விழிப்பு - கவிதை நம்மை சுற்றிலும் வசந்தங்கள் தாம்... ஆயினும், நமது தடித்த தோல்கள்தாம் நம்மை சலனப்படுத்த வசந்தங்களை அனுமதிப்பதில்லை... - ஸ்ரீராம் ************************************** கறை - கவிதை நெருப்பு... மரக்கட்டையை எரித்த கதையை சுவற்றின் மீதே எழுதிச்செல்கிறது... - ஸ்ரீராம் ************************************** தன்னியல்பு - கவிதை நான் நேராக வந்த பாதையை யாரோ குனிந்தபடியே கடந்திருக்கிறார்கள்.. யாரோ ஓடி கடந்த பாதையை நான் தவழ்ந்து கடந்திருக்கிறேன்... அந்த யாரோவுக்கு என்னையும் என்னை அந்த யாரோவுக்கும் தெரியாத வரையில் எல்லாமும் தன்னியல்பில்... - ஸ்ரீராம் **************************** வழி - கவிதை எதுவோ ஒன்று தடுக்கும் வரை எல்லாமே வழிதான் பார்வையற்றவனுக்கு... - ஸ்ரீராம் ******************************************** அடையாளம் - கவிதை ஒவ்வொருமுறையும் என்னை நான் கண்டடையும்போதும் இந்த உலகம் 'அது நீ இல்லை' என்கிறது... - ஸ்ரீராம்
- ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016 மாத இதழ்
- தமிழ்மணவாளன் கவிதைகள்
- பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்
- கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்
- திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்
- தொடுவானம் 141.நான் கொன்ற காதல் …
- வெளிச்சளிச்சம்
- சோப்பு
- கவிதைகள்
- தேவி – விமர்சனம்
- வெண்சிறகுகள் …….
- நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா
- கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்.
- பூத வடிவுள்ள புதுக்கோள் -9 மறைவாய்ச் சூரியனுக்கு முறையற்ற சாய்வை உண்டாக்குகிறது
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 5 டாக்டர் இராஜதுரை