நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்
பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதியின் படைப்புகள் பன்முகத்தன்மை கொண்டவை. அன்பின் தேடலாக அமைந்தவை. சமகாலத்தன்மையை தொனித்துக் கொண்டே இருப்பவை.
இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும் நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள்நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றியச் சிந்தனையை அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஈனர்கள் என்று சாடுகிறார். தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.பாரத தேசம் சுதந்திரமடைந்து சுயராஜ்யம் ஸ்தாபித்து விட்டால் அந்த தினம் பாரதநாட்டில் எல்லா மதத்தினர்களுக்கும் பொதுவான ஓரு புதிய தீபாவளியாய் விடும் என்று வெகுவாக நம்பியவர்.தூக்கமும் ஓய்வும் கூட எதிரிகளாய் அவருகுத் தென்பட்டிருக்கின்றன. எல்லா வகைப் பாடல்களையும் பாடியிருக்கும்பாரதி தாலாட்டும், ஒப்பாரியும் பாடியதில்லை.வறுமையும் பிரச்னைகளும் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தாலும் கூட அவரிடம் வெறுமை தென்படாமல் கவித்துவக் குரலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது எல்லா காலத்திலும் எவ்வகை சமூக மனிதனாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
அதனால்தான் மரணமில்லா பெருவாழ்வும் அவனின் கனவாக இருந்திருக்கிறது.அவரின் இறுதிச் சொற்பொழிவினை ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நிகழ்த்தியிருக்கிறார்.அதன் தலைப்பு : ” மனிதனுக்கு மரணமில்லை.” அவரை சிறந்த சொற்பொழிவாளராகக் காட்டும் தரவுகளைத் தந்திருக்கிறார். இதைத்தவிர இஸ்லாம் மார்க்க மகிமை போன்ற சொற்பொழிவுகளை மேற்கோள் காட்டி இதைச் செய்திருக்கிறார்.
தாவரங்களின் வழி அன்பைத் தனது தொழிலாக, மதமாக வரித்துக் கொண்ட இன்றைய சுற்றுசுசூழல் கேடுகள் அபாயச் சங்காக ஒலிக்கு காலத்தில் சமூக மனிதனான எழுத்தாளர்கள் கை கொள்ள வேண்டியது அவசியமானது என்பதைத் கூர்ந்து கவனிக்கிற போது அவதானிக்க முடிகிறது.பட்டுப்பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்துவதில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. பட்டுப்பூச்சியோடு நில்லாது அவரது உயிரன்பு ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து அதை விற்க இழுத்துச் செல்லுபவனிடம் அதை விலை கொடுத்து வாங்கி அது கொலையாவதை தவிர்க்கிறார். அதை தன் வீட்டு வேலைகார அம்மாக்கண்ணுவுக்கு வளர்க்கச் சொல்லி பரிசாக அளித்தவர். கழுதைக்குட்டியை தோளில் வைத்து கொண்டாடியக் காட்சி பல இடங்களீல் காட்டப்பட்டிருக்கிறது.திருவனந்தபுரம் மிருகக் காட்சிசாலையில்சிங்கத்துடன் உரையாடியவர். திருவல்லிக்கேணி கோவில் யானைக்கு தேங்காய் பழம் கொடுத்து உபசரித்தவர். காக்கை குருவிகளுக்கு உணவு அளித்து புரந்தவர். புதுவைப் புயலின் போது மாண்ட 790 காக்கைகளை நல்லடக்கம் செய்தவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ள வலியுறுத்தியவர். சக உயிர்களின் இருப்பு எப்படி பூமியின் சமநிலைக்கு உதவுகின்றன என்பது பாரதியின் செயப்பாட்டால் விளங்கியதை சேதுபதி எடுத்துரைக்கிறார். .
பலஅபூர்வமான புதிய தரவுகளையும் செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்திருக்கிறது. பாரதி தலைமறைவு வாழ்க்கையில் சென்னையிலிருந்து புதுவைப் பயணத்தை இரயில் மேற்கொண்டாரா, இல்லை படகில் சென்றாரா என்ற ஆய்வில் படகில் சென்றிரூகும் வாய்ப்பு பற்றி எடுத்துரைக்கிறார். ( இதை மெய்பிக்க அவர் அரசாஙகத்தின் கெமிக்கல் எக்ஸாமினரின் முதல் நிலை உதவியாளரான நஞ்சுண்டராவ் வாரிசுகளை சேதுபதி தேடிச் சென்ற அனுபவங்களை நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவே ஒரு தனி நூல் அளவு விரிவானது) படைப்புகளைத் தொகுக்கப்படுகிற போது ஏற்படும் மயக்கம் தந்திருக்கும் குழப்பத்தை சேதுபதி பாரதிதாசன் அரவிந்தர் மீது பாடிய அரவிந்த பாமபு என்ற கவிதை பாரதியின் பாடலென இடம்பெற்றிருப்பதை ஆதாரங்களுடன் காட்டுகிறார்.தன் நண்பரான அரவிந்தரின் நட்பு ஆன்மீக இலக்கிய உறவாக இருந்ததைக் காட்டும் அத்தியாயங்கள் வெகு சிறப்பானவை.
பாரதி எப்பொருளையும் விட்டு வைக்கவில்லை. எந்தக்கடவுளையும் கூட.பக்தி இலக்கியப் பார்வையிலிருந்து மாறுபட்டு செயலாக்க நிலையில் நாயன்மார்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திருப்பதை சேதுபதி விரிவாய்ச் சுட்டிக்காட்டுவதில் நவீன நாயன்மாராக பொலிவுறும் பாரதியைக் காட்டுவதன் மூலம் கலை வடிவம் மீறி செயல்வடிவிற்குறிய அவசியத்தை வலியுறுத்துகிறார். சமூக செயல்பாடுகளில் இன்றைய எழுத்தாளர்கள் நிற்க வேண்டிய இடம் எது என்பது இதனால் பூடகமாக சேதுபதி வெளிப்படுத்தியிருக்கிறார். என்பது சமகால முக்கியச் செய்தியாகும். அருணகிரிநாதர் முதற் கொண்டு அரவிந்தர் வரைக்கும், நவராத்திரி முதல் தீபாவளி வரை, மதம் முதல் தொழிலாளி வர்க்கம் வரை பாரதியின் பாடல்கள் கவிதையின், படைப்பிலக்கியத்தின் உச்சமாயும், சமூக வாழ்வியலாகவும் அமைந்திருப்பதை சேதுபதி ஆழமான வாசிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.அருணகிரிநாதரின் கவிதைகளை மொழிபெயர்த்தது, நாயன்மார்களின் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை சேதுபதி வெளிப்படுத்துவது பாரதியின் ஆழமான வாசிப்பின் அடையாளத்தையும் பன்முகத்தன்மையையும் விரிவுபடுத்துகிறது.
மேடை வலிமை வாய்ந்த ஊடகமாக இருந்த காலத்தில் அவரின் சொற்பொழிவுகள் ஆவேசமும் நடைமுறைப்பேச்சுப் பாங்கும் கொண்டு எழுதிப் பழகும்முன் சொல்லிப் பழகுதல் என்ற வகையிலான பயன்பாட்டிற்கும் ஏதுவாக இருந்திருக்கிறது..அவரின் படைப்புகளுக்காக அவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரின் பேச்சுகளே காரணமாகியிருக்கிறது. இதுவும் எழுத்துச் செயல்பாட்டில் முக்கியம் பெறுகிறது. சேதுபதியும் படைப்பிலக்கியத்தில் மட்டுமின்றி பேச்சு சாதுர்யத்திலும் அக்கறை கொண்டவர் என்கிற வகையில் பாரதியின் வாழ்க்கையில் விரவியிருக்கும் பல முக்கியச் சம்பவங்களையும் சுவாரஸ்யமானச் செய்திகளையும் அவரின் கவிதைகளின் ஊடே கூட்டிச் சென்று பாரதியின் படைப்புகளில் மட்டுமின்றி வாழ்க்கைஊடாகவும் காட்டுவதில் இன்னொரு மகுடமாக இந்நூலை நிச்சயம் கூறலாம்.
நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்- முனைவர் சொ. சேதுபதி ரூ 115, நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை
- சூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்
- இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?
- ” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி
- மூன்று நூல்களின் வெளியீட்டு விழா
- மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி
- பொன்னியின் செல்வன் படக்கதை – 12
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- மாறி நுழைந்த அறை
- ‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்
- தேடப்படாதவர்கள்
- பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி
- அவன், அவள். அது…! 10
- பூவைப்பூவண்ணா
- தண்ணீரிலே தாமரைப்பூ
- திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
- தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு
- தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்
- திரை விமர்சனம் தூங்காவனம்
நெருக்கமாக, இறுக்கமாக எழுதப்பட்டிருக்கும் நூல் விமர்சனம். ந்யூ செஞ்சுரி பதிப்பகத்தில் இருந்து வரும் நூல். அவர்கள் பொதுவாக துணிந்து ஆராயும் நூல்களைத்தான் வெளியிடுவர். இந்நூல் பாரதியின் ஆராதனை நூல் என்று சுப்ரபாரதி மணியனின் விமர்சனம் ‘தெறிக்கிறது’.
நூலைப்படிக்காமலேயே அதைப்பற்றி கதைப்பது பண்பாடற்றச்செயல். கழுதைக்குட்டி, ஆட்டுக்குட்டி, 790 காக்கைகளுக்கு நல்லடக்கம் செய்தல் – இவை போன்ற செயல்கள் எக்ஸ்டன்ட்ரிக்ஸ் ஆக்ட்ஸ். இலக்கியவாதிகள் பொதுவாகவே எகஸ்டன்ட்ரிக்ஸ். பாரதியார் சற்றும் அதிகமாக. One of the delightful excentricts among Tamil writers. உண்மையில் இப்படிப் பட்ட செயல்கள் அவர் உளரீதியில் மற்ற மனிதர்களிடம் இருந்து வேறுபாடானவர்கள் என்பதைக்காட்டும். மேலும் அவை அவர்களின் படைப்பாக்க வலிமையின் கிரியா ஊக்கிகள் என்பார் உளவியலாளர்.
இதை யான் சொல்லக்காரணம், ஒரு ஆபத்திலிருந்து தப்பிக்கவைக்கவே. அதாவது இலக்கியவாதிகளை நம் பாமர வாழ்க்கைக்கும் ஒரு முன்மாதிரிகளாக எடுக்கவே கூடாது. இதை மனதில் வைத்துக்கொண்டு மணியனின் இவ்வரிகளைப்படிக்கவும்.
//பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும்.//
இம்மூன்று அறங்களையும் அப்படியே கபக் என்று விழுங்குவது தவறு. செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமைதான் நம் செல்வம் என்ற வரிகளே சரி. அதாவது, ஆளுக்கு ஆள் திறன் வேறு; அத்திறத்தின் வழியே வாழ்க்கையும் நாட்டிற்குழைத்தலும் அடங்கும். அதன் படி அன்றாடம் மீன்பாடி வண்டிகளில் மீன்களை சந்தைக்குச் கொண்டு செல்பவனும் நாட்டிற்குத்தான் உழைக்கிறான். விழியில்லாதவனும் செவித்திறன் இல்லாதவர்களையும் நாம் இன்று ஒதுக்கி விட வில்லை. அவர்களை மாற்றுத்திறனாளிகள் எனவழைத்து அவர்களும் நாட்டிற்குழைக்கவேண்டுமென ஊக்கப்படுத்துக்கிறோம். He also serves who stands and waits. என்பான் மில்டன்.
இமைப்பொழுதும் சோராதிருத்தல் அவருக்குச் சரி. நமக்கன்று. ஓய்வு கண்டிப்பாக வேண்டும். வாழ்க்கை மகிழ்ந்து வாழவே. இறைவன் கோபப்படமாட்டான். பயப்படவேண்டாம். பாரதியாருக்குச் சரி. நமக்கன்று என்று புரிதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சேமமுறும். Be yourself. Don’t try to be a self that you are not!
இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் உளவியல் ரீதியாக ஆராய வேண்டும். இலக்கியவாதியும் மனமெப்படியோ, அப்படியே அவனின் படைப்புக்களும். மனதினிலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம். எந்த மனம் உருவாக்கியது என்ற ஆராயப் பயப்படுகிறார்கள். நம்மைப்பொறுத்தவரை அவர்கள் ஆராய்ச்சிப்பொருள்கள். தெனாலியின் கமல் சொல்வதைப்போல எதைக்கண்டாலும் பயம். எவராவது தப்பாக நினைத்துவிடுவார்களோ என்ற பயம். எப்படி ஆராயவார்கள்? பிறரை மகிழ்விக்கல்லவா நாம் பிறந்தோம்? But he who pleases everybody, pleases nobody.
// இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் உளவியல் ரீதியாக ஆராய வேண்டும். இலக்கியவாதியும் மனமெப்படியோ, அப்படியே அவனின் படைப்புக்களும். மனதினிலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம். எந்த மனம் உருவாக்கியது என்ற ஆராயப் பயப்படுகிறார்கள்.//-BS says.
திரு.BS அவர்களே! இலக்கியத்தை படைத்த இலக்கியவாதிகளை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால்,அவர்கள் படைப்பு உருவாவதற்கு ஆதர்ஷ எழுச்சியூட்டிய,கிளர்ச்சியூட்டிய கஞ்சா,கள்ளுத்தண்ணி,கம்பெனி தீர்த்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பெரும்பான்மை இலக்கியவாதிகளுக்கு, கடைச்சரக்கு உள்ளே போனால்தான் காள மேகமாக கவி மழையை பொழிவார்கள். “எமக்குத் தொழில் எழுத்து” என்று கடை விரித்தபின் மனது ஒளி,வாக்கு ஒளி எல்லாம் போதை வழி என்று புரிந்து கொள்ளவேண்டியதுதான்.குடிகாரன் உளறினாலும் உண்மையைத்தான் சொல்லுவான்.உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.
படைப்பை பார் , படைப்பாலியை இல்லை என்று சொன்னது இங்கு ஒரு சிலருக்கு பொருந்துமோ ?!
ஒரு நூலின் விமர்சனமும் விமர்சகரின் – இதை ஏற்றால் சேமமமாக வாழலாம் – என்ற அறிவுரையும் விவாதிக்கப்படுகின்றன. இங்கு பாரதியாரின் படைப்புக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேயில்லை.