அம்பலம்

This entry is part 14 of 14 in the series 26 மார்ச் 2017

    ஸிந்துஜா    சொல்வனம் லேட்டஸ்ட் இதழில் 1996ல் அம்பை எழுதிய தி. ஜானகிராமனின் மரப்பசுவைப் பற்றிய கட்டுரை போட்டிருக்கிறார்கள். பசுவைப் பற்றிய மிக நல்ல பயனுள்ள கட்டுரை அது.       சில “இலக்கியஎழுத்து”க்களை படிக்கும் போது அச்சம் வந்துவிடுகிறது.கீழ்க்கண்ட வரிகளை படிக்கும் போது என்ன ஒரு ‘உதார்’ என்று தோன்றவில்லை? “முன்னகர வேண்டும் என்னும் விழைவோ ஒரு வித திருப்தியின்மையோ மனதிற்குள்ளாக உழன்றாலும், அம்மாற்றம் நிகழ்கையில் மேல்மட்டத்தில் மிதக்கும் பிரக்ஞை அதை உற்று நோக்குவதில்லை. […]

அசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.

This entry is part 1 of 14 in the series 26 மார்ச் 2017

 முருகபூபதி – அவுஸ்திரேலியா சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன்  குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்‌ஷாவை காணும் குழந்தை, ” அப்பா ரிஷ்க்கா ” என்று சொல்கிறது. உடனே  தகப்பன், ” அது ரிஷ்க்கா இல்லையம்மா…. ரிக்‌ஷா” என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். ” ரி… க்…ஷா…” குழந்தையும் அவ்வாறே, ” ரி…க்…ஷா…” எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா” என்கிறது. […]

விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

This entry is part 8 of 14 in the series 26 மார்ச் 2017

  கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான்  ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். அன்றே அவருக்கு அவரது உடலே ஒத்துழைக்காமல், முதுமையின் தள்ளாட்டாத்தில்தான் இருந்தார். அசோகமித்திரன், ஒரு நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து சென்றுவிட்டார்.அவரது ஐதாராபாத் வாழ்க்கையும், சென்னை வாழ்க்கையும் கொடுத்த வாழ்க்கைப்பாடங்களே அவரது எழுத்துக்களாய் நம்மிடம் வாழ்கின்றது. அவரது எழுத்துக்களைப்பற்றி, இனி ஒரு வாரமோ, […]

சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது

This entry is part 3 of 14 in the series 26 மார்ச் 2017

  குள்ளக்கோள்  புளுடோ  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ புளுடோ வுக்கு மீண்டும் சூரிய மண்டலக் கோள் மதிப்பீடு  ! பரிதியைச் சுற்றும் கோள்கள் மீண்டும் ஒன்பது என்று மாறியது ! புதன் முதல் புளுட்டோ வரை விதவிதப் பாறை, வாயுக் கோள்களில் விலக்கப்  பட்டது புளுடோ ! நெப்டியூன் இறுதிக்கோள் என்பது மாறி இப்போது மீண்டும் புளுடோ ஒன்பதாம் கோள் தகுதி பெற்றது அறிவிக்கப் பட்டது  ! குள்ளக் கோள் புளுடோ […]

உயிரோட்டம்

This entry is part 4 of 14 in the series 26 மார்ச் 2017

    பெளர்ணமியாய்   பவனி எனினும்   குகைக்குள் கொஞ்சம்   அமாவாசை     இதை   மறந்தும்; மறைத்தும்   நடிக்கும் பாத்திரமாய்   பகல் இரவு     முழு பூசணிக்காயை   மறைக்க முடிவதைப்போலவே   முழுநிலவாய் காட்டிக்கொள்வதும்     சிலர்   நிலவென்று சிலாகித்தனர்   சிலர்   இருளென்று ஆர்ப்பரித்தனர்     தவிர்க்க முடியாத   மதிப்பீடுகளோடுதான்   தரையிறங்கி   கால் பதித்து   […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5

This entry is part 5 of 14 in the series 26 மார்ச் 2017

5.          சுமதியின் வீடு. அந்த வீட்டின் நடுக்கூடம் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரக் குடும்பங்களுக்குரிய சுமாரான பரப்பளவில் இருக்கிறது. அதன் இடப் புறத்தில் குளியலறையும் நான்கு அடிகள் தள்ளி அடுக்களையும் அமைந்துள்ளன.  கூடத்தின் ஓர் ஓரத்தில் மெத்தை விரிக்கப்பட்டுள்ள ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது.  அதற்கு எதிர்ப்புற ஓரத்தில் ஒரு சாப்பாட்டு மரமேஜையும் நான்கு நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன.  அதன் அருகே ஒரு முக்காலியும் அதன் மீது ஒரு தொலைபேசியும் உள்ளன. சற்றுத் தள்ளி ஓர் அகன்ற […]

புஜ்ஜிம்மா…….

This entry is part 6 of 14 in the series 26 மார்ச் 2017

சோம.அழகு எனக்கு முந்தைய தலைமுறையினரை ஆச்சி தாத்தா ‘எப்படி கொஞ்சியிருப்பார்கள்?’ என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் சித்தப்பாக்களிடமும் மாமாக்களிடமும் கேட்டேன். “புஜ்ஜிமாவாது…..மண்ணாவது…….ஒங்க தாத்தா ஆரம்பிக்கும் போதே, ‘ஓல வெளக்குமாரால சாத்துவேன்….ராஸ்கல்’ னு தான் ஆரம்பிப்பா….. கொஞ்சுனாங்களாம்! ம்கும்….” – நடராஜன் சித்தப்பா. “இப்போவே நாக்குல எச்சி ஊறுதே….. அந்த வாழக்காய சீவி பஜ்ஜிமாவுல போட்டு…..”- உணவு ரசிகர் நடராஜன் மாமா. “பஜ்ஜிமாவு இல்ல மாமா….புஜ்ஜிமா” என்று தெளிவுபடுத்த, “சின்ன புள்ளைல ஒரு நாள் நானும் அண்ணனும் மாடியில […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 7 of 14 in the series 26 மார்ச் 2017

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++ [43] நண்பர்காள், மதுக் கூத்தடிப்புத் துணிவில் நடந்ததென் வீட்டில் எனக்கிரண்டாம் திருமணம்; காரணம் இல்லை, பழங் கட்டிலுக்கு மணவிலக்கு திராட்சைக் கொடி மகள் என் மனைவியாய் ஏற்பு.   [43] You know, my Friends, with what a brave Carouse I made a Second Marriage in my […]

தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்

This entry is part 9 of 14 in the series 26 மார்ச் 2017

வனஜாவுக்கு இருதயத்தின் இடது பக்கத்தில்  மைட்ரல் வால்வு சுருக்கம் இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதனால் இருதயத்தின் இடது கீழறையிலிருந்து  இடது மேலறைக்குள் இரத்தம் முழுதுமாகப் புக முடியாமல் பின்னோக்கி தேங்கி நிற்பதால் நுரையீரலிலும் அது தேக்கமுற்று, மூச்சுத் திணறலையும், கால்கள் வீக்கத்தையும் உண்டுபண்ணுகிறது. இவை மைட்ரல் வால்வு சுருக்கத்தின்  பின்விளைவு. வனஜாவுக்கு இப்போது இதுவே உள்ளது. இனியும் இதை. நீடிக்கவிட்டால் இருதயத்தின் இரு கீழறைகளும் வீக்கமுற்று இருதய செயலிழப்பு உண்டாகி  மரணம் நேரிடலாம். வனஜாவுக்கு உடனடியாக இருதயத்தில் […]