கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)

This entry is part 1 of 14 in the series 5 மார்ச் 2017
சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற
சில மூத்த – இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை,
மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள்
குறித்தும்குறித்து பேசினார்கள்.
வெளி ரெங்கராஜன் “விளக்கு” அமைப்பையும்,அதன் நோங்கங்களையும்
 பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின் நவீன எழுத்துக்களையும்,
எழுத்தாளர்களயும் கண்டு கொள்ளாமல் செல்லும் நிலையில்,
விளக்கு போன்ற அமைப்புக்கள்தான், அவர்களை கொளரவிக்கவும்,
நல்ல எழுத்துக்களை வெளியிட்டும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு
 ஒரு பாதை அமைத்து தரவேண்டும் என்றார். இந்தாண்டு,
ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரை கொளரவிப்பதில், விளக்கு
பெருமை கொள்கிறது.
பெருமாள் முருகன் ;- தொல்காப்பியத்தில், மொழிபெயர்ப்பை
பற்றி கூறப்பட்டுள்ளது. 2000 வருட தமிழ் இலக்கியத்தில் பல
மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. பல வடமொழி பனுவல்,
 தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளனர்.ஆனால் தமிழ்
மொழி இலக்கியங்கள், வேறு மொழியில் போனதற்கு எந்த
குறிப்பும் காணப்படவில்லை. இது ஒரு பெரிய குறைதான்.
பேராசிரியர் வையாபுரி பிள்ளைக்கூட, எந்த சொல்
சமஸ்கிருதத்திலிருந்த வந்தது என்ற ஆராய்ச்சியே செய்துள்ளார்.
ஆனால், எத்தனை தமிழ் வார்த்தைகள், வடமொழிக்கு சென்றுள்ளது
என்று கூறவில்லை. ந.முருகேச பாண்டியன் தான், சிறிய
அளவில் தற்காலத்தில் செய்துள்ளார்.
பாரதியார், பல ஆங்கில நூல்களை, ஆங்கிலத்திலிருந்து,
தமிழுக்கு தந்துள்ளார். ஆனால், தமிழ் இலக்கியத்தை அவர்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை.இதுவும், ஒரு
பெரிய குறைதான்.
இதேபோல் தான், க.நா.சு.வும், ஆங்கில உலகின் உன்னத
எழுத்துக்களை, தமிழில் மொழி பெயர்த்து, தமிழ் வாசகர்களின்,
 இலக்கிய உலகை விசாலப்படுத்தினார். ஆனால், இங்குள்ள,
சிறந்த எழுத்துக்களை, அவர் ஆங்கில மொழி வாசகர்களுக்கு
 தரவில்லை.நம்மிடையே, மொழி பெயர்ப்பாளர்கள் அகராதியோ,
 அவர்களைப்பற்றிய தொகுப்போ இல்லாமல் போனது, ஒரு பெரிய
குறையாகத்தான் இருக்கின்றது.இந்த சூழ்நிலையில், கல்யாணராமனை
போன்ற, திறம்படைத்த, இலக்கிய்ம் அறிந்த ஒருவரை,
விளக்கு அமைப்பு தேர்வு செய்துள்ளது, பெருமைக்கூறிய
செயல்தான். மேலும், தேர்வு குழுவினரையும் பாராட்டதான்
வேண்டும். இது தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஒரு
மைல்கல்தான். கல்யாணராமன், மொழிபெயர்ப்புக்கு
எடுத்துக்கொள்ளும் கால அவகாசம், அந்த எழுத்தின் நுட்பம்,
ஆழ்ந்த வாசிப்பு, நவீன இலக்கியத்தின் ஆழம், எழுத்தாளர்களின்
உள்ளுணர்வு இதனை அறிந்து கொண்டுதான், அந்த நூலை
எடுக்கின்றார்.
அவரது மொழி பெயர்ப்பையும், மற்றவர்கள்து மொழி பெயர்ப்பு
நூலயும் படிப்பவர்களுக்கு இது புரியும். என்னுடைய அனுபவம்
அப்படித்தான் சொல்கின்றது.உதாரணத்திற்கு, என்னுடைய,
ஒரு நாவலை மொழி பெயர்க்க அவரிடம் கேட்டு கொள்ளப்பட்ட
போதுதான், எனக்கு, கல்யாணராமனின் உழைப்பின் பின்புலம்
தெரியவந்தது. என்னிடம் ஒருநாள் தான் வருவதாக கூறினார்.
அடுத்த நாள் நாமக்கலுக்கு வந்துவிட்டார். ஒருநாள் முழுவதும்
என்னோடு உரையாடி, என் நூலின் நுட்பம், வட்டார வழ்க்கு
 சொல்லின் அர்த்தம், அந்த சொற்கள் பயன்படுத்த படுகின்ற
இடத்தின் உறவு, மூல ஆசிரியனின் எண்ணம், அவனது
கலையுணர்வு போன்ற நுட்பங்களையெல்லாம் அறிந்து
கொண்டுதான், பிறகு எழுதவே ஆரம்பிக்கின்றார். இவரது
இந்த செயல் எனக்கு ஆச்சர்யமாகவே தெரிந்தது.பிறகு,
அந்த நாவலை அவர் முடித்தவுடன், எனக்கு அனுப்பி
என்னுடைய எண்ணங்களை அறிந்து கொள்ளவும்
செய்கின்றார். இதுவே, அவரது மொழி பெயர்ப்பின்
வெற்றிக்கு அடித்தளமாக அமைகின்றது.
இன்று விளக்கு தந்த இந்த விருது, பல மொழிபெயர்ப்பாளர்களுக்கு
உத்வேகத்தையும் ,உற்சாகத்தையும் தரலாம். பலர், தமிழின் சிறந்த
படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சிக்கலாம்.
இதுவே, தமிழின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமையலாம்.
கல்யாணராமனுக்கு, அசோகமித்திரன் விளக்கு விருதினை தந்தார்,
இந்திரா பார்த்தசாரதி காசோலயை கொடுத்தார்.
இந்திரா பார்த்தசாரதி;-  கல்யாணராமன், பல ஆண்டுகளுக்கு
முன்பே, சிவசங்கரா என்ற புனைபெயரில், கணையாழியில்
எழுதியதை படித்துள்ளேன். மேலும், அந்த காலத்திலேயே
அவருக்கு நல்ல இலக்கிய ஆர்வமும், பல நவீன இதழ்களில்
எழுதியும் உள்ளார். இப்படிப்பட்ட ஒருவர், தமிழ் எழுத்துக்களை ,
ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது, தமிழுக்கும், படைப்பாளர்களும்
கிடைத்த பெரிய கொடையாகும்.
விளக்கு அமைப்பை பாரட்டுகின்றேன். ஒரு நல்ல முடிவை
எடுத்துள்ளனர். மொழி பெயர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது
சரியான முடிவுதான். இது கூட, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு
 நாம் செய்யும் ஒரு தொண்டாக கருதலாம். கல்யாணராமன்
இந்த இலக்கிய பணியை விரும்பி செய்கின்றார். யாரும் ஒருவர்
தலயில் திணிக்கக்கூடாது. அந்த வேலை சரியாக வராது. நான்
பல மொழி பெயர்ப்பு நூல்களை படித்துள்ளேன், அதில் அந்த
நபரின் மேல் திணிக்கப்பட்ட படைப்பாகத்தன் அது தெரியும்.
ரசிக்க முடியாது. இது தொழிலாக செய்யக்கூடாது, விரும்பி
 செய்யும் இலக்கிய முயற்சியாக இருக்கவேண்டும். அந்த
வகையில், கல்யாணராமன், மிக விரும்பித்தான், அவருடைய
பணியை செய்கின்றார். இது அவரது, மொழி பெயர்ப்பை
 படித்தாலே தெரிகின்றது.
தேவிபாரதி ; – நான் ஒன்றும் பெரிய எழுத்தாளானே அல்லது
பெரிய இலக்கிய சாதனையோ ஒன்றும் செய்துவிடவில்லை.
இப்போதுதான், எழுத்து துறைக்குள் நுழைந்து, சில நூல்கள்
 வந்துள்ளன. அதற்குள், எனக்கொரு பெரிய ஆசை மனதில்
புகுந்த, நம்முடைய எழுத்தும், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு,
 உலக அளவில் மக்கள் படிக்க மாட்டர்களா ?என்ற பெருங்கனவோடு,
கல்யாணராமன் சாரை அணுக என் நண்பர்கள் சிலர் கூறினர்.
ஆனால், தூரத்திலிருந்து, ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அவரை
அணுக கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஒரு மனதை
திடப்படுத்திக்கொண்டு ஒருநாள் அவரை அணுகி, என்னுடைய “
பேர்வெல்  மகாத்மா “(    FAREWELL MAHATMA      ) சிறுகதை தொகுப்பை,
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருமாறு கேட்டுக் கொண்டேன்.
படித்துப்பார்த்துவிட்டு, சொல்கிறேன் என்றார். பிறகு அவரே,
என்னை அழைத்து, என்னுடைய கதைகளைப்பற்றி கேட்டறிந்தார்.
அந்த சிறுகதை தொகுப்பு , ஆங்கிலத்தில் வந்தவுடன் தான்,
மேலை நாட்டின் பார்வைக்கு சென்றது. பலர் என்னிடம் இது
குறித்து பேச ஆரம்பித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இன்று விளக்கு பரிசு அவருக்கு கிடைத்தது, எனக்கே கிடைத்ததுபோல்
மகிழ்ச்சியடைந்தேன்.
அ.மி.க்கு, தொடர்ந்து உட்காரமுடியாத நிலையில், ஒரு கட்டத்தில்
எழுந்து சென்றுவிட்டார். கல்யாணராமனை பெருமை படுத்தவே,
அவர் சிறிது நேரம் அமர்ந்து, கல்யாணராமனுக்கு, விருதை
கொடுத்தவுடன், கிளம்பிவிட்டார்.
ஸ்ரீநாத் பேரூர் ( கன்னட எழுத்தாளர் );- கல்யாணராமன், தன்க்கு
ஆதர்ஷமாக விளங்குவதாக கூறினார். அவரது, ஆங்கிலப் புலமையையும்,
இலக்கிய வாசிப்பும், அசோகமித்திரனின் புலிக்கலைஞனை ஆங்கில்
 மொழி பெயர்ப்பில் படித்த போது அறிந்துக் கொண்டேன். பல ரஷ்ய
இலக்கிய ஆளுமைகளின், எழுத்துக்கள், ஆங்கில்த்தில் மொழி பெயர்த்த
பிறகுதான், உலகளாவிய பார்வை பெற்றது.
ரவிசங்கர் ( பிரக்ஞை );– அசோகமித்திரன் கொடுத்து வைத்தவர்,
அவரது பல நூல்கள், கல்யாணராமனால் மொழிபெயர்க்கப்பட்டு,
உலகப்பார்வை கிடைத்தது. கல்யாணராமன் , ஆரம்பக்கால,
இலக்கியப்படைப்புகள், சிறப்பாகவே வந்துள்ளது. அவர் தொடர்ந்து,
 தமிழில் எழுதாமல் போனதில், நமக்கு நஷ்டம்தான்.
இன்று, பல அரசியல்சார்ந்த மேலை நாட்டு நூல்கள் , தமிழில்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மூலநூலையும், மொழிபெயர்ப்பு
 நூலையும்  உன்னிப்பாக படித்துப்பார்த்தால், மூலநூலின் கரு
சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை என்பது புரியும்.
ஏ.கே.ராமானுஜம், பல சங்கப்பாடல்களை, ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார். அவரை, ஆங்கில கம்பர் என்றே
சொல்லலாம்.ஆனால், அவருக்கு இருக்கின்ற தைரியமும்,
ஆங்கிலப்புலமையும் அவருக்கு ஒரு, இலக்கிய சுதந்திரத்தை
கொடுத்தது. ஆகவே, அவரது மொழி பெயர்ப்பில் அவர் தனது,
சுதந்திர சிந்தனையால், மொழியை அவர் சுதந்திரமாக, மொழி
பெயர்ப்பில் கையாண்டுள்ளார். ஆனால், எங்கும் அத்து மீறாமல்
 பார்த்துக் கொள்வார்.
இன்று, உலகமெங்கும், தமிழன் அறியப்பட்டுள்ளான். அதற்கு
முக்கிய காரணம், நமது, இலக்கியங்கள், ஆங்கிலத்தில்
வாசிக்கக்கிடைகின்றது.
இந்த அரிய முயற்சியை, இன்று கல்யாணராமன் செய்து வருவது
தமிழுக்கு பெருமை சேர்க்கும். இது கூட, உலக மயமாதலின் ஒரு
கருவியாகத்தான் பார்க்கவேண்டும்.
கல்யாணராமன் ;- ஒரு சமூகத்தின் யாதார்த்தங்களையும், அந்த
மனிதர்களின் வாழ்வின் ரகசியங்களையும் அறிந்துக் கொள்வது,
ஒரு மொழிப்பெயர்ப்பாளனுக்கு தேவையான தகுதிகளாக
இருக்கவேண்டும். இன்றும் பல மொழிப்பெயர்ப்பாளர்கள் நம்மிடையே
உள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம், மூல ஆசிரியருடன்
பேசுகின்றார்களா என்பது தெரியவில்லை. இதனால், அந்த
 மூலக்கதைக்கு உத்தரவாதம் இல்லை. மொழி பெயர்ப்பாளனுக்கு
மொழி ஆர்வம் வேண்டும். இந்த வேலையை, விரும்பித்தான்
செய்ய வேண்டும். ஏதோ திணிக்கப்பட்ட வேலையாக செய்யக் கூடாது.
ஒரு கதையை படித்து படித்து, அதனை உள்வாங்கிக்கொண்டு,
அதன் பிறகே மொழிப்பெயர்ப்பில் இறங்குவேன். பின், ஒரு வரைவை
உருவாக்கவேண்டும். இதுதான், மிகவும் கடினமான வேலை.
ஒரு மாதிரியாக, அதனை மனது உள்வாங்கிக்கொண்டவுடன்,
வேலை வேகமாக செல்லும்.
இன்றும் பல அரிய தமிழ் நூல்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படாமல்
இருக்கின்றது. இதற்கு, நமது அரசாங்கத்தின் துணை தேவை.
அவர்களின் பங்கு இதில் நிரம்ப உள்ளது. ஏதோ ஒரு சில, தனியார்
அமைப்புகள், மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் இதனை செய்கின்றது.
இது போதாது. இது, நமது மொழிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துகின்றது.
இந்த மொழி சேவையை அரசாங்கம் செய்ய தவறினால், நமது அடுத்த
தலைமுறைக்கு பெரிய இலக்கிய   இழப்பாக முடிந்துவிடும்.
பொன் வாசுதேவன் நன்றி உரையுடன், நிகழ்ச்சி முடிந்தது.
                                                 இரா. ஜெயானந்தன்.
Series Navigationஇலக்கிய சொல்லாடல்கள் : 1அவான் – கார்ட் (Avant-Garde)
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *