நூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “

author
0 minutes, 1 second Read
This entry is part 8 of 11 in the series 12 நவம்பர் 2017

 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.             திருப்பூர்  மாவட்டம் * நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி..            பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு       (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்                                      கடவுச்சீட்டு “ தொழிற்சங்கத்தலைவர் பிஆர் நடராசன் நூலை வெளியிட்டார்.

சுப்ரபாரதிமணியன் ஏற்புரையில் :தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளில் 15 வது நாவலாக                 ” கடவுச்சீட்டு “  மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது.  மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இது வந்திருக்கிறது. .அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது.

ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது.காரணம் மலேசியா இளைய சமூதாயத்தை சீரழிக்கும் குடி அவளின் கணவனை சீரழித்திருப்பது.  அந்தப்பெண் இங்கு வருவதற்கு முன்பே பெண் பார்க்க்கும் படலத்தின் போதே நாட்டைப்பற்றி வருங்காலக் கணவனிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். இங்கு தமிழர்கள் எவ்விதம் இருகிறார்கள். கோவிலகள் உண்டா . முஸ்லீம் நாடென்றால் சட்டதிட்டங்கள் கடுபிடியா. மதுப்பழக்கம் ஆண்களிடம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறாள். இங்கு வந்த பின்பு அவள் கணவன் குடிகாரனாக இருப்பதைக் கண்டு வாழ்க்கையை ஓட்டுகிறாள். இந்த நாட்டு நடைமுறையில் இருக்கும் சுகாதாரமும், மருத்துவமனைகளில் இல்லாத லஞ்சம் போன்றவை அவளை மகிழ்விக்கின்றன.ஆனால் அவளின் வாழ்க்கை யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் என்பார்கள் அங்கு இனிப்பு நீர் வியாதி என்கிறோம். இது போன்ற சிறுசிறு விசயங்களையும் கவனமாகக்குறிப்பிடப்பட்டிருக்கிறது.. லிட்டில் இந்தியா ஜோசியர்கள் வரை இவரின் எழுத்துப் பார்வையில் படாதவர்கள் இல்லை. மஜாஜ் சமாச்சாரம் முதல் மலேசியா பற்றிய பல விபரங்களை இந்நாவலில்  உள்ளன .அவற்றை பலஇடங்களில் விபரங்களாகவும் சில இடங்களில் உரைநடைமூலமாகவும் அமைந்துள்ளன..தோட்டப்புறத்தில் பங்களாதேஷ்காரர்கள், இந்தோனிசியாக்காரர்கள் அதிகரித்து தமிழர்களின் நிலை மேசமாகியும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சமீப நிகழ்வுகள் வரை இதில் பதிவாகியிருக்கின்றன.

 

தமிழ் இளைஞர்களின் வன்முறைக்கலாச்சாரத்தில்  கட்டை, சரக்கு போன்றவை  ஆக்கிரமிக்கிறது.. சீனர்களின் வாழ்க்கை முறை, பொருட்களை எரித்தல், இந்தோனிசியப்புகையால் பாதிப்பு போன்றவையும் தப்பவில்லை. இவ்வளவு சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும் போது மூன்று வேளை உணவையும் உணவு விடுதிகளில் சாப்பிடும் பழக்கத்தையும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கேடாக  இருக்கும் போது உணவு விடுதிகளை அதிகம் நாடாத்தும் பாதித்த்து ..  இலக்கியம் வேதனையை , சோதனையை மட்டுமா சொல்லவேண்டும் என்ற கேள்வி எழும்பாமல் இல்லை. ஆனால் மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில்  உள்ளது.. அகிலனின் “ பால் மரக்காட்டினிலே “ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால்  இப்போதைய சூழலில் எழுதப்பட்டிருக்கும்  கடவுச்சீட்டு மலேசியா தமிழ்ச்சமூகம் பற்றிய முக்கியப் படைப்பு என்ற வகையில்  இந்நாவல் சிறப்பு பெறுகிறது என்றார்.

( (சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்                         கடவுச்சீட்டு “ ரூ120. 180 பக்கங்கள் .,முன்னேற்றப் பதிப்பகம் சென்னை வெளியீடு 94867 32652  ))

 

* நூல்  அறிமுகம்..:  ” .மார்க்சீய மெய்ஞ்ஞானம் ”    ஜார்ஜ் பொலிஸ்டரின்   தத்துவ நூல் பற்றி :  பிஆர் நடராசன் பேசினார்.

 

பெண் படைப்பு :கவிதையியல் பற்றி மணி பாரதி பேசினார். கவிதை வாசிப்பில் சாமக்கோடாங்கி ரவி, துருவன்பாலா. , ஆலம். ,ஜோதி  ஆகியோர் பங்குபெற்றனர்.அவேர்னஸ் அப்பா சிவசுப்ரமணீயன் ரத்த தானம், உடல் தானம் பற்றிய அவரின் தென்னிந்தியப் பயணம் பற்றி விவரித்தார்.

* : மாற்றுக்கலாச்சாரம் எது உரை நிகழ்த்தினார்  பாண்டிசெல்வம், ( அவர் மாற்றுகல்வி, , மாற்று உணவு பற்றி  விரிவாய் பேசினார் ) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்             திருப்பூர்  மாவட்டம் த்வர் சண்முகம் தலைமை தாங்கினார். யோகி செந்தில், விபி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.வெண்மணி நடராஜன் நன்றி கூறினார்.

— தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488

Series Navigationநண்பன்பார்க்க முடியாத தெய்வத்தை…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *