பெருந்துயர்

This entry is part 9 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

கடுமை யாக நடத்திய தென்னை

இவ்வையகம் ! பெருந்துயரே !

என்றும் அழாத குணத்தவன் நான் !

தாழ்வாக மதித்த தென்னை

இவ்வையகம் ! பெருந்துயரே !

இப்போ தவளை நான்

இழந்து விட்டேன் நிச்சயமாய் !

இனிக் காணப் போவ தில்லை.

இழுத்து வர வேண்டும் என்னிடம்

இனி அவளை ! பெருந்துயரே !

 

நினைவுக்கு வரும் நாங்கள் செய்த

நல்வினைகள் யாவும் !

தனித்துப் போன

தன்னைப் பற்றி மட்டும்

ஒன்றும் அறியா தவளா அவள் ?

அழைத்துவா மீண்டும் அவளை 

என்னிடம் !  ஏனெனில்

எல்லாரும் அவளைக் காணலாம்.

 

அவள் இன்றேல் வரும் துயர் எனக்கே !

நினைவுக்கு வரும் நாங்கள் செய்த

நல்வினைகள் யாவும் !

அவளுக்குத் தெரியும்

அவள் மட்டும் தனித்துப் போனதை !

அழைத்து வா அவளை,

என்னிடம்

அனைவரும் காண !

அவள் இன்றேல் துயர்தான் எனக்கு !

துயர்தான் ! துயர்தான் !

துயர்தான் !

+++++++++++++++

Series Navigationவார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடுகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *