ஐ-ராக்கன்
கடந்த ஓராண்டாக இராக்கிலும், சிரியாவிலும் (முன்னர் மெசபடோமியா) ஐஎஸ் என்ற அடிப்படைவாத பயங்கரவாதக் குழு சில பகுதிகளைப் பிடித்திருப்பதாகவும், கொடூரமான செயல்களை அரங்கேற்றி வருவதாகவும் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் படங்களும் வீடியோக்களுமாக வந்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே. மனித நாகரிகத்துக்கே சவால் விடும் வகையில் கொடூரமாகத் தலையை வெட்டுவதும், கழுத்தை அறுத்துக்கொல்வதும், துப்பாக்கியால் போவோர் வருவோரைச் சுட்டுக்கொல்வதுமாக இருக்கும் படங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ராணுவ உடைகளிலும், சிவில் உடைகளிலும் ஈராக் மற்றும் சிரியா அரசாங்கத்துக்கு எதிராகத் தோன்றியுள்ள புரட்சிப்படை எனவும், அதன் தலைவராக அபுபக்கர் அல் பாக்தாதி என ஒருவர் இருப்பதாகவும் உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இஸ்லாம் ஒரு மார்க்கமான மார்க்கம். மேலும் அது அமைதி மார்க்கம். எதிரியைக்கூட கொல்லாத ஒரு மார்க்கம். அப்படி இருக்கும் நிலையில் இப்படி வரும் செய்திகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிய முகமில்லாநூல் முஸ்லிம் மீடியாவும், ஹைதராபாத்தை சேர்ந்த எம்.பி. ஃபக்பருதீன் பாவைசியும் கேட்டுக்கொண்டதற்கிணங்க போர்க்குசு மற்றும் அவரது குழுவினரும், ஐ.எஸ் என்ற இயக்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லும் இடங்களில் உண்மை நிலையைக் கண்டறிய ஒரு பயணம் மேற்கொண்டது.
அவர்கள் முதலில் போய் இறங்கியது பாக்தாத். இனி அவர்களது அனுபவங்களும் அறிக்கையும்.
அங்கே மக்கள் அனைவரும் விவரிக்க இயலா மகிழ்ச்சியில் திளைப்பதைக் காண முடிந்தது. காணுமிடமெல்லாம் சில ஆயிரம் பேர்களுக்கு கால், கைகள் இல்லாமல் இருந்தது. குடும்பத்தில் ஒருவராவது குண்டு வெடித்து இறந்ததைக் கண்டோம். இது முழுக்க முழுக்க ஈராக்கிய அரசாங்கத்தின் கவனக்குறைவாலும், அல்லாவின் சாபத்தாலும் ஏற்பட்டது என்பதை எங்களால் உணர முடிந்தது. சிறு குழந்தைகள் கவனமின்றி வெடிக்கும் பட்டாசுகளினால் ஏற்பட்ட காயங்கள்தான் இந்த கால், கை இல்லாதவர்களுக்கு ஏற்பட்டது என்றும், உயிரிழந்த அனைவரும் காஃபிர்கள் என்பதையும் உள்ளூர் முல்லா மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் அம்மக்களிடத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.
அடுத்தது, மோசுலுக்கு மிக அருகில் (800கிமி தூரத்திலிருந்து) நாங்கள் கண்டது முழுக்க முழுக்க பசுமையான நிலப்பரப்பைத்தான். மக்கள் அனைவரும் இஸ்லாமியப் பாடல்களையும், ஈராக்கிய கிராமியப் பாடல்களையும் பாடிக்கொண்டு விவசாயம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களிடம் தாஷ் (ஐஎஸ் என அழைக்கப்படும் இயக்கத்தின் உள்ளூர்ச் சொல் என வல்லரசுகள் பரப்பியது) குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன எனக் கேட்டோம். அப்படியென்றால் என எங்களை திருப்பிக் கேட்டனர். நாங்களும் இதுபோல ஐஎஸ் என ஒரு இயக்கம் ஈராக்கையும், சிரியாவையும் கொண்டு ஒரு தனி நாடு அமைத்திருப்பதாகக் கேள்விப்பட்டு அதுவிஷயமாய் விசாரிக்க வந்துள்ளோம் என்றதும், அவர்கள் சிரித்த சிரிப்பு எங்களுக்கும் அது தொற்றிக்கொண்டது. அப்படி ஒரு வார்த்தையையோ (ஐ.எஸ் அல்லது தாஷ்) இயக்கத்தையோ கேளவிப்பட்டதுகூட கிடையாது என்றனர். மேலும் அவர்களே அமெரிக்க ஊடகங்களில் வந்த செய்தியா எனவும் கேட்டனர். நாங்கள் ஆம் என்றதும், ஈராக் இன்றைக்குப் பஞ்சத்தில் இருப்பதாகக்கூடச் சொல்கிறார்களாம் அமெரிக்கர்கள் எனச் சொல்லிவிட்டு மாஷால்லா, அவர்கள் ஒவ்வொருவரையும் அணுவணுவாகக் கொல்வோம் என அமைதியுடன் பதிலளித்தனர். ஈராக்கிய விருந்தோம்பலை அனுபவித்துவிட்டு அடுத்த பகுதிக்குச் சென்றோம்.
சிரியாவின் ராக்கா என்றழைக்கப்படும் கிராமம்தான் ஐ.எஸ்ஸின் தலைமையகம் என அமெரிக்க ஊடகங்கள் விடாமல் பிரசாரம் செய்கிறது. ரக்காவுக்கு மிக அருகில் (கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர்) உள்ள சிரியாவின் கிராமத்திற்கு எங்கள் குழு சென்றது. இந்தியாவில் இருந்து குழு வந்திருக்கிறது என்றதும், ‘என்ன, எண்ணெயை வாங்கிக்கொண்டு கோதுமை கொடுக்க வரும் ஏஜெண்டா?’ எனக் கிண்டலாகக் கேட்டனர். நமது ஃபுட்வர்சிங் மற்றும் அவரது மகன் ஞாபகம் வந்தது. இல்லை எனச் சொல்லிவிட்டு ஈராக்கில் கேட்டதுபோல இங்கு ஏதும் ஐஎஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் உண்டா எனக் கேட்டோம். ஆமாம் என்றதும் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி. ‘அவர்கள் (ஐஎஸ்) எங்கள் பகுதிக்கு வரவில்லை என மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். அவர்கள் ஆளும் பிரதேசத்தில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறது. முழுக்க முழுக்க சல்லல்லாஹு அலைக்கும் வஸ்ஸலம் சொன்னபடி ஆட்சி நடக்கிறது. மக்கள் தினமும் மகிழ்ச்சியில்தான் கண் விழிக்கிறார்கள், மகிழ்ச்சியுடன் தூங்கச் செல்கிறார்கள். களவு, கொலை, கற்பழிப்பு, அடிமை வியாபாரம் எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டுவிட்டதால் மக்கள் தவறான வழியில் செல்வது முழுவதும் தடுக்கப்பட்டுவிட்டது’ என ஏக்கத்துடன் கூறினார்கள்.
ஐஎஸ் குறித்து பலவித தவறான கருத்துகள் நிலவுகின்றனவே, குறிப்பாய் கொடூரமாக கொல்வதும், இஸ்லாமியர்கள் அல்லாதோரை கற்பழிப்பதும், அடிமைச்சந்தையில் விற்பதுமாக இருக்கிறார்களே எனக்கேட்டதற்கு ‘இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது’ என திருப்பிக்கேட்டார்கள். ‘தூய புஸ்லாம் சொன்னபடி அழகாக ஆட்சி நடத்துகின்றனர். சல்லல்லாஹு சொன்னபடி அரசாங்கமும் நடக்கிறது. அதற்காகத்தான் காத்திருக்கிறோம்’ என்றனர்.
தினம்தோறும் குண்டு வெடிப்புகள் நடப்பதாகவும், ஏகப்பட்ட பேர் உயிரிழந்துவிட்டதாகவும் பத்திரிகைகளில் படிக்கிறோமே எனக் கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒருநாளும் நடப்பதில்லை என அழகாகச் சொல்லி அரேபிய முறைப்படி கட்டியணைத்து வழியனுப்பினர்.
நாங்கள் சென்ற வழிகளில் யாரும் வீடுகளில் கதவைப்பூட்டுவதில்லை. ஏனெனில் திருட்டு என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. துப்பாக்கிகள் மட்டும் வீட்டிற்கு இரண்டாய் இருந்தன. இதை ஏன் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ‘நேற்றுவரை இஸ்லாமியனாய் இருந்தவன் நியாயம், தர்மம் என்றெல்லாம் பேசி இஸ்லாமிய ஆட்சிக்கு இடையூறு செய்யும் காஃபிர்களாய் திடீரென மாறிவிடுகின்றனர். அவர்களை அழித்துவிட்டால் இஸ்லாமிய ஆட்சி சிறப்பாகத் தொடரும் என்றனர். அவர்களது பக்க நியாயத்தை புரிந்துகொள்ள முடிந்தது. அதுவும் ஒரு தரப்பல்லவா. இதற்கு முன்னர் இந்த ஊரின் மக்கள் தொகை என்ன என ஒருவரிடம் கேட்டோம். ‘ஊரில் ஆள் நடமாட்டம் குறைவாய் இருந்ததால் முதலில் இரண்டு லட்சம் பேர் இருந்தோம், மாற்றி மாற்றி நீதான் காஃபிர் நீதான் காஃபிர் என சுட்டுக்கொண்டதில் மீதமிருப்போர் ஐம்பதினாயிரம் பேர்’ என்றார் அவர். அப்போது அந்த வழியாக உள்ளே போட்டிருக்கும் ஜீன்ஸ் தெரியும்விதமாக ஹிஜாப் அணிந்துவந்த ஒரு பெண்ணை ‘இந்த காஃபிர்’ (நீ ஒரு காபிர்) எனச் சொல்லிக்கொண்டே சுட்டுத்தள்ளினார். இஸ்லாம் மதத்தின் மீதான அவர்களின் பற்று தெரிந்தது.
மீண்டும் பல ஊர்களில் சுற்றிப்பார்த்தும் கண்ணுக்குத்தெரிந்தவரை ஒரு ஐஎஸ் இயக்கத்தின் ஆளைக்கூட காணமுடியவில்லை. அமெரிக்க வல்லாதிக்கத்தின் அண்டப்புழுகும், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் அமெரிக்க நரித்தனமும் அப்பட்டமாகத் தெரிந்தது.
குழுவின் முடிவுகள் :-
- ஐ.எஸ் என்ற இயக்கம் அல்லது பூச்சாண்டியை, அதாவது இல்லாத ஒன்றை உலக மக்களுக்குத் திரும்ப திரும்பச் சொல்வதன் ஒரே காரணம், இஸ்லாமியர்களுக்கு எதிராக உலக மக்களை திசை திருப்பவே என்ற முடிவுக்கு குழு வந்துள்ளது.
- ஐ எஸ் என சிரியாவில் சொல்லப்படுவதெல்லாம் இஸ்லாமிய இனக்குழுக்களேயன்றி, அவர்களுக்கென தனி நாடு என ஏதுமில்லை. நாங்கள் ஐஎஸ் எனச் சொல்லப்படும் பகுதிகளில் சுதந்திரமாக சுற்றி வந்ததே சாட்சி. எங்களில் யாருமே சாகவில்லை. இன்னும் உயிருடன்தான் இருக்கிறோம்.
- கொடூரமாகக் கொல்வதாகவும், ஷியா மற்றும் கிறிஸ்தவர்களை ஐ.எஸ் கொல்வதாகச் சொல்வது முழுக்க முழுக்க கட்டுக்கதை என நேரில் கண்டறிய முடிந்தது.
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சாயம் எங்கள் உண்மையறியும்குழுவின் பயணத்தால் வெளுத்துவிட்டது.
- எங்கள் கண்முன்னே ஒரு பெண்ணை ஒருவர் சுட்டுக்கொன்றது அவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட பிரச்சினையினால்தான் என்றும் கண்டறிந்தோம். மேலும் அப்பெண் கொடூரமாக துடிதுடிக்கவெல்லாம் கொல்லப்படவில்லை என்பதையும் நேரிலேயே கண்டோம்.
- இஸ்லாம் அமைதிமார்க்கமே என ஈராக்கில் இருந்துகொண்டு இந்த அறிக்கையை
(கட்டுரையாளர் இந்த கட்டுரையை முடிக்கும் முன்னர் துரதிருஷ்டவசமாக இஸ்லாத்தின் அடியார்களால் காஃபிர் எனத் தவறாக அடையாளம் காணப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். தப்பிய ஒருவர் அனுப்பி வைத்தது)
- ஈராக்கில் உண்மை அறியும் குழுவும், அதன் முடிவுகளும்
- வானம்பாடிகளும் ஞானியும்
- உள்ளிருந்து உடைப்பவன்
- பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’
- சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி
- பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்
- BLOSSOMS FROM THE BUDDHA – THE DHAMMAPADA, (The Buddha’s path of wisdom) RETOLD IN RHYMING VERSES
- குப்பி
- நாக்குள் உறையும் தீ
- கண்டெடுத்த மோதிரம்
- தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை
- திரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு
- நிழல்களின் நீட்சி
- வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை
- பொன்னியின் செல்வன் படக்கதை 4
- தொடுவானம் 85. புதிய பூம்புகார்
- அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை
- சைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.
- யட்சன் – திரை விமர்சனம்
- அவன், அவள், அது…!? (முதல் அத்தியாயம் )
- நெஞ்சு வலி
- அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி
- X-குறியீடு