Posted in

கவிதைகள்

This entry is part 10 of 11 in the series 11 ஜூன் 2017

அருணா சுப்ரமணியன்

1. இழப்பு 


பல்லக்கு பயணம் 

பாதுகாப்பான படுக்கை 

இருக்குமிடம் நீரும்  

எடுத்துப்போடும் 

சீட்டுக்கு

நெல்மணியும் 

சொகுசு வாழ்க்கை 

ஜோசிய கிளிக்கு 

என்கிறான் 

அதன் சிறகுகளை

வெட்டி எறிந்து ..

2. இணை தூக்கம்

புதிதாக வாங்கிவந்த 

முயல் குடும்பத்தின்  

குட்டி முயல் பொம்மை

மிகவும் பிடித்தது 

அம்முவுக்கு.. 

நாள் முழுதும் 

தன்னோடே வைத்து

கொஞ்சியவள்  

இரவு வந்ததும் 

மற்ற முயல்களுடன் 

தூங்க விட்டு போனாள் 

தன் தனியறைக்கு…

3. இலக்கு  


வசந்தத்தின் வாசம் 

வாசலில் வீச தொடங்கிய நேரம்…

மிகுந்த நகங்களை வெட்டி கொண்டிருந்தேன்..

யாரோ என்னை பார்ப்பது போல் தோன்ற

சுற்றும் முற்றும் பார்த்தேன்….

ஓசையின்றி ஒரு அணில் எட்டி பார்த்தது..

தலையை சாய்த்து என்னை வேடிக்கை பார்த்தது….

தாவி தாவி சென்ற அணில் என் மனதுள் தாவியது..

தார்சாலையிலேயே தாவி சென்றது..

வழியில் கொறிக்க எதுவும் கிடைக்குமா என்று 

தேடியது போல் இருந்தது..

எதுவுமே அகப்படாது போக 

திருப்பத்தில் இருந்த பாலத்தில் இறங்கி 

மரத்தில் ஏறி மறைந்தது….

சாலையோரத்து மண்தரையில் 

உதிர்ந்திருந்த பழங்கள் காயத் தொடங்கின…..

arunakalamani@gmail.com

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *