மருத்துவப் படிப்பு இப்போது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. வார்டில் நோயாளியைப் பார்த்து நோய் பற்றிய விவரங்களைச் சேகரித்துக்கொண்டபின் டாக்டர் புளிமூட் அது பற்றி விளக்கங்கள் கூறும்போது அந்த நோய் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ளலாம் . இரவில் விடுதியில் மருத்துவ நூலில் அந்த வியாதி பற்றி முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. ஒவ்வொரு நோயிலும் இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதால் அவற்றை நார்மேன் நூலகத்தில் உள்ள மருத்துவச் சஞ்சிகைகைகள் படிப்பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதில் குறிப்பிடத்தக்கது பிரிட்டிஷ் மருத்துவச் சஞ்சிகை ( British Medical Journal ). இவ்வாறு படித்து தெரிந்துகொள்வது புதையல் தேடி புதிது புதிதாகக் கண்டுபிடிப்பது போன்றது.
அன்று மைட்ரல் வால்வ் சுருக்கம் பற்றி தெரிந்துகொண்டேன். இரவில் மருத்துவ நூலில் அதுபற்றி நிறைய விளக்கங்கள் தரப்பட்டிருந்தது. அதில் மைட்ரல் வால்வ் சுருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் தரப்பட்டிருந்தன. அவற்றை படித்து மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். நோயாளியிடம் அறிகுறிகள் பற்றி கேட்கும்போது அவராக அவற்றைச் சொல்லாவிட்டாலும் நாம் அது உள்ளதா என்று கேட்பது முக்கியமாகும்.
மைட்ரல் வால்வ் சுருக்கத்தால் இரத்தம் இருதயத்தின் இடது பக்க மேல் அறையிலிருந்து இடது பக்க கீழ் அறைக்குச் செல்வது தடை படும். இதனால் இரத்தம் தேக்கமுற்று பின்னோக்கிச் சென்று நுரையீரல்களில் நிரம்பும்.இதன் காரணமாக மூச்சுத் திணறல் உண்டாகும். இந்த செயல்பாட்டை நன்கு புரிந்துகொண்டால் அதனால் உண்டாகும் அறிகுறிகளும் விளங்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகும் முக்கிய அறிகுறிகள் :
* மூச்சுத் திணறல் – இது பளுவான வேலை செய்யும்போதும் படுக்கும்போதும் அதிகரிக்கும்.
* களைப்பு – இதுவும் பளுவான வேலையின்போது உண்டாகும்.
* கால்களில் வீக்கம்.
* நெஞ்சு படபடப்பு
* தலை சுற்றுதல், மயக்கம்.
* கடுமையான இருமல் – சளியில் இரத்தம்.
* நெஞ்சு வலி
* கடும் தலைவலி
இத்தகைய அறிகுறிகளை ஒன்றுவிடாமல் மனதில் பதியவைத்து நோயாளிகள் சொல்ல மறந்துபோனாலும் நாமே அவர்களிடம் கேட்க வேண்டும். இது மாதிரி ஒவ்வொரு நோய்க்கும் அதற்கான அறிகுறிகள் உள்ளன. அவை அனைத்தையும் படித்து விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த அறிகுறிகள் நோயை சரியாக நிர்ணயம் செய்ய உதவுபவை.
அறுவைச் சிகிச்சை, பொது மருத்துவத்தை விட பன்மடங்கு கடினமானது!( தொடுவானம் தொடரும் )
- ரோஸெட்டா தளவுளவி புகட்டிய புதிய வால்மீன் உருவாக்கக் கோட்பாடு
- கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
- அப்பா, பிள்ளைக்கு….
- பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்
- சூடு சொரணை இருக்கா?
- காப்பியக் காட்சிகள் – 14. சிந்தாமணியில் கலைகள்
- கவி நுகர் பொழுது ஈழவாணி (ஈழவாணியின்,’ மூக்குத்திப்பூ’, கவிதை நூலினை முன்வைத்து)
- கவி நுகர் பொழுது சீராளன் ஜெயந்தன் (சீராளன் ஜெயந்தனின், “மின் புறா கவிதைகள் “, நூலினை முன்வைத்து)
- திருப்பூரில் 21/8/16 ஞாயிறு ஒரு நாள் குறும்பட விழா ” கனவு “ சார்பில்..
- தொடுவானம் 130. பொது மருத்துவம்
- அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016
- திடீர் போராட்டம் ஏன் – திமுக தலைவர் ஒருவரோடு உரையாடல்
- கவிதைவெளியில் தனியாகச் சுற்றும் ஞானக்கோள்
- ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி-2016 _ கடைசி நாள் – 31 ஆகஸ்ட் 2016
- காத்திருத்தல்
- ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம்