உமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 7, 8 , 9

This entry is part 8 of 11 in the series 25 டிசம்பர் 2016
Inline image 1

கி.பி. [1044  – 1123]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார்.  அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய ஆங்கிலப் பாக்கள்.  அவரும் ஐந்து முறை சற்று மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த் துள்ளார்.  உமர் கயாம் பாரசீக  அராபிக் மூலப் பாக்களை மொழி பெயர்ப்பது கடினம்.  நான் பின்பற்றும் ஆங்கில ஈரடிப் பாக்கள் ஃபிட்ஜெரால்டு இரண்டாவது முறை எழுதியவை போல் தெரிகிறது.  முதன்முறை செய்தவை  என்றும் சில பதிப்புகள் கூறும்.

+++++++++++++++++

7.   வா !  என் கிண்ணம் நிரப்பு !  வசந்தச் சூட்டில்

துயர்  என்னும் குளிர் மேலங்கி பறந்திடும்;

காலப் பறவைக் குள்ளது குறுகிய சந்துதான்,

ஆயினும் பறக்குது பறவை சிறகடித்த படியே !   

 

  1.      Come, fill the Cup, and in the Fire of Spring
    The Winter Garment of Repentance fling:
    The Bird of Time has but a little way
    To fly — and Lo! the Bird is on the Wing.

 

8.    பாபி லோனோ வேறு நைசாப்பூர் நகரோ,

குவளை மது இனிப்போ இல்லை கசப்போ,

உயிரின் ஒயின் மதுக் கசியும் துளித் துளியாய்,

உதிரும் வாழ்வின் இலைகள் ஒவ்வொன்றாய் !

 

  1.    Whether at Naishapur or Babylon,
    Whether the Cup with sweet or bitter run,
    The Wine of Life keeps oozing drop by drop,
    The Leaves of Life ke
    ep falling one by one.

 

9.   காலைப் பொழுது கொணரும் ஆயிரம் பூக்கள்

ஆயினும் நேற்றைய பூக்கள் எங்கே போயின ?

பூக்கள் தோன்றிய வேனிற் காலம் முதலாய்

ஜாம்சைத், கைகோபாத் நகர்கள் மறைந்தன.

  

  1.     Morning a thousand Roses brings, you say;
    Yes, but where leaves the Rose of Yesterday?
    And this first Summ
    er month that brings the Rose
    Shall take Jamshyd and Kaikobad away.
Series Navigationதொடுவானம் 150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *