துருவங்கள் பதினாறு – விமர்சனம்

This entry is part 14 of 14 in the series 5 பெப்ருவரி 2017

thiruvangalபடத்தில் முதலில் கவனத்தை ஈர்த்தது ஒலி. ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி சொல்லி துவங்கியபோதே தெரிந்துவிட்டது. இசையில் சென்ச்சுரி என்று.

ரகுமான் இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்கப்போனால் எல்லோருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு மிக மிக பொறுத்தமாக இருக்கிறார்கள். பேப்பர்காரன், அந்த மூன்று வாலிபர்கள், கிருஷ், ஷ்ருதி, ஷ்ருதியின் ரூம்மேட் வைஷ்ணவி என்று எல்லோருமே பொறுத்தமாக இருக்கிறார்கள்.

எனக்கு ரொம்ப உறுத்திய லாஜிக் ஓட்டைகள்…

1. எழுத்தாளர் சுஜாதா சொல்வார்.. குற்றவாளி குறித்து வாசகனுக்கு/பார்வையாளனுக்கு முன்கூட்டியே அறிமுகம் கொடுத்துவிடுவதுதான் துல்லியமான த்ரில்லருக்கு இலக்கணம் என்று. ஆனால் இந்தப்படத்தில் அப்படி இல்லை. குற்றவாளி ரகுமானின் மகன் என்பது க்ளைமாக்ஸில் தான் தெரிகிறது. இது கதையின் லாஜிக்கில் ஒரு பெரிய ஓட்டை என்று நினைக்கிறேன்.

2. கிருஷ் தன்னுடன் அழைத்துவரும் ப்ரேம் கார் ஆக்ஸிடென்டில் இறந்துவிடுகையில், அவரை பற்றி விசாரித்து அவரது குடும்பத்தினர் வருவதாக காட்டவே இல்லை. குறைந்தபட்சம் காணவில்லை என்கிற போலீஸ் கம்ப்ளெயின்டாவது காட்டியிருக்கலாம். அதே போல, ஷ்ருதியை காணவில்லை என்றும் கூட எவரும் அலட்டிக்கொண்டதாக காட்டப்படவில்லை. இதுவும் ஒரு பெரிய ஓட்டை.

3. ஒரு காட்சியில் பி பாசிட்டிவ் என்று அடையாளப்படும் இடத்தில் கிருஷின் அடையாள அட்டையைத்தான் ரகுமான் கெளதமிடம் தருகிறார். அபார்ட்மென்டில் உள்ள அடுத்த வீட்டுக்காரர் கிருஷ் உடன் தனியாக வரும் ஷ்ருதியை அணுகி விசாரிக்கையில் கிருஷை ஃபியான்சி என்று சொல்கிறார். இது கெளதமின் விசாரணை காட்சியாகத்தான் காட்டப்படுகிறது. ஆனால் ஷ்ருதியின் உண்மையான காதலன் ரகுமானின் மகன். இதை மறுக்கும்படியான காட்சிகள் ஏதும் படத்தில் இல்லை.

4. விபத்தில் சிதைந்த முகத்தை உடனடியாக மாற்றியிருப்பார்கள். ரகுமானுக்கு நெருக்கமாக காட்டப்படும் கெளதம் 5 வருட கோமா என்பதை நாம் ஒருவாறு ஏற்றுக்கொண்டாலும் ஐந்து வருடம் கழித்தா முகத்தை மாற்றினார்கள்? விபத்து நடந்ததுமே மாற்றியிருக்க வேண்டுமே? அது ரகுமானுக்கு எப்படி தெரியாமல் போனது?

5. கிருஷின் அண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் கெளதமிடம் ” நீ இதை கேட்டே ஆகணும்” என்று சொல்லிவிட்டு, ஷ்ருதியை கிருஷ் வன்புணர்ந்ததை சொல்கிறார் ரகுமான். பிறபாடு அவரே கிருஷின் அப்பாவிற்கு கிருஷ் ஒரே மகன் என்று சொன்னது நினைவிருப்பதாகவும் சொல்கிறார். அந்த இடம் வரை கெளதம் தான் வந்திருப்பது என்பது ரகுமானுக்கு தெரியவில்லை. அப்படியிருக்க ” நீ இதை கேட்டே ஆகணும்” என்று ஏன் சொல்ல வேண்டும்? புதியவனின் கேள்விக்கு ஏன் பதிலளிக்க வேண்டும்.

6. உண்மையாக நடந்தவை என்று கொட்டும் மழையில் காருக்குள் வைத்து ஷ்ருதியை ப்ரேம் மானபங்கம் செய்வதற்கு அனுமதித்து கிருஷ் காத்திருப்பதாக காட்டுகிறார்கள். இதை வீட்டிலேயே செய்திருக்கலாமே. காருக்கு வரவேண்டிய கட்டாயம் என்ன?

கதையை ஒருவர் மாற்றி ஒருவர் சொல்வதால் எல்லாமும் கோர்வையாக செல்வதாக தெரிகிறதே ஒழிய கதையில் லாஜிக் ஓட்டைகள் இருக்கவே செய்கின்றன. இருப்பினும், குறும்பட இயக்குனராக அறிமுகம் ஆனவர் ஒருவர் திரைப்படத்தில் ஒரு மைல்கல்லை தாண்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

காட்சிகள் நேர்த்தியாக இருக்கின்றன. லாஜிக் ஓட்டைகளை தவிர்த்துவிட்டுப்பார்த்தால் எல்லாமே நச் தான். பாடல்கள் இல்லை. ஹீரோயிசம் இல்லை. ஒருமுறை பார்க்கலாம்.

 

ராம்ப்ரசாத்

Series Navigationபூங்காவனம் இதழ் 27 பற்றிய பார்வை
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *