இலை மறை காய் மறை

author
2
0 minutes, 2 seconds Read
This entry is part 3 of 22 in the series 24 ஜனவரி 2016

அழகர்சாமி சக்திவேல்

 

முகமலைப் பயிர்வனம் வனமோரம் வாய்க்குளம்

குளக்கரையில் இன்பமாய்க் கூத்தாடியதென் இதழ்க்கால்கள்

சுகமுடன் குளமிறங்கி சுவைநீர் குடித்தெழுந்தேன்

மாமன் முனகினான் “உன்மீசை குத்துதடா”

 

நெஞ்சுமலைப் பயிர்வனம் வனமோரமிரு நீராம்பல்

நீராம்பல் கூம்புபற்றி நீர்குனிந்து பருகுமெனைக்

கெஞ்சியது நீராம்பல் குலுங்கியது நெஞ்சுமலை

மாமன் முனகினான் “உன்மீசை குத்துதடா”

 

முதுகுமலைப் பயிர்வனம் வனத்தின்கீழ் பஞ்சுமெத்தை

பஞ்சுமெத்தை தனைத்தாங்கும் இருமுரட்டுத் தேக்குமரம்

குதூகலமாய் மெத்தையிலென் முகம்பதித்து நான்தூங்க

மாமன் முனகினான் “உன்மீசை குத்துதடா”

 

இடைமலைப் பயிர்வனம் வனம்நடுவில் ஊர்க்குருவி

ஊர்க்குருவி குடியிருக்க உயரமாய் இருகோட்டை

துடிப்புடன்நான் கோட்டையேறி குருவிதனைத் தொட்டிட்டேன்

மாமன் முனகினான் “இனி நான் பித்தனடா”

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

 

Series Navigationபீப் பாடலும் பெண்ணியமும்புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    R.Karthigesu says:

    படிமம் எனக்கு விளங்கவில்லை. விளக்கலாமா? ஓரளவு காம முயக்கம் என விளங்கிக்கொள்கிறேன். ஆனால் “மாமன் முனகல்” அதில் பொருந்தவில்லை. கவிதை வாசிக்கச் சுகமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *