உஷாதீபன்

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 5

This entry is part 5 of 5 in the series 26 நவம்பர் 2023

ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த இவன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். அந்தப் பையனோடு தனித்தே நின்று பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. உங்க பேரு என்ன தம்பி? மம்மது சார்… அவன் சத்தமாகக் கூறியதைக் கேட்ட இவன், மெதுவா…மெதுவா…பொது இடங்கள்ல சத்தமில்லாமப் பேசணும்…என்றான் அவனைப் பார்த்து. சரி சார்…என்று தலையாட்டிய அவன் ‘எங்கப்பாவுக்குச் சேர வேண்டிய பணமெல்லாம் கொடுத்துட்டீங்களா சார்…? – என்றான் அடுத்தபடியாக. அவன் ஏதோ பிரச்னையோடுதான் […]

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 4

This entry is part 3 of 3 in the series 19 நவம்பர் 2023

பஸ்ஸில் அமர்ந்த கையோடு பையில் வைத்திருந்த சிறு நோட்புக்கை எடுத்து அன்று அலுவலகம் சென்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று யோசித்து எழுத ஆரம்பித்தான்.  தனது இருப்பின் தன்மையில்தான் அதன் பொறுப்புணர்ச்சியில்தான் அலுவலகத்தின் சீரான இயக்கமே உள்ளதாய்த் தோன்றியது.  சற்றே நெகிழ விட்டால் ஒரேயடியாய் நெகிழ்ந்து தளர்ந்து முடமாகி ஸ்தம்பித்து விடுகிறது. தான் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையில்தான் அலுவலர் நிம்மதியாய் முகாம் செல்கிறார். திட்டப்பணிகளைக் கவனமாய்க் கண்காணிக்க முடிகிறது. அந்த வகையில் தனது பங்கு மிக […]

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 3

This entry is part 3 of 3 in the series 12 நவம்பர் 2023

“உங்க ஆபீஸர் பேசினார். வந்தவுடனே உங்களைப் பேசச் சொன்னார்…” “வண்டி பஞ்சராயிருக்கு. நல்ல வேளை அவனை விட்டுட்டுத் திரும்புறபோதுதான் பஞ்சர். இல்லைன்னா அவன் ஸ்கூல் போறதும் லேட்டாயிருக்கும்…” என்றவாறே மெதுவாய் வண்டியை உருட்டி வந்து வராண்டாவில் ஸ்டான்ட் போட்டு நிறுத்தினான். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிக் கொண்டு வந்ததில் மூச்சிரைத்தது.  “வழியிலே ஏதாச்சும் ஒர்க் ஷாப்புல விட வேண்டிதானே…?” “ஏழு மணிக்கு எந்த ஒர்க் ஷாப் திறந்து வச்சிருக்கான்…? ஒன்பதாகும்…பாஸ்கரன்ட்டத்தான் விடணும்…” அன்று பஸ்ஸில்தான் […]

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 2

This entry is part 7 of 8 in the series 5 நவம்பர் 2023

“அப்பா, நீ குளிக்கப் போகலாம்…” என்றவாறே வெளிப்பட்ட ரமேஷைப் பார்த்து ‘தலையை அழுந்தத் துடை’ என்றான். சென்ற வருடம்வரை இவன்தான் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் வேண்டாம் என்கிறான். உடம்பைத் தொட்டுத் துடைத்தால் கூச்சப்படுகிறான். ஒரு நாள் அவன் தலையில் கைவைத்துப் பார்த்தபோது, சொட்டச் சொட்ட ஈரம் தென்பட்டது. “இந்தத் தண்ணீர் அப்டியே தலைல இறங்கும்…சளி பிடிக்கும்…அதனால ஈரம் போகத் துடைக்கணும்…புரிஞ்சுதா?” – என்றவாறே நன்றாகத் துவட்டிவிட்டான். வேண்டாம் என்று சொல்லும்போது தினமும் எப்படித் துடைப்பது? அந்தச் சிறு […]

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 1

This entry is part 5 of 5 in the series 8 அக்டோபர் 2023

( 1 )  நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு.  “சொல்லுங்க அழகேசன்…” “ஐயா, லோன் அட்வான்ஸ் போட்டிருக்கேன்யா…அது பணமாயிடுச்சான்னு….?” “இல்ல அழகேசன்…இன்னும் பில்லு டிரஷரி போகலை…இன்னைக்கி இல்லன்னா நாளைக்குப் போகும்…” “நாளைக்குள்ள கிடைச்சிதுன்னா நல்லாயிருக்கும்…பிறகு சனி, ஞாயிறு வந்திடுது…” “இவனுக்குள் கோபம் கிளர்ந்தது. ஒரு வேலை தன்னை மட்டுமே சார்ந்து இருந்தால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உடனடியாகச் செய்து கொடுக்கலாம். ஆனால் அப்படியில்லையே? சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், அலுவலர், […]

வேதனை

This entry is part 4 of 13 in the series 2 ஜூலை 2023

உஷாதீபன் ushaadeepan@gmail.com        சார்…சார்…விட்ருங்க…. – சத்தமாகவே சொன்னார் அவர். பதறிப் போய் ஓடி அந்தப் பையனைத் தூக்கப் போனதைத்தான் அப்படித் தடுத்தார். அதற்குள் அந்தப் பையனாகவே எழுந்து, வண்டியையும் தூக்கி நிறுத்தி, சட்டென்று கையிலும், காலிலும் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு,  திரும்பவும்  வண்டியை உயிர்ப்பித்து, டுர்ர்ர்….என்று சீறிக்கொண்டு கிளம்பி விட்டான். அப்போதும் இடது கையில் அவனது கைபேசி இருந்தது. இப்பயும் என்ன வேகம்?  எப்படிக் க்ளட்ச்சைப் பிடிப்பான் எப்படிப் பாதுகாப்பாய் ஓட்டுவான் என்று […]

நட்புக்காக

This entry is part 3 of 19 in the series 25 ஜூன் 2023

உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று ராகினிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் கேள்விப்படுவதென்னவோ முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. யாரை எப்பொழுது எப்படி மடக்குவாள் என்று யாராலுமே கூற முடியாது. மடக்குகிறாளா, மடங்குகிறார்களா தெரியவில்லைதான். இத்தனை நாள் இவளைப் பற்றியே நினைக்க வைத்துவிட்டாள்.  எந்த நேரமும் தன் நினைவில் இருந்திருக்கிறாள். படுக்கையில் […]

மாசற்ற ஊழியன்

This entry is part 5 of 12 in the series 21 மே 2023

உஷாதீபன் அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் […]

நிற்பதுவே நடப்பதுவே!

This entry is part 7 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                       உஷாதீபன் (ushaadeepan@gmail.com).             என்னாங்க…நிறையத் தண்ணி இருக்கிறதாப் பார்த்து வெட்டுங்கன்னா….இப்டி சீவிக் கொடுக்குறீங்களே? …. ஒரு டம்ளர் அளவு கூட இல்ல….             சின்னாண்டி தலையைக் குனிந்தவாறே நின்றான். சமயங்களில் அவன் கணக்கு தப்பி விடுகிறதுதான். அது பிரச்னையாகிவிடுகிறது. ஒன்றும் சொல்லாமல் இளநீரை இரண்டாய் வெட்டிப் பிரித்தான். ஒரே வழுக்கை.   பார்த்ததும் திக்கென்றது. வழுக்கையாய் இருந்தால் நீர் அதிகம் இருக்க வேண்டும்.  அதுவுமில்லை.             ஆனால் இளநீர் என்று வெட்டினால் முப்பது ரூபாய்தான். ஒன்று […]

ஏகாந்தம்

This entry is part 2 of 13 in the series 2 ஏப்ரல் 2023

உஷாதீபன்                                                                          ரமணன், தான் தனிமைப் படுத்தப்படுவதாக உணர்ந்தார். தனிமைப்படுத்தப்படுகிறோமா அல்லது தனிமைப்படுத்திக் கொள்கிறோமா என்றும் ஒரு சந்தேகம் வந்தது. நமக்கு நாமே அப்படிச் செய்து கொண்டு, வீணாய் அடுத்தவர் மேல் சந்தேகப்பட்டால்? அது முட்டாள்தனமில்லையா? அநாவசியமான சண்டைகளுக்கு, மனத் தாங்கல்களுக்கு வழி வகுக்காதா?  தனிமைப் படுத்திக் கொள்வதினால்தான் அதை உணர முடிகிறதோ என்று நினைத்தார். வசதியாய் உணரப்பட்டதனால், அதை நிலைக்கச் செய்யும் முகமாகச் சில நடந்து வருகிறதோ?       ஏம்ப்பா இப்டித் […]