உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

This entry is part 7 of 11 in the series 14 மே 2017

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

++++++++++

[60]

எழுதிச் செல்லும் ஊழியின் கை, எழுதி, எழுதி

மேற்செல்லும்; உன் பக்தியும், யுக்தியும் அதை

மறுமுறை மாற்றாது, அரை வரி கூட நீக்காது;

அழுத கண்ணீர்த் துளிகளும் அழிக்கா ஒருசொல்.

[60]
The Moving Finger writes; and, having writ,
Moves on: nor all thy Piety nor Wit
Shall lure it back to cancel half a Line,
Nor all thy Tears wash out a Word of it.

[61] மேதையர், சித்தர்கள் போதிக்கட்டும்

விரும்பு வதையோ, விரும்பாத வற்றையோ;

அறுந்து போகா, முறியா, அப்பால் தாண்டா

நிரந்தரத் தொடர்பில் சேரும் இணைப்பு தவிர.

[61]
For let Philosopher and Doctor preach
Of what they will, and what they will not – each
Is but one Link in an eternal Chain
That none can slip, nor break, nor over-reach.

[62]

வானம் என்னும் கவிழ்த்திய கும்பாவின்

கீழே நாம் கூடி வாழ்கிறோம், சாகிறோம்,

கை உயர்த்தி உதவிக்கதை அழைக்காதே,

நீயோ நானோ என்றுருளும் மலட்டுத் தனத்தில்.

[62]
And that inverted Bowl we call The Sky,
Whereunder crawling coop’t we live and die,
Lift not thy hands to it for help – for It
Rolls impotently on as Thou or I.

[63]

புவிமுதற் களிமண்ணால் இறுதி மனிதன் வடித்து

கடைசி அறுவடைக்குப் பின் விதை விதைத்தார்;

ஆம் முதல்நாள் புலர்ச்சி படைத்தோன் எழுதியது

கடந்த காலப் பொழுது கணக்கில் இருப்பதை.

[63]

With Earth’s first Clay They did the Last Man knead,

And then of the Last Harvest sow’d the Seed:
Yea, the first Morning of Creation wrote
What the Last Dawn of Reckoning shall read.

Series Navigationஅண்ணேபூமிபோல் கண்டுபிடித்த புதிய செங்குள்ளி விண்மீன் குடும்பத்தின் ஏழு கோள்கள் சீரொழுக்க முறையில் சுற்றி வருகின்றன
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *