கர்ணன், முதுபெரும் எழுத்தாளர்

This entry is part 7 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

உஷாதீபன்

ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். எங்கே அவர் புகழடைந்து, அவர் புத்தகங்கள் விற்பனை கூடி, தன் புத்தகங்கள் நின்றுவிடுமோ என்கிற எண்ணம். தானே ஒரு படைப்பாளியைப் புகழ்ந்து சொல்வதன் மூலம், தன்னையறியாமல் தானே தன்னைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்கிறோமோ என்கிற பயம். இப்படி இன்னும் பலவாக தமிழ் எழுத்துச் சூழல் உள்ளது. குழு குழுவாக இயங்குதல், அவர்கள் புத்தகங்களை அவர்களைச் சார்ந்தவர்களே புகழ்ந்து கொள்ளுதல், அவர்களுக்குள்ளேயே பத்திரிகை நடத்திக் கொண்டு அவர்கள் எழுத்தை அவர்களே கொண்டுசெல்லுதல், மேடை போட்டு முழங்கி (எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பது வேறு) விற்பனை செய்து கொள்ளுதல்…இம்மாதிரி பலவும் இன்றைய தமிழ் எழுத்துச் சூழலாகப் பரவி நிற்கின்றன.
20150815_225904
இத்தனைக்கும் நடுவில்தான் “கர்ணன்“ என்கிற மாபெரும் எழுத்தாளர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். தானுண்டு தன் எழுத்துண்டு என்று வறுமையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு….அவ்வப்போது அவரைத் தேடி வருபவர்களை மதித்து, செல்லும் இடங்களில் கருத்தான சொற்பொழிவாற்றி திருப்தி காண்கிறார்.
மணிக்கொடிக் காலத்து எழுத்தாளர்களிலிருந்து இன்றைய எஸ்.ரா.,ஜெயமோகன் வரை அறிவார். எந்தப் பொருளில் எப்பொழுது பேசச் சொன்னாலும் சொல்லுவதற்கு நிறைய விஷயம் இருக்கும் இவரிடம். வாய் ஓயாது நாள் முழுதும் பேசச் சொன்னாலும் எதைப்பற்றியும் இவரால் வானளாவப் முடியும். அவ்வளவு பொக்கிஷம் இவரிடம் அடைந்து கிடக்கிறது.
20150815_225926
பிரபலமான எழுத்தாளர்களின் கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு கௌரவம் பார்க்காமல் போய் அமர்ந்து விடுவார். அவர்களும் இவரை மதித்து ஒரு புத்தகத்தை வழங்கி இவரைப் போற்றி அனுப்பி விடுவார்கள். ஆனால் யாரும் பின்னர் அவரைப்பற்றி எங்கும் எப்போதும் சொன்னதில்லை. அது ஏன்? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
20150815_230017
ஏன் இப்படி இருக்கிறார்கள் இவர்கள்?
இந்தத் தலைப்பில் எழுதச் சொன்னால் கூட இவரால் ஒரு புத்தகம் உடனே எழுதிவிட முடியும். இவரைத் தெரிந்து கொள்வதும், ஆதரிப்பதும் நம் கடமை.
மதிக்கத்தக்க சிறந்த படைப்பாளி திரு “கர்ணன்“ அவர்களின் புத்தகங்களை அறிவோமா?
நாவல்
1) உள்ளங்கள் 1980 (2) காந்தத் தூண்டிலில் சிக்கிய கனவுகள் 1978 (3) மயங்காத மனசுகள் 2003 (4) ஊமை இரவு 2009 (5) பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் 2008 (6) மறுபடியும் விடியும் 2008 (7) திவ்யதாரிணி 2011.

சிறுகதைகள் –
(1) கனவுப்பறவை 1964 (2) கல்மனம் 1965 (3) மோகமுக்தி 1967 (4) மறுபடியும் விடியும் 1968 (5) புலரும் முன்… 1974 (6) வசந்தகால வைகறை 1977 (7) பட்டமரத்தில் வடிந்த பால் 1994 (8) இந்த மண்ணின் உருவம் 1999 (9) மாறும் காலங்களில் இதுஒரு மதன காலம் 2002 (10) இசைக்க மறந்த பாடல் 2004 (11) முகமற்ற மனிதர்கள் 2004 (12) நெருப்பில் விளைந்த நிலவுப்பூ 2009 (13) பொழுது புலர்ந்தது 2013 (14) வாழ்ந்ததின் மிச்சம் 2015

கட்டுரைகள்

(1) கி.வா.ஜ. முதல் கண்ணதாசன்வரை 2011 (2) அகம் பொதிந்தவர்கள் 2012 (3) வாழ்விக்கும் மனிதர்கள் 2014 (4) வெளிச்சத்தின் பிம்பங்கள் 2015
வரலாறு
(1) அவர்கள் எங்கே போனார்கள் 2005 (2) சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு 2011 (3) இன்று இவர்கள் 2013 (4) இந்தியாவின் எரிமலை 1979 (5) விடிவை நோக்கி 1980 (6) ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் 1981 (7) சிட்டகாங் புரட்சி வீரர்கள் 1981

ஆன்மீகம்

ஆத்ம நிவேதனம் 2008

கவிதை

நினைவின் திரைக்குள்ளே 2014

முகவரி

திரு கர்ணன்,
37, சுயராஜ்யபுரம் 4 வது தெரு,
செல்லூர்,
மதுரை – 2 .
செல் – 9487950844.

Series Navigationமொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)விலை
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

37 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  கர்ணன் என்னும் முதுபெரும் தமிழ் எழுத்தாளரை நமக்கு இங்கு அறிமுகம் செய்துள்ளார் உஷாதீபன். நன்றி. இந்த அறிமுகக் கட்டுரையில் அவர் தமிழ் எழுத்தாளர்களின் சுயநலப் போக்கைக் குறித்து கட்டுரையின் துவக்க வரிகளில் கூறியுள்ளது பாராட்டுதற்குரியது. அவர கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை. எழுத்தாளர்கள் மட்டுமல்ல, நம்முடைய கவிஞர்களும் இப்படிதான் உள்ளனர் என்பது என் கணிப்பாகும்.உதாரணமாக ஐ. உலகநாதன் என்றொரு மலேசியக் கவிஞர் பெங்களூரில் உள்ளார். ஆனால் அவருடைய பெயர் வெளியே வராமல் போனது. ஒரு கவிஞரை அடுத்த கவிஞர் வளரவிடாமல் செய்வதற்கு இது ஓர் உதாரணம். ஆனால் பேரறிஞர் அண்ணா அவரைப் பாராட்டியுள்ளார்! இவர்கள் ஏன் இப்படி உள்ளனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விடை எளிது – வறுமை! இதனால் அடுத்தவரைப் புகழ்ந்தால் எங்கே தன்னுடைய வருமானம் குறைந்துவிடுமோ என்ற பயம் இவர்களுக்கு இருக்கவே செய்கிறது.
  இந்த அவலம் ஒரு புறம் இருக்க எனக்கு இன்னொரு நெருடலும் நெடுநாள் மனதில் உள்ளது. திராவிட இயக்கம் உருவானபோது அண்ணா, கலைஞர், கண்ணதாசன், ஆசைத்தம்பி, தென்னரசு, சிற்றரசு என்று பலர் எழுத்தாளராக உருவாகி, நூல்கள் அச்சடித்து வெளியிட்டனர். இவர்கள் எழுதுவதின் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்ததோடு, நல்ல தலைவர்களாகவும், சமுதாயத்தை வழி நடத்துபவர்களாகவும் திகழ்ந்தார்கள். தமிழகத்தில் இந்த திராவிட எழுத்தாளர்கள் ஆட்சியையும் அமைத்தார்கள்.அனால் அதன்பின்பு வந்த எழுத்தாளர்கள் யாரும் தங்களுடைய புகழாலும் செல்வாக்காலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கவோ, சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய தலைவர்களாகவோ வர .முடியவில்லை. இவர்கள் எழுத்தை விற்கும் வியாபாரிகள்தானோ என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாக உள்ளது. இது பற்றி நம் திண்ணை எழுத்தாள வாசகர்கள் கருத்து கூறினால் நல்லது. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 2. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன்,

  எனக்குத் தெரிந்து ஸ்ரீ பாலகுமாரன் ஸ்ரீ சுஜாதா ஸ்ரீ ஜெயமோஹன் என்று தொடரும் எழுத்தாளர்களின் பட்டியல் வாசிப்பவர்களின் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணி அவர்களுக்கு புதிய திறப்புகளைத் தருகிறது என்று படுகிறதே. முதல் இரண்டு எழுத்தாளர்களை நிறைய வாசித்திருக்கிறேன். கடைசி எழுத்தாளரின் வ்யாசங்கள் பலவற்றையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அந்த எழுத்தில் தென்படும் பரந்த பார்வையும் தெளிவும் வாசிப்பவர்களது சிந்தனையைத் தூண்டி புதிய திறப்புகளை நிச்சயம் கொடுப்பதாக உணர்கிறேன்.

  மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து பெரும் தாரகைகளாக ஒளி வீசியவர்கள் என்றால் இசைக் கலைஞர்களில் எத்தனையெத்தனை பேரை பட்டியலிடலாம்.

  போட்டி பொறாமை இல்லாத உலகமா?

  தமிழகத்தில் எம் கே த்யாகராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, எம் எஸ் சுப்புலக்ஷ்மி அம்மாள் மற்றும் ஹிந்துஸ்தான அளவில் உத்தரபாரதத்தின் மற்றும் பூர்வோத்தர் எனப்படும் வடகிழக்கு மாகணங்களின் மக்களின் ஹ்ருதயம் கவர்ந்த பூபேன் தா எனப்படும் அமரர் ஸ்ரீ பூபேன் ஹஸாரிகா, ஷெனாய் வித்வான் ………. காசி மாநகரத்தைச் சார்ந்த உஸ்தாத் பிஸ்மில்லா கான் சாஹேப் …… இவர்களெல்லாம் சில நினைவில் வரும் இசைத் தாரகைகள். இவர்கள் மூலம் இத்துறைகளில் சாதிப்பதற்கு ஊக்கம் பெற்றோர் நிச்சயமாக சில ஆயிரம் பேராவது இருப்பார்கள்.

  1. Avatar
   jyothairllata Girija says:

   முதுபெரும் எழுத்தாளர் திரு கர்ணன் அவர்கள் பற்றி நினைவூட்டியமைக்கு உஷா தீபன் அவர்களுக்கு நன்றி. சிறு வயதில் அவர் கதைகளில் சிலவற்றைப் படித்து ரசித்திருக்கிறேன்.
   ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
   BS says:

   திரு கிருட்டிணக்குமார் அவர்களே!

   மருத்துவர் ஜாண்சன் அறிய விழைவது அன்று எழுத்தாளர்கள் பலர் அரசியலில் தலைவர்களானார்கள். இன்று ஏன் அப்;படி ஒருவரும் ஆகவில்லை?

   இசைக்கலைஞரையும் எழுத்தாளரையும் இணைப்பதா பதில். அல்லது அவர் சிந்தனயைத்தூண்டுகிறார்.இவர் தூண்டுகிறார் என்பதா பதில்.

   தெளிவான பதிலைத் தெரிந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள்.

   1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\ இசைக்கலைஞரையும் எழுத்தாளரையும் இணைப்பதா பதில். அல்லது அவர் சிந்தனயைத்தூண்டுகிறார்.இவர் தூண்டுகிறார் என்பதா பதில்.
    தெளிவான பதிலைத் தெரிந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள். \\

    அன்புடையீர். அய் அய் எம் கணபதிராமன் என்ற பெயரில் தாங்கள் இனி எழுதப்போவதில்லை……… என்று தாங்கள் இங்கு திண்ணை தளத்தில் கருத்துப் பகிர்ந்ததாக நான் ஸ்ரீமான் பாண்டியன் அவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன். வாஸ்தவமா? இதற்கு தேவரீர் உத்தரம் சாதித்தால் அதையொட்டி மேற்கண்ட தங்களது உத்தரத்துக்கு விமோசனம் செய்து விடுகிறேனே.

    1. Avatar
     ஷாலி says:

     க்ருஷ்ணகுமார் says:
     August 31, 2015 at 12:30 pm

     //அன்புடையீர். அய் அய் எம் கணபதிராமன் என்ற பெயரில் தாங்கள் இனி எழுதப்போவதில்லை……… என்று தாங்கள் இங்கு திண்ணை தளத்தில் கருத்துப் பகிர்ந்ததாக நான் ஸ்ரீமான் பாண்டியன் அவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன். வாஸ்தவமா? இதற்கு தேவரீர் உத்தரம் சாதித்தால் அதையொட்டி மேற்கண்ட தங்களது உத்தரத்துக்கு விமோசனம் செய்து விடுகிறேனே.//

     க்ருஷ்ணாஜி! என்ன எழுதுகிறீர்கள்? எட்டு மாதத்திற்கு முன்பே தங்கள் தமிழ் இந்து தளத்தில் பெயர் மாற்றம் சம்பந்தமாக திரு.BS அவர்கள் ஒரு தெளிவான விளக்கத்தை உங்களுக்கு அளித்துள்ளார்.மீண்டும் மீண்டும் // சீரேசுநாதனுக்கு ஜெயமங்களம். ஆமென்.// என்று BS அவர்களை கிண்டல் செய்வதாக நினைத்து வஞ்சப்புகழ்ச்சியாக இயேசு கிறிஸ்துவை நிந்தனை செய்கிறீர்! நல்ல மனுஷனுக்கு ஒரே பேச்சுதான் இருக்கவேண்டும்.மாற்றிப் மாற்றி பேசுவது அழகல்ல.திரு.BS உங்களுக்கு அளித்த விளக்கத்தை கீழே பாருங்கள்.

     B S says,on January 5, 2015

     (கிருஷ்ணகுமார், ஓராண்டு இப்பெயரில்தான் இங்கு எழுதுவேன். அடுத்தவாண்டு வேறுபெயர். இதற்கெல்லாம் என்ன காரணம்? என் கருத்துக்கள் படிக்கப்படவேண்டும்; சிந்திக்கப்படவேண்டும் என்ற அவாவே. நான், என் பெயர் எல்லாம் பின் தள்ளப்படவேண்டும். கிருஷ்ணகுமார் யாரென்பதைவிட அவர் என்ன சொல்கிறார் என்பதுதானே மற்றவர்களுக்கு வேண்டும்? நாமெல்லாம் வி ஐ பிக்களா? கி குமார் யாரென்று தமிழக மக்களுக்குத் தெரியாதே? சாதாரணமானவர்கள் என்ற எண்ணமிருந்தால் பெயரைவைத்து நேரத்தைப் வீணடிக்க மாட்டீர்கள்)
     http://www.tamilhindu.com/2015/01/mt1/

     1. Avatar
      க்ருஷ்ணகுமார் says:

      அன்பின் சுவிசேஷ ப்ரசங்கியார் ஷாலி, ஸ்தோத்ரம்

      *சுட்ட* பழத்தின் சுவை அறியாதவரல்லவோ நீங்கள்.

      ஜோ அமலன் அவர்களது ஒவ்வொரு அவதாராதிகளிலும் அன்பர் அவர்கள் பகிர்ந்த கருத்துக்களை என்னால் சுட்டி கொடுத்து நிறுவ முடியும். நிற்க.

      என்னுடைய கேழ்விக்கு ரொம்ப சிம்பிளான நேர்மையான பதில். ஆமாம் அல்லது இல்லை.

      ஒரே நபர் பற்பல பெயர்களில் எழுதுவது வெட்கித் தலைகுனியத்தக்க விஷயம் என்றால் மட்டிலும் இப்படி நேரடியான பதிலைச் சொல்வதற்கு லஜ்ஜைப்பட வேண்டும். ம்……..அதை வாயால் சொல்லாவிட்டாலும் நேரடியான பதில் இல்லாமை அதை ஏற்றுக்கொண்டதாகவே பறைசாற்றுகிறது.

      \\ கிருஷ்ணகுமார் யாரென்பதைவிட அவர் என்ன சொல்கிறார் என்பதுதானே மற்றவர்களுக்கு வேண்டும்? \\

      த்சோ. த்சோ. அன்பர் ஜோ அவர்கள் எந்தப் பெயரில் எழுதியபோதும் எவருடைய கருத்தையும் கருத்தாக மட்டிலும் உள் வாங்கவில்லை. மாறாக எழுதியவர்கள் முகத்தை நேரில் பார்க்காத போதும் அவர்களது ஜாதிச் சான்றிதழ் சரிபார்க்காத போதும் கருத்துக்கு கருத்துப் பதியாமல் எழுதியவரின் ஜாதியை அனுமானம் செய்து அதனால் தான் ஒரு அன்பர் தன் கருத்துக்களைப் பகிர்கிறார் என்று திரும்பத் திரும்ப சொல்லுவது வழக்கம். அமரர் மலர்மன்னன் மஹாசயரிலிரிந்து வெ சா ஐயாவிலிருந்து ஜடாயுவிலிருந்து தேவப்ரியா சாலமனிலிருந்து கருப்பையா வரைக்கும் எல்லாருக்கும் இப்படியே. இதற்கு நான் ஏற்கனவே தெளிவாக பதில் கொடுத்திருக்கிறேன். அவருக்கு அது தெரியவும் தெரியும்.

      வர்த்தமான பெயரிலும் கொஞ்ச காலம் வரை அன்பர் அவர்களுக்கு கருத்தெல்லாம் கடையில் விற்கும் சமாசாரம். கருத்துச் சொல்பவர் ஜாதியை சகட்டு மேனிக்கு அள்ளி வுடுவது தொடர்ந்து வந்தது. பொளிச்சென்று சுட்டிக்காட்டியதும் ந்யாயம் தென்பட ஆரம்பித்திருக்கிறது என்று அறிகிறேன். மிக நன்று.

      பெயரை மாற்றி விட்டால் சொன்ன கருத்துக்களுக்கு ஜவாப்தாரி இல்லை என்று ஜகா வாங்கி விடலாம் என்று நினைக்கிறார் இல்லையா? அது மிகவும் தரம் தாழ்ந்த செயல்பாடு.

      \\ நல்ல மனுஷனுக்கு ஒரே பேச்சுதான் இருக்கவேண்டும்.மாற்றிப் மாற்றி பேசுவது அழகல்ல. \\

      அது. அது. அதெல்லாத்தையும் விவிலிய வசனாதிகளை உதாஹரித்து உங்களுடைய மித்ரவர்யருக்கு விளக்குங்கள்.

      \\ சீரேசுநாதனுக்கு ஜெயமங்களம். ஆமென்.// என்று BS அவர்களை கிண்டல் செய்வதாக நினைத்து வஞ்சப்புகழ்ச்சியாக இயேசு கிறிஸ்துவை நிந்தனை செய்கிறீர்! \\

      பொதுக்கழிப்பிடத்தில் ஏசு அழைக்கிறார் என்று எழுதும் அசத்துகளிடம் நிந்தனை என்றால் என்ன என்று விளக்குங்கள். ஏசுவிற்கு மங்களம் என்பதிலும் ஆமென் என்பதிலும் ஏசுபிரான் நிந்தனை செய்யப்படுகிறார் என்பது அறியாமை.

      க்றைஸ்தவத்தின் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆயினும் க்றைஸ்தவர்களாகிய எனது நண்பர்கள் க்றைஸ்தவத்தை என் மீது திணிக்காத வரை ……..அவர்கள் அவர்களது மதத்தை ஆக்ரஹத்துடன் ஒழுகுவதை …….மற்றொரு மனிதனாக ……..அவர்களிடமிருந்து ஆதர்சமான ஆக்ரஹம் என்ற விஷயத்தைக் கற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கமும் கிடையாது. இங்கு முன்னாடிக் கூட இதை எழுதியிருக்கிறேன்.

      பால சுந்தர விநாயகம் ( இதுக்கு முன்னால் பால சுந்தரம் க்ருஷ்ணா) என்ற பெயரை விளித்து நான் எங்காவது ஆமென் என்று சொல்லியதாகக் காண்பியுங்கள். சுட்டியுடன். அப்படி சொல்லப்பட்டால் அது கிண்டல்.

      ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற க்றைஸ்தவ பெயரை ஒரு அன்பர் உபயோகிப்பதில் தவறில்லை ஆனால் க்றைஸ்தவ பெயரை உபயோகிக்கும் ஒரு அன்பரிடம் ஆமென் என்று சொல்வது தவறு…… சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் என்று சொல்வது தவறு……. என்பது எந்த ஊர் ந்யாயம்?

      ரெவ ரெண்டு புனித தெரசாளாகவே இருக்கட்டும்……. யாராக இருந்தாலும் முற்று முழுதாக நான் நிராகரித்தது இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை.

      பெயரில் என்ன இருக்கு என்று அன்பர் வசனம் பேசியது அந்தக்காலம். தற்காலங்களில் பெயரில் தான் ஸர்வஸ்வமும் என்று புது ஆலாபனை துவங்கியிருக்கிறார். அது வரைக்கும் க்ஷேமம். ஒரு நபர் பல பெயர்களில் இயங்குவது வெட்கித் தலைகுனியத் தக்க விஷயம் என்ற சிந்தனை புரிபட்டது என்றால் அது இறையருள்.

      ஒவ்வொரு விஷயத்தையும் சுட்டி சுட்டியாக உதாஹரித்து நிர்த்தாரணம் செய்யலாம். தேவையென்றால் நிச்சயம் செய்வேன்.

    2. Avatar
     BS says:

     உங்களுக்கு இலக்கியம் வீக் பாயிண்ட். எனவே ஆன்மீகம், இசை என்றெல்லாம் இணைத்து விடுகிறீர்கள். உங்கள் தமிழ் இலக்கிய வாசிப்பு கம்மி என்று ஒத்துக்கொண்டது நல்ல விசயம். அஃதை என்றோ ஊகித்தவன் நான். எனவே நிறைய வாசிக்கவும். வாசிக்கும்போது ஆசிரியர் பெயரைப் பார்க்காமல் வாசிக்கவும். அஜண்டா ரைட்டர். பாமரத்தனமான ரைட்டார். பெண் எழுத்தாளர்கள். – என்று விசாலாமாகப் போகவும். For a writer, no subject is a taboo. You choice is very limited. Beware of it.

     கல்விக்கு கரையில; கற்பவர் நாள் சில. You can start now. It is never too later to read. வாசிப்பவன் இல்லையென்றால் எல்லா ரைட்டரும் பைத்தியக்காரன் மாதிரி தனக்குத்தானே உளருவது போலத்தான். காசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கைதட்டல் போதுமென்பார்கள் நாடகக்கலைஞர்கள். அது போலத்தான் இலக்கிய ஆசிரியர்களும். சப்போர்ட் கொடுங்க. போதும். என்ன நான் சொல்றது சரியா?

     1. Avatar
      க்ருஷ்ணகுமார் says:

      அன்புடையீர்

      பொதுவில் நான் எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி மட்டிலும் தீர்க்கமாக விவாதிப்பது வழக்கம்.

      அல்லது தெரியாத விஷயங்களை விவாதிக்க விழைந்தால் அதை அறியுமுகாமாகவே விவாதம் அமைவது வழக்கம். என்னுடைய புரிதல் தப்பானது என்பது தரவுகளுடன் விளக்கப்பட்டால் உடனுக்குடனேயே அதை அங்கீகரித்து என்னுடைய க்ஷமா யாசனங்களைப் பதிவு செய்வதும் வழக்கம். யாராக இருந்தாலும் அட்ச்சு வுடுதல் எனக்கு ஜீர்ணமாகாத சமாசாரம்.

      நீங்கள் சகட்டு மேனிக்கு அட்ச்சு வுட்ட விஷயாதிகள் என்னென்ன? அவை சுட்டிக்காட்டப் பட்ட பின்னரும் ஒரு சப்யதைக்காகவாவது நீங்கள் அதற்கு நன்றி தெரிவித்ததில்லை என்பது நீங்கள் அறிந்ததே. விலாவாரியாக அவற்றை இங்கு ப்ரஸ்தாபிக்க நான் விழையவில்லை.

      சில வருஷங்களில் ஓய்வு பெறவிருக்கும் இவ்வேளையில் இலக்கியங்களில் நான் எதைக் காணப்போகிறேன். திருப்புகழும், ராமாயண பாகவதாதிகளுமே எனக்கு வாழ்க்கைத் துணை. பகவத் விஷயம் ரஸ்கானாக இருந்தாலும் ரஹீமாக இருந்தாலும் கபீர் கமாலாக இருந்தாலும் வாசித்தறிவதில் ஆனந்தம் தான். உயர்வான ஆதர்சமான ஆத்மகுணங்கள் யாரிடம் இருந்தாலும் எந்த மொழியினரிடம் இருந்தாலும் எந்த மதத்தவரிடம் இருந்தாலும் அதை அவதானித்து உள்வாங்குவதில் எனக்குத் தயக்கம் இல்லை.

      உங்கள் செயல்பாடுகளில் எனக்கு (அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களுக்கும்) மிகக் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் உங்களது பரந்த வாசிப்பின் மீது எனக்கு என்றென்றும் மதிப்பு உண்டு. ஆனால் அவையெல்லாம் உங்களது திரிபு வாதம் மற்றும் சுஷ்க தர்க்காதிகளால் விழலுக்கு இறைத்த நீராகப் போகிறதே என்று விசனமும் உண்டு.

      கருத்துக்களை திரிபு செய்யாமல் கருத்துச் சொல்பவரது ஜாதி கோத்ராதிகளைப் பாராது கருத்துக்களை மட்டிலும் நீங்கள் அவதானிக்க விழைந்தால் உங்களது கருத்துக்கள் மெருகேறும்.

      சரியா :-)

 3. Avatar
  Dr.G.Johnson says:

  நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வணக்கம். தங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். நீங்கள் கூறியுள்ள பாலகுமாரன், ஜெயமோகன், சுஜாதா,போன்று, மற்றும் மறைந்த புதுமைப்பித்தன், கல்கி, மு.வ. முதல் ஜெயகாந்தன் வரையிலான பல எழுத்துலக ஜாம்பவான்கள் தங்களுடைய படைப்புகளால் பல்லாயிரக்கணக்கான தமிழ் வாசகர்களின் மனிதில் இடம் பிடித்தவர்கள்தான். அதை மறுப்பதற்கில்லை.
  ஒரு எழுத்தாளன் என்பவன் யார்? வெறும் படைப்பாளிதானா? அவன் மக்களுக்கு கதைகள் எழுதி மகிழவைப்பவனா? அதனால்தான் அவன் பெரும்பாலும் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறானா? மக்களுக்கு பொழுதுபோக்குக்கு எழுதுபவனா? அவனுடைய எழுத்தில் போதனைகளும் நல்வழிகளும் கூறபட்டிருந்தால் மட்டும் போதுமா? அவற்றைப் படித்துவிட்டு வாசகர்கள் தவறான பாதையில் போகாமல் நல்வழியைக் கடைப்பிடிப்பார்களா? அது முடியுமா? உதாரணமாக 2000 வருடங்களுக்கு முன்பே இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை எழுதிவிட்டார். அதில் கற்புக்கரசி கண்ணகி பற்றி கூறியுள்ளார்.கற்பு பற்றி கூறியுள்ளார். அதனால் மக்களிடையே ஏதாவது தாக்கமோ மாற்றமோ உண்டாகிவிட்டதா?
  இது ஒருபுறமிருக்க எழுத்தாளர்கள் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டிகளாகத் திகழ்ந்துள்ளனரா என்று நான் கேட்கிறேன்.அவர்களால் ஏன் மக்களுக்கு நல்ல தலைவர்களாகத் திகழமுடியவில்லை என்பதே என்னுடைய கேள்வி. அதில் அவர்கள் அக்கறை கொள்ளாமல் தங்களுடைய நூல்களின் விற்பனையில்தான் அதிகமாக கவனம் செலுத்தும் வியாபாரிகளாக மாறிவருகின்றனர் என்பதே என்னுடைய குற்றச்சாட்டு. அதனால்தான் அடுத்த எழுத்தாளரின் எழுத்துகளை புகழவோ பாராட்டவோ அவர்களால் முடியவில்லை என்பது என்னுடைய கருத்து…….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 4. Avatar
  சீலதாஸ் says:

  படைப்பாளர் திரு. கர்ணனைப்பற்றி நினைவுபடுத்தியதற்கு நன்றி. படைப்புகள் நிலைத்துவிடும்போது படைத்தவரை மறந்துவிடுவது ஒன்றும் அதிசயமல்ல. வாசகர்களின் ஆதரவு தான் முக்கியம்.

 5. Avatar
  paandiyan says:

  நல்ல விற்பனை என்றால் ஒரு கட்சி ஆரம்பித்து பல்காப்பியம் என்று ஒரு பல தவருகளோடு புத்தகம் எழுதி மாவட்டம் முழுவதும் கூட்டம் போட்டு ஒருவருக்கு 10 புஸ்தகம் என்று விற்று அதனிலும் அடங்காமல் பள்ளிகளில் மிரட்டி வாங்க வைத்து விற்பனை பண்ணினால் அது நல்ல விற்பனை . நமக்கு பின்னால் வரும் சந்ததி — பலர் எழுத்தாளராக உருவாகி, நூல்கள் அச்சடித்து வெளியிட்டனர் — என்று பெருமையோ பெருமை பட்டு கொள்ளலாம் .

 6. Avatar
  Dr.G.Johnson says:

  பாண்டியன் அவர்களே, பண்போடு பின்னூட்டம் போட எப்போது நீங்கள் கற்றுக்கொள்ளப போகிறீர்கள்? டாக்டர் ஜி. ஜான்சன்.

 7. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

  மிகவும் சிந்தனையைத் தூண்ட வைக்கிறது தங்களது இப்பதிவு.

  தாங்கள் எதிர்பார்த்துள்ள சில பரிமாணங்கள்.

  மற்றைய எழுத்தாளர்களுடைய பங்களிப்புகளை போட்டி பொறாமை இல்லாமல் உள்ளது உள்ளபடி அங்கீகரிப்பது.

  எழுத்துக்களால் சமூஹத்தில் மாற்றங்களை விதைத்தல்.

  தலைமை வகித்தல்.

  ஸ்ரீ ஜெயமோஹன் அவர்களும் பற்பல எழுத்தாளர்களை போட்டி பொறாமை இல்லாமல் உள்ளது உள்ளபடி இலக்கியத்தரம் என்ற ஒன்றினை மட்டிலும் வைத்து அங்கீகரித்து போற்றியும் வருகிறார் என்றே அறிகிறேன். அக்காலத்தில் இலக்கிய விமர்சகராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட ஸ்ரீ க.நா.சு அவர்களும் அப்படியே என்று அறிகிறேன். இலக்கியமும் சர்ச்சைகளும் ரோஜாவும் முள்ளும் போல. பிரிக்கமுடியாதவை. முழுமையான பரந்த இலக்கிய வாசிப்பு எனக்கு இல்லை. நான்வாசித்து அறிந்ததை வைத்து இதை எழுதுகிறேன்.

  எந்த அளவு எழுத்தாளர்களால் சமூஹத்தில் மாற்றங்களை விதைக்க முடியும்?

  இதற்கு எனக்கு ஷீர்டியில் வாழ்ந்து மறைந்த மஹான் ஸ்ரீ சாயிபாபா அவர்களது சத்சரித்ரத்திலிருந்து வாசித்தது நினைவுக்கு வருகிறது. பாபாவிடம் அவருடைய பக்தரான ஸ்ரீ ஹேமத்பந்த் அவர்கள் இங்கு இவ்வளவு பேர் வருகிறார்களே. அத்துணை பேரும் ஒரே மாதிரி பலன் அடைகிறார்களா என்பதற்கு பாபா அவர்கள் பதிலிறுத்தபடி ……..

  ஒரு செடியில் எத்தனை பூக்கள் பூக்கின்றன. அதில் எத்தனை காய்க்கிறது. அதில் எத்தனை பழுத்து பழமாகிறது. எல்லாப்பூக்களும் காய்களாகவோ அல்லது எல்லாக் காய்களும்பழங்களாகவோ பழுத்து விடுவதில்லையே. அவரவரது ஆழ்ந்த பிடிப்பு (ச்ரத்தை) மற்றும் பொறுமை (சபூரி) என்ற இரண்டு ஆன்ம குணங்களும் எந்த அளவுக்கு பரிமளிக்கின்றதோ அந்த அளவுக்கு அவர்கள் பலன் பெறுகிறார்கள் என்று சொன்னாராம்.

  எழுத்தை எந்த அளவுக்கு வாசித்து அதை மனதில் ஏற்று அசை போட்டு அதை மனதில் தங்கவைத்து மேற்கொண்டு தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தவும் செய்கிறார்கள் என்றால்……….. இதற்கான காரணிகளில் எழுத்தாளரின் திறம் வாய்ந்த எழுத்து மட்டிலும் காரணியாகாது………… அவ்வளவு பெருமை வாய்ந்த தன் புதினங்களை ஒரு எழுத்தாளர் எழுதிவிட்டாலும் அதை வாசித்து அதை அந்த அளவு மனதிலேற்றி அதில் காணப்படும் நற்கருத்துக்களை செயல்படுத்தும் வாசகனும் இதில் ஒரு காரணி. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. ஸ்ரீ பாலகுமாரன் அவர்களது எழுத்துக்களை வாசித்து தங்கள் வாழ்வில் தன்னம்பிக்கையும் அளர்ச்சியையும் மன அமைதியும் பெற்ற சில வாசகர்களது கடிதங்களை நான் வாசித்திருக்கிறேன்.

  எழுத்தாளராக இருந்து ஒரு பெரும் ஜனத்திரளுக்கு தலைமையும் வகித்தவர்கள் என்ற படிக்கு தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு பேர் மட்டிலும் சொல்ல முடியும் இல்லையா. ஒன்று அறிஞர் அண்ணா மற்றொன்று கலைஞர் கருணாநிதி. எனது பேரன்பிற்குரிய அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்கள் அறிஞர் அண்ணாவின் தலைமைப் பண்புகளை மிக விகஸிதமாக நிறையப் பதிந்திருக்கிறார்.

  அடுத்தவர் ஒரு பெரும்ஜனத்திரளை வசீகரித்து வைத்துள்ளார் என்பதை மட்டிலும் நான் ஒப்புக்கொள்வேன். ஆனால் தமிழகத்தில் இன்று காணப்படும் ஒவ்வொரு சீர்கேட்டுக்கும் மூலாதாரமாக ………..

  பகட்டுகளும் பொருள் ஏதுமற்ற …….
  அதீத ஹாஸ்யரஸமிக்க…….
  வெற்று வார்த்தை ஜாலங்கள் மட்டிலுமே மிகுந்த

  எழுத்துக்களை எழுதியவராகவே அன்பர் கருணாநிதி அவர்களைக் காண்கிறேன்.

  இது எனது தனிப்பட்ட கருத்து. பலரும் வேறுபடலாம்.

  தமிழகத்தில் பிறந்து எழுத்தாளராக(வும்) இருந்து மொழிகள் மதங்கள் இவற்றைக் கடந்து கோடானுகோடி மக்களின் ஹ்ருதயத்தைக் கவர்ந்து என்றென்றும் இனியவராக எதிர்காலத்திலும் மிகப்பெரும் ஜனத்திரளின் பேரன்பைப் பெறுபவராக மதிக்கத் தகுந்த ஒரு நபராக நான் கருதுவது………..

  மஹாத்மா ஸ்ரீ அப்துல் கலாம்……… இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

  கர்மண்யேவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன என்ற கீதை வாக்யத்தை தன் வாழ்நாளில் மனதில் ஏற்று செயல்படுத்தியவராக இவரைக் காண்கிறேன்.

  இவரை எண்ணும் போது மொகலாயர் காலத்திய khanzada mirza khan Abdul Rahim khan-e-khana என்ற ஒப்புயர்வற்ற கவி நினைவுக்கு வருகிறார். சம்ஸ்க்ருதம், அரபி, ஃபார்ஸி, அவதி போன்ற பல பாஷைகளில் பாரங்கதம் பெற்றிருந்தார் இவர். கண்ணனின் மீது ஆராக்காதல் கொண்டு எண்ணிறந்த கவிதைகள் சமைத்தார். சம்ஸ்க்ருதத்தில் ஜோதிஷ சாஸ்தரத்திற்கான நூற்களை எழுதியிருக்கிறார். ஆனால் முஸல்மானாகவே வாழ்ந்து மறைந்தார். இவருடைய சமாதி தில்லிமாநகரத்தில் இருக்கும் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் தர்காஹ் ஷெரீஃபுக்கு கிழக்கே இன்றும் உள்ளது.

  இவரது நற்பண்புகளை இவரது சமகாலத்தியரான கோஸ்வாமி துளஸிதாஸ் அவர்கள் மிகவும் ச்லாகித்துள்ளார். இவரது வாழ்வும் இவரது தோஹாக்களும் காலத்தை வென்றவை. நமது தமிழ் மொழியில் அறநூல்களில் பேசப்படும் அறவிழுமியங்கள் மற்றும் ஒப்புமைகள் இவரது தோஹாக்களிலும் காணப்படுவதை கண்டால் ………… நிச்சயம் வியப்புறுவோம்.

  ஹிந்துஸ்தானத்தின் வடகோடியில் அவதி பாஷையில் ஒரு க்ருஷ்ணபக்தராகவும் ம்ருத்யு பர்யந்தம் யவனராகவும் வாழ்ந்து மறைந்த ஒரு பெருந்தகையின் அறவிழுமியங்கள் தமிழில் எழுதப்பட்ட அற நூற்களுடன் இயைகிறது என்றால் இந்த தேசத்தின் மாண்பினை ………… மொழிகள் மதங்கள் ப்ரதேசாபிலாஷைகள் ……….கடந்து இந்த தேசத்தில் காணப்பட்ட தேச ஒருமைப்பாடு ………இவற்றை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

  கால வெள்ளத்தில் ………… அவதி பாஷையில் ராமசரித மானஸ் போன்ற காலத்தை வென்ற படைப்புகளைச் செய்த கோஸ்வாமி துளஸிதாஸரையும் அதே அவதி பாஷையில் க்ருஷ்ணபக்தி ரஸத்தையும் அற விழுமியங்களையும் பகரும் தோஹாக்களைச் செய்த யவனராகிய ரஹீம் சாஹேப் ………இருவரிடமும்……. பரஸ்பரம் காணப்பட்ட ப்ரேமை………… ஒரு இலக்கியவாதி இன்னொரு இலக்கியவாதியை ச்லாகிப்பது……… என்று தாங்கள் சொன்னதை மனதில் அசைபோட்டதும் ஒன்றை அடுத்து ஒன்றாக இவையெல்லாம் நினைவில் வந்து விட்டது. நான் மிகவும் சுவைத்து வாசிப்பவை ரஹீம் சாஹேப் அவர்களின் தோஹாக்கள்.

  நீண்ட பதிவிற்கு க்ஷமிக்கவும்.

  1. Avatar
   BS says:

   Interesting troll.

   /மிகவும் சிந்தனையைத் தூண்ட வைக்கிறது தங்களது இப்பதிவு.//

   பதிவை எழுதியவர் உஷா தீபன்.

   மருத்துவர் பின்னூட்டமிட்டே வாசகர்களை உஷா தீபனிடமிருந்து நகட்டி விட்டார்.

   இது நியாயமா டாக்டர்?

 8. Avatar
  BS says:

  எழத்தாளர்கள் பலவிதம். அப்படி விதம்விதத்தன்மையே இலக்கியத்தை இளமையாக வைக்கிறது. அவரகள் படைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட வாசகர்களை (target readership) எதிர்பார்த்தே உருவாக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. சிலசமயங்களில் எழுத்தாளர்கள் அப்படியெல்லாம் இல்லை: நான் பொதுவாகத்தான் எழுதுகிறேன் என்பார்கள். ஆனால் அவர்களை அறியாமலே அவர்கள் படைப்புக்கள் அந்த டார்கெட் ரீடர்ஷிப்பையே பெறுகின்றன. எடுத்துக்காட்டு: நம் திண்ணை வாசகர்களுக்கு நனகு தெரிந்த ஜோதிர்லதா கிரிஜா. இவரின் படைப்;புக்கள் பெண்களை, அதிலும் பெண்ணியத்தை விரும்புகின்ற பெண்களையும் நோக்கி எழுதப்படுகின்றன என்று யான் சொல்வதை மறுக்கலாம். ஆனால் அவர்கள்தான் விரும்புகிறார்கள். பெண்ணியம் பேசும் இன்றைய தமிழ் இலக்கியம் என்று எம் ஃபில், அல்லது முனைவர் தீசிஸ்களில் இவர் பெயர் கண்டிப்பாக இருக்கும்.

  இவரைப்போல மற்ற பெண் எழுத்தாளர்களும், பெண்ணியத்தைத் தீண்ட மறுக்கும் டொமஸ்டிக் எழுத்தாளர்கள், கொஞ்சம் செக்ஸ், கொஞ்சம் பெண்ணியம் என்று போகும் எழுத்தாளர்கள். விட்ட குறை தொட்ட குறையாகப்பெண்ணியம் பேசும் படைப்புக்களும் – இந்த டார்கெட் ரீடர்ஷிப்பைப்போய் அடைகிறது. இவர்களை மில் அன் பூன்ஸ் நாவல்களோடு சேர்த்துப்பேசி அவமானப்படுத்த விரும்பவில்லை., ஆயினும் அந்த டார்கெட் ரீடர்ஷிப் ஒற்றுமை வருகிறது. மில் அன் பூன்ஸ் நாவல்களின் வாசகர்கள் டீன் ஏஜ் பெண்கள் மட்டுமே. வேறெவருமே வாசகர்கள் கிடையா.

  இஃதொரு எ.கா மட்டுமே. பொதுவாக, எழுத்தாளர்கள் வருடங்கள் செல்ல‌, அவர்கள் அறிந்தும் அறியாமலும் டார்கெட் ரீடர்ஷிப் அவர்களுக்கு உருவாகிறது. சினிமா நடிகருக்குப்போல. இந்த டார்கெட் ரீடர்ஷிப் கொஞ்சம் வசதியான கூட்டமென்றால், இவர்களே விளம்பரமும் பண்ணிவிடுவார்கள். அல்லது இது ஒரு குறிப்பிடா அஜண்டாகூட்டமாக இருந்தால் அதுவே பண்ணிவிடும். இவ்வாறாக, ஜயமோகனுக்கு ஒரு டார்கெட் ரீடர்ஷிப்; இருக்கிறது. அவருக்கு அஜன்டா கூட்டமும் இருக்கிறது. மருத்துவர் ஜாண்சன் பேசும் திராவிட எழுத்தாளர்களுக்கும் மாபெரும் அஜன்டா கூட்டம் இருந்து அது தந்த உறசாகத்தினால் அவர்கள் அரசியலுலிம் சக்கை போடு போட்டார்கள். சுஜாதாவுக்கு இருக்கிறது. ஜெயகாந்தனுக்கு இருக்கிறது. முற்போக்கு கம்யூனிஸ்ட் எழுத்தாள்ர்களுக்கு இருக்கிறது.

  கோட்டா மாதிரி: எதையாவது ;பிடித்து நுழைந்துவிடவேண்டும். மாற்றுத்திறனாளி, எஸ்சிஎஸ்டி/பெண்/அகதி என்று ஏதோவொன்றைப்பிடித்து.எழதும் வரைதான் இலக்கியம். எழுதிய பிறகு பிராக்டிகல் உலகத்தில் நுழைகிறோம்.

  அதைப்போல ஒவ்வொரு எழுத்தாளரும் எதையாவது பிடித்துக்கொள்ளவேண்டும். அதே வேளையில் முன்பு சொன்னது போல ;பிடித்தால் புளியங்கொம்பாக பிடிக்க வேண்டும். இலக்கிய விமர்சனத்தை எழுதி ஏறிவிடலாமென்பது முடியாது. அது வீக்கான கொம்பு. செக்ஸ், ஜனரஞ்சகமான நடை. பெண்ணியம், பொது உடைமை பற்றி பேசும் வலது சாரி முற்போக்கு எழுத்தாளர்கள், பின் நவீனத்தவம், முன் நவீனத்துவம என்று வெள்ளைக்காரனிடம் திருட்டு, கதா பாத்திரமே நினைத்துக்கொண்டே நாவலை ஆயிரம் பக்கங்கள் இழுத்து ஜேம்ஸ் ஜாயிசிடமிருந்து திருட்டு, இப்படி எதையவது தமதாக்கிக்கொண்டு முன்னேறிவிட முடியும்.

  திரு கர்ணன் இங்கே எங்கேயுமே இல்லை. மிசலேனியஸ் miscellaneous subjects எழுத்தாளர். Also ran category. ஆல்சோ ரான். பத்தோடு பதினொன்று; அத்தோடு இஃதொன்று. இலக்கியத்தில் எந்த ஜான்ரரில் (genre) இவர் கால் வைத்து நிற்கிறார் என்பதே குழப்பம். அவருக்கு எல்லாமே தெரியும். அவருடன் பேசிக்கொண்டேயிருக்கலாமென்று உஷா தீபனுக்கு மகிழ்ச்சி. நானென்ன உஷா தீபனா? வெறும் வாசகன் சார். வாசகனுக்கு ஆசிரியன் யார் என்ற கவலை கிடையாது. செகப்பிரியருக்கு எத்தனை துணை நடிகைகள் என்று ஆராய்ச்சி பண்ணி சேகர் கபூர் ஹாலிவுட் படமெடுக்கலாம். அவரின் நாடகங்களை வாசிப்பவனுக்குத் தேவையேயில்லை.

  திரு கர்ணனின் நூல்கள் மதுரைக் கடைகளில் விற்பனையாகின்றன. நூல் கண்காட்சிகளிலும் வைக்கப்படுகின்றன.

  அழுத பிள்ளை பால் குடிக்குமென்பது இலக்கியத்திலும் வைக்கப்படவேண்டிய நியதி என்றால் அஃதொரு கேவலமான ;பிழைப்பு.. உங்கள் பதிப்பகத்தார் கொடுக்கும் விளம்பரம் போதும். நீங்கள் எழுதுங்கள். எழுத்தில் சரக்கிருந்தால் விரும்ப்பப்படும். பூ அழைத்து தேனீக்கள் வருவதில்லை. அவையே தேடி வரும் அப்பூவில் நாற்றமிருப்பின்.

 9. Avatar
  paandiyan says:

  Dr.G.Johnson
  என்னுடைய பின்னூட்டத்தில் எந்த தவறும் இல்லை . உங்கள் பின்னூட்டமும் புரியாத ஒன்று

  //திராவிட இயக்கம் உருவானபோது அண்ணா, கலைஞர், கண்ணதாசன், ஆசைத்தம்பி, தென்னரசு, சிற்றரசு என்று பலர் எழுத்தாளராக உருவாகி, நூல்கள் அச்சடித்து வெளியிட்டனர். இவர்கள் எழுதுவதின் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்ததோடு, நல்ல தலைவர்களாகவும், சமுதாயத்தை வழி நடத்துபவர்களாகவும் திகழ்ந்தார்கள். தமிழகத்தில் இந்த திராவிட எழுத்தாளர்கள் ஆட்சியையும் அமைத்தார்கள்///

  இதில் கண்ணதாசன் அவர்கள் மட்டும் ஒரு விதிவிலக்கு ..
  இதில் நீங்கள் என்னை குறை சொல்லி ஒன்றும் பயனில்லை

  1. Avatar
   BS says:

   தவறு. டாக்டர் போட்ட லிஸ்டைப்பார்த்தால் ஒன்று புரியும். அவர்கள் எல்லாரும் திராவிட இயக்கத்தின் தொடக்கக்காலத்தவர்கள். அப்போது கண்ணதாசனும் அவர்களுடந்தான் இருந்தார். அவரின் எழுத்துக்களும் அவ்வியக்கத்தை பரப்புரை செய்தன. பின்னர் ஒரு தனக்கு வரவேண்டிய ஒரு வாய்ப்பையும் புகழையும் கருநாநிதி தந்திரமாக நகட்டிக்கொண்டார் என்று ஒரு ஈகோ பிரச்சினையால் பிரிந்தார். ஆக, லிஸ்டில் கண்ணதாசனை இணைத்தது ஓரளவுக்குச் சரிதான்.

   ஒருவரைக் கண்டிப்பாக பிடிக்கவேண்டுமென்பதில்லை. அவரவர் விருப்பம். எனினும் பிடிக்காதவரகளை அசிங்கமாக நையாண்டி பண்ணுவது நயக்கத்தக்க நாகரிகமோ? இல்லை. கருநாநிதியின் தொல்காப்பிய பூங்கா என்ற அழகிய நூலை, (உங்களுக்கு அசிங்கமென்றால் பரவாயில்லை), பல்காப்பியம் என்று சொன்னது, வளர்ந்தவர்களிடம் எதிர்ப்பார்ப்பதில்லை. பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லையென்று சொன்னால் போதும். அதற்கு எல்லாருக்கும் முழு சுதந்திரம் உண்டு.

 10. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  அன்புள்ள திரு.ஜான்சன்,

  எழுத்தாளன் குறித்தான உங்களது புரிதல் அல்லது எதிர்பார்ப்பின் போதாமையே உங்களது கேள்வியில் தெரிகிறது. எழுத்தாளன் என்பவன் நம்மைப்போன்ற சராசரிதான். அவன் சமூகத்தின் வழிகாட்டியோ கேளிக்கையாளனோ அல்ல. நான் குறிப்பிடுவது கேளிக்கையாள எழுத்தாளர்களை அல்ல. ‘எமக்குத்தொழில் எழுத்து’ என்று பிரகடனம் செய்தானே அவன் போன்றவர்களை – அவனது வாரிசுகளை.

  நீங்கள் குறிப்பிடும் அண்ணா. மு.க, சிற்றரசு போன்றோர் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல, அவர்கள் தொழில்முறை அரசியல்வாதிகள். அரசியல் பாதையில் முன்னேற எழுத்தையும் ஒரு ஊடகமாக ஆண்டார்கள் அவ்வளவே. எப்படி மேடையை பாமர மக்களை சென்றடைய பயன்படுத்திக்கொண்டார்களோ, அப்படியே எழுத்தை படித்தவர்களை அடைய பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த தலைமுறைகளில் வளர்ந்து வந்த படித்த வர்க்கத்தை வசீகரிக்க எழுத்து அவர்களுக்கு உதவியாக இருந்தது. மட்டுமல்லாமல் ‘தாம் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, எழுத்தையும் எமக்கு ஆளத்தெரியும்’ என்ற வேறொரு படிமம் / அடையாளமும் அவர்களுக்கு வேண்டியிருந்தது. ஏனென்றால் எழுத்தாளன் என்றால் ‘படித்தவன், அறிவுஜீவி’ என்றொரு பிம்பம் உள்ளதல்லவா ?

  1. Avatar
   BS says:

   திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள் அஜன்டா ரைட்டர்ஸ் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல. எனினும் அவர்களும் அஜண்டா தாண்டியும் எழுதியிருக்கிறார்கள். கருநாநிதியின் குறளோவியமும் தொல்காப்பிய பூங்காவும் எப்படி அஜன்டாக்கள் ஆகும்? அதன் சிறப்பு அல்லது குறையைச் சொல்பவர்கள் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடையோராகத்தான் இருக்க வேண்டும். அண்ணவின் நாடகங்கள் அஜண்டாக்கள். அண்ணா, கருநாநிதி, தென்னரசு, இவர்கள் திரைப்பட வசனங்களும் திரைக்கதைகளும் அஜண்டாக்கள். ஆனால், அண்ணாவின் சிறுகதைகள் அப்படி கிடையா. கருநாநிதி வெள்ளிக்கிழமை போன்ற நாவல்களும் எழுதியிருக்கிறார். இவை அஜண்டா தாண்டிய படைப்புக்கள். இவற்றின் தரம் இலக்கிய வாசிப்புத் திறனுடையோரால் மட்டுமே கணிக்கப்படும்.

   ஒருவன் தொழில்முறை அரசியல்வாதியா, தொழில் முறை இலக்கிய வாதியா என்ற கேள்வி அநாவசியமானது. எழுத்தாளன் என்பவன் எவனாகவும் இருக்கலாம். சுஜாதா என்ன ஃபுரஃபொஷன ரைட்டாராகவா இருந்தார்? அரசு ஊழியராகத்தான் இருந்துதானே ஓய்வு பெற்றார்? ஓய்வுக்குப் பின் எழுதியவை மட்டும் பார்த்தா அவரை இலக்கியப்படைப்பாளி என்கிறார்கள் ? ஜோதிர்லதா கிரிஜா யார்? அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இல்லையா? இவர்கள் காலத்தில் ஃபொர்ஃபசனல் ரைட்டர்ஸ் ரொம்ப கம்மி. அதிலும் பெண்களை எழுதவே விட மாட்டார்கள். எழுத்தாளர்கள் ஃபுரஃபொஷனல் ரைட்டர்ஸ் ஆகப்பயந்த காரணம் //கலைஞனுக்குக் கையில் காசு சேராது// என்று எதார்த்த பழமொழிதான். வயிற்றுப் பிழைப்புக்காக எழுதவந்தால், சீக்கிரத்தில் தெருவில் பிச்சையெடுக்கப் போக வேண்டும். எனவே ஒரு ஸ்ட்ராங்க் பேக் அப் பிளான் இருக்கவேண்டும்.

   இன்றும் சிலர் மட்டுமே ஃப்ரொஃபஷன் ரைட்டர்ஸ். ஆனால் அவர்களும் என்ன செய்கிறார்கள் பிழைக்க எனபதைத்தானே உஷா தீபன் இங்கெழுதியிருக்கிறார்?

   திராவிட இயக்கத்தலைவர்கள் அஜண்டா இலக்கியம் படைத்தாலும் அவையும் படிக்கச் சுவையாகத்தான் இருந்தன எனபதை நான அண்ணாவின் நாடகங்களை வாசித்த போது உணர்ந்தேன். அவர்கள் பயனபடுத்திக் கொண்டார்கள் எழுத்துக்களை. ரொம்ப சரி. ஆனால் அஃதெப்படி தவறாகும் என்று தெரியவில்லை.

   இலக்கியம் எதற்கு என்ற கேள்வி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தியே எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு முடிந்த பதிலே கிடையாது.

   ஒரு பதில்: இலக்கியம் மக்களுக்காக Arts for People’s sake (அஃதாவது சமூக அவலங்களைபப்ற்றிய விழிப்புணர்வை எழுப்பத்தான்: மார்க்ஸ் அப்படித்தான் சொல்கிறார். கம்யூனிச மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள்; பிரஞ்சுப்புரட்சியே வால்டேர், மாண்டெஸ்கு, ரொபாஸ்பியர் போன்றோராலும், ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குக் காரணம் போப்பை எதிர்த்து எழுதப்பட்ட In Praise of Folly போன்ற நூலகளுமே ஆகும். பாரதியாரும் அஜண்டா ரைட்டாரகத்தான் இருந்தார். அவரின் சுதந்திர வேட்கைப் பாடல்கள் விடுதலைப் போராட்ட காலத்தில் வெகுவாகப்பாடப்பட்டன. அவரும் அதற்குத்தான் எழுதினார். மஹாபாரத்த்தையே அஜண்டாவாக பாஞ்சாலி சபதம் என்று மாற்றியவரல்லா அவர்? எப்படி மாற்றினார் என்பது ஐ ஏ எஸ் சிவில் சர்வீஸ் கேள்வி.). இவர்களை அன்றைய அரசுகள் கொன்றன. அல்லது விரட்டின. பாரதியாரை பிரிட்டிஸ் அரசு விரட்டியது. ஒரு உருசிய எழுத்தாளரை சைபீரியாவுக்கு விரட்டி சிறையில் வைத்தது. பிரஞ்சுப் புரட்சி எழுத்தாளர்கள் கில்லட்டினின் தலைகள் கொய்யப்பட்டார்கள். பெருமாள் முருகனை விரட்டி விரட்டியடித்தார்கள். அவர் உயிருக்குப் பயந்து சென்னைக்கு வந்துவிட்டார்.

   இன்னொரு பதில். இலக்கியம் இலக்கிய இன்பத்தை நல்க மட்டுமே. Arts for Arts sake. அழகின் சிரிப்பு, குயில் பாட்டு, போன்றவை இக்காட்டகிரி. அஜண்டா எழுத்தாளர்கள் இப்படியும் எழுதுவார்கள். Both Bharati and Bhrati dasan are dual writers) பலர் இப்படி மட்டுமே எழுதுவார்கள்.

   மக்கள் எதற்காக என்று ஆராய்வதில்லை. நல்லாயிருக்கா? என்றுதான் பார்க்கிறார்கள்.

   எனவே எழுத்தாளர்கள் எதற்காகவும் தம் படைப்புக்களை பயன்படுத்தலாம். சாமுவெல் பெக்கட்டின் வெயிட்டிங் ஃபார் கோடாட் என்ற நாடகம் அஜன்டா நாடகம்தான். எக்ஸிஸ்டென்சியிலிசம் என்ற தத்துவத்தைச் சொல்ல எழுதப்பட்டதுதான். Nothing comes. Nothing goes. Life’s awful என்ற அந்நாடக வசனத்தில்தான் அத்தத்துவம். அஜன்ட என்று இகழ முடியாது. உலக இலக்கியத்தில் ஒரு புதுப்பிரிவையே உருவாக்கியது அந்நாடகம்: தியேட்டர் ஆஃப் அப்சர்ட் Theatre of Absurd என்பதுதான் அது. இப்போ சொல்லுங்கள்: அஜண்டா என்று தூக்கியெறிய முடியுமா? முடியாது. அஜண்டா இலக்கியத்திலும் சிறப்பான இலக்கியம் படைக்க முடியும். படைத்திருந்திருக்கிறார்கள். மூடிய மனதுடன் படிக்கும் போது அழகின் சிரிப்பு கூட இலக்கியமில்லை.

   சாத்தரேயின் நாடகங்களே எக்ஸிஸ்டென்ஸியலிசம் என்ற புது தத்துவத்தை உலகுக்குச் சொன்னன. ஆக இலக்கியம் எதற்கெல்லாம் பயன்படுகிறது. !

   That is the glory and power of the Written Word ! It is unlimited. It is free. Sorry, you cannot straightjacket literature as you like. Let the readers decide for themselves :-)

 11. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // வெறும் படைப்பாளிதானா ? //

  கறாராக பார்த்தால் எழுத்தாளன் வெறும் படைப்பாளி மட்டும்தான். எழுத்தாளன் வேறு தொழில்களில் / செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம். வணிகம் செய்திருக்கலாம் ; ஆசிரியனாக இருந்திருக்கலாம் ; சமூக போராளியாக இருந்திருக்கலாம், தேச விடுதலைக்கு போராடியிருக்கலாம், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு போராடியிருக்கலாம், ஆன்மீகவாதியாக செயல்பட்டிருக்கலாம் அல்லது இது எதுவுமேயன்றி வெறும் எழுத்தாளனாக மட்டுமே கூட இருக்கலாம். எழுதும்போது அவன் வெறும் படைப்பாளி மட்டுமே.

  // அவன் மக்களுக்கு கதைகள் எழுதி மகிழவைப்பவனா ? //

  இல்லை, அவன் கேளிக்கைவாதி மட்டுமல்ல. ஒரு தீவிர எழுத்தாளன் தனது சமூகம் இப்போது இருப்பதைவிட மேம்பட்டதாக இருக்கவேண்டும் என்ற கனவு கொண்டவன். எழுத்தாளன் மட்டுமல்ல, பெரும் படைப்பாளிகள் அனைவருமே அப்படிப்பட்ட கனவு ஜீவிகளே.

  // அதனால்தான் அவன் பெரும்பாலும் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறானா ? //

  நீங்கள் சொல்லும் ‘கற்பனை உலகு’ வேறெதோ என்று நினைக்கிறேன். நான் சொல்லும் கற்பனை எதிர்காலத்திற்கான கற்பனை. இன்னும் முன்னேறிய – இன்னமும் ஜனநாயகமும் சுதந்தரமும் பண்பாடும் கொண்ட ஒரு சமூகத்திற்கான கற்பனை / கனவு.

  // மக்களுக்கு பொழுதுபோக்குக்கு எழுதுபவனா ? //

  மக்களுடைய பொழுதுபோக்குக்கு எழுதுபவர்களுக் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நான் சொல்லும் எழுத்தாளர்களோடு ஒப்பிடப்படக்கூடியவர்களல்ல. ஆகவே அனைத்து எழுத்தாளர்களும் மக்களது பொழுதுபோக்கிற்கு எழுதக்கூடிய கேளிக்கையாளர்களல்ல.

  // அவனுடைய எழுத்தில் போதனைகளும் நல்வழிகளும் கூறபட்டிருந்தால் மட்டும் போதுமா? அவற்றைப் படித்துவிட்டு வாசகர்கள் தவறான பாதையில் போகாமல் நல்வழியைக் கடைப்பிடிப்பார்களா? அது முடியுமா? //

  மறுபடியும், எழுத்தாளன் எப்படி கேளிக்கையாளனல்லவோ, அதுபோல அவன் நீதிபோதனையாளனுமல்ல. இந்த விவாதங்களெல்லாம் – “எழுத்தாளனின் சமூகப்பொறுப்பு” பற்றிய – எப்போதோ நீர்த்துப்போய்விட்டன, அதெல்லாம் தாண்டிப்போயாகிவிட்டது என்றுதான் எண்ணுகிறேன். காரணம் அப்படி யாரும் இப்போது விவாதித்து நான் படித்ததில்லை.

 12. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  அடுத்து சிலம்பு பற்றி கூறியிருக்கிறீர்கள் :

  // உதாரணமாக 2000 வருடங்களுக்கு முன்பே இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை எழுதிவிட்டார். அதில் கற்புக்கரசி கண்ணகி பற்றி கூறியுள்ளார்.கற்பு பற்றி கூறியுள்ளார். அதனால் மக்களிடையே ஏதாவது தாக்கமோ மாற்றமோ உண்டாகிவிட்டதா? //

  இளங்கோ கற்பு பற்றி மட்டும் எழுதவில்லை. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுவதையும், அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக அறமே வருவதையும்தான் எழுதியிருக்கிறார். ஏதும் மாற்றம் வரவில்லை என்று நினைக்கிறீர்களா ?

  அனேகமாக நீங்கள் எழுத்தால் ஏற்படும் மாற்றத்தை புறவயமாக நேரடியாக சமூகத்தில் எதிர்பார்க்கிறீர்கள் போலிருக்கிறது. எழுத்தின் சமூகத்தாக்கம் என்பது அரூபமானது, பல்வேறு காரணிகள் மூலம் உருவாவது. அதை நீட்டலளவை கொண்டோ நிறுத்தலளவை கொண்டோ அளந்து வரையறுத்துவிட இயலாது.

  // இது ஒருபுறமிருக்க எழுத்தாளர்கள் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டிகளாகத் திகழ்ந்துள்ளனரா என்று நான் கேட்கிறேன்.அவர்களால் ஏன் மக்களுக்கு நல்ல தலைவர்களாகத் திகழமுடியவில்லை என்பதே என்னுடைய கேள்வி. //

  எழுத்தாளன் என்பவன் வேறு, மக்களுக்கு தலைமை தாங்குபவன் என்பவன் வேறு. தலைமை தாங்குபவனுக்கு பல்வேறு குணங்கள் தேவை. அவை யாவற்றையும் எழுத்தாளனிடம் எதிர்பார்ப்பது பிழை. முன்பே சொன்னதுபோல தொழில்முறையில் தீவிர எழுத்தாளனாக இருப்பவனால் சிறப்பான தலைவனாக வருதல் சிரமம். காரணம் என்னவென்றால், எழுத்தாளன் (பொதுவில் எழுத்தாளன் என்று கொண்டாலும், படைப்பாளி என்ற சொல் இன்னமும் பொருத்தமாக இருக்கும்) பெரும்பாலும் கனவு ஜீவி. அதற்காக தான் வாழும் சமூகத்தை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கிறான். அதனால்தான் அடக்குமுறை சமூகங்களில் படைப்பாளிகள் கொடூரமாக ஒடுக்கப்படுகிறார்கள் – பாகிஸ்தானின் கஜாலா ஜாவேத் மாதிரி, வங்கத்து நஸ்ரின் மாதிரி, நம்மூர் சுஜாதா மாதிரி, பெருமாள் முருகன் மாதிரி (ஜெயமோகனின் ‘சொல் புதிது’ இதழுக்கும் கிட்டத்தட்ட இவ்வித நெருக்கடி ஏற்பட்டு அது நின்றே போனது என்று எழுதுகிறார்) இன்றைய கல்புர்கி மாதிரி. இதனால் அவனால் பல்வேறுதரப்பட்ட மக்களை இணைத்து அவர்களோடு சமரசம் செய்துகொண்டு, அனுசரித்துக்கொண்டு, அவர்களை வழிநடத்தும் ஆளுமை அவனிடத்தில் எதிர்பார்ப்பது பிழை. பெரும்பாலான எழுத்தாளர்கள் தனியானவர்கள், இண்ட்ரோவர்ட்-கள். அவர்களால் தலைவர்களாக பரிமளிப்பது இயலாது.

 13. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // அதில் அவர்கள் அக்கறை கொள்ளாமல் தங்களுடைய நூல்களின் விற்பனையில்தான் அதிகமாக கவனம் செலுத்தும் வியாபாரிகளாக மாறிவருகின்றனர் என்பதே என்னுடைய குற்றச்சாட்டு //

  இது மிகவும் நகைச்சுவையான குற்றச்சாட்டு. இன்றைய சூழலில் கேளிக்கை எழுத்தர்கள், சுய முன்னேற்ற எழுத்தர்கள் போன்றவர்களின் நூல்கள்தான் அதிகமாக விற்கின்றன என்று கேள்விப்படுகிறேன். ஏழெட்டு கோடி தமிழர்கள் இருக்கும் சமூகத்தில் தீவிர எழுத்தாளர்கள் எழுதும் படைப்புக்கள் ஒரு ஆண்டுக்கு ஆயிரம் படிகள் விற்றாலே சாதனை என்றுதான் சொல்கிறார்கள். சுஜாதா போன்ற நட்சத்திர எழுத்தாளர்களின் நூல்களே அதிகம் ஐந்தாயிரம்வரைதான் விற்கும் என்று கேள்விப்படுகிறேன்.

  அதுவும் இந்த நூல்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வது பதிப்பகங்களும் நூல் விற்பனையாளர்களும். இதில் எழுத்தாளர்கள் எப்படி நூல்விற்பனையில் கவனம் செலுத்தி அப்படி எத்தனை விற்றுவிட முடியும் என்று நினைக்கிறீர்கள் ? அப்படியே விற்று என்ன கிடைத்துவிட முடியும் ?

  பத்ரி சேஷாத்ரி தொடங்கிய கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியான நூல்களுக்கான ராயல்டி தொகையை பெற்ற முதிய எழுத்தாளர் ஒருவர், ‘என் புக்குக்கா ? இவ்ளோல்லாம் ராயல்டி என் புக்குக்கு வந்ததே இல்லையே ?’ என்று மாய்ந்துபோனாராம்.

  பெரும்பாலான எழுத்தாளர்கள் தமக்கென இணைய பக்கம் வைத்திருக்கும் இன்றைய நிலையில் தமது படைப்புகள் குறித்து தமது வாசககர்களிடையே ஒரு கவன ஈர்ப்பை செய்யலாம். இது பிழை என்று எப்படி கொள்ளமுடியும் ?

  ஒரு எழுத்தாளனின் நூல் வெளியாகிறதென்றால் அதுபற்றி அறிமுகத்தையும் மதிப்புரையையும் ஊடகங்கள் செய்யவேண்டும்; விமர்சகர்கள் பலகோணங்களில் விமர்சித்து எழுதவேண்டும்; வாசக எதிர்வினைகள் வரவேண்டும். அறிவார்ந்த சமூகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம். சினிமா மட்டுமே போதும் என்றிருக்கும் – சினிமா தவிர வேறெது குறித்தும் ஆர்வமோ, அறிமுகமோ, வாசிப்போ அற்ற – சினிமா தவிர வேறெது குறித்தும் உரையாட சாத்தியமே இல்லாத தமிழ் சமூகம் போன்ற ஒரு மொண்ணை சமூகத்தில் இதெல்லாம் வெறும் கானல் நீரொத்த எதிர்பார்ப்புகள் மட்டுமே. இந்த பின்னணியில் தனது படைப்புகள் குறித்து குறைந்தபட்ச விளம்பரமேனும் செய்தாகவேண்டிய சூழலில்தான் எழுத்தாளன் இருக்கிறான். இது அவனை ‘வியாபாரி’ என்ற விமர்சிக்கத்தோன்றினால் என்ன சொல்ல ?

 14. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  பி.கு : எனது மூன்றாம் பின்னூட்டத்தில் ஒரு வாக்கியம் கவனக்குறைவாக விடுபட்டுள்ளது. அது இவ்வாறு இருக்கவேண்டும் :

  ”தனது சமூகத்தின் போதாமையை – குறைபாடுகளை – தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டிருக்கும் அவல நிலையை காண்கிறான். அதற்காக தான் வாழும் சமூகத்தை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கிறான். ….”

 15. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  ஸ்ரீ பொன்முத்துகுமார், அருமையான மற்றும் நிதர்சத்துடன் இயைந்து போகும் விளக்கங்கள் தாங்கள் பகிர்ந்தவை. நன்றி.

 16. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  BS,

  நான் தொழில்முறை என்று குறிப்பிட்டது, பிழைப்புக்காக என்ற பொருளில் அல்ல, சீரிய/தீவிர என்ற பொருளில். பொருள் மயக்கத்துக்கு வருந்துகிறேன்.

  இன்னொன்று, எழுத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக பயன்படுத்துவது குறித்தான சரி தவறு விவாதத்தில் நான் இறங்கவில்லை. எழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கமுண்டு. கேளிக்கை எழுத்தாளனானாலும் சரி, தீவிர எழுத்தாளனானாலும் சரி. எந்த நோக்கமுமின்றி எழுத இயலாதே.

  திரு.மு.க அவர்களின் குறளோவியமும் சரி, தொல்காப்பியப்பூங்காவும் சரி (நான் அவற்றை படித்ததில்லை, குறளோவியம் மட்டும் அங்கிங்குமாக சிலவற்றை படித்ததோடு சரி) முன்பே சொன்னதுபோல, அரசியல்வாதி என்ற படிமம் போதாது, அதற்கு மேலும் எழுத்தாளன் / படைப்பாளி என்ற படிமம் வேண்டி எழுதப்பட்டவை. (கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பல குறள்களுக்கு மு.க, தனது கட்சிக்கொள்கைகளை நோக்கி இழுத்து கொடுத்திருக்கும் உரை என்னை இம்சைப்படுத்தியிருக்கிறது)

  மற்றபடி ‘கலை கலைக்காகவே vs மக்களுக்காகவே’ என்ற ‘அழகியல் vs அரசியல்’ விவாதம் கலை இருக்கும்வரை இருக்கும் என்றுதான் நினைக்கிறேன் :)

  1. Avatar
   BS says:

   1.சீரியஸ் ரைட்டர்ஸ், 2.ஃப்ரொஃபஷன் ரைட்டர்ஸ்.

   Serious writers. Professional Writers.

   எழுதும்போது எவருமே ஏனோதானோ என்றெழுதமாட்டார்கள். எல்லாரும் பிறர் படிக்கத்தான் எழுதுகிறார்கள். அதாவது ப்ரொஃச்னல் ரைட்டர்ஸ்கூட எழுதும்போது சீரியசாகத்தான் எழுதுவார்கள். ஆனால் எழுதுமுன் எப்படி, எதைபப்ற்றி என்று முடிவுகள் செய்யும் போது மட்டும் எவை வாசகர்களை ஈர்க்கும் என்று கணிப்பர். எழுதத் தொடங்கியபின் அக்கணிப்பு வராது. கவனம் எழுத்தில் மட்டுமே வரும். அப்போது அவர்களும் சீரியஸ் ரைட்டர்ஸ்தான். There is no creatiive writing as conscious writing. All creative writing should be an overflow of powerful emotions recolelcted in tranquility. If it is conscious, the writing will be pretentious and rejected by readers.காஷுவலாக எழுதினால், அவர்கள் எழுத்து நிராகரிக்கப்படும். பின்னர் எப்படி பிழைக்க முடியும்?

   எனவே முதலில் சொற்களைத் தெளிவாகப் புரியவேண்டும். A professional writer, too, cannot write casually. He has to be serious in his presentation, narration and choice of themes etc.

   கருநாநிதியின் குறளோவியத்தையோ, அல்லது சங்கப்பாடலகள் பற்றியவையோ, அல்லது தொல்காப்பிய பூங்காவையோ நீங்கள் படிக்க வேண்டாம். அவை தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எந்தவொரு ஹாங்க் அப்ஸ இல்லாமல் நேசிப்பவருக்கே.

   குறள் ஒரு திறந்த நூல். அஃதை இந்துமத நூலாக்கும் முயற்சி ஒருசிலரால செய்யப்பட்டாலும் இன்றுவரை அது பொதுமறையே. அதற்கு விளக்கங்கள் அவரவருக்குத் தோன்றியமாதிரி கொடுக்கலாம். அவ்வண்ணமே, பரிமேலழகர், குறளுக்கு வைதீக மதத்தின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து விளக்கினார். மற்றவர்கள் வேறுமாதிரி போனார்கள். அவ்வளவுதான். உங்களுக்குப் பிடித்தமாதிரி எவர் எழுதியிருக்கிறாரோ அதைப்படியுங்கள். எழுத்தாளர் உலகம் மட்டுமன்று; வாசகர் உலகமும் சுதந்திர பூமி. ஆனால் பிடிக்காதபடி எழுதியதை அப்படி எழுதக்கூடாதென்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை. அதே சமயத்தில் அப்படி எழுதியிருக்கிறார் என்று சொல்ல உரிமை உண்டு.

   எ.கா. பரிமேலழகர் குறள்கள் வைதீக மதத்தை தமிழ்மக்களிடம் பரப்புரை எழுதப்பட்டன என்று நம்பி அப்படியே தன் விளக்கங்களையும் திரித்து உரை எழுதினார். இதை நான் குறிப்பிடலாம். ஆனால் அப்படி உரையெழுதக்கூடாதென்று சொல்லமாட்டேன்.

   The basic question: Is it a good book to read? Is it a good creatiive product? Even if its purpose is to push an agenda, the same question is the only yardstick. Recently the best Tamil short stories that I have read, are written by communist writers. Their agenda is as you know very well: but they created literature out of it, though!

   The readers will decide. If more and more readers decide positively, it is a good book generally. In case of pure literature, some people with an acute literary sense are the best judges.

 17. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  அன்பின் க்ருஷ்ணகுமார், மிகவும் நன்றி !

 18. Avatar
  paandiyan says:

  Hi Thinnai Editor
  i am pasting here Jayakandhan view about Dravidian writers and he has spoken about it. its documented. its your duty to authenticate with this if you think i am pasting the wrong contents and then publish my comment. you should not simply ban my comments.
  i have given the source ref. also in my comment.

  (Editor’s comment : Please do not post lengthy articles from others. Make your comments relevant to the subject. )

  1. Avatar
   BS says:

   கருநாநிதியோ அண்ணாவோ நல்ல இலக்கிய வாதியா என்று ஆராய்ந்து தெளிய அவர்களை வெறுக்கும் ஜெயகாந்தன், ஜெயமோஹனிடம் போவார்களா? அதைப்போல ஜெயகாந்தனையோ, ஜெயமோஹனை வெறுப்பவர்களிடம் போய், அவர்கள் நூல்கள் எப்படிண்ணா? என்று கேடகமுடியுமா?

   நான் ஏறகனவே சொன்னதுபோல, திறந்த மனதுள்ளவர்களிடம் போய்தான் தெரியலாம்.

   எல்லாவற்றையும் விட சிறந்த வழி: ரிவ்யூ பார்க்காமல், கேட்காமல் போய ஒரு திரைப்படத்தைப் போய்ப் பாருங்கள். அலலது நூலை வாசியுங்கள். சேற்றில் செந்தாமரைகளைக் கூட பார்க்கலாம்.

   இதுதான் உண்மையான இலக்கிய திறனாய்வாளனோ, விரும்பியோ செய்ய வேண்டியது. Never surrender yourselt at the feet of people with closed minds. They will spoil you. Be fiercely independent.

  2. Avatar
   paandiyan says:

   Thank you Sir!
   see the above BS lines and compare with mine. its almost equal lines. its very much relevant to this article. what J.K said about Dravidian writers , everyone should know and that’s what discussion is also going on here.

   1. Avatar
    BS says:

    பாண்டியன் நீங்க போடுங்க அதை.

    ஜெயகாந்தன் தமிழ் நல்லாயிருக்கும். கருத்தை ஏறக முடியாவிட்டாலும் எழுத்தையோ பேச்சையோ இரசிக்கலாம். திண்ணை ஆசிரியர் குழுவையெல்லாம் சட்டை பண்ணாமல் ஜெயகாந்தனின் அண்ணா கருநாநிதியின் நூல்களைப்பற்றி எழுதியதை, பேசியதை ஒரு கட்டுரையாகத் தொகுத்து அனுப்பிவிடுங்கள்: தலைப்பை நான் தருகிறேன்:

    //திராவிட இயக்கத்தலைவர்கள் எழுதிய நூல்கள் இலக்கியமாகுமா? – ஜெயகாந்தனின் பதில்//

    I am very eager to read Jeyakanthan’s views. Please send or give link.

 19. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பு நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய நீண்ட பின்னோட்டம் கண்டேன்.அதில் பல சுயநலமற்ற சான்றோர்கள் பற்றி கூறியிருந்தீர்கள். அவர்களில் சமீபத்தில் காலமான அப்துல் கலாம் பற்றியும் கூறியிருந்தீர்கள். எழுத்தாளர்களால் மக்களின் தலைவர்களாகவோ, வழிகாட்டிகளாகவோ தங்களுடைய எழுத்தால் ஆகமுடியவில்லை என்ற என் கருத்துக்கு, முடியும் என்று கூறும் வகையில் அவரை உதாரணமாகக் காட்டியதற்கு நன்றி. அப்துல் கலாம் ஒரு மாறுபட்ட எழுத்தாளர். அவர் எழுதுவதை முழுநேர பணியாகக் கொள்ளவில்லை. நண்பர் ஜெயபாரதன் போன்று அவர் ஒரு விஞ்ஞானி. அவர் மாறுபட்ட எழுத்தாளர் என்பதோடுமட்டுமல்லாமல் சிறப்பாக பேசக்கூடியவர்.அதோடு அவர் ஒரு சிறந்த கொள்கைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர். மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்டவர். இத்தகைய பண்புகளினால்தான் அவரால் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக முடிந்தது. எழுதுபவர்கள் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் வழிகாட்டும் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு மறைத்த திரு. அப்துல் கலாம் அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 20. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // கருநாநிதியின் குறளோவியத்தையோ, அல்லது சங்கப்பாடலகள் பற்றியவையோ, அல்லது தொல்காப்பிய பூங்காவையோ நீங்கள் படிக்க வேண்டாம். அவை தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எந்தவொரு ஹாங்க் அப்ஸ இல்லாமல் நேசிப்பவருக்கே. //

  எதை எதை நான் படிக்கவேண்டும் / வேண்டாம் என்பதை நீங்கள் சொல்லாமலே முடிவெடுக்கக்கூடிய கொஞ்சநஞ்ச ஆர்வம் கொண்டவன் நான். எனவே உங்கள் அறிவுரையும் “எந்தஒரு ஹாங்க் அப்ஸ்” போன்ற முன்னூகமான முடிவுகளும் உங்களிடமே இருக்கட்டும். :)

  // உங்களுக்குப் பிடித்தமாதிரி எவர் எழுதியிருக்கிறாரோ அதைப்படியுங்கள். எழுத்தாளர் உலகம் மட்டுமன்று; வாசகர் உலகமும் சுதந்திர பூமி. ஆனால் பிடிக்காதபடி எழுதியதை அப்படி எழுதக்கூடாதென்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை. அதே சமயத்தில் அப்படி எழுதியிருக்கிறார் என்று சொல்ல உரிமை உண்டு. //

  அப்படி எழுதியிருக்கிறார் என்று சொல்லும் உரிமையை மட்டும்தான் நான் பயன்படுத்தியிருக்கிறேன். அவரை அப்படி எழுதக்கூடாது என்று சொல்ல நான் யார் ? திரித்துப்பொருள்கொள்வதை குறைத்துக்கொண்டால் ”உங்களுக்குப் பிடித்தமாதிரி எவர் எழுதியிருக்கிறாரோ அதைப்படியுங்கள்.” போன்ற ஆவேச அறிவுரையெல்லாம் வராது என்று நினைக்கிறேன்.

 21. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // கருநாநிதியோ அண்ணாவோ நல்ல இலக்கிய வாதியா என்று ஆராய்ந்து தெளிய அவர்களை வெறுக்கும் ஜெயகாந்தன், ஜெயமோஹனிடம் போவார்களா? அதைப்போல ஜெயகாந்தனையோ, ஜெயமோஹனை வெறுப்பவர்களிடம் போய், அவர்கள் நூல்கள் எப்படிண்ணா? என்று கேடகமுடியுமா? //

  ஜெயகாந்தனிடம் / ஜெயமோகனிடம் போவதோ இல்லையோ அது தனிப்பட்டவர்களின் ரசனை சார்ந்த தேர்வு. ஆனால் கருணாநிதிக்கே தன்னைப்பற்றி அவர் பெரிதும் வெறுக்கும் பார்ப்பன – சிறுபத்திரிகை உலகைச்சார்ந்த க.நா.சு போற்றிப்புகழ்ந்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது போல தெரிகிறதே :)

  1. Avatar
   BS says:

   அவ்வளவு தூரத்துக்கு எனக்கு அரசியல்வாதிகளைப் பற்றித் தெரியாது. கருநாநிதியோ மற்றெந்த‌ எழுத்தாளரோ தன் நூலைப் பற்றி பிறர் என்ன நினைக்க வேண்டும்; அல்லது கூடாது என்று நமக்குப் பிரச்சினை வேண்டாம். அந்நூல் படிக்கும்படியான இலக்கியமா என்ற கேள்வி போதும். க.நா.சு ஒரு நல்ல விமர்சகர்; ஆனால் அவரின் இடம் பழந்தமிழ் இலக்கிய விமர்சனமோ அல்லது அதைப்பற்றிய நூல்களின் விமர்சனமோ கிடையாது. எனவே க நா சுவோ வெங்கட் சாமிநாதனோ குறளோவியத்துக்கோ தொல்காப்பியப் பூங்காவுக்கோ விமர்சனம் எழுதினால் – அஃதெப்படி இருந்தாலும் சலசலப்பு ஏற்படாது! தேர்ந்த தமிழறிஞர்கள் என்ன விமர்சனம் பண்ணினார்கள்? அதுதான் கணிக்கப்படும். இஃதில் இன்னொரு விடயமும் இருக்கிறது: பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி எழுதும் போது, தன் சொந்த விருப்பு வெறுப்புக்களைப் போட்டு விரவி ஒரு காக்டெயில் கொடுக்க முடியாது. எனவே க நா சு, வெங்கட் சாமிநாதன் போன்றோர் இங்கு வந்து எழுத மாட்டார்கள். தன்முனைப்புக்கு இடமில்லாத இடத்தில் தன்முனைப்பே தன் மூச்சு என்போருக்கு இடமுண்டா? Therefore, only Tamil scholars are competent, or they would like to take up – the reading and criticism of books like Kuraloviyam or Tholkaappiya Poonga. Such books are out of bounds for others.

 22. Avatar
  BS says:

  பொன் முத்துக்குமார்!

  எழுத்தாளர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றார்கள்: ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு குறிப்பிட்ட வாசகர் கூட்டமுண்டு. எனவே தமதமருக்குப் பிடித்த பிரிவைத் தேடி வாசகர்கள் ஓடுகிறார்கள். அதில் தவறேதுமில்லை. அவரவர் விருப்பம். நாமெல்லாம் விருப்பு வெறுப்புக்களால் மனங்கள் பாதிக்கப்பட்ட பாமர ஜீவன்கள்தானே? இல்லையா முத்துக்குமார்?

  திரு கர்ணன் என்ற ஓர் எழுத்தாளர் என்று பலரும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள். உஷா தீபன் மட்டுமன்று. மதுரையில் அன்னாரைப் பற்றிய கருத்தரங்குகளுக்கெல்லாம் போயிருக்கிறேன். தெரிந்த அல்லது பரப்புரை செய்யப்பட்டவர்தான்.

  எழுத்தாளனும் இன்று அரசியல்வாதியாகத்தான் வாழுகிறான். அப்போதுதான் வெளியில் தெரியமுடிகிறது என்ற எண்ணம் சரிதான். அவர்தம் எழுத்துக்களும் சார்பு நிலையைப் பொறுத்தே பாராட்டைப் பெறுகின்றன. உஷா தீபன் அதைச் சுட்டிக்காட்டுகிறார்.

  இவ்வாரவாரங்களுக்கிடையில் நான் சொன்ன முகந்தெரியா எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தோய்ந்துவிடாமல் தொடர்ந்து எழுதுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறு சிறுகதைத் தொகுப்பில் மிகச்சிறப்பான கதையை எழதியவரைப் பற்றி த‌ங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று தொகுப்பாளர்க்குட முன்னுரையில் எழுதுகிறார்! என்ன அநியாயம்! பின்னர் அவரைப் பற்றி எனக்குத் தெரியவந்தது அவர் ஒரு மலேசிய தமிழ் எழுத்தாளர்: முத்துலிங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *