அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 4 of 16 in the series 3 ஏப்ரல் 2016

கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின்
சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின்
பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ
உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட
கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின்
அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது.
கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம்
நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கின் அழைப்பினை
இதனுடன் இணைத்துள்ளோம்.

அந்தமான் பன்னாட்டுக் கருத்தரங்கப் பங்கேற்பாளர்கள் கவனத்திற்கு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
bdb4a24c1ca2914c2ffeaa868f6c462e

493b7b74c18a90f0ae3de09a84699774 (1)
1. பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்க உள்ள பேராளர்கள் அனைவரும்
தங்களுடைய பயண நாள், நேரம் ஆகியவற்றைச் சரிபார்த்துக் கொள்ளவும்.

2. விமானப்பயணச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, மூன்று
மணிநேரத்திற்கு முன்பாக விமானநிலையம் வந்து சேர வேண்டுகிறோம்.

3.விமானப் பயணச்சீட்டுடன், தங்களுடைய ஆதார் அட்டை, (AADAAR CARD)
வாக்காளர் அடையாள அட்டை(VOTER ID), வருமான வரி அட்டை ( PAN CARD)
ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்து வரவேண்டும். விமான நிலையத்தின் பிரதான
நுழைவாயிலில் உட்புகுவதற்கு இச்சான்று முக்கியம்.

4. விரைவில் பயணப்பொதிகளை ஒப்படைத்தல், பாதுகாப்புப் பரிசோதனைகளை முடிக்க
30 நிமிடங்கள் முழுமையாகத் தேவைப்படும்.

5. பயணப்பொதி எடை அதிகபட்சமாக 15 கிலோவும், கையில் 7 கிலோவும் எடுத்துச்
செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

6. முதன்முறையாக விமானப்பயணம் மேற்கொள்பவர்கள் காதுகளில் வைத்துக் கொள்ள
பஞ்சு (COTTON) கைவசம் வைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

7. அந்தமானில் மிதமான வெப்பத்துடன் கூடிய தட்பவெப்பம் நிலவுவதால், கனமான
உடைகளைத் தவிர்ப்பது நலம். போர்வை முதலியவை அங்கேயே வழங்கப்படும்,
எடுத்துவரவேண்டாம்.

8. கருத்தரங்கப் பங்கேற்பிற்கு இதுவரையில் பதிவுக்கட்டணம்
செலுத்தாதவர்கள், அந்தமானில் வந்து செலுத்தி விடுமாறுக்
கேட்டுக்கொள்கிறோம்.

9. தங்களை வரவேற்க போர்ட்பிளேர் விமான நிலையத்தில்,
அந்தமான் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் திரு கிருஷ்ணமூர்த்தி தலைமையில்
குழு காத்திருக்கும்.

10. அந்தமானில் நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றிருப்பவர் அந்தமான்
துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் துணை ஆணையர் திரு கிருஷ்ணமூர்த்தி.
அவருடைய தொடர்பு எண்: 9434289673

——————————–
இதனுடன் அந்தமான் கருத்தரங்க தற்காலிக அழைப்பு அனுப்புகிறோம். இதி்ல் பல மாற்றங்கள் உள்ளன. இருப்பினும் தங்களின் மாற்றுப்பணி விண்ணப்பத்திற்காக இதனை அனுப்பி உள்ளோம்.

தங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு பிற கொரு அழைப்பு வரும். இதனைத் தாங்கள் அ்ச்சிட்டுப் பயன்படுத்திக்கொள்க.

அந்தமான் கவர்னர் இவ்விழாவிில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இதனா்ல் அழைப்பு காலதாமதமாகிறது. பொறுத்தருள்க

Series Navigationலேசான வலிமைநாமே நமக்கு…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *