வனஜாவுக்கு இருதயத்தின் இடது பக்கத்தில் மைட்ரல் வால்வு சுருக்கம் இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதனால் இருதயத்தின் இடது கீழறையிலிருந்து இடது மேலறைக்குள் இரத்தம் முழுதுமாகப் புக முடியாமல் பின்னோக்கி தேங்கி நிற்பதால் நுரையீரலிலும் அது தேக்கமுற்று, மூச்சுத் திணறலையும், கால்கள் வீக்கத்தையும் உண்டுபண்ணுகிறது. இவை மைட்ரல் வால்வு சுருக்கத்தின் பின்விளைவு. வனஜாவுக்கு இப்போது இதுவே உள்ளது. இனியும் இதை. நீடிக்கவிட்டால் இருதயத்தின் இரு கீழறைகளும் வீக்கமுற்று இருதய செயலிழப்பு உண்டாகி மரணம் நேரிடலாம்.
வனஜாவுக்கு உடனடியாக இருதயத்தில் அறுவை மருத்துவம் செய்தாக வேண்டும். அதற்கு முதல் கட்டமாக அவள் வார்டில் சேர்ந்தாகவேண்டும். நான் அதையே செய்தென். அவளுடன் வந்திருந்த பெற்றோரை அறைக்குள் அழைத்து அவர்களிடம் அது பற்றி விளக்கினேன். அவர்களும் புரிந்துகொண்டதுபோன்று சம்மதம் தெரிவித்தனர்.
என் முதல் நோயாளியான வனஜாவை நான் வார்டில் சேர்த்துவிட்டேன். அவளுக்குத் தேவையான இரத்தம், சிறுநீர், எக்ஸ் – ரே பரிசோதனைகளுக்குத் தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்தேன். அவற்றை குறிப்பேடுகளுடன் இணைத்தேன். அவள் வார்டு நோக்கி சென்றுவிட்டாள். அவளை இருதய அறுவை மருத்துவ வார்டுக்கு மாற்றும்வரையில் எங்களுடைய மருத்துவ வார்டில்தான் இருப்பாள்.
அதன்பின்பு அடுத்த நோயாளியைக் கவனிக்கத் தொடங்கினேன்.அதுபோன்று காலை பத்தரை வரை தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக நோயாளிகளைப் பார்த்து மருத்து சீட்டுகள் எழுதித் தந்தேன்.தேவைப்படும்போது இன்னும் ஒரு சிலரை வார்டில் சேர்த்தேன். அரை மணி நேரம்
- அசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.
- அசோகமித்திரன் – கோட்டோவியம் – ஒரு அஞ்சலி
- சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது
- உயிரோட்டம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5
- புஜ்ஜிம்மா…….
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்
- தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்
- தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்
- சமையல்காரி
- பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி
- அம்பலம்