This entry is part 8 of 18 in the series 15 நவம்பர் 2015

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

அறை மாறி நுழைந்தபோது

அவள் உடைமாற்றிக்கொண்டிருந்தாள்

அறை மாறி விட்டதென்று மன்னிப்புக்கோரி

திரும்ப எத்தனிக்கும்போது

‘இங்கு எல்லாமே மாறி இருக்கிறது

என்னையும் மாற்றிவிட்டுப்போ

ஏமாற்றாமல்’ என்றாள்

அவள் மனம் மாறி விடுமுன்

நான் மாறி விட்டேன்.

இப்போது இங்கே

எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது.

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationநித்ய சைதன்யா – கவிதைகள்‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்