-
அருணா சுப்ரமணியன்
-
மறந்த வரம்
இதமாய் வருடுது காற்று
இன்பத் தேனாய் பாயுது
குருவிகளின் கொஞ்சல்
குதித்து ஓடும் அணிலின்
துள்ளலில் அத்தனை குதூகலம்
பூக்களின் வண்ணங்கள்
கண்களை குளிர்வித்தன
நடைப்பயிற்சியின்
ஒவ்வொரு சுற்றிலும்
என்னை நோக்கி வீசப்பட்ட
குழந்தையின் சிரிப்புகளை
பத்திரமாய்ச் சேகரித்தேன்
கூடவே மறக்காமல் இருக்க
மனதிடம் சொல்லிவைத்தேன்..
மறந்து வைத்த கைபேசியை
நினைவாக நாளையும்
மறந்து வர வேண்டுமென….
- எரிதலின் பொருட்டு
எங்கோ காய்த்து வெடித்த
பஞ்சு திரிக்கப்படுகிறது
எவ்விடம் தீபம் ஆவோம்
அறிவதில்லை திரிகள்
விளக்குகளை ஏற்றும் சிலர்
எண்ணெய் நிரப்பியும்
திரிகளை தூண்டியும்
தீபத்தின் ஆயுளை
நீட்டிக்கின்றனர்..
விளக்கு ஏற்றியதையே மறந்தவர்
தீபம் அணைவதையோ
திரிகள் கருகுவதையோ
உணர்வதில்லை…
அனைத்தையும்
அவதானிக்கும்
திரிகள் மட்டும்
தீபங்களாக
எரிதலின் பொருட்டே
வாழ்கின்றன…
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 18.
- சூரிய குடும்பத்தில் புளுடோவுக்கு அப்பால் பூமி வடிவில் பத்தாவது கோள் ஒன்று ஒளிந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது
- களிமண் பட்டாம்பூச்சிகள்
- உலக சுற்றுச்சூழல் தினம் விழா
- தலித்துகள் உயர்பதவிகளுக்கு வருவதால் தலித்மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமா?
- தொடுவானம் 175. நண்பர்கள் கூடினால் ….
- சிறுகதைப் போட்டி
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- அருணா சுப்ரமணியன் –
- மொழிவது சுகம் ஜூன் 24 2017
- மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது – இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்
- சதைகள் – சிறுகதைகள்
- கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி