த முடிவு: வடிகன் தலைமையிடம், போப் தலைவர். அவர் தன் குருமார்களிடம் ஆலோசித்து அவ்வப்போது மாற்றங்கள் கொண்டுவரலாம். வந்துகொண்டுமிருக்கின்றன.

   எனவே போப்பு தூய மதத்தை அனுசரிக்கவில்லை. லூதரே செய்தார் என்பது பெறப்படாது. லூத்தர் உரோமன் சபை கொண்ட மததத்தையே மாற்றினாரெனலாம். அப்படி மாற்றும்போது, ஒரேயடியாக மாற்றாமல், சிலவற்றை வைத்து, சிலவற்றை விலக்கினார்.
   யூத வெறுப்பு போப்பைவிடக் கடுமையாகக் கொண்டாரென்பது. போப் எப்படிக்கொண்டரெனத்தெரியாமல் பேசமுடியாது. யூத வெறுப்பு விவிலியத்தில் வரும் ஒருவசனத்தால் உருவாகியது. இயேசுவைச் சதிசெய்து கொன்றவர்கள் யூதர்கள் என்பதால் வந்தது. இத்தனைக்கும் இயேசுவும் ஒரு யூத‌ரே. இருந்தாலும் மக்கள் அவரை யூதர்களால் வெறுக்கப்பட்டவராகத்தான் பார்த்தார்கள். யூத வெறுப்பு எனபது என்று இயேசு மறைந்தாரோ அன்றிலிருந்து தொடங்கிவிட்டது. இது மத வழி வந்த வெறுப்பு. இதை அப்படியே உரோம சபையும் லூதரும் எடுத்துக்கொண்டார்கள். நமக்குப்பிடித்த நபரை இன்னொருவர் கொன்றுவிட்டால், நாம் வாழ்க்கை முழுவதும் கொன்றகூட்டத்தின் மீது வெறுப்புடன் தானே வாழ்வோம்? அதைப்போல.

   எனவே போப்பைவிட யூத வெறுப்பைய்ப் பெரிது படுத்தினார் போப்பைவிட கடுமையா என்பதாகாது.. கட்டுரையாள்ர் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர் லூதரே அவ்வினத்தின் மீது வெறுப்பைப்பரவ வித்திட்டார் எனபதை அவர் ஜெர்மானிய மக்களுக்ளிடையே மட்டுமே என்று சொல்வதையும் கவனிக்கவேண்டும். அதாவது உரோம சபை தன் பங்கைச் எல்லாவிடத்திலும் செய்ய லூதர் ஜெர்மனியில் மட்டும் செய்தார் என்று வரும்.

   இயேசுவுக்குப்பிறகு வெகு காலத்துக்கப்புறமே கிருத்துவம் என்ற மதம் உருவாக்கம் செய்யப்பட்டது. எப்படி என்பது முதல்பத்தியில் சொல்லியிருக்கிறேன். The so-called early Christians like Paul and Peter created it. It was Paul who gave meaning to the blood and flesh of Jesus and so many other aspects of Jesus’s life. He equated Jesus to the divine hood.

   அப்படியிருக்க எந்த அடிப்படை மதத்தை லூதர் கொண்டார்? Paul’s? போப்பு கொள்ளவில்லை? Did Pope reject Paul’s and created their own?

 14. Avatar
  தங்கமணி says:

  BS,
  அடிப்படைவாதம் என்பது புத்தக அடிப்படைவாதத்தையே குறிக்கிறது. papal inerrancy என்பது போப்பாண்டவர்கள் செய்துகொண்ட விஷயம். அதாவது போப்பாண்டவர் தவறு செய்யமாட்டார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவரை பின்பற்றுவோம் என்பது.

  (ஷாலி சொன்ன ஆகமங்கள் deutrocanonical ஆகமங்கள் அல்லது இணை ஆகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை யூதர்களின் ஹீப்ரு பைபிளில் கிடையாது. ஆனால் கத்தோலிக்க பைபிளில் உண்டு. இவற்றை இணை ஆகமங்கள், இவற்றை படிக்கலாம். ஆனால், வழிகாட்டியாக எடுத்துகொள்ளக்கூடாது என்கிறார் லூதர்)

  லூதர் கொண்டுவந்தது papal inerrancyக்கு மாற்றாக, bibilical inerrancy. Bibilical literalism அதாவது புத்தகமே சரியானது. புத்தகத்தில் உள்ளதை அப்படியே பின்பற்றவேண்டும். Sola Scriptura, (புத்தகம் மட்டுமே) என்பது லூதரின் கருத்து. புத்தகங்களுக்கு மாறாக இருக்கும் போப்பு சொல்வதையோ, பாரம்பரியத்தையோ, மனிதர்கள் கொடுக்கும் மேற்கருத்துக்களையோ, மக்களின் அனுபவங்களோ நிராகரிக்கப்படவேண்டும் என்பது லூதரின் கருத்து.

  இதன் படி போப்பாண்டவர் காசு வாங்கிகொண்டு கொடுக்கும் பாவமன்னிப்புக்கு பைபிளில் ஆதாரம் இல்லை. ஆகவே நிராகரிக்கவேண்டும்.

  பாரம்பரியமாக மேரியை வணங்குகிறார்கள். அதுவும் நிராகரிக்கப்படவேண்டும்.

  செயிண்டுகளை வணங்குவது நல்லது என்று பைபிளில் இல்லை. ஆகவே நிராகரிக்கப்படவேண்டும்.

  போப்பாண்டவர் சொல்லுவதெல்லாம் சரி என்று பைபிளில் இல்லை. ஆகவே நிராகரிக்கப்படவேண்டும்.

  அறிவியல் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்கிறது. ஆனால், பைபிளில் ஜோஷுவா சூரியனைத்தான் நிற்கச்சொன்னார். பூமியை நிற்கச்சொல்லவில்லை. ஆகவே பூமியை சுற்றித்தான் சூரியன் வருகிறது. (கோபர்நிகஸுக்கு எதிராக லூதர் சொன்னது)

  யூதர்கள் பாவிகள் என்று பைபிள் சொல்லுகிறது. ஆனால் போப்பாண்டவர் அவர்களை குடிமக்களாக வாழ அனுமதிக்கிறார். அது தவறு. அவர்களை கொல்லவேண்டும்.

  இது போன்ற அடிப்படைவாதத்தைத்தான் லூதர் முன்வைத்தார்.

 15. Avatar
  BS says:

  //ஒரே கத்தோலிக்க திருச்சபை ஐரோப்பா முழுதும் பரவியிருந்தது. கத்தோலிக்க சன்னியாசியாக இருந்த மார்டின் லூதர் சிலை வழிபாட்டை எதிர்த்தார். அது முதலாம் கட்டளைக்கு எதிரானது என்றார். பரிசுத்த வேத நூலை கட்டாயமாக இலத்தீன் மொழியில்தான் படிக்க வேண்டும் என்பதை எதிர்த்து அதை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து சாதாரண பாமர மக்களும் படித்து புரிந்து கொள்ள வகை செய்தார்.பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். கன்னிகாஸ்திரிகள் வேண்டாம் என்றார்.பாவங்களை கடவுளைத் தவிர வேறு யாராலும் மன்னிக்க முடியாது என்றார்.// This is from a member of Lutheran Church, Tamilnadu (writing here as Dr Johnson)

  விவிலியம் இயேசுவின் காலத்தில் எழுதப்படவில்லை. நூறாண்டுகளுக்குப்பின் தொகுக்கப்பட்டது எந்த மொழியில் எழுதப்பட்டதோ அதை உரோமன் சபை மாற்ற விருமபவில்லை.

  இலத்தீன் மொழி விவிலியம் படிக்கமட்டுமில்லாமல், தேவாலய வழிபாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. எப்படி பார்ப்ப்னர்கள் வடமொழியே கோயில்களில் பூஜை மற்றும் சடங்குகளுக்குக் கொண்டு அம்மொழிக்கு மட்டுமே தேவனை அடையும் மந்திரசக்தி உண்டென்று இன்றும் சாதிக்கிறார்களோ, அதைப்போல உரோம சபை செய்தது.

  இப்போது ஒருவர் தென்மொழிக்கும் உண்டு; அதையும் கோயில் வழிபாட்டில் இருக்கவேண்டும் என்றால் அடிப்படை வாதமா? சீர்திருத்தமா?

  லூத்தர் ஜெர்மன் மொழியில் விவிலியம் படிக்கப்படட்டும், இலத்தீன் மக்களுக்குப் புரியாது என்றால், அடிப்படை வாதமா, சீர்திருத்தமா?

  பாமர மக்களுக்கும் இரகசியார்த்தம் புரியவேண்டுமென்று ஓம் நமோ நாராயணாவுக்கு ஊரறிய பொருள் இராமானுஜர் சொன்னது அடிப்படை வாதமா? சீர்திருத்தமா?

  பாதிரியார்கள் மணவாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களால், இறைகாரியங்களில் முழு அர்ப்பணிப்பும் கொடுக்கமுடியாது; மேலும் தன் குடும்பம் உறவு என்ற தன்னலப் போக்கை உருவாக்கும் என்று கருதி செயல்பட்டது உரோம சபை. அப்படி விளைவுகள் ஏற்படா; மாறாக பாதிரியார்களைத் தடுத்தால், அவர்களால் கள்ள் உறவுகள் உருவாகும் என்று லூத்தர் அனுமதித்தது அடிபபடை வாதமா? சீர்திருத்தமா?

  பெண்களை அருகில் வைத்துக்கொண்டு தேவனைப் பற்றி நினைக்கமுடியாது என்ற கொளகையை புத்தரும்தான் கொண்டார். Only later he changed. இந்துமதமும் பெண்களால் இருடிகள் (Rishis) தங்கள் தவவலிமையை இழந்தார்கள் (விசுவாமித்திரர், தொண்டர்டிப்பொடியாழ்வார்; பட்டிணத்தார், அருணகிரிநாதர்). So, it enjoined upon holy men not to marry. அதே இந்துமதத்தில் ஒரு பிரிவான வைணவத்தில் ஆச்சாரியர்கள் மணவாழ்வில் ஈடுபட்ட பின்னரே இறைவாழ்க்கையில் ஈடுபட்டது மட்டுமன்றி, தங்கள் பிள்ளைகளையும் அப்படி ஆக்கினார்கள். இப்படி வேறொரு கொள்கை கொளவது சீர்திருத்தமா? அடிப்படை வாதமா?

  இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

 16. Avatar
  BS says:

  Verbal inerrancy of the Bible. Papal inerrancy.

  .
  லூத்தரின் முயற்சி ஒரு ரி-ஆகஷனே. அடிப்படைவாதத்தினால் உருவானதன்று. உரோம சபை போப்பும் குருமாரகளும் இலத்தீன் மொழியே கிருத்துவத்தின் தேவ பாசை எனவும் விவிலியமும் தேவாலயச் சடங்குகள் அம்மொழியிலேயே இருந்தால்தான் அவைக்கு வலிமை என்றதை லூத்தர் ஏற்றுத்தான் கத்தோலிக்க குருவாக பல்லாண்டுகளாக இருந்தார். அவர் திடீரென மக்கள் பேசும் படிக்கும் அன்றாட மொழியான ஜெர்மனின் விவிலியம் இருக்கட்டுமென்றது அடிப்படை வாதமே இல்லை. அது சந்தர்ப்ப வாதம்.

  உரோம சபை இலத்தீன் மொழியென்ன எம்மொழியில் விவிலியத்தைக்கொண்டாலும் அந்நூலில் சொன்னவைகளை அவர்கள் புரட்டாமல் இருந்து கிருத்துவத்தை வளர்த்திருந்தால், இம்மொழிப்பிரச்சினை லூத்தருக்குத் தோன்றியிருக்காது. அப்படியே அவர் உரோம சபையிலிருந்து விலகி ஏராளமான மாற்று கட்டளைகளை எழுதித்தொங்கவிட்டிருந்தாலும் இம்மொழிக்கட்டளை அங்கு எழுதப்பட்டிருக்காது.

  இதைப்போலவே பாவமன்னிப்புச்சடங்கும். இச்சடங்கும் இன்றும் நன்றாகப்பின்படுத்தப்படுகிறது. It is an important ritual in catholic church. ஒரு பெரிய இந்துச்சாமியாரிடம் சென்று தரிசனம் பண்ணுவோர் தங்கள்தங்கள் மனக்குறைகளை அவர்முன் எடுத்துவைப்பர். பின்னர் அவர் ஆறுதல் கூறுவார். வழிகளும் சொல்வார். இப்படிச்செல்வோர் பலர் நன்மை பெறுவார்கள். அஃது அந்தச்சாமியாரைப்பொறுத்தது. மஹா பெரியவாளிடம் இசுலாமியர்களும் சென்றதாக நான் படித்திருக்கிறேன். ஆனால் சாமியார்கள் தங்களை நம்புவோரைச் சீரழிப்பதும் இந்துமதத்தில் மட்டுமன்று, எல்லாமதத்திலும் நடக்கிறது? அதனால், சாமியார்களே கூடாதென்பதும் அவர்களிடம் போய் உங்கள் மனக்குறைகளைக்கொட்டாதீர்கள் எனபதும் சீர்திருத்தமா? அடிப்படை வாதமா?

  லூத்தர் பாவமன்னிப்பும் வழங்கிக்கொண்டுதான் இருந்தார். பின்னர் உரோம சபை தன் வருமானத்தப்பெருக்க பாவமன்னிப்புச்சீட்டுகளை விற்பனை செய்ய ஆரம்பித்தவுடன் லூத்தர் விவிலியத்தில் சொல்லப்படவில்லை என்ற வாத்த்தை வைத்து தான் முன்பு செய்தததை செய்ய மறுத்தார். பாவமன்னிப்புச்சீட்டு வேண்டா. கமர்சியலைஸ் பண்ணாதே. ஆனால் பாவமன்னிப்புச் சடங்கு இருக்கட்டும். மக்களின் மனப்பாரம் குறைய இயேசு சொன்னது போல (உங்கள் பாரத்தை என்னிடம் இறக்கி வையுங்கள். இளைப்பாறுதல் தருவேன்) ஒரு வழி என்று லூத்தர் போயிருந்தால் சபாஷ். நேற்றுவரை ஓகெ. இன்னைக்கு காலையிலிருந்து நாட் ஓகே. ராத்திரியில் என்ன நடந்தது>

  Thus, the basis of his rebellion was not rooted in any fundamentalism. It was caused by the excesses and extremities of the Roman Church and crass commercialization of the religion. Common people were cheated. There might be a lot of loss to him mentally and physically which could be revealed only in an intimate Biography of Luther. His Christian fundamentalism (if indeed it is!) is an eye-wash!

  To know Luther in correct perspective, one should read Loyola, the Spaniard who started the Counter-reformation to reply point by point. If you are not Dr Johnson, I mean, non-Christian, know both these historic figures and conclude yourself.

 17. Avatar
  ஷாலி says:

  // லூதர் கொண்டுவந்தது papal inerrancyக்கு மாற்றாக, bibilical inerrancy. Bibilical literalism அதாவது புத்தகமே சரியானது. புத்தகத்தில் உள்ளதை அப்படியே பின்பற்றவேண்டும். Sola Scriptura, (புத்தகம் மட்டுமே) என்பது லூதரின் கருத்து. //

  தங்கமணி ஸார்! லூதர், புஸ்தகத்தில் உள்ள அடிப்படையை எங்கே பின்பற்றினார்? கிருஸ்தவம் என்ற சமயத்தின் மையக்கருத்து இயேசு கிறிஸ்துவின் நேரடி வாக்குமூலத்தின்படியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் நடந்தது என்ன?இயேசு கிருஸ்து எந்தக்கட்டத்திலும் தான் கடவுள் என்றோ,தேவன் என்றோ,கர்த்தர் என்றோ ஒருபோதும் கூறவே இல்லை.தன்னை மனுமகன் மனுஷகுமாரன் என்றுதான் பேசுகிறார்.அவர் செய்த அற்புதங்கள் கூட தன்னை அனுப்பின பிதாவின் கிரியையின்படியே செய்வதாக சொல்கிறார்.”என்னை நல்லவன் என்று சொல்வானேன்?கர்த்தர் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” என்று தன்னை இறைதூதராகத்தான் அறிமுகப்படுத்துகிறார். தன்னை கர்த்தரே!என்று அழைத்தவர்களை நோக்கி “அக்கிரமக்கார ஜனங்களே அகண்டு போங்கள் உங்களை ஒருக்காலும் அறியவில்லை.பிதாவை நோக்கி அப்படி அழைப்பவன் தான் பரலோக ராஜ்யத்தில் நுழைவானே தவிர,என்னை நோக்கி கர்த்தாவே என்று அழைப்பவனல்ல” என்று கடிந்து பேசுகிறார்.

  எதிரியாகிய சவுல் இயேசுவிற்கு பிறகு பவுலாக மாறி,பிதா,சுதன்,பரிசுத்த ஆவி எனும் முக்கடவுள் கொள்கையை திணிக்கிறார்.இயேசுவின் நாமத்தினாலே என்று சொல்லிச் சொல்லியே தனது கருத்தை நுழைத்து விட்டார்.இயேசுவின் சொந்த வாக்கு மூலம் பவுலடிகளின் சொந்த விளக்கங்களால் பைபிளாகி விட்டது.ஒரு சிறிய உதாரணம்.

  கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது.அது புது உயிர் கொடுக்கிறது.கர்த்தரின் சாட்சியம் நம்பபடத்தக்கது.அது பேதையை ஞானியாக்குகிறது.கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை.அவை இருதயத்தை சந்தோஷபிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது.அது கண்களை தெளிவிக்கிறது.” –சங்கீதம்.19:7,8.

  பழைய ஏற்பாட்டில் காணும் இவ்வசனம்,கர்த்தரின் வார்த்தைகளும்,பிரமாணங்களும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் என்று போதிக்கின்றன.கர்த்தரின் இந்த போதனைக்கு முரணாக பவுல் கூறுகிறார்.

  “முந்தின கட்டளை பலவீனமுள்ளதும் பயனற்றதுமாய் இருந்ததிநிமித்தம் அது தள்ளப்படுகிறது.நியாயப்பிரமாணம் ஒன்றையும் பூரனப்படுத்தியதில்லை.”-எபிரேயர்.7:18.

  முந்தைய நியாயப்பிரமாணத்தை இயேசு கிருஸ்து தள்ளினால் அதில் ஓரளவு நியாயம் இருக்கும்,இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல், கர்த்தரின் நியாயப்பிரமாணம் பரிபூரணமானதன்று; பலவீனமானது என்கிறார். கர்த்தரையே அலட்சியப்படுத்தும் பவுலை போப்புக்கள் ஏற்றுக்கொள்ளலாம்.சீர்திருத்தம் செய்ய வந்த லூதர் இந்த அடிப்படை தவறை கண்டுகொள்ளாதது ஏன்?

  தான் பொய்தான் பேசுவதாக பவுலடிகள் கூறுகிறார். “ தேவனே சத்தியர்,எந்த மனிதனும் பொய்யர்,நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய் பேசுகிறவன்.நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பன்ணினால் என்னுடைய பொய்யினால் தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவானேன்.”-ரோமர்.3:4-7.

  தேவனுக்கு மகிமை உண்டாவதற்க்காக பொய் சொல்லலாம் என்ற புதிய தத்துவத்தை பவுல் அறிமுகப்படுத்துகிறார்.தான் பொய் தான் பேசுவதாக தெளிவான வாக்கு மூலம் கொடுக்கிறார்.சீர்திருத்தம் செய்யவந்த லூதர் முதலில் தூக்கி எறிந்திருக்க வேண்டிய வசனங்கள் பவுலின் வசனங்களாக இருந்தால் இதை முறையான சீர்திருத்தம் என்று ஒப்புக்கொள்ளலாம்.மற்றபடி போப்புகளுக்கு இணையாக புதிய சபை அதிகார மையங்களை உருவாக்கியவரை இயேசு கிறிஸ்துவின் அடிப்படை போதனைகளை புறக்கணித்தவரை சீர்திருத்தவாதி என்று எப்படிச் சொல்ல முடியும்?

 18. Avatar
  BS says:

  PAPAL INERRANCY இதுவும் சரியான புரிதல் உள்ளதா?

  உரோம சபையின் தலைவரே போப். அவர் ஒரு சர்வாதிகாரியன்று. உரோம சபை ஒரு படிநிலைகொண்ட அதிகார சபை. (Well structured hierarchical organisation) அவர் தனக்கடுத்த குருமார்களின் கூட்ட்த்தைக்கூட்டி கலந்தாலோசித்தே மத முடிவுகளை எடுப்பார். அதன் பின்னர் அம்முடிவுகள் அவர் பேரால் அறிவிக்கப்படும். பாரளமன்ற ஆட்சி போல. அம்முடிவுளைத்தான் எதிர்க்கலாம். எடுத்த சபையை எதிர்க்கவேண்டுமானால் அதன் அமைப்பை மாற்றவேண்டும். மோடி அரசு எடுத்த முடிவுகளை எதிர்க்கலாம். ஜனநாயகமே வேண்டாமெனலாமா?

  Inerracny என்பது அவசியம். ஜெயலலிதா சொல்லுக்கு மாற்றே இல்லை என்றால்தான் அ தி மு க பிழைத்துக்கிடக்கும். இல்லாவிட்டால் சிதறிவிடும். அதைப்போல ஒரு தலைமை எடுத்த முடிவுகள் இனெரான்சியாக இருப்பதாகக் கொள்ளவேண்டும்.

  Pappal inerrancy பிரச்சினையாக இல்லை. பிரச்சினைகள் வரக்காரணம் உரோம சபை மதத்திற்கப்பால் உள்ள பொது விசயங்களிலும் (செக்கூலர் மேட்ட்ர்ஸ்) தலையிட்டு போப் சொன்னவையை ஏறகவேண்டுமென்றது. (அரசர்களை பகடைக்காயகளாக விளையாடியது ஓர் எ.கா)

  இதுவே லூத்தர போன்றோரின் எதிர்ப்பை உருவாக்கியது. He ignited the spark for his own reasons. All those who were waiting for an opportunity to cut off from the authroity of Roman Pope, seized the opportunity and cut off. Henry VII was one such person.

 19. Avatar
  BS says:

  மெஹ்தி ஹசனின் கட்டுரை ஓர் ஏமாற்று. A clever evasion.

  ஓரிடத்தில் மட்டுமே இசுலாமில் சீர்திருத்தம் அவசியம் என்று சொல்கிறார்.

  இசுலாமியரல்லாதோர் அக்கோரிக்கையை வைக்ககூடாதென்கிறார்..

  பின்னர் யார் வைக்கவேண்டுமென்று சொல்லவில்லை. நாமே ஊகிக்கவேண்டும். இசுலாமியரே கோரவேண்டும். இசுலாமியரென்றால் பாமர மக்கள் அல்ல. இசுலாமிய மதத்தலைவர்கள. அவர்கள் என்னென்ன கேட்கவேண்டுமென்று கட்டுரை சொல்லவில்லை. மாறாக, முஹமது ஒரு கிருத்துவருக்கு எழுதிய கடித்தத்தில் உள்ளதைக்காட்டி, மதச்சகிப்புத்தனமை வலுயுறுத்துவதை என்கிறார். ஆனால், இவர் வெறுத்தொதுக்கும் இசுலாமியரல்லா கோரிக்கையாளர்கள் இதை மட்டுமே கேட்கவில்லை என்று ஹசனுக்குத் தெரியும். அதைவிட்டு நழுவ இக்கோரிக்கையாளர்கள் இசுலாம் மதத்தை உள்ளூர அழியவேண்டுமென நினைப்போர் என்கிறார். வஹாபிசம் ஒரு தூய அடிப்படை மதத்தை வலியுறுத்துவதென்றும், அஃதை அனுமதித்தால், ஐ எ எஸ் ஐ ஆதரிப்பது போலாகும் என்றும் சொல்கிறார்.

  ஆக, இக்கட்டுரை ஒரு எவேசன்.It is shallow.

  1. Avatar
   அருமைராசன் says:

   ஆமாம். சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் BS.
   எல்லா இஸ்லாமியரிடமும், முக்கியமாக தாராளவாத முஸ்லீம் என்று சொல்லிகொள்ளும் முஸ்லீம்களிடம் தாராளமாக இருக்கும் பொய் வாதங்கள். தக்கியா.

 20. Avatar
  ஷாலி says:

  paandiyan says:/// வெடிகுண்டு , கற்பழிப்பு , தீபட்டிக்கு பெண்களை விற்பது , பெண்களை கடத்தி கூட்டு கற்பழிப்பு – இது எல்லாம் எந்த மதத்தில் இருந்து மாறியவர்கள் ?///

  மாலேகான்,கோவா குண்டு வெடிப்பு ,தனக்குத்தானே தென்காசி இந்து முன்னணி ஆபீஸில் குண்டு வைத்தவர்கள்…….. (மாலேகான் குண்டு வெடிப்பில் கைதாகிய கர்னல் புரோஹித்,பிரக்ஞா சிங்,இவ்வழக்கிற்கு அரசு தரப்பு வழக்கறிஞ்காராக ஆஜராகிய ரோஹிணி சலியனுக்கு,மென்மையான போக்கை கைக்கொள்ளும்படி பாஜக அரசு பதவி ஏற்றபின்பு தேசீய புலனாய்வு அமைப்பிலிருந்து (என்ஐஏ) நெருக்கடி அளிக்கப்படுவதாக இன்றைய செய்தி.-(தி தமிழ் இந்து.)

  கற்பழிப்பும் இங்கு உண்டு, வாச்சாத்தியில் பழம்குடி பெண்களை காக்கி சட்டை கூட்டு பிரார்த்தைனை (அர்த்த ஜாமா பூஜை) செய்த நிகழ்வும் உண்டு.மற்றபடி குஜராத் மத சுத்திகரிப்பு கலவரத்தில் கற்பும்,அழிப்பும் அடுத்தடுத்து நடந்தது நாடறிந்தது.
  தீப்பெட்டிகெல்லாம் பெண்களை விற்கின்ற விளையாட்டு இங்கு கிடையாது. ஆனால் மதுப்புட்டிக்கும்,மாது குட்டிக்கும் தாய் நாட்டை பாகிஸ்தான்காரனுக்கு விற்கின்ற ராணுவ அதிகாரிகள் உண்டு.
  இதே புனித ராணுவம் இலங்கையில் தமிழ் பெண்களின் ஜாக்கெட்டிற்குள் கை போட்டு குண்டு தேடிய செய்திகளும் பின்பு கூட்டு பிரார்த்தனை நடத்தியதும் பழைய செய்தி.

  இவர்களெல்லாம் எந்த மதத்திலிருந்து வந்தவர்கள்?.பலே பாண்டியனுக்கு தெரியாதது ஒன்னும்மில்லே!

  1. Avatar
   சவரப்பிரியன் says:

   //கற்பழிப்பும் இங்கு உண்டு, //
   ஆமா சார். இந்தியாவில ஒரு கற்பழிப்பு நடந்தா போதும். உலகம் முழுசா மூமின்கள் பண்ற எல்லா அட்டூழியத்தையும் நியாயப்படுத்திடலாம் பாருங்க.

 21. Avatar
  ஷாலி says:

  // யூதர்கள் பாவிகள் என்று பைபிள் சொல்லுகிறது. ஆனால் போப்பாண்டவர் அவர்களை குடிமக்களாக வாழ அனுமதிக்கிறார். அது தவறு. அவர்களை கொல்லவேண்டும்.
  இது போன்ற அடிப்படைவாதத்தைத்தான் லூதர் முன்வைத்தார்.//

  தங்கமணி ஸார்! யூதர்களை கொல்ல வேண்டும் என்பது அடிப்படை வாதமல்ல. ஏனெனில் இயேசு கிருஸ்து யூத மக்களுக்காக யூதர்கள் மத்தியில் அவர்களுக்கு நற்போதனை செய்யவே அனுப்பப்பட்டார்.”காணாமல் போன ஆடாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்காகவே நான் அனுப்பப்பட்டேன்’ என்று தெளிவாக கூறுகிறார்.

  தனது சீடர்களை நோக்கி, நீங்கள் புற ஜாதியார் பட்டணங்களில் பிரவேசிக்க வேண்டாம். நான் காணாமல் போன ஆடாகிய இஸ்ரவேல் மக்களுக்காக அனுப்பப்பட்டவன்” என்று வலியுறுத்தி கூறுகிறார். சீர்திருத்தவாதி லூதர் என்ன செய்திருக்க வேண்டும்…ஜெர்மனியில் உள்ள யூதர்களுக்கு இயேசுவின் நற்போதனையை எடுத்துச் சொல்லி அவர்களை கிருஸ்துவர்களா மாற்றியிருக்கவேண்டும்.இதற்க்கு மாறாக அவர் யூதர்களை கொன்றிருந்தால், படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் கதைதான்.

  மேலும் இயேசுவை உலக ரட்சகராக மாற்றியது பவுலடிகள்.உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களுக்கு மட்டும் இயேசுவின் நற்செய்தியை சொல்லக்கடமைபட்ட திருச்சபைகள்; இயேசுவின் போதனையைக் கைவிட்டு பவுலின் போதனையை பரப்புகின்றன. அதிக கூட்டம் அதிக வசூல், மல்டி நேசனல் மதக் கம்பெனியாக பவுல் கிருஸ்த்துவம் உள்ளது.பாவப்பட்ட மனுஷ குமாரன்…தேவகுமாரனாகி ஒவ்வொரு சுரூபத்திலும் தொங்கிக்கொண்டிருக்கிறார்.ஆக,பரலோக ராஜ்ஜியம் நெருங்கி விட்டது.வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே!..எல்லோரும் எங்கள் கம்பெனிக்கு வாருங்கள்!

  1. Avatar
   paandiyan says:

   கிறித்துவம் கூட இந்த அசிங்கம் உண்டு ? கூகுளே ……

 22. Avatar
  Dr.G.Johnson says:

  ” இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை.ஏன் ? ” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக் கட்டுரையில், அப்படித் தேவை என்றால் அதற்கு மார்ட்டின் லூதர் போன்றவர் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளதால், இப்போது மார்ட்டின் லூதர் செய்தது சரியா தவறா என்ற வாதத்தில் இறங்கியுள்ளோம். இதில் BS நியாமாக வாதிடுவது தெரிகிறது. நண்பர் ஷாலி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மாட்டின் லூதரையும் அவருடைய முரண்பாடுகளையும் விளாசுகிறார். பாண்டியனும் தங்கமணியும் தங்கள் பங்கை ஆற்றுகின்றனர். ஆக விவாதம் சூடு பிடித்து அனல் [பறக்கிறது. எனக்கு உண்மையில் மகிழ்ச்சிதான் காரணம் இதன் மூலமாவது மார்ட்டின் லூதரைப் பற்றி திண்ணை வாசகர்கள் தெரிந்துகொள்வார்கள் என்பதால்! அதற்கு காரணமும் உள்ளது.
  நான் மார்ட்டின் லூதர் உருவாக்கிய லுத்தரன் சபைக் கிறிஸ்துவன். என்னுடைய சபையின் பெயர் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. இதை தமிழகத்துக்கு கொண்டுவந்தவர் சீகன்பால்க் எனும் ஜெர்மானிய சுவிசேஷகர் ( Missionary ). இவரை அனுப்பியவர் டென்மார்க் அரசர். அவர் 6 மாதங்கள் கப்பலில் பிரயாணம் செய்து தரை இறங்கியது தரங்கம்பாடியில். அங்கு டேன்ஸ்பர்க் கோட்டையும் துறைமுகமும் டேனிஷ்காரர்களிடம் இருந்தது. அங்குதான் இந்தியாவின் முதல் சீர்திருத்தச் சபையை ( First Protestant Congregation in India ) உருவாக்கினார். அங்கிருந்து இறைப்பணியாளர்கள் சுற்று வட்டார கிராமங்களுக்குச் சென்று இறைப்பணி செய்தபோது என்னுடைய சொந்த ஊரான தெம்முர் ( சிதம்பரத்திலிருந்து 10 கிலோமீட்டர் ) வந்து அங்கு ஒரு சபையை உருவாக்கினர். அப்போதுதான் என்னுடைய தாத்தாவும் பாட்டியும் கிறிஸ்துவர்கள் ஆனார்கள்.
  என்னைப் பொறுத்தவரை இந்த சீர்திருத்தச் சபையில் நான் எந்தவிதமான மூட நம்பிக்கையையும் காணவில்லை. மார்ட்டின் லூதர் வற்புறுத்திய வசனம், ” விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் ” என்பதின் அடிப்படியில்தான் இந்த லுத்தரன் திருச்சபை இயங்குகிறது. எங்களுக்கு போப்பாண்டவர் கிடையாது. தமிழ் நாட்டின் எல்லா லுத்தரன் திருச்சபைக்கும் ஒரு பேராயர்தான் ( Bishop )உள்ளார்.அவர்தான் ஆன்மீகத் தலைவராகச் செயல்படுகிறார்.
  எங்கள் ஆலயங்களில் சிலைகள் கிடையாது. பீடத்தண்டையில் வெறும் சிலுவைதான் உள்ளது. அதில்கூட இயேசுவின் திருஉருவம் இருக்காது. அவருடைய படங்கள் வைக்கமாட்டோம். ஆகவே உருவ வழிபாடு கிடையாது.
  நாங்கள் கன்னி மரியாளை வணங்குவதில்லை. அதுபோலவே தூயவர்கள் ( Saints ) என்பவர்களை நாங்கள் வணங்குவதில்லை.எங்களுடைய போதகர்கள் ( Pastors ) மணமானவர்கள். அவர்கள் தாடிகள் வைத்துக்கொள்வதில்லை. அவர்கள் ஆலய சபைச் சங்கத்துக்கு கட்டுப்பட்டவர்கள். தனிப்பட்ட முறையில் அவர்களிடம் பாவத்தைச் சொல்லி மன்னிப்பு கேட்பதில்லை. எங்களுடைய ஆராதனைகள் வேதத்தின் அடிப்படையில் நடைபெறுபவை. தமிழில் வேதாகமும், ஞானப்பாட்டு, கீர்த்தனை நூலும் பயன்படுத்துகிறோம். பொதுவான இராப்போஜன ஆராதனைகளின்போது பாவமன்னிப்பு கடவுளின் பெயரால் வழங்கப்படும்.பாவத்தை மன்னிப்பவர் கடவுள்தான் என்று நம்புகிறோம். நாங்கள் பூஜைகள் செய்வதில்லை. சாமி சிலை வைத்து மாலைகள், பூக்கள் போடுவதில்லை. சாமிக்கு பொது திருவிழாக்கள் நடத்துவதில்லை. சாமி சிலையை தூக்கிக்கொண்டு தெருத்தெருவாக ஊர்வலம் போவதில்லை.
  இவையெல்லாம் செய்வதால் நாங்கள் இதை சீர்திருத்தச் சபை என்கிறோம். இதில் எதாவது தவறுகள் உள்ளதா? இப்படியெல்லாம் செய்வதுதான் சரி என்று கூறியவர் மார்ட்டின் லூதர்! இவை சீர்திருத்தம் இல்லையா? அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   paandiyan says:

   மார்ட்டின் லூதர் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது . நான் அந்த விவாததிற்குல் போகவில்லை . ஆனால் முஸ்லிம் கட்டுரை வந்தால் அதை ஹிந்துவை பார் என்று எசுவது சூடுபுடிக்கும் . இது ஒரு மன வியாதி பலருக்கு . நீங்கள் இங்கு வந்ததால் பாவம் உங்களயும் பகைக்க முடியாமல் , கருத்தும் வெளிப்படியாக இல்லாமல் ஒரு சிலர் தினறுவது எனக்கு மகிழ்ச்சிதான் .

   1. Avatar
    BS says:

    தெரிந்து கொள்ளுங்கள். எல்லா மதங்களைப்பற்றியும் – குறிப்பாக, கிருத்துவம் – அதன் முக்கிய பிரிவுகள் – இசுலாம் – சீக்கியம், சமணம், பவுத்தம் – இந்தியாவில் புழங்கும் இவைகளைப்பற்றி நாமறியும்போது நம் மனம் விசாலப்படும். நாமறியா அனைத்தும் முட்டாள்தனமாவை என்று உடனே பாய்ந்து கடித்துக்குதறும் குணம் மறையும். நிதானமான சிந்தனை நமக்குத் தெளிவை உண்டாக்கும். தெரிந்துவிட்டால் உடனே நாம் அம்மதத்த்வராகி விடுவோம் என்ற பயம் தேவையில்லை. .

    1. Avatar
     paandiyan says:

     இந்த உலகில் நாம் ஒன்றும் இல்லை என்ற தத்துவம் உங்களுக்கு என்று புரிய போகின்றது ??

     1. Avatar
      BS says:

      உலகமே மாயை என்று சொல்ல வருகிறீர்கள். இல்லையா? அதாவது சங்கரரின் மாயாவாதம். முதலில், இந்துமதப்பிரிவில் வேதாந்திகளைத் தவிர மற்றவர்கள் ஏற்கவில்லை.

      இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரே தத்துவம் என்பது உலகில் நடக்காது. உலகம் வேறுபாடுகளின் மேலேதான் வாழ்கிறது. இது என்றாவது ஒருநாள் உங்களுக்குப் புரியும்.

      That’s why we are seeing sects within sects within sects within sects. There is no end to this growth of branches in diverse directions. But the tree is one. It is possible to live with unity in diversity. Sankara didn’t bother how ordinary masses will live. All he bothered was about how gnanis will live. For gnanis, the world may be maya. But for all others, it is substantial, with which they will have to pull through and suffer or be happy depending upon their attitude and approach. Think more Pandian. You will get out of the maya theory.

 23. Avatar
  suvanappiriyan says:

  டாக்டர் ஜான்ஸன்!

  நீங்கள் சொல்வது உணமையானால் 90 சதவீதம் நீங்கள் இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறீர்கள். உங்கள் சபையில் ஏசுவின் பங்கு என்ன? அவர் கடவுளின் குமாரரா? அல்லது முகமது நபியைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியா?

  பைபிளில் பல முரண்பட்ட கருத்துக்கள் வரும் போது உங்கள் திருச் சபை அதனை எதிர்க்காதா? பைபிளின் கருத்துக்களை முற்றிலுமாக ஒத்துக் கொள்கிறீர்களா? அல்லது அவற்றில் சில வற்றை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறீர்களா?

 24. Avatar
  BS says:

  //மேலும் இயேசுவை உலக ரட்சகராக மாற்றியது பவுலடிகள்.உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களுக்கு மட்டும் இயேசுவின் நற்செய்தியை சொல்லக்கடமைபட்ட திருச்சபைகள்; இயேசுவின் போதனையைக் கைவிட்டு பவுலின் போதனையை பரப்புகின்றன. //

  ஏற்கனவேஎழுதியபடி, இயேசு தான் ஒரு மதத்தை உருவாக்குகிறோமென்று நினைக்கவில்லை. தன்னை இறைவன் என்றும் கூறிக்கொள்ளவில்லை.

  இயேசுவின் செயலப்பாடுகள் யூத சமூகத்துக்குள்ளே. யூத மதம் கமர்சியலைப்பண்ணப்படுதலையும் ஏழைமக்கள் அவமானப்படுத்தப்படுதலையும் கண்டு ஒரு கான்சியஸ் டிசிசனாக தன் போதனைகளை முன் வைத்தார். அவர் செயல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சினகாக் உள்ளே வட்டிக்கடை வைத்தவர்களை சவுக்காலடித்தார். ஒட்டகம் ஊசியின் காதில் நுழைந்தாலும் பணக்காரன் பரலோக இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. ஏழை கண்டிப்பாக இறைவனால் நற்கதிக்கு அழைக்கப்படுவான். என்றார். சண்டை சச்சரவுகள் ஏற்றதாழ்வுகளினால் மக்கள் பட்ட கஷ்டங்கள் பார்த்தே ஒருவரையொருவர் மன்னித்து வாழுங்கள்; அன்பு காட்டுங்கள் என்றார். இவையெல்லாம் போதனைகள். From these we can understand that Jesus was a historic necessity – an inevitable product of circumstances; and his emergence was just as a precher or a teacher only to guide the people who were bieng misguided. இப்படிப்பட்ட போதனைகள் பணக்கார வர்க்கத்தைக் கோபமடையச்செய்ததால் அவர்கள் சதியில் இவர் மாண்டார். அவர்களுக்கு பலத்தான் பொலிடிகல் கனெக்சன்கள் இருந்தபடியால்.மேலும் மறைத்தூதர்கள் வரிசை யூத மதத்தில் உண்டு. எனவே இப்படிப்பட்ட போதனையாளர்களை அவ்வரிசையில் வைத்துப்பார்த்தனர். இவர்தான் நாம் எதிர்ப்பார்த்தவரோ என்று நினைக்காத்தொடங்கினர். யூத குருமார்களுக்குப் இவரை அப்படி ஏற்க பிடிக்கவில்லை. ஏனெனில் இவர் அவர்களை விமர்சித்தார்.

  இப்படி இயெசுவை இசுரேலிலியே வரலாறு விட்டிருந்தால், யூத மதத்திற்குள் தோன்றி அதற்குள்ளே மறைந்திருப்பார். பவுல்தான் அதை மாற்றி இயேசுவை வெளியே கொண்டுவந்தார்.

  விவிலியம் என்பது நான்கு பேர் (மத்தேயு, மார்க்கு, லூக்கு, ஜாண்) எழுதிய இயேசுவின் சரிதை மட்டுமன்று. பவுலின் இசுரேலுக்கு வெளியே உள்ள யூதரல்லா மக்களிடமும் பேச்சுக்களையும் சேர்த்தே. தங்களை விட கீழான மக்கள் என்று யூதர்களால் கருதப்பட்டோரிடமும் சென்று புதியமதத்தைச்சொன்னார். எனவே பவுல் இல்லையென்றால், இன்றைக்கு மருத்துவர் ஜாண்சன் கிருத்துவராகி இருக்க மாட்டார். வாடிகனில் கத்தோலிக்கச்சபை தோன்றியிருக்காது. The real founder of Christianity was not the Isralite Jew called Jesus of Nazareth but the Sicilain Jew Paul. (It would be surprising to know he was sent from Sicily to assassinate Jesus but his conversion took place on his way to Jerusalem. Therefore, his way of shaping the concept of Jesus into a religious symbol was heart-felt and pure) இயேசு சொன்னது வேறு; பவுல் செய்தது வேறு எனற பேச்சுக்கே இடமில்லை. பவுல் செய்யவில்லையென்றால் இயேசுவே இல்லை. கிருத்துவ மதத்தைப்பற்றிப் பேசும்போது பவுலால் உருவாக்கப்பட்ட ஒன்றைத்தான் விவாதிக்கிறோம் என்று கொள்க.

  இப்படிப்பட்ட பவுலே இன்றைய கிருத்துவர் என்ற போர்வையில் மக்களைச்சுரண்ட காரணம் என்பது தகாது. பவுலின் போதனைகள் ஒரு மதத்தை உருவாக்க. அவர் போதனைகளே மோசம்;. அதுதான் இன்றைய சிலரின் நடத்தைகளுக்குக் காரணம் என்பது சரியன்று. ஃபேஸ்புக்கைப்பயனபடுத்தி நிறைய பெண்களை ஏமாற்றலாம். அப்படிச்செய்ய முகநூலைக்கண்டுபிடித்தவனா காரணம்?

 25. Avatar
  ஷாலி says:

  அந்தந்த காலகட்ட மனித வாழ்க்கை நிலைமைக்கு தகுந்தாற்போல் சமத்துவ சட்டங்கள் மனிதாபிமான சட்டங்கள் எல்லா மதங்களிலும் இருக்க வேண்டும்.மனிதாபிமானத்திற்கெ திரான சட்டங்கள் எம்மதத்திலிருந்தாலும் அவை காலப்போக்கில் அம்மதத்தில் உள்ள சீர்திருத்தவாதிகளால் அச்சட்டங்கள் களையப்படும்.உதாரணமாக,

  வேத காலத்திலிருந்து தீண்டாமை உள்ளது.சங்கரரே தன் எதிரே வரும் புலையரை எட்டிப்போ! என்கிறார்.கணவன் இறந்தால் அத்தீயில் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும் என்ற “சதீ” தருமமும் இருந்தது.பால்ய விவாகம்,தேவதாசி முறை,கல்வி மறுப்பு, போன்ற பழைய சனாதன தர்மங்கள் இருக்கத்தான் செய்தது.ஆனாலும் அவ்வப்போது எழுந்த ராஜாராம் மோகன்ராய்,தயானந்த சரஸ்வதி,விவேகானந்தர்,ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரியோர்களால் அவை நீக்கப்பட்டு சீர்திருத்தம் செய்யப்பட்டது.

  அருமை நண்பர் டாக்டர்.ஜான்சன் அவர்கள் சொன்னதுபோல் கிருஸ்துவ மதத்தில் பைபிளில் சொல்லப்படாத,கன்னி மரியாள் வணக்கம்,செயின்ட் புனிதர்கள் வணக்கம்,ஆண்,பெண் கன்னித்தனம்,பாவசங்கீர்த்தனம்,உருவ வழிபாடு,போன்றவைகளை மார்டின் லூத்தர்,கால்வின் போன்ற சீர்திருத்தவாதிகளால் மாற்றப் பெற்று ஏற்றம் கண்டது.

  இதுபோல ஒரு சீர்திருத்தம் இஸ்லாமுக்கும் தேவை என்பதே முஸ்லிம் அல்லாதவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கை.உண்மையில் மேற்சொன்ன சமாச்சாரங்கள் குரானில், இஸ்லாத்தில் அறவே இல்லை என்பதால் சீர்திருத்தம் ஏதும் தேவையில்லை.

  ஆனால் முஸ்லிம்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை இஸ்லாமிய போதனைக்கு மாறாக மூட முல்லாக்களின் துர்போதனைப்படி ஷியா,சுன்னி,மசூதிகளில் மாறி மாறி குண்டு வைத்துக்கொண்டிருந்தால்.இதன் அவப்பெயர் இஸ்லாத்தின் மேலேதான் வந்து விழும் என்பதில் சந்தேகமில்லை.

  புரோகித முல்லாக்களை புறக்கணித்து,குரானை நேரடியாகப் படித்து விளங்கி செயல்படாதவரை முஸ்லிம் சமூதாயம் தீவிரவாத முத்திரையை அகற்ற முடியாது.புதிதாக கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவியவர்கள், முஸ்லிம்கள் நடவடிக்கையைப் பார்த்து வரவில்லை. மாறாக குரானை படித்து நன்கு விளங்கியே வருகிறார்கள்.தொடர்ந்து இஸ்லாமும்,முஸ்லிம்களும் பேசு பொருளாக, தலைப்பு கட்டுரையாக வருவதிலிருந்தே இதன் பின்னணி அரசியலை அறிந்து கொள்ளலாம்.

  1. Avatar
   paandiyan says:

   //கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவியவர்கள், முஸ்லிம்கள் நடவடிக்கையைப் பார்த்து வரவில்லை. மாறாக குரானை படித்து நன்கு விளங்கியே வருகிறார்கள்.//

   group study??? ha ha

   1. Avatar
    BS says:

    No harm in studying the scriptures in group. Understanding is all that is important. If group study helps you understand more and more, let them adopt that method. But after group study, go and revise it yourself because it is you, as an individual, have to write your exam and score.

 26. Avatar
  BS says:

  //கன்னி மரியாள் வணக்கம்,செயின்ட் புனிதர்கள் வணக்கம்,ஆண்,பெண் கன்னித்தனம்,பாவசங்கீர்த்தனம்,உருவ வழிபாடு,போன்றவைகளை மார்டின் லூத்தர்,கால்வின் போன்ற சீர்திருத்தவாதிகளால் மாற்றப் பெற்று ஏற்றம் கண்டது.//

  அது மருத்துவர் ஜாண்சன் மற்றும் அவர்களைப்போன்றோரின் பார்வை மட்டுமே. அப்படிப்பட்ட மாற்றங்களை அவர்கள் சீர் திருத்தங்கள் என்று சொல்லிக்கொண்டால் ஓகே. ஆனால் என்னைப்பொறுத்த்வரை, அது சரியான புரிதல் அன்று.

  விவிலியம் கன்னி மரியாளுக்குத்தான் குழந்தை பிறந்தது என்று சொல்கிறது. இதில் எவ்வித ஐயமுமில்லை. இயேசுவின் அப்பிறப்பை வைத்து ஒரு மதச்சடங்கு செய்வ்தில் தவறொன்றுமில்லை. புனிதர்கள் வணக்கம் என்பது ஓகே. கத்தோலிக்கம் தெளிவாகச் சொல்கிறது: கன்னி மரியாள், யோசேப்பு, மற்றும் அனைத்து புனிதர்கள் கடவுளர்கள் இல்லை. அவர்களுக்கு மக்களுக்கு நன்மை செய்யும் சக்தியும் இல்லை. ஆனால் அவர்கள் புனிதர்களாக இருந்தபடியால் சாதாரணமக்களுக்கு மேலாக வைக்கப்பட்டு அவர்களிடம் எங்களுக்காக இறைவனுடன் மன்றாடுங்கள் என்றுதான் வணக்கம் செய்யப்படுகிறது. மரியே எங்களை ஆசீர்வதியும் என்றால், ஒரு பெரியவரிடம் நீங்கள் ஆசீர்வாதம் கேட்பது போலத்தான் எடுக்கவேண்டும். மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்றுதான் எழுதப்பட்டிருக்கும்.

  ஆக, அனைத்துப்புனிதர்கள் வணக்கம் ரெகமண்டேஷன் சீக்கிங் என்றுதான் எடுக்கப்படுகிறது. ஆனால் பாமர மக்கள் அதற்கும் மேலாகப்போனால், என்ன செய்ய?

  பாவமன்னிப்புச்சடங்கு தேவைப்படுகிறது. இறைவனிடம் தன்னந்தனியே மன்றாடுவதும் அழுத்தப்படுகிறது. ஜெபம். அஜ்ஜெபத்திற்கு வலிமை உண்டு என்பதுதான் கத்தோலிக்கம் மட்டுமன்று; அனைத்து கிருத்துவ பிரிவுகளும் ஏற்றது. All Christian sects attach extraordinary importance to the act of prayer. It may be group prayer or one to one with God. Jesus himself demonstrated it. He often excused himself from his disciples and retreated to a lonely spot and prayed alone in solitude. (Really during one such solitude, he was caught by the Roman soldiers)

  Therefore, all Christian believe prayer, if done tuly and sincerely, will definitely reach their God and bring spiritual returns to them. Milton wrote (Milton, the poet, belongs to Dr Johnson’s sect)

  Prayer brings victories, no less renounced than war.

  ஒருவன் தன் மனப்பாரத்தை இறக்கி வைக்க ஒரு வடிகாலத்தான் பாவ மன்னிப்பு செயல். ஒருவன் பாதிரியாரின் திரைக்குப்பின் அவன் மனக்குறைகளையோ செய்த பாவங்களையோ முறையிடும்போது அப்பாதிரியார் அவனைத்தேற்றி, அவனை இயேசு மன்னிப்பார் கலங்கவேண்டாம் என்று சொல்லி அனுப்பிவைப்பார். பாதிரியார் இறைவனாகி மன்னிப்பு வழங்குகிறர என்பது கப்சா.

  பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. அப்பாவங்களை இனி செய்யாதிருப்பினும். மன்றாடி அழுது கேட்டாலும் மன்னிப்பு உண்டு என்பதுதான் மிகச்சிற்ப்பான இயேசுவின் போதனை. இன்னொரு மகத்தான போதனை பகைவனுக்கும் அன்பு காட்டவேண்டுமென்பது. இதில் முதற்போதனைக்குத்தான் பாவமன்னிப்புச்சடங்கு.

  Love and Forgiveness are the two corner stones of Christian religion. If a person who is not a Christian, has the above 2 virtues in abundance, he is a Christian indeed. This is what a Christian priest told me in discussion with me, long ago. In Vaishnavism, there are 5 virtues prescribed. If a muslim or a christian or anyone, who is not a Vaishanva, unknowing practice all the five, he is a Vaishanava indeed.

  When the catholic church makes a ritual to help its followers to assimilate and put in practice the virtue of seeking and getting forgiveness for sins, it is small mindedness to heckle at their efforts.

  உருவ வழிபாடு ஒரு ஊன்று கோல போலத்தான். அம்மா என்றால் நமமுடன் வாழும் மற்றொரு உயர் ஜீவன். அம்மா இல்லாத குழந்தைகள் எப்படி வாழும்? தன் அம்மா எப்படி இருப்பாள் என்று கற்பனைகூட பண்ணக்கூடாதென்றாலெப்படி? குழந்தைகள் போன்றோரே மனிதர்கள். அவர்கள் வெறும் வெட்டவெளியாகத் தம் மனங்களைக்கொள்ளக்கூடாது. இறைவனைக்காண முடியாது. அவன் எப்படி இருப்பான் என்றும் தெரியாது. அப்படியே வெட்ட வெளியாகப்போய்விட்டால் இறைவனுக்கும் நமக்கும் நீக்க முடியா இடைவெளி பிறக்கும். அவநம்பிக்கை மிஞ்சும். இறைவன் என்ற கான்செப்டே கற்பனை ஒருவனுக்கு இருந்தால்தான் முடியும். நம் உணர்வுகளும் கற்பனையால் எழுப்பப்பட்ட மற்ற உணர்வுகளும் சேர்ந்ததே மதம். அவை இல்லாவிட்டால் மதத்தை நாம் அனுபவிக்க முடியாது. வைணவத்தில் அச்சாதவதார திருமேனிகளை அரக்க பரக்க பாடிப்பரவினார்கள் ஆழ்வார்கள் என்ப. அத்திருமேனிகள் இல்லையென்றால் ஆழ்வார்கள் இல்லை. மதம் அழிந்தது.

  திருமேனிகளை உதாசீனப்படுத்தும்போது திக்குத்தெரியா காட்டில் மாட்டிக்கொண்ட குழந்தைகள்தான் நாம்.

  Still, I must not be so dismissive of other side. So, I conclude thus: அவரவருக்கு எப்படி முடிகிறதோ அப்படி மதத்தை அனுசரிக்கலாம்.

  From each according to his ability
  To each according to his needs

  This Marxian theory is applicable across all religious discourses. This is also endorsed differently by Holy Koran:

  To you your religion; to me my religion (Qur’an 109:1-6)

 27. Avatar
  ஷாலி says:

  ///கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை…..// paandiyan says: // group study??? ha ha //

  நம்ம பாண்டியனுக்கு எல்லாமே பகடியாகத்தான் தெரிகிறது.இருப்பினும் அவர் சொன்ன குருப் ஸ்டடியில் ஒரு உண்மை உள்ளது.கூட்டம் கூட்டமாய் வந்தவர்கள் குருப் ஸ்டடி படித்து தேர்வில் வெற்றி பெற்றால் சொர்கத்திற்க்கும் கூட்டம் கூட்டமாய் அழைக்கப்படுவார்கள்.வராதவர்கள்,தேர்வில் தோல்வி அடைபவர்கள் கூட்டம் கூட்டமாய் நரகில் தள்ளப்பாடுவார்கள்.நான் சொல்லவில்லை.குர் ஆன் சொல்கிறது.

  நிராகரித்தவர்களாய் இருந்தவர்கள் நரகத்தை நோக்கி கூட்டம் கூட்டமாய் ஓட்டிச்செல்லப்படுவார்கள். அவ்வாறாக,அவர்கள் நரகத்தை நெருங்கியதும், அதன் வாயில்கள் திறக்கப்படும்.மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்; “உங்களுடைய இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டக் கூடியவர்களும்,நீங்கள் இந்த நாளைச் சந்திக்கவேண்டிய ஒரு நேரம் வரும் என்று உங்களை எச்சரிக்கை செய்யக் கூடியவர்களுமான இறைத்தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?”
  –குர் ஆன்.39:71.

  மேலும் எவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழ்ந்தார்களோ அவர்கள் சுவனத்தை நோக்கி கூட்டம் கூட்டமாய்க் கொண்டு செல்லப்படுவார்கள்.அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்; உங்கள் மீது சலாம் சாந்தி உண்டாகட்டும்!நீங்கள் நல்ல விதமாக இருங்கள.என்றென்றும் தங்கியிருப்பதற்க்காக இதில் நுழைந்து விடுங்கள்!”-குரஆன.39:73

  இன்று சிரிக்கும் பாண்டியனுக்கு, புரிகிற பாஷையில் எம்ஜிஆர் பாடலில் சொல்வது,
  “ நல்ல தீர்ப்பை அவ்வுலகம் சொல்லும் நாள் வரும்போது
  அங்கு சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது.. அங்கே

  சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு…..

  1. Avatar
   paandiyan says:

   /“ நல்ல தீர்ப்பை அவ்வுலகம் சொல்லும் நாள் வரும்போது
   அங்கு சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது.. அங்கே

   சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு…..
   //

   we are able to see that at afgan, sryia , soodan, Iraq, Egypt etc etc etc.

  2. Avatar
   சவரப்பிரியன் says:

   //உங்களுடைய இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டக் கூடியவர்களும்,//
   எந்த வசனங்கள் ஷாலி சார்?
   இந்த மாதிரி வசனங்களா?
   66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்?

   66:3. மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.

   உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்;

   111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.

   இந்த மாதிரி இறைவனின் வசனங்களை ஓதினால் அல்லா சுவனம் தருவாராமா? அது மாதிரி சுவனம் தருவேன்னு முகம்மது சொல்ற வசனத்தையே, அல்லா சொன்னதா நினைச்சி ஓதினா அல்லா சுவனம் தருவாராமா?

 28. Avatar
  ஷாலி says:

  //உருவ வழிபாடு ஒரு ஊன்று கோல போலத்தான்……….குழந்தைகள் போன்றோரே மனிதர்கள். அவர்கள் வெறும் வெட்டவெளியாகத் தம் மனங்களைக்கொள்ளக்கூடாது. இறைவனைக்காண முடியாது….//

  திரு.BS ஸார்! உங்கள் கருத்து சரிதான்.ஆனால் எதார்த்த வாழ்க்கையில் கடவுளை கண்டது யார்? ‘கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர்” என்று இந்து மதமும்,”தேவனை முகம் முகமாய்ப் பார்த்தவன் ஒருவனும் இல்லையே!” என்கிறது பைபிள்.இஸ்லாமின் நிலையும் இதுதான்.

  பார்க்காத இறைவனை மனிதனைப் போல் கற்பனை செய்து உருவம் அமைப்பது சரியா?திருமேனிகளை வித்தியாசப்படுத்த நான்கு கைகள் எட்டு கைகள், நான்கு முகம் மிருகங்களின் தலை,மனித உருவம் இப்படி கடவுளை இரண்டுங்கெட்டானாக்கி வழிபடுவதுதான் சிறந்த கற்பனையா?

  கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் உருவத்தை கற்பனை செய்யாமல் இறைவனை இன்றும் வணங்கி வருகிறார்களே..இவர்களெல்லாம் அம்மா அறியாத அனாதைப் பிள்ளைகளா?

  ஓசை பெற்ற கல்லை நீர் உடைத்துருக்கள் செய்கிறீர்
  பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுவீர்
  வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
  ஈசன்னுக்குகந்த கல் இரண்டு கல்லுமல்லவே

  நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
  சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
  இட்டு வைத்திடத்தை விடடெழுந்திராத தேவரை
  வட்டமிட்டு மாந்தர்கள் வணங்கும்வாறு எங்கனோ?
  -சிவ வாக்கிய சித்தர்.

 29. Avatar
  paandiyan says:

  /நீங்கள் சொல்வது உணமையானால் 90 சதவீதம் நீங்கள் இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறீர்கள். உங்கள் சபையில் ஏசுவின் பங்கு என்ன? அவர் கடவுளின் குமாரரா? அல்லது முகமது நபியைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியா?

  பைபிளில் பல முரண்பட்ட கருத்துக்கள் வரும் போது உங்கள் திருச் சபை அதனை எதிர்க்காதா? பைபிளின் கருத்துக்களை முற்றிலுமாக ஒத்துக் கொள்கிறீர்களா? அல்லது அவற்றில் சில வற்றை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறீர்களா?
  ///

  shali, BS and Dr. what is your view on this?

  1. Avatar
   BS says:

   முதலில் ஓரடிப்படை உண்மையைத்தெரிந்து கொள்ளவேண்டும்.

   இசுலாமின் பிரிவுகள் ஒரு சிலவே. நானறிந்தவரை மூன்று: ஷியா, சன்னி, அஹமடியா. தமிழ்நாட்டில் நாலாவது: ஹிந்துமதம் கலந்த இசுலாம் (தர்கா வழிபாடு etc). இந்தியாவில் இவை மோதிக்கொள்வதில்லை. மதுரைக்குப்போனால் அஹமடியாக்களையும் பார்க்கலாம். சுவனப்பிரியன் சொன்ன ஒரிஜனல் இசுலாமைத் திணிக்காமல் சாத்வீகமாக எடுத்துச்சொல்லும் வகை தமிழகத்தில் உண்டு.

   கிருத்துவத்தில் ஒன்றன்று. பலபல பிரிவுகள் உள. விக்கிப்பீடியாவில் தேடிக்கொள்ளலாம். இவை எல்லாரும் அடிப்படையில் இயேசுவின் சரிதம் (விவிலியத்தின் படி) மற்றும் இயேசுவின் அடிப்படை போதனைகளில் மட்டும் உடன்படுவர். மற்றபடி ஏராளமான வேறுபாடுகள். அதே சமயம், இவர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதில்லை. அப்படியே விட்டுவிடுவர். முன்பு இருந்தது. நம் காலத்தில் இல்லை.

   இப்படிப்பட்ட பல பிரிவுகள் விவிலியத்தில் சொன்னவற்றை எல்லாம் எடுத்துக்கொள்வதில்லை. தங்களுக்கு வசதியான மாற்றங்களைச் சேர்க்கின்றன. விவிலியத்துக்குள்ளேயே எதையெதை ஏறகலாமோ அதையதை ஏற்பர். இப்படித்தான் புரியவேண்டும் இப்படிப்பட்ட மாற்றங்கள் அந்தந்த காலத்தின் சமூக கரணிகளை வைத்தும் உருவாகும்.

 30. Avatar
  சவரப்பிரியன் says:

  //சுவனப்பிரியன் சொன்ன ஒரிஜனல் இசுலாமைத் திணிக்காமல் சாத்வீகமாக எடுத்துச்சொல்லும் வகை தமிழகத்தில் உண்டு.//
  Bs.

  என்னதூஊஊஊஊ? (வடிவேலு பாணியில் படிக்கவும்) சுவனப்பிரியன், ஷாலி கொண்டாடும் ஒரிஜினல் இஸ்லாம் சாத்வீகமானதில்லையா? அது திணிக்கப்படுகிறதா?

  1. Avatar
   paandiyan says:

   he he
   உலகமெங்கும் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்கள் நடுவே மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இருபிரிவினரும் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி சென்னையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. ஷியா சன்னி ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் சார்பில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இஃப்தார் விருந்து நடைபெற்றது. இரு பிரிவு இஸ்லாமியர்களும் அதில் மகிழ்வோடு பங்கேற்றனர். இவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி கான் கூறுகையில், “ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களுக்கு உலகமெங்கும் பல பகுதிகளில் மோதல்கள் இருக்கலாம். ஆனால், ரம்ஜான் இஃப்தார் மூலமாக, சென்னை முஸ்லிம்கள், ஒற்றுமையை உலகத்திற்கு பறைசாற்றியுள்ளோம்” என்றார்.

 31. Avatar
  ஷாலி says:

  paandiyan says: //. உங்கள் சபையில் ஏசுவின் பங்கு என்ன? அவர் கடவுளின் குமாரரா? அல்லது முகமது நபியைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியா?//

  வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள்.அன்றி,அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத்தவிர(வேறெதுவும்) கூறாதீர்கள்.நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் (இயேசு கிருஸ்து), அல்லாஹ்வுடைய தூதர்தான்.அன்றி,அவனுடைய (“குன்”-ஆகுக!) வாக்காகவும் இருக்கின்றார்.அல்லாஹ்,அந்த வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைபோன்று அவரும்) அவனிடமிருந்து வந்த ஓர் ஆத்மாவே! ஆகவே அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள். (பிதா,சுதன்,பரிசுத்த ஆவி) மூவர் என்று கூறாதீர்கள்.(இவ்வாறு கூறுவதை) விட்டு விடுங்கள். அது உங்களுக்குத்தான் மிக நன்று.ஏனென்றால் வணங்கத்தக்கவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவன் சந்ததிகளை விட்டும் பரிசுத்தமானவன்.வானங்கள்,பூமியில் இருப்பவை யாவும்,அவனுக்குரித்தானவைகளே! (உங்கள் யாவரையும் பாதுகாக்க)அல்லாஹ் ஒருவனே போதுமானவன்!-குர்ஆன்.4:171.

  நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் (இயேசு) அல்லாஹ்தான் என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்போர்களாகிவிட்டார்கள்.எனினும் அந்த மஸீகோ, “இஸ்ராயீலின் சந்ததிகளே! என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்றே கூறினார்.எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவனுக்கு சுவனபதியைத் தடுத்துவிடுகின்றான்.அவன் தங்கும் இடம் நரகம்தான்.அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் ஒருவருமில்லை.

  நிச்சயமாக அல்லாஹ் (பிதா,சுதன்,பரிசுத்த ஆவியாகிய இம்) மூவரில் ஒருவன்தான்” என்று கூறியவர்களும்,மெய்யாகவே நிராகரிப்போர்களாகி விட்டார்கள்.ஏனென்றால்,ஓர் இறைவனைத்தவிர வேறு நாயன் இல்லை.ஆகவே,இவ்வாறு இவர்கள் கூறுவதிலிருந்து விலகிக்கொள்ளாவிடில்,அவர்களிலுள்ள நிராகரிப்பவர்களைத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும்.-குர்ஆன்.5:72,

 32. Avatar
  ஷாலி says:

  சவரப்பிரியன் says://எந்த வசனங்கள் ஷாலி சார்?
  இந்த மாதிரி வசனங்களா?//

  நம்ம சவரத்திற்கு இஸ்லாமைப்பற்றி வேரோடும்,வேரோடி மண்ணுமாகத்தெரிகிறது.நம்ம தங்கமணி ஸார்! தம்பியாக இருப்பார் போல் தெரிகிறது.ஒன்னும் தெரியாத அப்பாவிகளிடம் ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம்.வேரடி மண்ணுக்கு சொல்கிற தகுதி நமக்கில்லை.திண்ணை தளம் அனுமதிக்கிறவரை அவர் எதையும் அள்ளிவிடலாம்.நெஞ்சத்திலுள்ள வஞ்சத்திற்கு எந்த பதிலும் ஏற்புடையதல்ல.ஆபிரகாமிய அலர்ஜி நோய்க்கு நம்மிடம் மருந்தில்லை.நம்ம BS ஸார்! சொன்ன பதில்தான் என்னுடையதும்.

  To you your religion; to me my religion (Qur’an 109:1-6)

  1. Avatar
   சவரப்பிரியன் says:

   டவுசர் கிழியும்போது உடனே “உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு” என்று எடுத்துவிட்டு தப்பிக்கிறீர்களே. அந்த அறிவுரையை, அடுத்தவர் மதத்தில் தலையிட்டு ஆயிரம் வசவுகளையும், விமர்சனங்களையும் குரான் வைக்கும்போதும் உபயோகப்படுத்தலாமே?

 33. Avatar
  ஷாலி says:

  paandiyan says // we are able to see that at afgan, sryia , soodan, Iraq, Egypt etc etc etc.//

  பாண்டியன்! நம்ம நாடு அறுபத்து நாலு இந்து தேசங்களாக இருந்தபோது அவர்கள் ஒருவருக்கொருவர் ஓயாது அடித்து சண்டை போட்டுக்கொண்டார்கள்.ஈரான் முகலாயர்கள் உள்ளே நுழைந்து ஒரே தேசமாக்கி சண்டையை நிறுத்தினார்கள்.இதை இன்னும் அகண்ட பாரதமாக்கி இலங்கை,பழைய காந்தாரம் என்ற ஆப்கானிஸ்தான் வரை விரிவு படுத்த நீங்க ஆசைப்படுகிறீர்கள்.உங்கள் ஆசை நிறைவேறினால் இன்று நடைபெறும் இலங்கை பிரச்சினை,மற்றும் ஆப்கானிஸ்தான் அல்லதொல்லை எல்லாம் ஒழிந்து இராமராஜ்யம் வரும் மரண அமைதி மலரும்.

  இதே நிலைதான் மத்திய கிழக்கு நாடுகளிலும்,ஒரே அரபு மொழி பேசும் நாடுகள் தேசியங்களாக பிரிந்து இன்று சண்டையிட்டு வருகின்றன.இவைகளை அமெரிக்காவோ,அல்லது ஐஎஸ்ஐஎஸ் களோ ஒன்று படுத்தி ஒரே அகண்ட அரபுக்கண்டமாக மாற்றி விட்டால்,இங்கும் மரண அமைதி வந்துவிடும்.அதுவரை சலசலப்பு இருக்கத்தான் செய்யும்.இஸ்லாத்திற்காக எவனும் அங்கு சண்டையிடவில்லை,இருப்பிடத்திற்க்காக,ஆட்சி அதிகார பீடத்திற்க்காக….கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.உங்கள் ஆசை நிறைவேறும்.

  1. Avatar
   சவரப்பிரியன் says:

   // ஐஎஸ்ஐஎஸ் களோ ஒன்று படுத்தி ஒரே அகண்ட அரபுக்கண்டமாக மாற்றி விட்டால்,இங்கும் மரண அமைதி வந்துவிடும்.//
   உண்மைதான். அந்த வழியில்தான் உலகெங்கும் இஸ்லாம் சென்றுகொண்டிருக்கிறது.

 34. Avatar
  BS says:

  வடிவேலு பாணியில் படிக்கவும்

  நம்ம ஊர்ல எங்கே குண்டு வைச்சாக? எத்தினி பேர் செத்தாக? சொல்லுங்கப்பூ!

  தமிழகத்தில் மக்கள் தர்கா வழிபாடு செய்து கொண்டுதானிருக்கிறார்கள். தூய இசுலாமில்லை எனவே உங்களை நாங்கள் கொல்வோம் என்று எந்த தர்காவிலோ உருஸ் ஊர்வலத்திலோ குண்டு வெடிக்கவில்லை.

  Suvanappiriyan has said, the pure Islam lobby continues to persuade the Tamil Muslims to give up such the Hinduised Islam and return to the original Islam. This propagation is pacifist in the sense I have described above.
  In my view, it is Tamil Muslims’ internal affairs. If everything is pacifist, we have no need to raise our voice.

  1. Avatar
   சவரப்பிரியன் says:

   //வடிவேலு பாணியில் படிக்கவும்
   நம்ம ஊர்ல எங்கே குண்டு வைச்சாக? எத்தினி பேர் செத்தாக? சொல்லுங்கப்பூ!//
   வடிவேலு உங்களைவிட அதிகம் பத்திரிக்கை படிப்பார் என்று நினைக்கிறேன்.
   கோயம்புத்தூர்ல என்ன பூவா போட்டாங்க?

   1. Avatar
    BS says:

    கோயம்புத்தூரிலே முசுலீம் மஜுதி மேலே குண்டுபோட்டு முசுலீம்களைக்கொன்றார்களா?

    முசுலீம்கள் உட்சண்டைகள் பற்றித்தான் பேசறோமுன்னு உடனே மறந்தா எப்படீங்கண்ணா?

 35. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பு நண்பர் BS அவர்களே, சீர்திருத்தம் பற்றி தாங்கள் கூறியுள்ளது குறித்து நான் சில விளக்கம் கூறவிரும்புகிறேன். கிறிஸ்துவர்களுக்கு பத்து கட்டளைகள் கடவுளால் தரப்பட்ட வழிகாட்டிகள்.அவற்றில் முதலாம் கட்டளையில், உருவ வழிபாடு வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அது வருமாறு:
  ” உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
  மேலே வானத்திலும்,கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
  நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
  என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.”

 36. Avatar
  Dr.G.Johnson says:

  ” I am your God….you shall have no other gods before me. ” To have other gods is idolatry, and that is the blanket sin. It is the term that covers all evil. Every kind of sin that man can commit boils down to idolatry because he is putting something before God. There is only one God Who is the only presence and the only power “…Emmet Fox, The Ten Commandments. The Master Key to Life ( 1953 )

 37. Avatar
  Dr.G.Johnson says:

  “…. Your statue is gold; it is wood; it is stone; or if in thought you trace it to its origin, it is earth, which has received form at the artist’s hands.But my practice is to walk upon earth, not to worship it. For I hold it sin ever to entrust the hopes of the soul to soulless things. “… Clement of Alexandria ( 3rd century ) Exhortations to the Greeks.

 38. Avatar
  Dr.G.Johnson says:

  உண்மையான ஒரே கடவுள் இருப்பதை உலக மக்கள் அறிந்து கொள்வது நல்லது. இதையே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது இன்னும் நல்லது.அதைத்தான் தமிழ் சான்றோர்கள் ” ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்று தாரக மந்திரமாகச் சொன்னார்கள். கடவுள் மீது நம்பிக்கை இல்லாத அறிஞர் அண்ணாகூட இதை ஏற்று மேடைகளில் கூறியதுண்டு. ஆனால் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது.
  நண்பர் BS அவர்கள் உருவ வழிபாடு ஒரு ஊன்றுகோல் போன்றது என்கிறார். இன்று தினமும் காலையில் சன் தொலைக்காட்சியில் ஆண் பெண் சாமி சிலைகளை எண்ணெய், நெய், தேங்காய் நீர், சந்தானம், வெண்ணை, பஞ்சாமிருதம்,போட்டு குளிப்பாட்டுகிறதை நான் பார்ப்பதுண்டு. அப்போது பெண் சாமியை ஆண் பூசாரி குளிப்பாட்டுவது சரியா என்று எண்ணுவேன்.சாமிகள் குளித்து உடை மாற்றுவதை இப்படி பகிரங்கமாக ஒலி /ஒளி பரப்புவது சரியா என்றும் எண்ணுவேன். அவற்றில் சில சிற்பங்கள் கோரமான வடிவங்களாகவும் இருப்பதுண்டு.இதைப் பார்க்கும் குழந்தைகள் இவைதான் கடவுள் என்றும்,கடவுள் இப்படித்தான் இருப்பார் என்றும் நம்பிவிடுவார்கள்.அவையெல்லாம் உண்மையான கடவுளின் உருவங்கள் அல்ல, அவை உள்ளூர் சிற்பியால் செதுக்கப்பட்ட ஊயிரற்ற உருவங்கள் என்பதை அவர்களுக்கு யார் சொல்லித்தருவது? இத்தகைய உருவ வழிபாடு எவ்வாறு குழந்தைகளுக்கு ஊன்றுகோல் எனலாம்? கற்பனைக்கு அப்பாற்பட்டவர் கடவுள்.அவர் மகா பெரிய சக்திமிக்கவர். அவரை யாராலும் காண முடியாது. இதுபோன்ற பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்லி பிள்ளைகளை வளர்ப்பது சாலச் சிறந்தது.எவனோ ஒரு ஊர் பேர் தெரியாத சிற்பி கருங்கல்லில் உளியால் செதுக்கிய ஒரு உருவத்தை கடவுள் என்று சொல்லி தினமும் குளிப்பாட்டி, ஆடை உடுத்தி, மாலை அணிவித்து பூக்கள் போட்டு கும்பிடுவது எவ்வாறு நமக்கு ஊன்றுகோல் ஆகும்? அதோடு கடவுளுக்கு மரணம் இல்லை. உயிருள்ள கடவுளுக்கு எதற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும் என்றும் எண்ணுவேன். அன்னை மரியாளுக்கும் சிலைகள் வைத்து மாலைகள் போட்டு, பூக்கள் போட்டு, மெழுகுவர்த்திகள் கொளுத்தி வணங்குகிறார்கள். இதுவும் உருவ வழிபாடுதான். அன்னை மரியாளை யாரும் பார்த்ததில்லை. உள்ளூர் கலைஞன் அவன் கற்பனையில் தோன்றிய வகையில் செய்யும் சிலைதான் அன்னை மரியாள் என்ற உருவம்.
  இத்தகைய உருவங்களையும், சிலைகளையும் கடவுள் என்று எண்ணிக்கொண்டு வழிபட வேண்டாம், அது முதலாம் கற்பனைக்கு விரோதமானது என்றுதான் புரட்சி செய்தார் மார்ட்டின் லூதர்.
  அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   paandiyan says:

   //எங்களுக்கு போப்பாண்டவர் கிடையாது. தமிழ் நாட்டின் எல்லா லுத்தரன் திருச்சபைக்கும் ஒரு பேராயர்தான் ( Bishop )உள்ளார்.அவர்தான் ஆன்மீகத் தலைவராகச் செயல்படுகிறார்.
   எங்கள் ஆலயங்களில் சிலைகள் கிடையாது. பீடத்தண்டையில் வெறும் சிலுவைதான் உள்ளது. //

   ஹிந்துவிலும் உருவ வழிபாடு இல்லாதவர்கள் உண்டு . அவர் அவர் நம்பிக்கை அவர்களுக்கு .

 39. Avatar
  சவரப்பிரியன் says:

  ஷாலி, ஜான்ஸன் போன்றோர் எழுதும் அவதூறுகளை பிரசுரிக்கும் திண்ணை என் கருத்துக்களை மட்டுறுத்துவது ஏனோ?

 40. Avatar
  Rama says:

  I occasionally look at Thinnai for laughs these days. I mean, who can be more comical than Shalli or SP or our own BS ? Thinnai has some peculiar aversions. In the past, a lot comments did not see the light of the day because they were written in English.You see, Thinnai is an ardent lover of Tamil and anything in English will not be tolerated!!Another MK in another Aavatar! But, it is happy now to publish a lot comments, all written in English. May the discrimination and the mediocrity continue to flourish in Thinnai!!

 41. Avatar
  sanjay says:

  Johnson,

  Your post shows your ignorance of hinduism. To cut a long story short, you must understand that it is very difficult for people to imagine abstract things. For that idol worship is necessary. It is the first step.

  Of course, if you do not believe in God at all, that is a different story. In that case, it would be best if you refrain from commenting on topics which only showcase your ignorance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *