கும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 20 of 23 in the series 21 ஜூன் 2015
வைகை அனிஷ்
தேனி மாவட்டத்தின் சின்னக்குற்றாலம் என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. இவ்வருவியைச்சுற்றி ஏராளமான வனங்கள் இருப்பதால் சுற்றுலா பிரியர்கள் எப்பொழுதும் கூட்டம் கூட்டமாக குவிந்துவிடுவர். இதற்கு காரணம் கோயில்காடுகள். கோயில் காடு, சோலைக்காடு, சாமிமலை மதிகெட்டான் சோலை, முருகமலை, செம்மன்குழி எனப் பல்வேறு பெயர்களால் ;அழைக்கப்படுகின்ற கோயில் காடுகளை தமிழகத்தில் பரவலாகக் காணலாம். ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிராம தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும். அதே தெய்வம் காவல் தெய்வமாகவும் இருக்கும். தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே 18ம் பட்டி கோயில், ஜி.கல்லுப்பட்டி அருகே பச்சிலைநாச்சியம்மன்கோவில், அல்லிநகரத்தில் வீரப்ப ஐயனார் கோயில், கும்பக்கரை அருவி அருகே ப+ம்பறையாண்டி வைரவன், செல்லியம்மன் என பல கிராம தெய்வங்கள், கிராம தேவதைகளின் பெயர்களில் இந்தக் காடுகள் இருக்கும்.
அந்தப் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அழியாமல் இருப்பதற்காக நம்முடைய முன்னோர்களால் இந்தக்காடுகள் உருவாக்கப்பட்டன. இந்தக்காடுகள் நம்பிக்கையும், பயத்தையும், பயபக்தியையும் ஒரு சேரப்பெற்றன. இந்தக்காடுகளை ஆளும் தெய்வங்களின் மேல் உள்ள பயத்தினாலும், அந்தக்காடுகள் சம்பந்தமாக மரபு வழியாக சொல்லப்பட்டு வருகின்ற பக்திகதைகளாலும், நம்பிக்கைகளாலும் காடு அழிப்பு இல்லாமல் வனத்தை பாதுகாத்தது.
கோயில் காடுகள் பகுதியில் இன்றும் கூட சில கிராமங்களில் செருப்பு அணிந்து நடக்கமுடியாது. ஒரு மரத்தின் கிளையைக்கூட வெட்டி வரமுடியாது. ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதியில்லை.இதனால் பல மலைகிராமங்களை காக்காய் பறக்காத கருங்குறிஞ்சி நாடு என அழைப்பார்கள்.
சம்பாதியிருந்த சம்பாதி வனமும்
தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை
கவேரனாங் கிருத்த கவேரவனமும்
 என்ற சிலப்பதிகார பாடல் வரிகள் மூலமாக சம்பாதிவனம், கவேரவனம் போன்ற காடுகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ப+ம்புகாரில் இருந்ததற்காகன ஆதாரங்களைக் காணலாம். மன்னர் ராஜராஜ சோழன் பிடாரி கோயில்காடு, ஐயன்கோயில் காடு ஆகியவற்றைப் பாதுகாத்து வழிபட்டதற்கான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன.
கோயில் காடுகளில் செடி, கொடிகளும் நெருக்கமாக அடர்ந்திருக்கும். கரியமில வாயுவைப் பிடித்து ஆக்சிஜனை வெளியிடுபவையாகவும் இவை திகழ்கின்றன. இந்த இயற்கை காடுகளில் மூலிகைத் தாவரங்கள் உள்பட அழியக்கூடிய நிலையில் உள்ள அப+ர்வமான பல தாவரங்களும் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. மருத்துவ குணங்கள் நிறைந்த பல மூலிகைகள் கிராம மக்களின் நோய்ப்பிணியைப் போக்குகின்றன. அங்குள்ள பறவைகள், ப+ச்சிகள், உயிர்வாழ் விலங்குகளுக்கு வாழ்விடாக திகழ்கின்றன. மண்ணானது கார்பன் மூலங்களைப் பெற்று சத்தானதாகவும் மாறுகிறது. மழைநீரை ஈர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்கவும் செய்கிறது. கோயில் காடுகளில் வழிபாட்டிற்கு களிமண்ணால் ஆன உருவங்களையே பயன்படுத்துகிறார்கள். மண்ணிலிருந்து தோன்றும் புதிய தாவங்களையும், விலங்குகளையும் இவை உருவகப்படுத்துகின்றன. திறந்த வெளியில் வைத்து காக்கப்படும் இவை களிமண்ணால் செய்யப்படும் சிற்பங்கள் என்பதால் சுற்றுச்ச+ழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு இருந்த கோயில்காடுகள் தற்பொழுது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
கும்பக்கரை அருவி
கோயில் காடுகள் நிறைந்த கும்பக்கரை அருவி பாண்டிய மன்னர்களின் புனித மரமாக திகழ்ந்த மருதமரங்கள் அதிக அளவில் உள்ளது. பாண்டிய மன்னர் காலத்தில் மருதமரங்களை வெட்டியவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கியுள்ளார்கள். மருதமரத்தின் வேர்களுக்கு இடையே தண்ணீர் பாய்வதால் பலவித நோய்கள் நீங்கும் என்றும், மூலிகை நிறைந்த அருவி என்பதால் பண்டைய காலத்தில் இந்த அருவி சிறப்பு பெற்றிருந்ததை வரலாற்று சான்றுகள் மூலம் அறியலாம். தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள குண்டஞ்சோலையில் உற்பத்தியாகி கும்பக்கரை அருவியாக வருகிறது. அருவியின் இருபக்கத்திலும் உள்ள மலைகள் கும்பம் போன்று இருப்பதால் கும்பம்-கரை-மலை என ஒன்றாகி கும்பக்கரை அருவி என அழைக்கப்படுகிறது.
கும்பக்கரை அருவி மலை அடிவாரத்தில் கும்ப முனிவர் என்றழைக்கப்படும் அகத்திய முனிவர் தவம் செய்ததாகவும் இதனால் இதற்கு கும்பக்கரை அருவி என பெயர்வந்ததாகவும் செவிவழிச்செய்தியாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கி.பி.1888 முதல் கி.பி.1945 ஆம் ஆண்டு வரை மழை பெய்யாத காலங்களில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றுகூடி ஆவணி மாதத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தால் மழைபெய்யும் என்பது இப்பகுதி மக்களின் ஐதீகம்.
கும்பக்கரை அருவில் மற்ற அருவிகளில் இல்லாத அளவிற்கு கஜம் என்று அழைக்கப்படும் பள்ளங்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் அமைந்திருக்கும். யானையின் துதிக்கையைப்போல் அமைந்துள்ளதால் அவை யானை கஜம் என்றும், உரல் போன்ற வடிவத்தில் உள்ளதால் உரல் கஜம் என்றும், யானை வயிற்றைப்போன்று அமைந்திருப்பதால் யானை கஜம் என்று அழைக்கப்படுகிறது. இதில் யானை கஜம் மிகவும் ஆபத்தான பகுதியாகும்.
அதிகாலை வேளையிலும், மாலைவேளையிலும் கும்பக்கரை அருவியின் கரை ஓரத்தில் காட்டெருமை, மான் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் பருகுவதை காண்போர்க்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இவ்வளவு பெருமை வாய்ந்த கும்பக்கரை அருவி அருகாமையில் உள்ள ஏராளமான கோயில்காடுகளில் மரங்கள் வெட்டப்பட்டு தற்பொழுது பாலைவனமாக காட்சியளிப்பது வேதனையில் ஆழ்த்துகிறது.
வரலாற்றை நினைவு படுத்தும் இடம்
திண்டுக்கல் தலைமையிடமாகக்கொண்டு பிரிக்கப்பட்ட 26 பாளையங்களை திப்பு சுல்தான் படை கைப்பற்றியபோது இப்பகுதி பெரியகுளம் ஜமீன்தார் நாகம இராமபத்ர நாயுடுவின் மேற்பார்வையில் இருந்தது. ஜமீன்தாரை கைது செய்ய திப்பு சுல்தான் படைவீரர்களை பெரியகுளத்திற்கு அனுப்பினார்.
இதை அறிந்த ஜமீன்தார் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருடன் கும்பக்கரை அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலுக்கடி என்ற இடத்தில் தற்காலிக கோட்டை அரண் அமைத்து பதுங்கி இருந்தார். திப்பு சுல்தான் படைவீரர்கள் பெரியகுளம் வந்தபோது ஜமீன்தாரின் பயிற்சி பெற்ற படை வீரர்கள் மூர்ச்சை அடக்கி உயிரற்ற உயிர்களைப்போல் சாய்ந்து கிடந்தனர். அந்த வீரர்களின் கையில் ஆணி அடித்து பார்த்தபோதும் அவர்கள் அசைவில்லாமல் இருந்ததை கண்டு அவர்கள் இறந்துவிட்டார்கள் என எண்ணி திப்புசுல்தான் படையினர் திரும்ப சென்றுள்ளனர். காலத்தின் சுவடாய் இன்றும் அந்தக்கோட்டையின் சிதைவுகள் இன்றும் உள்ளது. இதே போன்று மூச்சுப்பயிற்சியில் பயிற்சி பெற்ற ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற மருதநாயகம் என்ற கான்சாகிப்பின்  கால்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ஒன்று பெரியகுளம் வடகரை நவாப் ஜாமிஆ பள்ளிவாசலில் உள்ளது.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி
செல்:9715-795795
Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்பிரம்மலிபி- நூல் மதிப்புரை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *