ஒரு நாள் விரதமிரு 48 நாட்கள் ஆயுள் நாட்களில் அதிகரிக்கும்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 4 of 29 in the series 9 அக்டோபர் 2016

                J.P. தக்சணாமூர்த்தி

 

 “நான்கு வேளை சாப்பிடுபவன் நாசமாப் போவான்

மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாலேயே அழிவான்

இரண்டு வேளை சாப்பிடுபவன் யோகியாவான்

ஒரு வேளை சாப்பிடுபவன்  ஞானியாவான்

ஒரு வேளை கூட சாப்பிடாதவன் உடல் காய சித்தியாகும்”

என்று முன்னோர்கள் பாடி வைத்துள்ளனர்.

தினமும் பல்வகை உணவுகளை அளவில்லாமல் உண்பதால் உடலில் பல்வோறு உபாதைகள் ஏற்படுகின்றன். தினமும் உணவைக் கட்டுப்பாட்டுடன் உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு உண்ணும் உணவின் எடை தோராயமாக ஒரு கிலோ என்று வைத்துக் கொளவோம், அதாவது, சாப்பாடு (ஒரு நாளைக்கு) 1/4 கிலோ காய்கறி (குழம்பு) டீ, உள்ளிட்ட நோறுக்குத் தீனி மற்ற உணவுப் பொருட்கள் ஆக மொத்தம் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவின் எடை 1 கிலோ

ஒரு மாதத்திற்கு வேண்டிய உணவு (30×1) = 30 கிலோ                                                                                                                                       ஒரு வருடத்திற்கு தேவையான உணவின் எடை = 365 கிலோ                                                                                                                 பத்து வருடத்திற்கு தேவையான உணவின் எடை (60×365) = 21900 கிலோ                                                                        டன்னில் குறிப்பிட்டால் 21900/1000 = 21.9  டன்கள்

இதனை தோராயாமாகத் தான் கொடுத்துள்ளோம. நடைமுறையில் உணவின் அளவு மாறுபடும்.

ஆக ஒரு மனிதன் சாராசரி 60 வருடங்களில் 21.9 டன் அளவை உட்கொள்கின்றான். 21.9 டன் எடையுள்ள உணவுப் பொருட்களை ஒரு அரவை இயந்திரத்தில் அரைக்கக் கொடுத்தால் அதனை அரைக்க எத்தனை நாட்கள் ஆகும். அவ்வாறு அரைக்கும் பொழுது அவ்வியந்திரத்தின் ஏற்படும் தேய்மானம் எவ்வளவு இருக்கும். இரும்பால் ஆன அந்தகைய இயந்திரங்களுக்கே இவ்வளவு பக்குவம் தேவைப்படும் பொழுது, கிள்ளினால் புண்ணாகும் தோலினால் ஆன மனித உடலும். குடலும் 21.9 டன்  எடையுள்ள உணவை அரைக்கும் பொழுது அவற்றிற்கு எவ்வளவு பக்குவம் தேவைப்படும். 21.9 டன் எடையுள்ள உணவை அரைக்க தோராயமாக 60 வருடங்கள் தேவை. தினமும் உடல் உறுப்புகள் ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ருக்கின்றன. உடலுக்கு ஒய்வு என்பது வேண்டாமா? சற்று சிந்தித்துப் பருங்கள். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வரையும் 24 மணி நேரமும் மனிதனின் உடல் உறுப்புகள் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன். உடலுக்கு எப்போது எப்படி நாம் ஓய்வு கொடுக்கப் போகிறோம்? நம் முன்னோர்கள் நன்கு ஆழமாக சிந்தித்து செயல்படுத்தியதே விரதம் என்ற முறை. விரதம் என்ற பெயரில் உணவு உண்ணாமலும், பத்தியம் இருந்தும் வந்தனர். இதனால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. மாதம் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் விரதம் இருப்பதால் உடல் உறுப்புகளுக்கு அதிக ஓய்வு கிடைக்கும். ஒரு நாள் விரதம் இருந்தால் 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆயுள் நாட்களில் அதிகரிக்கும் என்று முன்னோர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

உணவின் கலோரி

ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்ஷியஸ் உயர்த்தும் போது அல்லது குறைககும் போது வெளிவிடும் வெப்பத்தின் அளவு 1 கலோரி எனப்படும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட் ஆகிய சத்துப் பொருட்களே நம் உடலின் தேவைக்குரிய சக்தியைக் கொடுக்கின்றன். இந்த சக்தியின் அலகு கலோரி.  இந்த சக்தி சுவாசித்தல், இரத்த ஒட்டம், ஜீரணம் ஆகிய வேலைக்களுக்கு பயன்படுகிறது.  நம் உடலை இயக்குவதற்குத் தேவையான சக்தி அநேகமாக எல்லா மனிதர்களுக்கும் ஒரே அளவுதான் தேவைப்படும். ஆனால் அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்ப, ஒருவருக்குத் தேவைப்படும் கூடுதல் சக்தி மாறுபடும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஒருவரின் வயது, எடை, உயரம் இவற்றை மனதில் கொண்டுதான் ஒருவருக்குத் தேவையான சக்தியும் உணவின் கலோரி மதிப்பீடும் நிர்ணயிக்கப்படுகிறது.

மனிதரின் ஒரு நாளைய தேவை

               வயது கலோரிகள்
50 1500
30 – 50 2000
30 2500

 

எடையும் கலோரியும்                                                                                                                                                                          50 கலோரிக்கும் குறைவான உணவுகள்

            பொருட்கள் கலோரிகள்
டீ 150 மிலி 25
காபி 150 மிலி  (30 மிலி பாலுடன், சர்க்கரை இல்லாமல் ) 30
மோர் 15
இளநீர் 24
தண்டுக்கீரை 45
கீரைத்தண்டு 19
சிறுகீரை 33
முளைக்கீரை 43
அரைக்கீரை 44
குப்பக்கீரை 38
முட்ட கோஸ் 27
கொத்தமல்லி 44
வெந்தயக்கீரை 49
புதினா 48
பருப்புகீரை 27
பசலைகீரை 26
வெள்ள பூசணி 10
பீன்ஸ் 48
பாகற்க்காய் 25
சுரைக்காய் 12
அவரைக்காய் 48
காலிபிளவர் 30
வெண்டைக்காய் 35
மேரக்காய் 27
கொத்தவரக்காய் 16
வெள்ளிரிக்காய் 13
முருங்கைக்காய் 26
பீர்க்கங்காய் 17
புடலங்காய் 18
தக்காளிக்காய் 23
தக்காளிப்பழம் 20
பீட்ருட் 43
கேரட் 48
பெரிய வெங்காயம் 50
முள்ளங்கி (சிவப்பு) 32
முள்ளங்கி (வெள்ளை) 17
குடைமிளகாய் 24
கோவைக்காய் 18
நூககோல் 21
வெங்காயத்தாள் 11
பூசணி (மஞ்சள்) 25
வாழைத்தண்டு 42
வாழைப்பூ 34
மாங்காய் 44
பச்சை மிளகாய் 29
கொய்யாப்பழம் 38
சாத்துக்குடி 43
தர்பூசணி 16
ஆரஞ்சுபழம் 48
பப்பாளிப்பழம் 32
அன்னாசிப்பழம் 46
பச்சைபயிறு சுண்டல் 33
பட்டாணி சுண்டல் 33

 

 

 

 

 

 

50 முதல் 100 கலோரி உள்ள உணவுகள்

பொருட்கள் கலோரிகள்
பால் 100 மிலி 100
தயிர் 1/2 கப் 60
சாம்பார் 65
தக்காளி சட்னி 52
வெங்காய சட்னி 65
புதினா சட்னி 64
சிறிய வெங்காயம் 59
பச்சைப் பட்டாணி 93
உருளைக்கிழங்கு 93
சேனைக்கிழங்கு 79
கொடிக்கிழங்கு 97
வாழைக்காய் 64
ஆப்பிள் 59
திராட்சை 58
பலாப்பழம் 88
எலுமிச்சை பழம் 57
மாம்பழம் 74
மாதுளை 65
சப்போட்டா 98
அகத்திக்கிரை 93
ராஜகீரை 67
சக்கரவர்த்திக்கீரை 57
முருங்கைக்கீரை 92
மணத்தக்காளிக்கீரை 68
பொன்னாங்கண்ணிக்கீரை 73
டபிள் பீனஸ் 85
இஞ்சி 67
நெல்லிக்காய் 58
கொண்டைக்கடலை சுண்டல் 63
ராஜ்மா சுண்டல் 67
தட்டப்பயிறு சுண்டல் 75-80
முளைகட்டிய பச்சைப்பயிறு சுண்டல் 62

 

 

 

 

 

101 முதல் 200 கலோரி உள்ள உணவுகள்

பொருட்கள் கலோரிகள்
தோசை 200
சப்பாத்தி 100
உப்புமா 200
பொங்கல் 138
இடியாப்பம் 100
அரிசி சாதம் 113
கோதுமை சாதம் 114
சாம்பார் சாதம் 136
புளி சாதம் 125
எலுமிச்சை சாதம் 124
மீன் குழம்பு 141
வேகவைத்த முட்டை 170
ஆம்லெட் 190
வாழைப்பழம் 116
சீதாபழம் 104
மரவள்ளிக்கிழங்கு 157
ஓவல் 125
போன்விட்டா 125
கிச்சடி 168
கருணைக்கிழங்கு 111
சக்கரைவள்ளிக்கிழங்கு 120
பூண்டு 145
கருவேப்பில்லை 108
இட்லி 140
ஆப்பம் 100

 

 

 

 

 

 

 

 

 

201 முதல் 400 கலோரி உள்ள உணவுகள்

பொருட்கள் கலோரிகள்
மசால்தோசை 220
ஊத்தாப்பம் 220
தேங்காய் சட்னி 325
பூரி 318
பூரி மசால் 209
பரோட்டா 310
வெஜிடபிள் பிரியாணி 382
நூடுல்ஸ் 375
பிரைடு ரைஸ் 374
கோழிக்கறி 205
வறுத்த மீன் 256
ஆட்டு இறைச்சி 374
பன்றி இறைச்சி 375
பேரிச்சம்பழம் 317
ஐஸ்கிரீம் 217
பர்பி 296
சமோசா 256
வடை 243
போண்டா 223
லட்டு 387
மைசூர்பாக் 387
குலாப் ஜாமூன் 400
ரசகுல்லா 340
கோதுமை பிரட் 244
சாதா பிரட் 245
சக்கரை 398
தேன் 319
வெல்லம் 383
ஜவ்வரிசி 351
கடலைப்பருப்பு 372
பொட்டுக்கடலை 396
கொள்ளு 321
சுண்டைக்காய் உலர்ந்தது 269
பன்னீர் 264
ஏலக்காய் 229
வரமிளகாய் 246
கிராம்பு 286
மல்லி 288
சீரகம் 356
வெந்தயம் 333
மிளகு 304
மஞ்சள் துள் 349
பஃப்ஸ் 356
புளி 283

 

400 கலோரிக்கு மேல் உள்ள உணவுகள்

பொருட்கள் கலோரிகள்
ஓட்டு பக்கோடா 475
முறுக்கு 529
தட்டவடை 521
உருளைக்கிழங்கு சிப்ஸ் 569
மிக்சர் 500
பாதாம் 655
முந்தரி 596
வெண்ணைய் 729
நெய் 900
டால்டா 900
சமையல் எண்ணெய் 900
இறைச்சி உறுப்பு பகுதிகள் 406
மாட்டிறைச்சி 413
பாதாம் அல்வா 570
கேக் 460
ஜிலேபி 412
சாக்லேட் 499
எள்ளு 563
நிலக்கடலை 570
பிஸ்தா 625
கசகசா 408
காய்ந்த தேங்காய் 662
தேங்காய் பால் 430
தேங்காய் 444
பர்கர் 540
சோயா பீன்ஸ் 432

 

 

 

 

நாம் அன்றாடம் செய்யும் சில பணிகள் மூலம் உடலில் எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்ற அட்டவணை (ஒரு மணி நேரம் செய்தால்)

பொருட்கள் கலோரிகள்
தொலைபேசியில் பேசுவது 50
குளிப்பது 100
படுக்கை சுத்தம் செய்வது 300
பல் விளக்குவது 100
தலைவாருதல் 100
உடை உடுத்தும்போது 150
பர்னிச்சர்களை துடைப்பது 150
ஆபிஸில் ஃபைல் செய்வது 200
துணிக்கு இஸ்திரி போடுவது 100
தறையை மெழுகுவது 200
உணவு சமைப்பது 100
படிப்பது 25
தைப்பது 50
டைப் அடிப்பது 50
துரிதமாக சைக்கிள் ஓட்டுவது 600
மெதுவாக சைக்கிள் ஓட்டுவது 300
மலை ஏறுவது 400
பெயிண்ட் செய்வது 150
பாடுவது 50
வேகமாக ஓடுவது 900
மெதுவாக ஓடுவது 600
மாடிப்படி ஏறி இறங்குவது 800
பாத்திரங்கள் தேய்ப்பது 75
கூடைப் பந்து விளையாடுவது 550
பாட்மின்ட்டன் விளையாடுவது 400
உடற்பயிற்சி செய்தல் 600
தோட்ட வேலை செய்தல் 250
துணிதுவைத்தல் 75

இவ்வாறு நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் நாம் உடலை சீரான எடை இருக்கும்படி வைத்துக் கொள்ள முடியும். பல்வேறு உணவுகளின் கலோரி கணக்கு.

குறிப்பு இந்தப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள கலோரி அளவுகளள் தோராயமானதே. மூலப்பொருட்களைப் பொருத்தும் கலோரி அளவுகள் மாறுபடலாம்.

எனவே உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

                                                                                                          J.P. தக்சணாமூர்த்தி

 

Series Navigation21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு கட்டுரை நூல்) ஆசிரியர் : முனைவர் பூ மு அன்பு சிவாகவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *