திருப்பூர் : ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 27 of 29 in the series 9 அக்டோபர் 2016

 

 

” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு : சேவ் இயக்குனர் ஆ.அலோசியஸ்         ( சேவ் கூட்டமைப்பு , திருப்பூர்) தலைமை வகித்தார். வியாகுலமேரி வரவேற்றார் .

சா.கந்தசாமி ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ) ,சென்னை நூலை வெளியிட்டார்.

அவர் பேசியது: குழந்தைப் பருவத்தை வேட்டையாடாதீர்கள் பெற்றோர்களே. அவர்கள் அந்தந்த வயதில் குழந்தைகளாகவே இருக்கட்டும்.உங்கள் வீட்டில்  பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்க, நீங்கள் வாகனம் வாங்க உங்கள் குழந்தைகளை தொழிலாளிகளாக்காதீர்கள். வெளிநாடுகளில் குழந்தைகள் முழு ஆளுமையுடன் வளர்கிறார்கள். வாழ்கிறார்கள், குழந்தை ஆளுமை முழு வாழ்வின் ஆதாரம்.  அறிவு பள்ளிப் படிப்பில் மட்டும்  இல்லை . பொது புத்தக வாசிப்பில் இருக்கிறது.அனுபவத்தில் இருக்கிறது.பயிற்சியை தொழிலாளச் செய்தால் அது தீமை.குழந்தைகளைத் தொழிலாளிகளாகும் பெற்றோர் அடிப்படை உரிமையில் கைவைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.  குழந்தைத் தொழிலாளர்கள் மீதான பல்வேறு அழுத்தங்கள் அவர்களை பிறகு வன்முறைகளாக்குகிறது.அது வேண்டாம்..குழந்தைகளாகவே வளர விடுங்கள்.

நூலைப் பெற்றுக் கொண்டு எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் பேசியது: கல்வி உரிமைச்சட்டம் ,கட்டாயக்கல்வித்திட்டம், மாவட்ட நிர்வாகங்களின் கெடுபிடி  ஆகியவை தொழில்நகரங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. ஆனால் சமீப ஆண்டுகளில் பீகார், ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து தொழில் நகரங்களில் இருக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் அடிப்படை மொழி சிக்கல் காரணமாகப் பள்ளிக்கல்விக்குப் செல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள்.குழந்தைத் தொழிலாளர்களாக அவர்கள் மாறும் அவலம் இருக்கிறது. இந்த அவலம் புதிய தேசிய கல்விக் கொள்கையால் அதிகரிக்கும். அதில் உள்ள அய்ந்தாம் வகுப்பிற்குப் பிறகு தேர்வும் அதில் தேர்ச்சி பெறாதவர்கள் கட்டாயத் தொழில்கல்விக்கு அனுப்புவதும் குழந்தைகளின் கல்வியை தடைசெய்யும். சமஸ்கிருத திணிப்பும், மாநில பட்டியலில் இருந்து கல்வியை மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்வதும் இன்னும் சாதாரண மக்களுக்கு கல்வியை அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளது. சேவ் கூட்டமைப்பு சார்ந்த பலர் உரையாற்றினர் .கருப்பசாமி நன்றி கூறினார்.

” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “  நூல் வெளியீடு : சேவ் கூட்டமைப்பு , திருப்பூர் ( 98422 13011 ) ”

 

Series Navigationமிதவையும் எறும்பும் – கவிதைகதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *