அவுரங்கசீப் சாலை பெயரை அப்துல் கலாம் சாலை என்று மாற்றும் செய்தி கேட்டதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் ?

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 14 in the series 8 நவம்பர் 2015

தாரிக் ஃ பதா

dr-apj-abdul-kalam-2a2015, மார்ச் மாதம் டெல்லியின் ஒரு பேச்சின்போது, இந்திய முஸ்லீம்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன் – இந்திய முஸ்லீம்கள் இஸ்லாமிய காலிபேட்டை நிராகரித்து, இஸ்லாமியராக வாழ வேண்டும்

அந்தப் பயணத்தை ஆரம்பிக்கவேண்டுமென்றால், அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும் டெல்லி அரசாங்கத்திடமும், கொலைகார மொகலாய பேரரசரான அவுரங்கசீப்பின் பெயரால் டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை, அந்த அவுரங்கசீப்பால் தலை கொய்யப்பட்ட கவிஞரும், ஆன்மீகவாதியுமான அவரது சகோதரர் தாரோ ஷிகோ பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுகொண்டேன்.

பாகிஸ்தானில் பிறந்த இந்திய முஸ்லீமான நான், இந்தியாவுக்கு 2013ஆம் ஆண்டு வந்தபோது, டெல்லியின் மகத்தான சாலைகளில் ஒன்றான சாலைக்கு அவுரங்கசீப் பெயர் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தனது அண்ணனைக் கொன்று ஆட்சியை கைப்பற்றிய இவர், தனது தந்தையை சாகும்வரைக்கும் சிறையில் அடைத்தார். ஏராளமான இஸ்லாமியத் தலைவர்களை தூக்கிலிட்டு கொன்றார். அவர் கொன்ற இஸ்லாமிய தலைவர்களில் குஜராத்திய முஸ்லீம்களில் ஒரு பகுதியினரான தாவூதி போஹ்ராக்களின் ஆன்மீக தலைவரும் அடக்கம். பேரரசராக இருந்தபோது, இசை, நடனம், மது ஆகியவற்றை முகலாய பேரரசுக்குள் தடை செய்தார். சிந்து மாகாணம் பஞ்சாப் மாகாணங்களில் இந்து பிராம்மணர்களின் உரைகளைக் கேட்க ஏராளமான முஸ்லீம்கள் கூடுவார்கள். அப்படி முஸ்லீம்களும், இந்துக்களும் ஒரு சேர கூடும் இடங்களான பள்ளிக்கூடங்கள், கோவில்கள் ஆகியவற்றை இடித்துத் தள்ளினார். முஸ்லீமல்லாதவர்கள் முஸ்லீம்களது உடைகளை அணிவதற்குத் தடைவிதித்து அவ்வாறு உடை உடுத்தினால் தண்டனையும் அளித்தார்.

அவுரங்கசீப்பின் குரூரத்துக்கும், பிறமத வெறுப்புக்கும் உதாரணம் வேண்டுமே என்றால், முஸ்லீம் சூஃபியான சர்மத் கஷானி அவர்களையும், சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான தேக் பகதூரையும் கொன்றது போதும். தனது பேரரசில் இருந்த இந்துக்களை காபிர்கள் என்று கருதினார். அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தினார். ஷியா இஸ்லாமை பின்பற்றிய அரசர்கள் மீது ஜிஹாத் தொடுத்தார். அவரது அப்பாவின் தாத்தாவான பேரரசர் அக்பர் உருவாக்கிய தாராளவாத பன்மைவாத சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாமின் சுவடே இல்லாமல் போகும் அளவுக்கு துடைத்தெறிந்தார்.

அவுரங்கசீப்புக்கு இணையாக இன்று ஒன்றை சுட்டமுடியுமென்றால் அது ஒஸாமா பின்லாடனோ அல்லது தாலிபானின் முல்லா உமரோ அல்ல. காலிப் எல் பாக்தாதி என்ற இஸ்லாமிய காலிபேட்டின் தலைவரைத்தான் அவுரங்கசீப்புகு இணையாக சொல்லமுடியும்.

இருப்பினும், பெரும்பான்மையான இந்திய முஸ்லீம்களுக்கு அவுரங்கசீப்பின் குற்றங்கள் தெரியாமல் இருக்கலாம், அல்லது இஸ்லாமின் பெயரால் இந்துக்களையும் சீக்கியர்களையும் அவர்களை சமூகத்தின் கீழ்த்தரமான அடுக்கில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இஸ்லாமின் பெயரால் இந்தியாவை ஆண்ட ஒரே இஸ்லாமிய அரசர் என்ற சந்தோஷ உணர்வு காரணமாக இருக்கலாம்.

ஆகவே, இந்திய முஸ்லீம்கள் உண்மையிலேயே இஸ்லாமிய காலிபேட் (ஐ.எஸ்.ஐ.எஸ்) அமைப்பை எதிர்க்கவேண்டுமென்றால், இந்த கொலைகாரரின் பெயரை நீக்கி அங்கே இந்து முஸ்லீம் சகோதரத்துவத்துக்கு பிரதிநிதியாக இருந்த அவரது சகோதரரின் பெயருக்கு மாற்றவேண்டும் என்று என்னுடைய பேச்சைக் கேட்கவந்தவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.

அதன் பின்னர் இந்தியாவின் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஜனாதிபதி, நாட்டின் தெற்கு மூலையிலிருந்து வந்த முஸ்லீம், இஸ்லாமில் சிறப்பு மிக்க வாழ்ந்தவர், இஸ்லாமிய காலிபேட்டில் வாழாதவர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் மறைவைப் பற்றிய செய்தி வந்தது.

ஜூன் 29ஆம் தேதியன்று, ட்விட்டரில், அவுரங்கசீப் சாலையை ஏபிஜே அப்துல் கலாம் சாலையாக மாற்ற இந்தியர்கள் தங்கள் அரசாங்கத்தை கேட்டுகொள்ள வேண்டுமென்று எழுதினேன்.

அந்த கருத்து சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. பின்னர் டெல்லியின் மக்கள்சபை பிரதிநிதி மஹேஷ் கிரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு மாற்றவேண்டுமென்று கேட்டுகொண்டார்.

நேற்று, இந்தியாவிலிருந்து என் நண்பர்கள் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, டெல்லி அரசாங்கம் அவுரங்கசீப் சாலையை ஏபிஜே அப்துல்கலாம் சாலையாக மாற்றப்போகிறது என்ற செய்தியை சொன்னார்கள். டொரோண்டோவில் அப்போது காலை 3 மணி. ஆகவே ஒரு நிமிடம் நான் கனவு காண்கிறேனோ என்று யோசித்தேன். நான் எழுந்து என் மனைவியை எழுப்பி இந்த செய்தியை பகிர்ந்துகொண்டேன்.

அவள் தோளை குலுக்கி “கிழவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்றாள்.

என்னால் முடிந்த அளவுக்கு பாங்க்ரா நடனத்தையும் லுங்கி டான்ஸையும் சேர்த்து ஆடினேன். நாங்கள் கொண்டுவந்த மாற்றத்தை என்னாலேயே நம்ப முடியவில்லை. (யாரேனும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இப்படி பெயர் மாற்றம் நடக்கும்போது என்னை டெல்லிக்கு அழைத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்)

மனிதரது பெயரோ, இடத்தின் பெயரோ மாறுவது என்பது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது. சிலவேளைகளில் புதிய எஜமானருக்கு அடிமைத்தனத்தை முரசறைவிக்கும். மற்றும் சில நேரங்களில் முன்னாள் சர்வாதிகாரியின் அடிமைத்தனத்தை தூக்கி எறியும் அடையாளம் இவ்வகையான பெயர் மாற்றம்.

ஆகவே மால்கம் எக்ஸ் தனது கடைசி பெயரை விட்டுவிட்டு அதன் இடத்தில் எக்ஸ் என்று எடுத்துகொள்வது முன்னால் அடிமை எஜமானர் கொடுத்த பெயரை துறப்பதற்கு அடையாளம். அதே மாதிரி, ஸ்டாலின் உருவாக்கிய அதிபயங்கரங்களை நிராகரிக்க, ஸ்டாலின்கிராட் நகரை ருஷியர்கள் மீண்டும் வோல்காகிராட் என்று மாற்றினார்கள்.

நான் பிறந்த நாடான பாகிஸ்தானில் பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த பல பெயர்கள் மாற்றப்பட்டன. ஆகவே கராச்சியின் “விக்டோரியா சாலை” எல்பின்ஸ்டோன் சாலை” ஆகிய பெயர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட நாட்டின் அடையாளத்தை மேற்கொள்ள மாற்றப்பட்டன. ஆனால், மாறிய எல்லா பெயர்களும் பழைய தவறுகளை மாற்றமட்டுமே உருவாக்கப்பட்டவை அல்ல.

கராச்சியின் 1949இல் நான் “லாலா லஜ்பத் ராய் சாலை” என்ற அமைதியான தெருவில் பிறந்தேன். இது அன்றைய இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கியமான தலைவரும், பஞ்சாபி எழுத்தாளரும் அரசியல்வாதியுமான லாலா லஜ்பத் ராயின் பெயரை கொண்டிருந்தது.

லாகூரில் போலீஸால் தலையில் அடிக்கப்பட்டு 1928இல் இறந்த லாலாஜி அவர்களை பற்றிய எந்த ஒரு விளக்கமும் இந்தியாவுக்கு தேவையில்லை. ஆனால் எந்த இடத்தில் தன்னுயிரை இழந்தாரோ அந்த ஊரில், அவரது சமூக சேவை பற்றியோ அல்லது அவரது தியாகத்தை பற்றியோ தெரியுமா என்பதை விடுங்கள். அவர் யாரென்றே தெரியாது. இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசு தன்னை “தூயவர்களின் தேசம்” என்று சொல்லிக் கொள்கிறது. அவர் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக அவர் பெயரை நீக்கியுள்ளது.
எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ”குருமந்திர்” என்ற இடம் ஏன் பிறகு பெயர் மாற்றப்பட்டு “சபீல் வாலி மசூதி” என்று ஆனது என்று என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிஸ்டுகள் இந்த பெயர் மாற்றத்தை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். லாலா லஜ்பத் ராயின் பெயர் பாகிஸ்தானில் மாறியது தவறு என்றால், அதே மாதிரியான தவறு தானே அவுரங்க சீப்பின் பெயரை மாற்றுவதும் என்று விமர்சிக்கலாம். அது தவறு.

இந்தியாவின் சுதந்திரத்துக்கான போராட்டத்தின் அடையாளம் லாலா லஜ்பத் ராய். பன்மைத்தன்மையையும், மதசார்பின்மையையும் போற்றிபாதுகாக்கும் இந்தியாவுக்கு நடந்த அடக்குமுறை, அதன் மீது திணிக்கப்பட்ட அரபிய கலாச்சாரத்தின் அடையாளம் அவுரங்கசீப்.

ஜெய் ஹிந்த்!

மூலம்

Series Navigationமருத்துவக் கட்டுரை – பக்கவாதம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    paandiyan says:

    நீங்கள் கனடாவில் இருகின்றீர்கள் . இங்கு என்றால் RSS காரர் என்று ஒரு போடு போட்டு கட்டுரை படிக்காமல பின்னூட்டம் போட்டு கலக்கி இருப்பார்கள் இங்கு .

  2. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் துஃபாய்ல் அஹ்மத் மற்றும் ஸ்ரீமான் தாரிக் ஃபதஹ் அவர்களுடைய வ்யாசங்கள் திண்ணை தளத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வ்யாசங்களைத் தமிழாக்கம் செய்த அன்பர்களது பெயரையும் பகிர்ந்திருக்கலாமே.

    ஸ்ரீமான் தாரிக் ஃபதஹ் அவர்கள் மேற்கு பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த அன்பர்.

    மதவெறுப்பில் பிறந்த பாகிஸ்தான் மொழி வெறுப்பில் துண்டாடப்பட்டு பாக்கி ஸ்தான் என்று ஆனது சரித்ரம்.

    ஸ்ரீ தாரிக் ஃபதஹ் அவர்கள் பாகிஸ்தானத்தில் பிறந்திருந்தாலும் தன்னை ஹிந்துஸ்தானியாகவே உணர்கிறார். தன்னை ஹிந்துஸ்தானியாகவே அறிமுகம் செய்து கொள்கிறார். பாகிஸ்தானத்தின் சிந்த், பலோசிஸ்தான் மற்றும் பக்டூன்க்வா (NWFP) மாகாணங்களில் பஞ்சாபி ராணுவத்துக்கும் பஞ்சாபி ஆதிக்கவாதத்துக்கும் எதிராக அந்தந்த ப்ராந்திய மக்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறார். ஆதரவுகளை ஒருங்கிணைப்பதிலும் பாடுபடுகிறார். பாகிஸ்தானம் என்ற தேசம் மேற்கொண்டு துண்டாடப்பட்டு விரைவில் சிதறுண்டு போவது ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் ஒட்டு மொத்த உலகுக்கும் நன்மை பயக்கும் என்று அபிப்ராயப்படுகிறார். இடதுசாரிக் கருத்துக்களின் மீது ஈர்ப்புள்ளவர்.

    பயங்கரவாத வஹாபியத்தை மிக மிகத் தெளிவாக பொது தளங்களில் நிர்தாக்ஷண்யமாக விமர்சித்து வருகிறார். மோஹ்தர்மா அயான் ஹிர்ஸி இஸ்லாத்திலிருந்து வெளிப்போந்தவராக தம்மை அடையாளப்படுத்துகிறார். ஸ்ரீ ஃபதஹ் அவர்கள் இஸ்லாத்தின் படியே ஒழுகுவதாகவும் பயங்கரவாத வஹாபியத்தின் பிற்போக்கு இஸ்லாம் விரோத கொள்கைகளை எதிர்ப்பதாகவும் தொடர்ந்து பொது தளத்தில் பேசி வருகிறார். தற்போது கானடாவில் வசித்து வருகிறார். கானடாவின் ப்ரதமர் Trudeau அவர்களின் தேர்தலின் முன்னர் பயங்கரவாத வஹாபியத்திற்கு அவர் அளித்த ஆதரவினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ஆங்க்லத்திலும் உர்தூ / ஹிந்துஸ்தானியிலும் இவரது பேச்சுக்கள் யூ ட்யூபில் கிட்டும். இந்த மொழிகளில் பரிச்சயம் உள்ள அன்பர்கள் கண்டு பயன் பெறலாம்.

    இந்த வ்யாசம் சம்பந்தமான விழியங்களை / ஆங்க்ல வ்யாசங்களை பார்த்தது / வாசித்தது நினைவுக்கு வருகிறது.

    ஹிந்துஸ்தானத்தில் வஹாபியர்கள் மட்டிலும் இந்த பெயர் மாற்றத்தை எதிர்க்கவில்லை. மாறாக வஹாபியர்களுக்கும் பரங்கி சர்ச்சுக்கும் சாமரம் வீசுவதை செக்குலரிஸம் என அடையாளப்படுத்தும் போலி செக்குலரிஸ வாதிகளும் ஔரங்கசீப்பின் பெயர் நீக்கத்துக்கு துக்கம் அனுஷ்டித்து வருகிறார்கள்.

    ஃபதஹ் சாஹேப் அவர்களது வ்யாசத்தின் தமிழாக்கத்தை பகிர்ந்தமைக்கு திண்ணை தளத்திற்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *