கம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது.

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 14 in the series 30 ஏப்ரல் 2017

கவிஞர் ரெ. முத்துக்கணேசனார் தம் 90 ஆம் அகவைகாண் விழா வரும் ஆகஸ்டு மாதத்தில் காரைக்குடி கம்பன் கழகக் கூட்டமாக மலர உள்ளது. இதற்காகச் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யக் காத்திருக்கிறோம்.
வழக்கம் போல ஆகஸ்டு முதல் சனிக்கிழமை மாதக் கூட்டம். அறிஞர்கள் கலந்து கொள்வர்.
இதுதவிர ஒரு கருத்தரங்கம் வைத்துக் கொள்ள்லாம் என்ற எண்ணம் எழுகிறது.
கவிஞர் ரெ. முத்துக்கணேசனாரின் படைப்புகள் பற்றி ஒரு நாள் கருத்தரங்கம் நடத்த எண்ணம்.
மீனாட்சி பள்ளியில் காலை அல்லது மதியம் கட்டுரைகள் வாசிக்கும் கருத்தரங்கம் வைக்கலாம் என்று எண்ணுகிறோம்.
குறிப்பாக முத்தொள்ளாயிரத்திற்கு ரெ. முத்துக்கணேசனார் எழுதிய உரை சிறப்பானது. அது குறித்தும் வைக்கலாம் என்று எண்ணம்
இதற்கா்ன கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இக்கட்டுரைகள் இணைய இதழில் வெளிவர வாய்புபள்ளது.இவ்விதழுக்கு ஐஎஸ்எஸ் என் தரமதிப்பு உண்டு.

காரைக்குடி கம்பன் கழக வலைப்பூவில் இக்கட்டுரைகள் இடம்பெறும்.
கட்டுரைகளுக்குக் கட்டணம் இல்லை.
கட்டுரைகள் ஜுலை 15க்குள் வந்து சேர வேண்டும் எப்போதும் போல் பக்கவரையறை (5 பக்கம்) யுனிகோடு எழுத்துருவில் kambantamilcentre@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒன்றிரண்டு கட்டுரைகள் என்றால் மதிய அமர்வாக வைக்கலாம்
முப்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்தால் ஒருநாள் கருத்தரங்காக வைக்கலாம்.
இதுகுறித்து கருத்து அறிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
எப்போதும் போல் கட்டுரைத் தலைப்புகளைப் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு மின்னஞ்சல் அல்லது முகநூல் வழியாக அறிவிக்கவும்.
தங்கள் அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

Series Navigationஎங்களை ஏன் கேட்பதில்லை?வாத்தியார் சாமி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *