மாமழையே வருக !

This entry is part 15 of 23 in the series 20 டிசம்பர் 2015

இரா. ஜெயானந்தன்.

சாதிமத பேதங்கள் வேரோடு களைய
மாமழையே வருக !

மனிதமன மாசுகள் முற்றிலும் அகல
மாமழையே வருக !

ஏழை பணக்காரன் எண்ணங்கள் ஒழிய
மாமழையே வருக !

இந்து முஸ்ஸீம் கிருத்துவம் இணய
மாமழையே வருக !

இளைய நெஞ்சங்களின் இணப்பகம் அறிய
மாமழையே வருக

போலி அரசியல் முகமூடிகள் கிழிய
மா மழையே வருக !

உண்மை அரசியல்தோன்றி ஊழ்கள் ஒழிய
மா மழையே வருக !

மனிதம் என்றொரு மாமேரு தோன்ற
மாமழையே வருக ! வருகவே!

Series Navigation13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *