முனைவர் ச.கலைவாணி
இணைப்பேராசிரியர்
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர்
மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.
கார்க்கியின் தாய் காவியம் கவிதை நடையில் அமைந்த காவியமாகும். இக்காவியத்தை கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். கலைஞர் தமது கைவண்ணத்தால் குறளோவியம்ää சங்கத்தமிழ்ää தொல்காப்பியப் பூங்கா போன்ற தமிழ் இலக்கியப் படைப்புக்களைப் படைத்து தமிழ்மொழியின் சிறப்பினையும் பண்பாட்டையும் பறைசாற்றினார். மார்க்ஸிம் கார்க்கியின் ரஷ்யப் படைப்பான ‘தாய்’ நாவலைத் தமிழில் கவிதை நடையில் காவியமாகப் படைத்து தமிழரின் பண்பாட்டை ரஷ்ய இலக்கியத்தில் மிளிரச் செய்துள்ளாh.; தமிழ் இலக்கியத்தின் சாயலையும்ää பாடுபொருளையும் இதில் பயன்படுத்தியுள்ளார். இக்காவியத்தில் பாடுபொருளில் மாற்றமும் செய்துள்ளார். கார்க்கியின் தாய் காவியத்தில் பாடுபொருளையும் பாடுபொருள் மாற்றத்தையும் ஆராய்வது இக்கட்டுரை.
பாடுபொருள் :
பாடுபொருள் என்hது பாடப்படுகின்ற பொருள். இலக்கியம் பாடுவதற்கு கருவாக அமைந்த பொருள் பாடுபொருள் எனப்படும். சங்க இலக்கியம் தொட்டு இன்று வரை பாடுபொருள் மாறிக்கொண்டே இருக்கின்றது. பண்டைய காலத்தில் பாடுபொருட்களாக காதலும் வீரமும் இருந்தன. பின்னர் அறம் பாடுபொருளானது. இன்றைய இலக்கியங்களில் வீரம் முதல் நடப்பு நிகழ்வுகள் வரை பாடுபொருள்கள் பாடப்படுகின்றன. கலைஞரின் கவிதைநடையில் அமைந்த கார்க்கியின் தாய் காவியத்தில் தாய்மையும் வீரமும்ää வறுமையும் பாடுபொருளாக்கப்பட்டுள்ளன. கலைஞரின் கார்க்கியின் நிலோவ்னா (தாய்) சங்க இலக்கியத்தின் வீரத்தாயையும்ää பாவெல் (மகன்) சங்க இலக்கியத்தின் வீரமகனையும் நமக்கு நினைவுபடுத்துகின்றனர்.
தாய்மை :
நிலோவ்னாää மைக்கேல் தம்பதியரின் வீர மிக்க மகன் பாவெல். வீரத்தாய் நிலோவ்னா குடிகாரக் கணவனிடமிருந்து தன் மகனைக் காத்து வீரமிக்கவனாக வளர்க்கிறாள். இச்செயல் “ஈன்று புறந்தருதள் என்தலைக் கடனே” (புறம் 312) என்ற பாடலில் மகனைப் பெற்று பாதுகாப்பாக வளர்த்தல் என்னுடைய கடமை என்று ஒரு வீரத்தாய் பாடுவதை நினைவூட்டுகிறது. பாவெல் தாயின் சொற்கேட்டு வளர்கிறான். தன் மக்களுக்காகப் போராட்ட களத்தில் களமிறங்குகிறான். இதனை கலைஞர்ää
“அவர்களில் பாவெலும் ஒருவன்
என்கின்றபோது – இந்த அன்னை மனம்
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கின்றது” – ஆனால்
அவன் சூறாவளியைச் சூழ்ந்தெரிக்கப்
போகிறான் என நினைக்கும்போது
சுமந்து பெற்றவளின் இதயமல்லவா
சுக்கு நூறாகிறது” (ப.47)
என்று எழுதுகிறார். இதனை நோக்கும் பொழுது மக்கட்பேறு அதிகாரத்தில்ää
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” (குறள் 69)
என்று வள்ளுவர் கூறிய தாய்மையின் தன்மையினை உணரமுடிகிறது. மகனை நினைத்துப் பெருமிதம் கொண்ட தாயின் உணர்வு பூங்கண் உத்திரையாரின் புறநானூற்றுப் பாடலின் பாடுபொருளைக் கொண்டிருக்கிறது.
“மீன் உண் கொக்கின் தூளி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கி சிதரினும் பலவே” (புறம் 277)
தம்மகன் களிற்றை எறிந்து கொன்றான் என்ற செய்தியைக் கேட்ட தாய் ஈன்ற பொழுதை விட உவகை கொண்டாள். அதுபோல நிலோவ்னாவும் பெருமிதம் கொள்கிறாள்.
மேலும் கார்க்கியின் தாய் இலக்கியத்தில்ää
“தன்னை ஏதோ ஒரு பணிக்குத்
தாரை வார்த்து விட்டான் மகன் என்று
தாய் உணர்ந்து கொண்டாள்”(ப.20)
பாவெல் போராட்டத்திற்குத் தன்னை அர்ப்பணித்துவிட்டான் என்பதை உணர்கிறாள் அவனது தாய் என்று எழுதுகிறார் கலைஞர். போராட்டத்திற்குச் செல்லும் மகனைக் கண்டு கலங்காமல் வென்றுவா என அனுப்புகிறாள். இதனை
“தாய் கலங்கவில்லை தணலான நெஞ்சையும்
காட்டிக்கொள்ளவில்லை பாவெலிடம்
தன்னை வெல்வான்ää தரணியை வெல்வான்
தைரியமாய்ப் போய்வா என்றாள்”(ப.104)
என்ற வரிகள் உணர்த்துகின்றன. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனால் கொள்ளப்பட்ட வீரர்களின் தாயராகிய மறக்குடிப் பெண்கள்
“எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப் புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்கு என
மூதிற் பெண்டிர் கசிந்து அழ” (புறம் 19)
என்று உள்ளம் நெகிழ்ந்தனர் என்று புலவர் ஒருவர் கூறுகிறார். புறநானூற்றுத் தாய் ஒருத்தி தன் மகனுக்குää
“வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமோ”(புறம் 279)
என்று போர்க்களம் அனுப்புகிறாள். அதுபோல பாவெலின் தாயும் பாவெலியை அனுப்புவதாகக் கலைஞர் குறிப்பிடுகிறார். இரண்டு இலக்கியங்களும் ஒரே பாடுபொருளைக் கொண்டிருக்கின்றன. தாய்மையின் பண்பினையும் வீரத்தையும் இரு இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.
வறுமை :
புறநானூறும்ää ஆற்றுப்படை நூல்களும்ää பதிற்றுப்பத்தும் இல்லையெனில் சங்ககால வறுமையைப் பற்றி மிகுதியாக நாம் அறிந்திருக்க இயலாது. மேற்குறிப்பிட்ட நூல்களில் கொடை பாடுபொருளாக இருந்தது. எனவே வறுமையுடையவர்கள் புரவலரை நாடிவந்து பரிசில் பெற்று வறுமையைப் போக்கினர். ஆனால் வீரர்கள் வறுமையில் வாடியதாக சங்க இலக்கியம் காட்டவில்லை. கார்க்கியின் தாய் காவியத்தில் போராட்ட வீரனான பாவெல் வறுமையில் இருந்ததாகப் படைக்கிறார் கலைஞர். இவ்விலக்கியத்தில் ‘வறுமை’ என்ற பாடுபொருள் சங்க இலக்கியத்திலிருந்து மாறுபட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் வறுமையின் தன்மை
“குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து” (சிறுபாணா.137-138) என்றும்
“முற்றா இளந்தளிர்கொய்து கொண்டு உப்பின்று
நீர் உலையாக ஏற்றி” (புறம். 159) என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதேபோல வறுமையின் தன்மையை பாவெலின் வழிää
“பாலுக்குச் சர்க்கரை இல்லை என்று
சீறுகிற சீமான்களின் மாளிகையில்
கூழுக்கு உப்பில்லை யென்று
குமுறுகின்ற ஏழைகளின் குடிசைகளில்
ஏனிந்த பேதம்…….” (ப.19)
என்று காட்டுகிறார் கலைஞர். வறுமையின் தன்மை இரு இலக்கியங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டுள்ளன.. வறுமை இருக்கும் இடமும்ää போக்கும் விதமும் பாடுபொருளால் மாற்றம் பெற்றுள்ளன.
- படைப்புக்களில் பாடப்படுகின்ற பொருள் பாடுபொருள். இது காலந்தோறும் மாற்றம் கொண்டு விளங்குகிறது.
- கலைஞரின் கவிதை நடையில் அமைந்த கார்க்கியின் தாய் காவியத்தில் தாய்மை (தாயின் வீரம்)ää வறுமை ஆகிய இரண்டு பாடுபொருள்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
- தாய்மை – சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட தாய் போலவே கார்க்கியின் தாயும் வீரமிக்க தாயாகவே காட்டப்பெற்றுள்ளாள்.
- வறுமை – வறுமையின் தன்மை சங்க இலக்கியத்தில் கூறப்பட்டது போலவே கூறப்பட்டுள்ளது. ஆனால் வறுமை இருக்கும் இடமும் போக்கும் விதமும் மாற்றம் பெற்றுள்ளது. சங்க இலக்கியத்தில் வறுமை புலவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அவர்கள் அதனைப் போக்க புரவலரிடம் சென்றனர். வீரர்களுக்கு வறுமை ஏற்பட்டதாக சங்க இலக்கியம் சுட்டவில்லை. ஆனால் கார்க்கியின் தாய் காவியம் போராட்ட வீரனுக்கு வறுமை ஏற்பட்டதாகச் சுட்டுகிறது.
துணை நூல்கள் :
- கலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் தாய்
- புறநானூறு – நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
- சிறுபாணாற்றுப்படை – நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
- திருக்குறள் – பரிமேலழகர் உரை
- மிதிலாவிலாஸ்-26
- தொடுவானம் 77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை
- தோற்றுப் போகக் கற்றுக் கொள்வோம்
- மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்
- ‘ரிஷி’யின் கவிதைகள்
- ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்
- காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்
- வீடெனும் பெருங்கனவு
- அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா
- மொழிவது சுகம் ஜூலை 18 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -4
- காரைக்குடி கம்பன் கழகம் 58ஆம் வருட விழா
- கெளட் நோய் ( Gout )
- பரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுடோவை முதன்முதல் நெருங்கிப் படமெடுத்த நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி
- மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வு
- ஆறாண்டு காலத் தவிப்பு –
- வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்
- கள்ளா, வா, புலியைக்குத்து
- சிவப்பு முக்கோணம்
- ‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்
- சொல்லின் ஆட்சி
- எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?
- தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு
- அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு
- சினிமா பக்கம் – பாகுபலி
- நேர்த்திக் கடன்
- நெசம்
- வழி தவறிய பறவை
- ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை
- கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும்