பூங்காற்று திரும்புமா?

author
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 12 in the series 13 மார்ச் 2016

முனைவா் சொ. ஏழுமலய்

தமிழ்ப் பேராசிரியா்,

பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூா்.

 

 

 

செக்கச் சிவந்த மண்ணு

செழிப்பா இருந்த மண்ணு!

நாலு தலைமு றையாய்

நாசம் பண்ணி பாக்குறாங்க!

 

சோளம் கம்பு கடலையெல்லாம்

சாயப் பட்டறை தின்னுப் போச்சு!

நாளும் இந்தக் கொடுமையாலே

நானிலமே பாலை யாச்சு!

 

காடு மலை மேடெல்லாம்

காத்தடிக்கும் மழை பெய்யும்

காட்ட வெட்டி கொன்னதாலே

நாடும் கெட்டு நரகமாச்சு!

 

காத்து வாங்க வெளியவந்தா

மூச்சு அடச்சுப் போகுதுங்க!

வாகனப் புகை யாலே

வேகமா நோய் தோன்றுதுங்க!

 

செயற்கை கோளை செலுத்தி

சிந்தனையை வளா்த் தீங்களே!

ஓசோன் படலத் திலே

ஓட்டை போட வைக்கலாமா?

 

புற ஊதாக் கதிர்களாலே

பூவுடம்பும் கேன்ச ராச்சி

பொல்லாத தேசத்திலே – முழு

பொய்கூட உண்மை யாச்சி!

 

கை பையும் கற்ப பையும்

காணாமல் போச்சு துங்க!

பாலிதீனும் டெஸ்ட் டீப்பும்

பாசாங்கு பண்ணுதுங்க!

 

புதுசா இருக்கு துண்ணு

புத்திய கெடுத்தீங்களே!

பெரிசா என்னாச்சு

பூமி பிள்ளை நெள்ளையாச்சு!

 

கப்பல் விட்டோம் மீன் பிடிச்சோம்

கவிதை பாடி விந்தை கொண்டோம் – இப்ப

கடலுல இறங்க னாலே

கால வெட்டி சிறை பிடிக்கிறான்

 

செத்தவனை எழுப்பி எழுப்பி

ஓட்டுபோட வைச்சோம் நாம!

இருப்பவனையும் கொன்னு கொன்னு – அய்யோ…

இலங்கையிலே வீச றானே!

 

காற்று பனி மழையெல்லாம் – அன்று

காதல் சொல்லி கொடுத்துதுங்க – இப்ப

உயிரைக் கொன்னு, வீட்ட புடுங்கி

விரட்டி அடிச்சு பாக்குதுங்க!

 

அப்பப்பா போதுமப்பா!

தாங்காது உலகமப்பா!

சோளக் கம்பு விளைய வேண்டும்!

காடு மலை சிறக்க வேண்டும்!

புகையில்லா தேசம் வேண்டும்!

புத்துணா்ச்சி உடம்பு வேண்டும்!

யுத்த சத்தம் இல்லா உறக்கம் வேண்டும்!

குத்தம் இல்லா அறிவியல் வேண்டும்!

 

நித்தம் மீன் பிடிச்சி

நீந்தி மகிழ வேண்டும்!

கொஞ்சு தமிழ் மீண்டும்

சிங்களத்தில் சிறக்க வேண்டும்!

 

அதற்கு,

அத்தனையும் மாற்றிவிட்டு

பூங்காற்று திரும்புமா?

ஏங் குமுறல கேக்குமா?

——–

Series Navigationதமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *