உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 8 of 13 in the series 25 ஜூன் 2017

 

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

+++++++++++++++++

[79]

அடுத்த குடம் சொல்லும், பெருமூச்சு விட்டு

புறக்கணிப் பாகி காய்ந்து போச்சு என் களிமண்;

ஆயினும் என் குடத்தில் நிரப்பு பழைய மதுரசம்,

தெரியுது சிறுகச் சிறுகப் பிழைத் தெழலாம் நான்.

[79]

Then said another with a long-drawn Sigh,
‘My Clay with long oblivion is gone dry:
But, fill me with the old familiar Juice,
Methinks I might recover by-and-by! ‘

[80]

அடுத்தடுத்து பானைகள் உரையாடி வந்திட,

நிலவு நோக்கும் அவை தேடுவ தெல்லாம்;

ஒன்றை ஒன்று தூண்டி விட்டு, “பார்  சகோதரா!

இப்போது கீச்சிடும் குயவனின் தோள் சுளுக்கு!”

[80]

So while the Vessels one by one were speaking,
The Little Moon look’d in that all were seeking:
And then they jogg’d each other, ‘Brother! Brother!
Now for the Porter’s shoulder-knot a-creaking! ‘

[81]

ஆயுள் ஓய்ந்த என் உடலை உயிர் போன பின்

திராட்சை ரசத்தால் குளிப்பாட்டி விட்டாய்;

சுருட்டிய திராட்சை இலைத் தாளில் சுற்றி

புதைத்திடு என்னை, இனிய பூங்கா அருகில்.

[81]

Ah, with the Grape my fading Life provide,
And wash my Body whence the Life has died,
And in a Windingsheet of Vine-leaf wrapt,
So bury me by some sweet Garden-side.

++++++++++++++++++++++++++

Series Navigationசிறுகதைப் போட்டிஅருணா சுப்ரமணியன் –
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *